சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கடந்த இதழில் காலச்சுவட்டில் வெளியான கட்டுரை குறித்து நான் எழுதியிருந்தேன்.டி.சே.தமிழன் கறுப்பில் வெளியான கட்டுரையை scan செய்து அனுப்பினார்.அதையும், சோகலின் மூலக்கட்டுரையையும் ஒப்பிட்டேன்.கறுப்பில் வெளியான கட்டுரை மூலக்கட்டுரையின் மொழி பெயர்ப்பு அல்ல.ஒரு சுருக்கப்பட்ட வடிவம்.மூலக்கட்டுரையில் உள்ள பல வாக்கியங்கள்,பத்திகள் இதில் இல்லை.மேற்கோள்கள்,சான்று நூல்/கட்டுரை பட்டியல் போன்றவை இதில் இல்லை.பிரவீண் மிகவும் சிரமப்பட்டே இதை தமிழில் தந்துள்ளார்.

கன்னன் மூலக்கட்டுரையைப் படிக்காமல் கூட இந்த கட்டுரையை படித்திருந்தாலும் கூட இது சுருக்கப்பட்ட தமிழ்க் கட்டுரை என்பதை புரிந்து கொண்டிருக்க முடியும்.ஏனெனில் EPW கட்டுரை அடிக்குறிப்புகள் போன்றவற்றை சுட்டிக்காட்டுகிறது(12 printed pages of notes and acrefully, almost obessively attributed (ten pages of references)..இவ்வாறிருக்கையில் கண்ணன் ஏன் இதை மொழிபெயர்ப்பு என்று குறிப்பிட்டார் ?.

SOCIAL TEXT சிறப்பிதழில் வெளியான கட்டுரைகள், சோகல் கட்டுரை தவிர, ஒரு தனி நூலாக ஒரு முன்னுரையுடன் Science Wars என்ற பெயரில் வெளியாகியுள்ளன.சோகல் கட்டுரை, அது குறித்த சர்ச்சையை குறித்து எழுதப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல் ‘The Sokal Hoax: The Sham That Shook The Academy ‘ Edited by the editors of Lingua Franca, Univesity of Nebraska Press, 2000. இந்த சர்ச்சையைக் குறித்து அறிய விரும்புவர்கள் படிக்க வேண்டிய நூல் இது.இதில் உள்ள பல கட்டுரைகள் இணையத்திலும் உள்ளன.

postmodern,postmodernism,postmodernity இவை குறித்த தெளிவு தேவை.postmodern theology,

postmodern economics,postmodern feminism போன்ற சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ள சொற்களை

நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் என்பது ஒரளவே அதுவும் ஒரு சில

துறைகள் குறித்த விவாதங்களிலேயே பயன்படுத்தப்படுகிறது. நானறிந்த வகையில் அ.மார்க்ஸ் பின் நவீனத்துவம் என்பதை அரசியல்,இலக்கியம்,கலாச்சார ஆய்வுகள் குறித்து எழுதும் போது பயன்படுத்துகிறார்.

அறிவியல்,சமூகவியல்,பெண்ணியம், இவற்றையும், பின் நவீனத்துவக்கண்ணோட்டங்கள் குறித்தும் அவர்

எழுதியுள்ளதாகத் தெரியவில்லை. social constructivism,sciece studies,sociology of science,

science studies குறித்து தமிழில் எந்த அளவு பேசப்பட்டுள்ளது.தமிழில் நவீனத்துவம்,பின் நவீனத்துவம்

போன்றவை கூட இலக்கியம் குறித்த விவாதங்களில்தான் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளன.அறிவியல் போர்கள், சோகல் கட்டுரை கிண்டல் செய்யும் எழுத்துக்கள் பல தமிழில் அறிமுகம் கூட செய்யப்படவில்லை. இந்நிலையில் பிரவீண் செய்துள்ள முயற்சி ஒரு அறியாப் பிழை என்றே தோன்றுகிறது.அதை தவிர்த்திருக்கவேண்டும்.கறுப்பு தொகுப்பாளர்கள் ஏன் இதை வெளியிட்டனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஷெல்ட்ரேக் குறித்து சுந்தர ராமசாமி காலச்சுவட்டில் எழுதியிருக்கிறார்.அதை நான் படிக்கவில்லை.அதற்கு வந்த எதிர்வினைகள் குறித்து அவர் எழுதியிருந்தார்.பல அறிவியலாளர்கள் ஷெல்ட்ரேக் எழுதியுள்ளதை ஏற்பதில்லை. சோகல் கூறுகிறார்:

‘For example, I suggest that the ‘morphogenetic field ‘ – a bizzarre New Age idea proposed by Rupert Sheldrake-constitutes a cutting-edge theory of quantum gravity ‘ (The Sokal Hoax-P 51).

