ஷேன் வானின் விவகாரம்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

என் எஸ் நடேசன்


( அவுஸ்திரேலியா )

அஸ்திரேலிய சுழல் பந்து வீச்சுக்காரரான ஷேன் வானுக்கு கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் நடந்த சில விடயங்கள் அவரது பந்து வீச்சுப் போல் சிறப்பாக இருக்கவில்லை. இங்கிலாந்து கிரிகெட் ஆட்டக்காரருக்கு சிம்ம சொப்பனமானது இவரது பந்து வீச்சு. இங்கிலாந்து பத்திரிக்கைககள் எப்பொழுதும் ஷேன் வானை சிக்கலில் மாட்டி சிரமப்படுத்தும்.

ஷேன் வானின் பத்து வருட தாம்பத்திய உறவு பிரிந்துவிட்டது. அஸ்திரேலிய தொலைக்காடசியின் Channel 9) ஒப்பந்தமும் ரத்தாகி வருடத்துக்கு மூன்று லச்சம் டாலர்கள் (30000) நட்டமாகி விட்டது.

இவ்வளவுக்கும் ஷேன் வான் செய்த குற்றம் என்ன ?

கொலை, பலாத்காரம் எதுவும் செய்யவில்லை.

ஷேன் வான் இங்கிலாந்தில் இருக்கும் போது பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டாராம், காதல் தகவல்களை தொலைபேசியினூடாக (SMS) மூலம் அனுப்பினாராம்.

ஷேன் வானுக்கு இது முதல்தடவை அல்ல பலதடவை இப்படி நடந்து கொண்டுள்ளார். இப்படி நடக்காமல் இருந்தால் ஷேன் வான் அஸ்திரேலிய கிரிகெட் அணியின் தலைவராக இருப்பார்.

இப்படியான சம்பவம் அஸ்திரேலியாவில் நடந்திருந்தால் பெரிதுபடுத்தப்பட்டிராது. ஐரோப்பாவிலும் இப்படியான உறவுகளை பெரிது படுத்துவதில்லை. பிரான்சின் முன்னாள் ஐனாதிபதி பிராங்கோஸ் மாட்டிராங் இறக்கும் வரை கட்டிய மனைவியுடன் காதல் மனைவியை வைத்துக் கொண்டிருந்தார். யாரும் கண்டு கொள்ள வில்லை. இங்கிலாந்து, அமெரிக்காவில் பத்திரிக்கைகளும,; தொலைக்காட்சிகளும் நாக்கை தொங்க கோட்டுக் கொண்டு அலைகிறார்கள்.

இங்கிலாந்து ஷேன் வானுடன் தொடர்பு வைத்துள்ள ஒரு பெண் முன்வந்து தகவல் தந்தால் பத்தாயிரத்திலிருந்து நாற்பதாயிரத்துக்கு பணம் தருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

சரித்திரத்திலும் ஏராளம் ஷேன் வான்கள் நிறைந்திருக்கிறார்கள். தற்காலத்தில் இங்கிலாந்து உதைபந்தாட்ட வீரர் டேவிட்பெக்கம், பிறின்ஸ் சாள்ஸ் போன்ற பிரமுகர்கள் இப்படிச் செய்தால் பிரபலம் பெறுகிறது. சாதரணமாக நம்மிடையே எத்தனையோ ஷேன் வான்கள் இருக்கிறார்கள். இருந்தார்கள். ஒவ்வொரு கிராமத்து சுடுகாட்டிலும் பலர் இருப்பார்கள். புதைக்கப்பட்டு அல்லது எரிக்கப்பட்டோஇ ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான்.

நான் பேராதனை பல்மலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பன் ஒருவனுடன் ராஜவத்தை என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். நண்பனின் காதல் விவகாரங்கள் அஸ்திரேலிய, அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் மாதிரி. புதுப்புது கதைகள் நாள், கிழமை, மாதம் என மாறி வரும். இவன் மட்டும் நிரந்தரம். இவனுக்கு பெண்களின் இன, மத, சமய வேறுபாடுகள் கிடையாது. ஏந்த வயது வேறுபாடுகள் கூடப் பார்ப்பதில்லை. ஒருமுறை கற்பிணி பெண் கூட காதலியாக இருந்திருக்கிறாள். இவ்வளவுக்கும் இவனது தோற்றம் சராசரிக்கும் குறைவு. இந்தக் காதல் மன்னன் பழகுவதற்கு மிகவும் நல்ல நண்பன். இவனிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். “நீ ஆண்குறியால் வழிநடத்தப்படுகிறாய். மூளையால் அல்ல” சிரித்து விட்டு செல்வான். தற்பொழுது ஒரு விஞ்ஞானி இவன்.

