கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

யாழினி


இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இவர்கள் மோட்டார் வாகனங்கள் (car) உபயோகிப்பதில்லை. குதிரை வண்டியில் பயணம்

செய்கிறார்கள். அணைவரும் 19 ஆம் century மாதிரியில் உடை அணிகிறார்கள். ஆடைகளிள் பொத்தாண் வைப்பது

கூட ஆடம்பரம் என்று கருதி பின் மட்டும் உபயோகிப்பவர்கள். பொதுவாக இவர்களுடைய குழந்தைகள் 8 ஆம் வகுப்புக்கு மேல் படிப்பதில்லை. கம்பியில் விணியோகிக்கும் மின்சாரம் உபயோகிப்பதில்லை. 12 வோல்ட் battery மற்றும் welding generators மட்டும் உபயோகிக்க கூடும். இதெல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா ? அமெரிக்காவில்தான். அமெரிக்காவிண் பெண்சில்வேணிய, ஒஹையோ, இண்டியாணா மாநிலத்திலும் மற்றும் கணடாவிலும் வாழும் ஆமிஷ் ( ஆமிஷ்) மக்களை பற்றி தாண் கூறுகிறேண்.

இவர்கள் ஐரோப்பாவில் கிறித்துவத்தில் ‘அணபேப்டிச்ட் ‘ (Anabaptist) என்ற பிரிவை பிண்பற்றிணார்கள். 18ஆம்

நூற்றாண்டில் ஐரோப்பாவிருந்து அமெரிக்கா வந்து குடியேறிணார்கள். வீீட்டில் ஜெர்மன் மொழி பேசுகிறார்கள். கடவுள், எளிமை, ஒற்றுமை, வண்முறை அற்ற வாழ்க்கை, – இவை தான் இவர்களுடைய வாழ்க்கை தத்துவம். பைபிளை அப்படியே சிறிதும் மாறாது கடை பிடிப்பது இவர்களுடைய வழக்கம்.

காரில் பயணித்தாள் அதனால் விபத்துகள் நேரலாம், அதனால் மற்றவர்களுக்கு தீங்கு உண்டாகும் எண்பதால், குதிரை இழுக்கும் கோச்சு வண்டிகளில் மட்டுமே பயணம் செய்கிறார்கள். சிறிய குழுக்களாக கிராமங்களில் வசிக்கிறார்கள். இவர்களுடைய குழந்தைள் 8 ஆம் வகுப்பு வரை ஒரு அறை கொண்ட ஆமிஷ் பள்ளிகளில் படித்து விட்டு பிண்னர் இவர்களுடைய நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். தங்கள் பெற்றோர்களுக்கு விவசாயத்திலும் தொழிலிலும் உதவி

செய்கிறார்கள்.

வெளியாட்களை கொண்டு இவர்களின் தொழிலுிக்கு இணைய தளம் அமைப்பார்கள், ஆனால் கம்ப்யூட்டர் உபயோகிக்க

மாட்டார்கள். இவர்களுடைய வீடுகளை பாதுகாக்க காப்பீடு எடுக்க மாட்டார்கள். அது கடவுள் மீது அவநம்பிக்கை என்று

கருதுகிறார்கள். ஓரு வேளை ஒருவருடய வீடு எரிந்து விட்டால் கிராமத்தில் உள்ள அணைவரும் கூடி புதிய வீடு கட்டி தருவார்கள்.

இவர்களுக்குள்ளேயே திருமணம் செய்வதால், இவர்களுக்கு ‘inherited genetic disorder ‘ வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்காவிண் britney spears கலாச்சரத்திற்கு நடுவிலும் தங்களுடைய தணித்தன்மயை பாதுகாக்கும் இவர்களை

நம் இளம் தலைமுறைக்கு ஒரு நல்ல உதாரணம். (அதற்காக எல்லோரும் கணிணியை தூக்கி போட்டுவிட்டு போக

வேண்டுமென்று சொல்லவில்லை.)

தொகுப்பு மூலம்

http://www.amishnews.com/

http://www.800padutch.com/amish.shtml

http://www.religioustolerance.org/amish.htm

yaazhini_s@yahoo.com

Reference:

1. http://www.expresshealthcaremgmt.com

Series Navigation

யாழினி

யாழினி