சுந்தர ராமசாமி எழுதியதை கிண்டல் செய்து, அறிவியலாளர்கள் ஏற்காத ஒரு கருத்தை முன்வைக்கிறார், அவருக்கு அறிவியல் தெரியவில்லை என்று எளிதாக எழுதிவிடலாம்.ஷெல்ட்ரேக் கருத்துக்கள் மீது உள்ள விமர்சனங்களைத் தொகுத்து சுந்தர ராமசாமியை கிண்டல் செய்து எழுதுவது கடினமல்ல.அப்படி யாரவது எழுதியிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.அப்படி எழுதினால் அதை காலச்சுவடு வெளியிடுமா ?.

பிரவீண் எழுதியுள்ளதையும், சுந்தர ராமசாமி எழுதியுள்ளதையும் முன்வைத்து தமிழ் சிறுபத்திரிகைக்களில்

எழுதுபவர்களுக்கு எது போலி,எது உண்மை என்பது தெரியாது.கைக்கு கிடைத்தவற்றைக் கொண்டு

மனம் போன போக்கில் எழுதுகிறார்கள்.தாங்கள் எழுதியுள்ளவை குறித்து சரியான,காத்திரமான ஆய்வுகள்/

சர்ச்சைகள் இருந்தால் கூட அவற்றை அவர்கள் அறிவதில் அக்கறைக் காட்டுவதில்லை என்று எளிதாக

எழுத முடியும்.காலச்சுவடோ,கறுப்போ peer reviewed/referred journals அல்ல. Social Text சோகல் கட்டுரையை ஒரு இயற்பியல் பேராசிரியரிடம் கொடுத்து கருத்துக் கேட்டிருந்தால் அது நிராகரிக்கப்பட்டிருக்கும். மாறாக அதை பரீசிலித்த ஆசிரியர் குழு உறுப்பினர்கள் அவர் எழுதியதை கருதிய விதம் வேறு.(இதை ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிகள்/அதை தரும் தொடர் இணைப்புகளில்

வாசகர்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியும்). மேலும் peer reviewed/referred jourals களில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பல திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒரு கட்டுரை/ஆய்வு முடிவு வெளியாகியிருந்தாலும் அதுவும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதல்ல(1).இந் நிலையில் சோசியல் டெக்ஸ்ட் அக்கட்டுரையை வெளியிட்டது கவனக்குறைவு,அக்கறைவின்மை போன்றவற்றின் விளைவுதானே ஒழிய ஒரு ஏமாற்று வேலையல்ல.கண்னன் கட்டுரை அப்படிப்பட்டதல்ல. அதன் நோக்கம் வேறு. தான் புத்திசாலி, மார்க்ஸ் மற்றும் கறுப்பு தொகுப்பாளர்கள் முட்டாள்கள் என்று சித்தரிப்பது அவர் நோக்கம்.அவ்வாறு சித்தரிக்க நினைத்தால் முழுமையான தகவல்களுடன் சோகல் கட்டுரை,அது குறித்த சர்ச்சை,அறிவியல் போர்கள் குறித்து அவர் எழுதியிருக்க வேண்டும்.

பின் நவீனத்துவ்வாதிகளுக்கு எதிரான உள்ளூர் அரசியலுக்கு அதை பயன்படுத்த முயலும் போது

இரண்டு சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அ.மார்க்ஸ் சோகல் முன்வைக்கும் கருத்துக்களுடன் ஒத்துப்போவார் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் வந்தனா சிவா, நந்தி போன்றோர் எழுதியுள்ளதை ஆதரித்து/ஏற்றுக்கொண்டு எழுதியுள்ளதாகத் தெரியவில்லை, நானறிந்த வரையில். அது போல் சோகல் நிராகரிக்கும் ஷெல்ட்ரேக் கருத்துக்களை சுந்தர ராமசாமி நிராகரிப்பதாகத் தெரியவில்லை. சுந்தர ராமசாமி எழுதியுள்ளதை விமர்சிக்க கறுப்பு தொகுப்பாளர்கள்/மார்க்ஸ் சோகல் போன்றோர் எழுதியுள்ளதை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. கிற்ஸ்டோபர் நோரிஸ் ஒரு பேட்டியில் தெரிதாவை அறிவியல் போர்கள்

விவாததில் மேற்கோள் காட்டும் பின் நவீனத்துவ வாதிகளும்,அவர்களின் எதிர்ப்பாளர்களும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்(2).ஆனால் இரு தரப்பாரும் தெரிதாவை ‘பயன்படுத்திக்கொள்கிறார்கள் ‘. அறிவியல் போர்கள் சிறப்பிதழில் எழுதியுள்ளவரகள் அறிவியலுக்கு விரோதிகள் அல்ல.(3) .

சோகல் கட்டுரையை முன் வைத்து அ.மார்க்சை முட்டாளாக காண்பிக்க கண்னன் நினைக்கிறார்.ஆனால் அதே சோகல் எழுதிய வேறொரு கட்டுரையை வைத்து சுந்தர ராமசாமி a bizzarre New Age idea ஒன்றை முன்வைப்பவரை நிராகரிக்கவில்லை என்பதை அவர் மீதான விமர்சனமாக வைக்கமுடியும்.சுருக்கமாகச் சொன்னால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தை சகட்டு மேனிக்கு பயன்படுத்தமுடியாது, அது எதிர்தாக்குதலாக திரும்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

கண்னன் எழுதி காலச்சுவட்டிலும்,திண்ணையிலும் வெளியான கட்டுரையில் பதிப்புரிமை குறித்து அவர் முன்வைத்துள்ள சில கருத்துகளை அபத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.கண்னன் பதிப்புரிமை குறித்து

சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அதைப் படிப்பவருக்குத் தோன்றும். இதை விவரிக்க இன்னொரு கட்டுரை தேவை.எழுதப்படும் கட்டுரைகளை அல்லது இலக்கியப் படைப்புகளை கிண்டல் செய்து,தகவல் பிழைகள்,புரிதலில் உள்ள போதாமைகள் குறித்து, தமிழில் சிறுபத்திரிகைகளில்/இணைய இதழ்களில் வெளியானவை/வெளியாபவை குறித்து எழுத ஒரு காலண்டிதழ்தான் ஆரம்பிக்க வேண்டும். அந்த நிலையில்தான் தமிழ் அறிவுலகம் உள்ளது.

டி சே தமிழன் அனுப்பியதையும், கண்னன் ஆதாரம் காட்டும் EPW கட்டுரையின் பொருத்தமான/தொடர்புடைய பகுதியையும் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு அனுப்பிவைத்தேன்.EPW கட்டுரையிலிருந்து

அந்தப் பகுதி கீழே தரப்பட்டுள்ளது.இதையும் கண்ணன் எழுதியுள்ளதையும்

http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu50-1/fullstory.php ?id=13309193 வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

Modern Science and the Progressive Agenda -EPW-P912 april 18,1998,vol 33,no16

It is now a little over a yesr since the so-called ‘skoal affair ‘ sent shock waves through science studies,cultural studies and other assorted disciplines in the humanities in the North American and European Universities.Since then there has been much debate, and some soul searching among the critics of the science who tend to view scientific rationality and objectivity primarily as ideological ruses of the strong(the west, men,whites) for domination and control of the weak(the non-west,women, ‘people of colour ‘).