சமீபத்தில் மேற்கு நாடுகளில் எடுத்த ஆராட்சி தகவல்களின்படி 72%ஆண்கள் திருமணமான இரண்டு வருடங்களில் வேறு பெண்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். லப்றோப் பல்கலைக்கழகம் (மெல்பேன்) ஒரு வருடத்தில் 3 வீதமான பெண்களும் 5 வீதமான ஆண்களும் இப்படி ஈடுபடுகிறார்கள். கிளாஸ்கோ பல்கலைக்கழக (ஸ்கொட்லாந்து) முடிவுகளில் இப்படியான திருமணத்துக்கு வெளியே நடக்கும் உறவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகவே இருக்கிறது என்கிறது. மேலும் சில ஆராய்ச்சிகளில், இப்படி ஈடுபடும் ஆண்கள் அழகானவர்களாகவும் நட்புறவு உள்ளவர்களாகவும் இருக்கும் வேளையில், பெண்கள் அழகற்றவர்களாகவும் தந்திரகுணம் (manuputative) உள்ளவர்கள் ஆகவும் இருப்பதாக தெரிவிக்கிறது.

இப்படியான ஆராய்ச்சிகள் ஆசிய சமுதாயங்களில் செய்ய முடியாது. ஆண் ஆதிக்க அமைப்பு முறையும் நில உடமைக் கலாச்சாரம் இப்படியான விடயங்களில் தடையாக இருக்கும்.

மனித குலநாகரிகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்களே ஆண்களை தங்கள் இணையாக தெரிவு செய்தார்கள். உடல்திண்மை, வீரம் என்ற தகைமைகளின் அடிப்படையில் இந்தத் தேர்தல் நடக்கும். தங்கள் குழந்தைகளை பகைவர்கள், மிருகங்கள், உணவுப்பஞ்சம் போன்ற காரணங்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை உடையவர்களா என்று சீர்தூக்கிப் பார்த்து தெரிவு செய்தார்கள். இக்காலத்தில் சென்றலிங் ((Australian Social Service)) இருப்பதால் இந்த தகைமைகள் இல்லாத பல ஆண்களுக்கு பெண் கிடைக்கிறது. அக்காலத்தில் தகைமைகளின்படி பார்த்தால் பலருக்கு இணை கிடையாது. இராமர் வில்லை உடைத்து ஜானகியை திருமணம் செய்ததும் இந்த தொடர்ச்சியே.

இந்த விடயம் மிருகங்களின் நடத்தையில் தெளிவாக தெரியும். நமது ஊர்ககளில் ஆண்நாய்கள் எத்தனை மைல்கணக்கில் ஓடவேண்டியிருக்கிறது. இங்கே எத்தனை மைல் ஆண்நாய் ஓடவேண்டும் என்பதை பெண்நாயே உறுதிப்படுத்துகிறது. இந்த தன்மையின் மூலம் காட்டில் உணவு பெறுவதற்கான உடலமைப்பு வருங்கால குட்டி நாய்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

ஆண் மிருகங்களுக்கு வம்ச பாதுகாப்பில் அக்கறை இல்லை. எண்ணிக்கையில் அதிக வம்சத்தை உருவாக்க நினைக்கும். தரத்திற்கு முக்கியத்துவம் தராமல் எண்ணிக்கைக்கு முதலிடம் அளிக்கும் தன்மை ஆண்மிருகங்களிடம் உள்ளது. இயற்கை ஆண், பெண் இருபாலாருக்கும் பிரித்து அளித்த இரசாயனங்களே இதற்கு காரணம்.

மிருகங்களுக்கு இருக்கும் அதே இரசாயனங்களே மனிதருக்கும் உள்ளது.

ஷேன் வான் போன்றவர்களில் சிறிது அதிகமாக உள்ளது. இதை இங்கிலாந்து பத்திரிக்கைகள் விற்பனையை அதிகரிக்க சின்ன விடயத்தை பெரிதாக்கி அஸ்திரேலிய சுழல் பந்து வீரரை சங்கடத்தில் மாட்டி விட்டார்கள்.

சிலதகவல் – நன்றி The Age

—-

janaparimalam@yahoo.com

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்