9/11 – விடையறாக் கேள்விகள்

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

நரேந்திரன்


உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருக்கிறது. இதனிடையில் ஏராளமான நிகழ்வுகள், போர்கள், ஆட்சி மாற்றங்கள் போன்றவை நிகழ்ந்திருந்தாலும், ஏராளமான கேள்விகள் இன்னும் விடையளிக்கப்படாமல் இருக்கின்றன. இப்பயஙகரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்-லாடன் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதாக அமெரிக்காவும், பாகிஸ்தானும் பசப்பிக் கொண்டிருக்கின்றன. இதனைப் போன்ற தாக்குதல் ஒன்று இந்தியாவிலும் நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாத்த்தின் ஊற்றுக் கண்ணான பாகிஸ்தான் அதனை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்காட்டியிருக்கிறது. மிகத் தந்திரத்துடன் அமெரிக்கர்களின் கண்களில் மண்ணைத்தூவி வருமானமும், ஆயுதங்களும் பெறும் ஒரு நாடாக மாறியிருக்கிறது. பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.

இந்தியா ஏதும் செய்ய இயலாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறது. எப்போதும் போலவே.

No civilization was so little equiped to cope with the outside world; no country was so easily raided and plundered, and learned so little from its disasters என்கிறார் வி. எஸ். நைபால். அவரது நோபல் பரிசு பெற்ற INDIA – A Wounded Civilization என்ற புத்தகத்தில். அவர் எழுதியிருப்பது சத்தியமான உண்மைதான். ஆனால் அது குறித்து நாமோ, நம்மை ஆள்பவர்களோ நாணம் கொள்வதில்லை. மீண்டும், மீண்டும் பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

இது, அமெரிக்கத் தாக்குதல் குறித்து நான் அங்கே இங்கே படித்த தகவல்களின் தொகுப்பு. குறிப்பிட்ட இலக்கு எதுவுமில்லை. Just for your information. அவ்வளவுதான்.

நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதலுக்குப் பின் (911), அது குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட “911 Commission” சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்கண்ட பயங்கரவாதச் செயலைச் செய்தவர்களைக் குறித்த பட்டியலைப் புகைப்படத்துடன் வெளியிட்டது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அப்பட்டியலில் இடம் பெற்ற ஆறு நபர்கள் உயிருடன் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. உதாரணமாக, வாலீத் அல்-ஷெஹ்ரி (Waleed al-Shehri) என்கிற நபர், உலக வர்த்தக மையத்தின் வடக்குப்புறக் கட்டிடத்தில் மோதிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்ததாகத் தகவல். ஆனால் அதே வாலீத் அல்-ஷெஹ்ரி, லண்டனில் இருந்து வெளிவரும் அரபு மொழிப் பத்திரிகையான “அல்-குத்ஸ் அல் அரபி”க்கு (Al-Quds al Arabi) அளித்த நேர்காணலானது 911 சம்பவம் நடந்த சிறிது காலத்திற்குப் பின் வெளியானது.

9/11 கமிஷன் ஆய்வறிக்கையில் வாலீத் அல்-ஷெஹ்ரியுடன், சலேம் அல்-ஹாஸ்மி, சயீத் அல்-காம்டி, அஹ்மத் அல்-நாமி என்பவர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இதில் சலேம் அல்-ஹாஸ்மி சவூதி அரேபியாவின் யான்பு பகுதியிலிருக்கும் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், 911 சம்பவம் நடந்தேறுவதற்கு முன் அவர் சவூதி அரேபியாவை விட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியில் எங்கும் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது டுனீசியாவில் வசிக்கும் அல்-காம்டி 911-க்கு முன்னர் ஏறக்குறைய பத்து மாதங்களுக்கும் மேலாக டுனீசியாவை விட்டு எங்கும் செல்லவில்லை. விமானம் ஓட்டிப் பழகுவதாக(!) உபரித்தகவல். சவூதி அரேபியன் ஏர்லைன்சில் மேலாளராகப் பணிபுரியும் அல்-நாமி தற்சமயம் வசிப்பது ரியாத் நகரில்.

அல்-காம்டியும் மற்றும் அல்-நாம்டியும், முன் பின் கேட்டிராத ஒரு பென்சில்வேனிய கிராமத்தில் தாங்களிருவரும் இறந்து போனதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தனர் என்ற செய்தி செப்டம்பர் 23, 2001 அன்று “லண்டன் டெலிகிரா•ப்” பத்திரிகை¨யில் வெளிவந்த டேவிட் ஹாரிசனின் பேட்டி மூலம் தெரியவருகிறது. இன்று ராயல் மொராக்கன் ஏர்லைன்ஸில் பணிபுரியும் அல்-ஷெஹ்ரி, 911 சம்பவம் நடந்த நேரத்தில் காஸபிளான்காவை விட்டு தான் வெளியில் எங்கும் செல்லவில்லை என்று சத்தியம் செய்கிறார்.

மேற்கூறிய தகவல்கள் உண்மையாக இருக்குமானால், அந்த விமானங்களில் இருந்த பயங்கரவாதிகள் யார்?

