போதாத காலம்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

வே பிச்சுமணி


வெளியே இருமபு வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு சாளரம் வழியாக ராம் யார் வருகிறார்கள் என எட்டி பார்த்தார்.. அவருடைய மனைவியின் ஒன்றுவிட்ட அண்ணன் பாஸ்கர் வருவது போல் தெரிந்தது..பாஸ்கரும் ராமும் சமவயதினர் அதனால் பாஸ்கரை மாப்பிளை மாப்பிளை என கொஞ்சம் உரிமையுடன் உறவு கொண்டாடுவார். எப்பவாவது வந்து போவார்.
மாடிபடி ஏறி பாஸ்கர் வரவும் தலைவாசல் கதவை திறந்து

“வாங்க எப்ப வந்தீங்க வீட்டில் தங்கச்சி ,மருமகன் மருமகள் எல்லாரும் நலமா”

“சுகத்துக்கு என்ன மாப்பிள எல்லாரும் நலம்தான்” என்றார் பாஸ்கர்

அதற்குள் ராமின் மனைவியும் வெளியே வந்து
“வாங்க அண்ணா வீட்ல எல்லாரும் செளக்கியமா” என்றாள்

‘எங்கம்மா மருமகளை காணல’ என்றார் பாஸ்கர்

‘அவ காலேஜ்க்கு காலையில போயிட்டா அண்ணா ‘

பாஸகர் சோபாவில் கிடந்த புத்தகங்களை ஒரு ஒரமாக தள்ளி வைத்து விட்டு அமர்ந்தார். ராமுக்கு தனது மகள் சோபாவில் படித்த புத்தகத்தை இறைத்து வைத்து விட்டு செல்லும் பழக்கத்தை நினைத்து மனதுக்குள் சின்னதாக கோபம் வந்து சென்றது.

‘என்ன விசேஷம். ரொம்ப நளைக்க அப்புறம் வந்திருக்கீங்க’ என்றார் ராம்

‘பெரிதா ஓனனுமில்ல இப்பல்ல பழைய மாதிரி வேலைக்கு போக முடியல .பாதி நாள்ல வீட்ல தான் இருக்கேன். தச்சு வேலை பழைய மாதிரி எங்க நடக்கு. எல்லாரும் தச்சு வேலை பார்க்கிறாங்க. காணாத குறைக்கு ரெடிமேடாக பிளாஸ்டிக் கதவு எல்லாம் வந்திடுச்சு. யாராவது கூப்பிட்ட போறது. அவ்வளவுதான்’ என்றார் பாஸகர்

‘மெட்ராஸ் வந்திருங்களேன் இங்க நம்ம வேலை நல்ல நடக்குது’

‘எங்க மாப்பிள வருது. தாமிரபரணி ஆத்திலே குளிச்சிட்டு குறுக்குதுறை முருகனை கும்பிட்டுட்டு வாழ்ந்தாச்சு மெட்ராஸ் நமக்கு ஒத்து வராது’

‘இப்படி சொல்லிட்டு இருந்தா .பின்னே என்ன செய்யறது.’

‘எங்க நீங்க வேற …… மதினி மருமகன் பெயரப்பிள்ளைகளைவிட்டு விட்டு இங்க வந்து கஷ்டப்பட சொல்லிறங்களா’ என்று சொல்லி கொண்டே காப்பி கொண்டு வந்து கொடுத்தார் ராமின் மனைவி

காப்பியை குடித்து முடித்து தம்மளரை ராமின் மனைவியிடம் கொடுத்து விட்டு பேச்சை தொடர்ந்தார் பாஸ்கர்

‘என்ன மாப்பிளே சம்பாதிக்கிற வரைக்கும் தான் வீட்ல மதிப்பு. இப்ப பிள்ளைங்களும் அம்மாவிடம் சேர்ந்து கிட்டு மதிக்க மாட்டுதுங்க. எதை பற்றியும் பேசுவது கிடையாது. எல்லாம் அவங்க அம்மாவிடம் தான். எப்படி எல்லாம் வளர்த்தேன். ஏதோ பேரப்பிள்ளைகள் இருக்கிறதால் வீட்ல இருக்கனுமிங்கிற நினைப்பு இருக்கு . இல்லைனா எங்காவது ஓடி போயிறலாமானு தோனுது’

‘சும்ம இருங்க எதையாவது சொல்லிக்கிட்டு’ ஆறுதலாக ராம்

‘இல்லை மாப்பிளே உங்களுக்கு தெரியாததில்ல. பிள்ளைகள் விருப்பப்படிதான் சாப்பாடு . நமக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு யாரும் கவலை படுதில்ல. ஏதோ அவங்க போடறத சாப்பிட வேண்டிருக்கு. உடம்பு பழைய மாதிரி இல்ல.போயி சேரவேண்டியது தான்’

‘ரொம்ப அலட்டாதிங்க. உங்களுக்கு என்ன குறை’

‘ரொம்ப நாள் இந்த வண்டி ஓடாது. போக வேண்டியது தான் பெயரன் பேத்தி எடுத்தாச்சு பின்ன என்ன. ஆன நான் செத்த எம் பிள்ளைக என்ன தூக்கி போடுவானுகளானு சந்தேகம் தான்’

‘சே சே பசங்க நல்ல மாதிரியாச்சே’

‘அதெல்லாம் முன்ன இப்ப அவனுக்குனு குடும்ப வந்திட்டுதில்ல. ரொம்ப மாறிட்டனுக. வந்து பார்த்தா தெரியும்’

‘சரி விடுங்க எந்த பிள்ளைகள் தான் பெற்றோரை பார்க்குது . நம்மாளைய நம்ம பெற்றொரை ஒழுங்க பார்க்க முடியில. அவசரமா ஓடுற இந்த காலத்தில அதெல்லாம் எதிர் பார்கக முடியாது.’

