வ.ந.கிாிதரன்
சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி!
சிட்டுக் குருவி !சிட்டுக் குருவி!
சின்னதொரு கேள்வி.
உலகினையளப்பது போல்
உலாவித் திாிகின்றாய்.
விாிந்திருக்கும் வெளியளந்து
விரைகின்றாய்! விரைகின்றாய்!
உதயம் முதல் அந்திவரை
உன் உலாவலில் தானெத்தனை
மிடுக்கு!
சிறுத்தவுருவமுன் இருப்பிற்கொரு
தடையா ?இல்லையே.
சிந்தையில் களி கொண்டு
திாிகின்றாய் நாள்முழுதும்.
செப்பிடுவாயதன் காரணத்தை.
இன்பத்தையடைவதற்கிதுவுமொரு
வழியென படித்ததுண்டா ?
போனதை வருவதையெண்ணிப்
பொழுதினைக் களிப்பதுண்டா ? அன்றி
நிகழ்வினைச் சுவைத்து மட்டும்
மகிழ்வதுண்டா ?கூறிடுவாய்
குட்டிக் குருவி நீ.
போருண்டா ? பூசலுண்டா ?
பொல்லாங்கு சொல்வதுண்டா ?
பொருள்தேடிப் பறப்பதுண்டா ?
பொய்மையிலுழல்வதுண்டா ?
தத்துவம் வேண்டாம். தாித்திரம்
வேண்டாம். தலையிடியற்ற
தனித்துவ வாழ்வு.
புசித்துப் பறந்து குலாவிக் கலந்து
பறக்கும் வாழ்விலென்னே களி!
சிட்டுக் குருவியுந்தன்
கட்டற்ற வாழ்வு கண்டு
பொறாமையெனக்கு.
பொறுத்தருள்வாய்.
***********************
பாரதி ‘யாய்ப் படைத்திடுவீர்!
‘இஸங்கள் ‘ பல கூறிக் கதைப்பார்.
‘இஸமறி ‘யார். அதன் இருப்பறியார்.
நாலு நூல் நெட்டுருப் போட்டு
வார்த்தை ஜாலங்களால்
வைத்திடுவார் விமர்சனம்.
துதி பாடவொரு கூட்டம்
துரத்துவது கண்டு
துள்ளிக் குதித்திடுவார்.
தம்
முத்திரைக் கையாலே
குட்டு வைத்திடுவார்.
மெய்சிலிர்த்து அடியார்கள்
மேதையென்பார். ஞானியென்பார்.
குட்டுவதற்கொரு கூட்டம்.
குட்டு வாங்குவதற்கொரு
கூட்டம்.
துதிக்கையென்பார். சுளகுக்
காதென்பார். உரற்
காலென்பார்.
குஞ்சவாலென்பார்.
ஆனையறியாக் குருடாிவர்
ஆடும் ஆட்டமென்ன.பாட்டமென்ன.
படைப்பவரே ஒன்று சொல்வேன்.
படைத்திடுவீர். படைத்திடுவீர்.
பயன் கருதிப் படைக்காதீர்.
படைத்திடுவீர். படைத்திடுவீர்.
‘பாரதியாய்ப் ‘ படைத்திடுவீர்.
************************
ஞாபகமிருக்கிறதா பெண்ணே!
குறங்கசைய நடை பயின்று
கிறங்க வைத்த காாிகை
ஞாபகமின்னுமென்
நெஞ்சினாழத்தே
பீறிடும்
நீரூற்றென.
மாரோடு நூலணைத்துத்
தேராகச் சென்ற நிலை
அடித்து விட்ட சித்திரமாய்
அக
ஆழத்தே பத்திரமாய்.
ஞாபகமிருக்கிறதா ? பெண்ணே!
ஞாபகமிருக்கிறதா ?
எங்கு நீ இருப்பாயோ ?
என்ன நீ செய்வாயோ ?
தாயாகவிருப்பாயோ ?
தாரமாகவிருப்பாயோ ?
என்னை நீ நினைப்பதுண்டா ?
எண்ணியெண்ணிச் சிலிர்ப்பதுண்டா ?
*****************************************
- பாத்திரம்…
- அலங்காரங்கள்
- ஒற்றை பறவை
- (1) சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி!(2) பாரதி ‘யாய்ப் படைத்திடுவீர்!(3) ஞாபகமிருக்கிறதா பெண்ணே!
- புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள்
- புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும்
- விக்ரமாதித்தனின் ‘கவிமூலம் ‘
- ஷேப்டு சாலன்
- பாம்பே டோஸ்ட்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)
- அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!
- கற்றுக்கொடேன்……..
- நான் தான் W T C பேசுகிறேன்….
- கண்ணாடி
- முன்னுக்குப் பின்
- உயிர்த்தெழும் மனிதம்
- போர்க்காலக் கனவு
- பலகாரம் பல ஆகாரம் !
- ‘பிதாவே ! இவர்களை……. ‘
- பாிமாணங்களை மீறுவதெப்போ ? (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம்)
- உலக வர்த்தக மையம் தாக்குதல் – கருத்துக் குருடர்களின் ராஜ பார்வையும் அறிவுஜீவி நேர்மையின்மையும்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)
- உறவும் சிதைவும்
- சேவல் கூவிய நாட்கள் – 4 (குறுநாவல்)
- கரிய முகம்