தமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை

This entry is part of 53 in the series 20040827_Issue

அருளடியான்


மத்திய உளவுத்துறை காஷ்மீர் போராளிக்குழுக்களில் பிளவு ஏற்பட முக்கியப் பங்காற்றியுள்ளது. மத்திய அரசின் உளவுத்துறை இந்தியாவில் இயங்கும் மாநிலக் கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்த சதி செய்து வருகிறது. தி.மு.கவில் இருந்து வைகோவை பிரிக்க அப்போதைய மத்திய அரசு திட்டமிட்டது. மத்திய அரசின் உளவுத்துறை ‘வைகோவின் நலனுக்காக தி.மு.க தலைவர் கலைஞரை கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கின்றனர் ‘ என்று கலைஞருக்கு கடிதம் அனுப்பினர். கலைஞர் உடனடியாக அக்ட்டிதத்தின் செய்தியை பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிடுகிறார். கட்சி பிளவு படுகிறது.

எம்.ஜி.ர், கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான கல்யானசுந்தரத்தை தனக்கு தரவாக தனிக்கட்சி தொடங்கச் செய்கிறார். பழ. நெடுமாறனின் தலைமையில் இயங்கிய தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியை குமரி னந்தன் உதவியுடன் இரண்டாக்குகிறார். கலைஞர் இக்கலையில் எம்.ஜி.ரை விட கைதேர்ந்தவர். முஸ்லிம் லீக் தி.மு.கவை தரிக்காத போதெல்லாம், அக்கட்சியை பிளக்க லத்தீப் தி.மு.கவுக்கு கை கொடுத்தார். பின்னர், திருப்பூர் அல்தாஃப் கை கொடுத்தார். பா.ம.கவில் இருந்து தீரனை வெளிக்கொண்டு வந்து தனிக்கட்சி தொடங்கச் செய்தார். திருநாவுக்கரசு உதவியுடன் அஇஅதிமுகவைப் பிளந்தார். கலைஞர் இப்போது ட்சியில் இல்லாத போதும், ஜெகத்ரட்சகன் தலைமையில் ர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ர் கழகத்தை இரண்டாகப் பிளந்துள்ளார்.

ஜெயலலிதா, தன் முந்தைய ட்சியின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் கனிசமான பேரை தனக்கு விசுவாசமாக செயல்படச் செய்தார். தற்போதைய ட்சியில் தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்த போது அக்கட்சி எம்.எல்.ஏக்களில் சிலரை தன் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தி.மு.கவும் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ ஒருவரை தன் கட்சியில் சேர்த்துக் கொண்டது.

தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் வலுவாக உள்ள அமைப்பு ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ‘. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி 15-20% கூட முஸ்லிம்கள், கிறித்துவர்கள் வாக்குகளை பெற்று இருக்காது. இது தேர்தல் முடிவில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட த்திரத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, மாநில உளவுத்துறை உதவியுடன் தமுமுகவைப் பிளக்க திட்டமிட்டார். உளவுத்துறை அதிகாரிகள் ‘த.மு.மு.க நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் ‘ அந்த அமைப்பை கைப்பற்றப் போவதாக வதந்திகளைப் பரப்பினர். இப்போது, அந்த அமைப்பில் இருந்து மவ்லவி. பி.ஜெய்னுல் பிதீன் தலைமையில் ஒரு பிரிவினர் ‘தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் ‘ என்ற பெயரில் தனி அமைப்பாகப் பிரிந்து சென்று விட்டனர்.

அமெரிக்க உளவுத்துறை பிற நாடுகளில் செய்யும் சதிகளைப் பற்றி பல நூல்கள் வந்துள்ளன. இந்திய மத்திய அரசின் உளவுத்துறை செய்யும் சதிகளையும், தமிழ் நாட்டில் மாநில உளவுத்துறை செய்யும் சதிகளையும் விளக்கி பத்திரிக்கைகளில் கட்டுரைகள் கூட வருவதில்லை. ஒரு வேளை, அவற்றை வெளிப்படுத்துவது தேசத் துரோகமோ ?

**

aruladiyan@netscape.net

Series Navigation