‘அவசரம்னு அப்பாவை கூட பார்க்ககூடாதா என்ன. தறுதலைங்க.தலைவலி காய்ச்சல்ன கூட என்ன செய்து ஏது செய்துனு கேட்டக மாட்டனுக. நான் செத்த சாவு செலவு கூட செய்ய மாட்டனுக ஒரு வேளை சோத்துக்கு ஒண்டிகிட்டு கிடக்க வேண்டி இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படி செல்லம வளர்ந்து சிரழிய வேண்டிருக்கு’

என்று பாஸ்கர் சொல்லும் பொழுது அவரது கண்களில் நீர் கோர்த்தது..

‘விடுங்க. வேண்டாத விசயத்தை பேசிகிட்டு’

கம்மிய குரலில் பாஸ்கா
‘ மாப்பிளே ஒன்னு கேட்பேன் . மாட்டேனு சொல்ல கூடாது.
சொல்லுங்க’

‘நான் செத்தா நீங்க வந்து என்னை எடுத்து போட்:டுறுங்க. எவ்வளவு சிலவு ஆகுதோ அதை செஞ்சிறுங்க என்று கண்ணை துடைத்து கிட்டே’ பாஸ்கா சொன்னார்.

ராம் என்ன சொல்லுவது என்ன நினைத்து கொண்டிருக்கையில்
பாஸ்கர் தன்னை திடப்படுத்தி கொண்டு தொடர்ந்தார்.

‘சாவு செலவு எவ்வளவு ஆகும். சொல்லுங்க’

ராம் கொஞ்ச எரிச்சல் அடைந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல்

‘எதுக்கு இந்த பேச்சு . அப்ப பாத்துக்கில்லாம்’

‘சும்ம சொல்லுங்க மாப்பிள’

ராம் மெளனமாக இருக்க . பாஸ்கர் தொடர்ந்தார்

‘என்ன இருபதானயிரம் ஆகுமா. சொல்லுங்க. மாப்பிள எனக்காக செலவு செய்ய மாட்டிங்க.’

ராம் மீண்டும் மெளமாக இருக்க.

‘என்ன மாப்பிள ஒன்னும் சொல்ல மாட்டிகீறிங்க’

‘சரி ‘
என்றார் சற்றே எரிச்சலுடன் ராம்

அந்த நேரத்தில் கீழே வாடகைக்கு இருப்பவர் வாடகை கொண்டு வந்து ராமின் மனைவியிடம் கொடுத்து சென்றார்

பாஸ்கர் ‘மாப்பிளே நீங்கதான் என்னை எடுதது போடனும். சும்மா விளையாட்டுக்கு சொல்லுறனு நினைக்காதிங்க’ என்றார்.

பேச்சை திசை திருப்ப ராம் சமையலறை பக்கம் திரும்பி
‘சாப்பாடு ரெடிஆயிடுச்சா என்றார்.

‘கொஞ்சம் பொறுங்க. 10 நிமிஷத்தில் முடிந்திரும். கூறியபடியே அண்ணா மீன் சாப்பிடுவிங்கள்ல’

என்று பாஸ்கரையும் விசாரித்தார் ராமின் மனைவி
சாப்பிடுறது தாம்மா என்றார் பாஸ்கர்

பாஸ்கர் நார்மலான மனநிலை திரும்பி பேச்சை தொடங்கினார்.

‘ ரொம்ப நன்றி மாப்பிளே. . நான் கேட்டவுடன் சாவு செலவு செய்யிறனு சொல்லிடியஙகளே உங்களுக்க நல்ல மனசு. என்று சொல்லி விட்டு ஏதோ யோசனையில் இருப்பது போல் பாஸ்கர் அமைதியாக இருக்க’

‘என்ன அமைதி ஆயிட்டிங்க நான்தான் சரின்னுட்டேன்ல பின்ன என்ன .சாப்பிடலாமா’ என்றார் ராம்

பாஸ்கர் தயங்கி தயங்கி தரையை பார்த்தபடி சமையலறையில் இருக்கும் ராமின் மனைவியின் காதில் விழாதவாறு மெல்லிய குரலில்

‘மாப்பிளே எப்படியும் இருபதானயிரம் எனக்காக செலவு செய்ய போறிங்க. அதில் கொஞ்சம் குறைச்சு பதினெட்டாயிரம் செலவு பண்ணுன போதும். இப்ப செலவுக்கு இரண்டாயிர ரூபாய் கொடுங்க மாப்பிளே’ என கேட்டார்

ராமுக்கு என்ன சொல்வது எது செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் சிலையாய் நின்றார்.

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி