“மனிதம் வளர்ப்போம்!“

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

மாடிவீட்டுக் கோமானும்
மலைக்கும் வகையில் திருடுகிறான்
கோடிவீட்டுக் குப்பன் திருட்டு
குவலயத்தில் அடாத செயல்
மாடிவீட்டுக் கோமான் செயல்
மன்னிக்கக் கூடியது மறக்கவும் கூடியது

மாடிவீட்டார் திருடியதை
மறைக்காது திருப்பித் தந்தால்
மனமாறப் போற்றிடுவர்
குப்பனின் திருட்டுக் குற்றச் செயல்தான்!
குப்பன் திருப்பித் தந்தாலும்
குற்றம் செய்தது குற்றம் தான்!
மாடிவீடும் குடிசையும் ஒன்றா?
மாடிவீட்டான் கடன் வாங்கினான்
மாடிமேலே மாடிகட்டினான்
கடனை அவன் கட்டவில்லை
கொடுத்த வங்கி கேட்கவில்லை..
வாய்மூடி மௌனியாகக் கைகட்டி நின்றதங்கே…….
மேலும் பணம் கொடுக்கத் தயாரென்று!

குப்பன் கடன் வாங்கினானே
குடிசை வீட்டைக் கட்டுதற்கே!
வட்டிமட்டும் கட்டிவந்தான்
முதலை அவன் அடைக்கவில்லை
வங்கியது சும்மா விடுமா..?
கடனை அடைக்காத காரணத்தால்
குப்பன் குடிசை ஜப்திக்குப் போனது..?
குப்பன் கதறி நியாயம் கேட்டான்….
குவலயத்தில் கேட்பாரில்லை
குப்பன் மீது குற்றம் சுமத்தினர்
குடிசையும் கோபுரமும் ஒன்றாய்விடுமோ?
கூவினர் குமைத்தனர் குப்பனை நன்கு புடைத்தனர்…
கூனிக்குறுகினான் குப்பனும் அங்கே….

மாடிவீட்டுக் கோமானுக்கு
மரியாதைகள் வந்து குவிந்தன…….
மலைக்கவில்லை மாடிவீட்டான்….
மமதையாகப் பவனி வந்தான்
மயக்கமும் தயக்கமும் நேர்மைக்கு ஏனோ?

நியாயம் என்பது இருவர்க்கும் தானே!
இருவருமிங்கே குடிமக்கள்தானே!
இருவரில் யாரும் உயர்ந்தவரில்லை!
பணத்தைத் தின்றவன் பண்பாளன் ஆனான்!
பதவியும் அவனைத் தேடிப் போனது
பணமிலாப் பேதைப் பதடி ஆனான்
பஞ்சை என்று அவனை இகழ்ந்துரைத்தனர்!

கோடிக் கணக்கில் கடனை வாங்கி
கட்டாதிருந்த கயவனைப் பார்த்து
காலில் விழுந்து கௌவரப் படுத்தினர்
கண்களிருந்தும் காதுகளிருந்தும்
நேர்மை முற்றிலும் தளர்ந்து விட்டது!
மயக்கமும் தயக்கமும் வந்தது ஏனோ?
மயக்கமும் தயக்கமும் தெளிந்தால் இங்கு
மனிதம் என்றும் தழைத்தே ஓங்கும்
மயக்கம் தெளிவோம் மனிதம் வளர்ப்போம்!
மண்ணில் அனைவரும் மகிழ்வுடன் வாழ்வோம்!

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.