In the autumn of 1994 Alan Sokal,a theoritical physicist at New York University submitted an essay to Social Text , a leading cultural studies journal published by the prestigious Duke University Press.Entitled ‘Transgressing the Boundaries: Toward a Transformative Hermenutics of Quantum Gravity ‘, the essay purpoted to be a scholary article about the postmodern philosophical and political implications of developments in quantum gravity, a highly esoteric,and still-speculative field of physics.After review by five members of Social Text ‘s editorial board,Sokal ‘s essay was accepted for publication.It appeared in April 1996, in a special double issue on ‘Science Wars ‘ devoted to rebutting an earlier critique of postmodern critiques of science by a biologist-mathematician team (Paul Gross and Norman Levitt,The Higher Superstition:The Academic Left and Its Quarrels With Science, Johns Hopkins University Press 1994.Immediately after ‘the ‘ issue of Social Text hit the newsstands,Skoal revealed that his essay was never meant to be a serious piece of scholarship,but was actually a paradoy of the genre of cultural/science studies critiques.He had,Skoal revealed,only carried out an ‘expriment ‘ designed to test the academic rigor of ‘certain precints of the academic humanities ‘, He wanted to see, in his own words, [if] a leading North American journal of cultural studies-whose editorial collective includes such luminaries as Frederick Jameson and Andrew Ross – publish an article liberally salted with nonsense if (a) it sounded good,and (b) it flattered the editors ‘ ‘ idological preconceptions ‘ In order to test this hypothesis , Skoal wrote this essay with all the politically correct stlistic flourishes that have become the staple of postmodernist/cultural studies scholarship: trndy jargon,ironic quotation marks ( ‘reality ‘, ‘objectivity ‘,repeated denouncements of ‘linear thinking ‘ in favor of ‘holism ‘ speckled with earnest declarations of political pieties ( ’empowerment ‘, ‘liberation ‘ ) -all heavily annotated (12 printed pages of notes) and acrefully, almost obessively attributed (ten pages of references). He begins by deriding natural scientists for still clinging to the ‘dogma imposed by the long post-enlightenment hegemony over the western intellectual Outlook ‘, the alleged ‘dogmas ‘ being the existence of exteranal reality independent of our perception of it,and the possibility that human beings can get to know this reality with a growing confidence that they are getting closer to understand its structure and function.He goes on to generously praise the new thinkers in science studies for debunking these Enlightenment dogmas: poststructuralists Derrida and Lacan,social constructivists including Bruno Latour,David Bloor,feminists Sandar Harding,Donna Haraway,Evleyn Fox Keller, cultural critics like Andrew Ross,Katherine Hayles and our own postcolonialists, including Ashis Nandy and Vandana Shiva are all recognised – and some of them smothered with praise – for their various contributions.

1,அறிவியல் கட்டுரைகள்,பிரதி வாசிப்பு குறித்து பேசும் ஒரு கட்டுரை

Misreading Science in the Twentieth Century JOHN M. BUDD Science Communication, Vol. 22 No. 3, March 2001 300-315.

2, Deconstruction, Anti-Realism and Philosophy of Science-interview with Christopher Norris-

Christopher Norris, Marianna Phapastephenauo-Journal of Philosophy of Education-Vol 36 No

2,2002

(3) ‘Tellingly, the actual issue of Social Text targetted by Sokal and his supporters was called Science Wars

, with articles by three biologists, two anthropologists and seven other social scientists (Sokal 1996). In it, Emily

Martin wrote of the predominantly mutually respectful relations between herself and the practising scientists she studied, with some reproductive biologists not only intrigued by her analysis of the cultural stereotyping in their own research but using it to trigger new questions (Martin 1996).The sociologist Hilary Rose trenchantly put the case for building complex

alliances to encourage the most open, critical, helpful exchanges around the nature and uses of scientific research, sensitive to the challenge that ‘localized, responsible and embodied knowledges’ pose for any single,unitary notion of scientific discourse (Hilary Rose 1996). The supposed literary dukes of high theory (usually Derridian deconstructionists, with now a sprinkling of Deleuzian rhizomatics) were not in evidence, except as mimicked by the two feminists informing Sokal. The other contributors, however, did have a common outlook: the impact of science is far too important to leave to professional scientists alone, least of all to any over-simplifiers who anoint themselves its spokesmen. This is why Bruno Latour would later write of the Sokal affair:

Let’s be serious. The sciences are too fragile to deprive themselves of the rare allies that are to be found in the domain of the humanities and the social sciences. All of us, researchers in exact and less exact sciences, politicians and users, we would do well to possess the most realistic vision possible of what the sciences can and cannot do. We are all in the same boat, afloat in the same controversies (Latour 2000:126).-

Thinking Like a Man ? The Cultures of Science-Lynne Segal-Women: a cultural review Vol. 14. No. 1.,2003

ravisrinivas@rediffmail.com

Series Navigation