செப்டம்பர் 11 பயங்கரத்தின் முக்கிய குற்றவாளியான முஹமத் அட்டாவை மதப்பற்றுள்ள ஒரு தீவிர முஸ்லிம் என்று வர்ணிக்கிறது அமெரிக்க 911 கமிஷன். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. அட்டா ஒரு சூதாடி மட்டுமல்லாமல், குடிகாரனும், ஸ்தீரிலோலனும் கூட என்பது நிரூபணமாகியிருக்கிறது. அமெரிக்க பத்திரிகை நிருபரான டேனியல் ஹாப்சிக்கரின் (Daniel Hopsciker) ஒரு கட்டுரையின்படி, அட்டா •ப்ளோரிடா மாநிலத்தில் ஒரு தொழில்முறை விபச்சாரியுடன் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அந்நேரத்தில் அட்டா மிதமிஞ்சிக் குடித்ததாகவும், கொகெய்ன் போன்ற போதை வஸ்துக்களை உபயோகித்ததாகவும், பன்றி இறைச்சியை (Pork Chops) உண்டதாகவும் ஹாப்சிக்கர் கூறுகிறார். இவையத்தனையும் தூய இஸ்லாமுக்கு எதிரானவை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், •ப்ளைட் நம்பர் 11-இல் ஏற்றப்படாது விடப்பட்ட முஹமத் அட்டாவின் இரண்டு பெட்டிகளை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் ஒரு குரானின் பிரதியும், விமானங்களைச் செலுத்துவதற்குண்டான புத்தகங்களும், ஒரு மதப்பிரச்சார ஒலிநாடாவும், விமானக் கடத்தலில் ஈடுபடப்போகும் தனது கூட்டாளிகளுக்குத் தேவையான மனவுறுதி பற்றிய குறிப்புகளும், அட்டாவின் உயிலும்(!), பாஸ்போர்ட்டும், ஒரு இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசன்சும் இருந்தன. வெடித்துச் சிதறப்போகும் விமானத்தில் ஏறும் ஒருவனின் உயில் அதிகாரிகளை குழப்பத்தில் தள்ளியதாகவும், 911 கமிஷன் அதனைக் குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் செய்யாமல் ஒதுக்கியதாகவும் தெரியவருகிறது.

அட்டாவின் உயிலுக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

9/11-இன் பாகிஸ்தானியத் தொடர்புகள், பின்னனிகள் குறித்த தகவல்களை அமெரிக்க ஏறக்குறைய கண்டும் காணாமலும் நடந்து கொண்டது. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI-யின் தலைவராக இருந்த ஜெனரல் மஹ்மூத் அஹ்மத் (Mahmoud Ahmad), முக்கிய குற்றவாளியான மொஹமத் அட்டாவுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகத் தெரிகிறது. டைம்ஸ் ஆ•ப் இண்டியா, அக்டோபர் 9, 2001 பதிப்பின்படி, 9/11 நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஜெனரல் அஹ்மத்தின் கட்டளையின்படி, அஹ்மத் உமர் ஷேய்க் என்பவர் மூலமாக $100000 அட்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அமெரிக்கப் பத்திரிகை நிருபரான Michel Chossudovsky, ஜெனரல் அஹ்மத் செப்டம்பர் 4-ஆம் தேதி அமெரிக்கா வந்ததாகவும், 9/11 நடந்து பல நாட்கள் வரை அங்கு தங்கியிருந்ததாகவும் கூறுகிறார். 9/11 நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அமெரிக்க சி.ஐ.ஏ, பென்டகன் மற்றும் ஸ்டேட் டிபார்மெண்ட் அதிகாரிகளுடன் அவர் பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும், அது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராமல் மறைக்கப்பட்டதாகவும் தகவலளிக்கிறார்.

இந்திய உளவுத்துறை (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?!) வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, செப்டம்பர் 11 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அத் தொடர்புகள் அமெரிக்க உளவு நிறுவனங்கள் வரை நீள்வதாகவும் விளக்குகின்றது. எனவே, மொஹமத் அட்டா போன்றவர்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் அவர்கள் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள்.

அமெரிக்க FBI-யின் வேண்டுகோளின்படி, அக்டோபர் 2001-இல் ஜெனரல் மஹ்முத் அஹ்மத், ISI-யின் முக்கியப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார் என்பதனையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

9/11 கமிஷன், ஏறக்குறைய $400000 முதல் $500000 வரை இப்பயங்கரவாதச் செயலுக்குச் செலவிடப்பட்டதாகவும், அந்தச் செலவீனம் முழுவதனையும் அல்-காய்தா ஏற்றுச் செய்ததாகவும் விளக்குகின்றது.

செப்டம்பர் 11-க்குப் பிறகு அமெரிக்கா தனது உள்நாட்டுப் பாதுகாப்பை மிகவும் பலப்படுத்தியிருக்கிறது. அது போன்ற இன்னொரு தாக்குதல் இன்றுவரை இங்கு நடக்கவில்லை என்பதே அதற்குச் சான்று. இந்தியா அமெரிக்கர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் இது. என்ன செய்ய? வோட்டு வங்கி அரசியலைத் துறந்து, தேச நலனை முன் வைக்கும் ஆண்மையுள்ள தலைவர்கள் நம்மிடம் இல்லையே.

ஆதாரங்கள்:

David Ray Griffin, The 9/11 Commission Report: Omissions and Distortions, Olive Branch Press, 2005.
http://www.globalresearch.ca/articles/CH0111A.html#c.
www.globalresearch.ca.
http://www.fromthewilderness.com/cgi-bin/MasterPFP.cgi?doc.

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்