முனைவர்,சி,சேதுராமன்
E. Mail: Malar.sethu@gmail.com
புறநானூற்றுப் பாடலாகிய,
“முழங்கு முந்நீர்; முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்’’ (புறம்., பா., 18)
என்ற குடபுலவியனார்; பாடல் வரிகளும் மேலும்,
“தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது
வல்லுநர்; வாழ்ந்தோ ரென்ப தொல்லிசை
மலர்;தலை யுலகத்துத் தோன்றிப்
பலர்;செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே“
(புறம்., பா., 24)
என்ற புறப்பாடலின் கண்ணுள்ள மாங்குடிகிழார்; பாடற்கருத்தும் மதுரைக்காஞ்சி பாடற் கருத்தும் ஒன்றாக அமைந்திலங்குகிறது. இவ்வாறு உலகின் நிலையாமை கண்டுணர்;த்திய மாங்குடி மருதனார்; உலகப்பற்று விடுத்து நிலைப்புகழாம் வீடுபேற்றை எய்தற்கு வழிகூறிடுமிடமாக முதற்கண் மன்னனைப் பல்வேறு புகழ்படப் போற்றுகின்றார்;. பின்,
“உயர்;நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேன் நீங்கிய வாய் நட்பினையே
முழங்கு கடல் ஏணிமலர்; தலை உலகமொடு
உயர்;ந்த தேஎத்து விழுமியோர்; வரினும்
பகைவர்;க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே;
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய், விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே,
அன்னாய்! நின்னொடு முன்னிலை எவனோ;
கொன்ஒன்று கிளக்குவல், அடுபோர்; அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!
கெடாது நிலைஇயர்,; நின்சேன் விளங்கு நல்லிசை!“
(மதுரைக்கா : 197-210)
எனக்கூறி நிலையாமை சாற்றுகின்றார்;. அஃதாவது,
“திரையிடு மணலினும் பலரே, உரைசெல
மலர்;தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!“
(மதுரைக்கா : 236-237)
என்ற வரிகளின் பொருள் ‘நிலையற்ற உலகம்’ என்றதனை காட்டுமாறு உணர்;த்தியுள்ளார்;. இது,
“மலர்;தலை உலகத்து மரபு நான்கு அறியப்
பலர்;செலச் செல்லாக் காடு வாழ்த்து“
(தொல்., பொருள், புறத்., நூ., 77)
என்னும் தொல்காப்பியப் பொருளதிகார புறத்திணையில் இடம்பெறும் காஞ்சித்திணைத் துறையுள் காடுவாழ்த்து எனும் துறைக்குப் பெரிதும் பொருந்துகின்றது. இரண்டே வரிகளுக்குள் உலக நிலையாமையைத் தெற்றென வெளிப்படுத்திய மாங்குடிமருதனார், தன் மன்னன் அதன் பயனுணர்;ந்து நல்வழிப்படுவான் என உணர;ந்தார்; போலும்! இறுதியாக மன்னனை நல்வழிப்படுத்த,
“முந்நீர்; நாப்பண் ஞாயிறு போலவும்,
பல்மீன் நடுவண் திங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி,
பெய்யா நல்இசை நிறுத்த புனைதார்;ப்
பெரும்பெயர்; மாறன் தலைவனாக,
கடந்துஅடு வாய்வாள் இளம்பல் கோசர்;
இயல்நெறி மரபின் நின்வாய்மொழி கேட்ப,
பொலம் பூண்ஐவர்; உட்படப் புகழ்ந்த
மறம்மிகு சிறப்பின் குறுநில மன்னர்;
அவரும் பிறரும் துவன்றி
பொற்பு விளங்கு புகழ் அவைநிற் புகழ்ந்து ஏத்த
இலங்கு இழைமகளிர்; பொலங்கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்,
மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும!
வரைந்து நீபெற்ற நல்லூழியையே!“
(மதுரைக்கா : 668 – 782)
எனக் கூறுவராயினார்;. இவ்வரிகளுக்கு விளக்கம் கூறும் பொ.வே. சோமசுந்தரனார், ‘‘வீடு பேற்றிற்கு நிலையாமை யுணர்;தலும் அவ்வுணர்;ச்சியானே அவையின்றிற் பற்றறுதலும் மெய்யுணர்;தலுமே காரணமின்றி வேறன்று என்னும் கொள்கையினை உடையராதலின்,
“இலங்கிழை மகளிர்; பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!“
என்றார்;. நிலையாமையுணர்;ந்து மெய்யுணர்;வு பிறந்தவழி, ‘‘யான், எனது’’ என்னும் இருவகைச் செருக்குமின்றி,
“உலகினில் என்செயல் எல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர்; செயல் எனக்கு இன்று உன் செயலே என்றும் நினைதலே“ இயல்பாகும் அன்றோ? அவ்வழி, ‘யான், எனது’ என்னும் செருக்காலுறற்பால துன்பம் அனைத்தும் அகன்று வீட்டின்பமே உளநிறைந்திருத்தல் பற்றி, ‘‘மகிழ்ந்து இனிது உறைமதி’’ என்றார்;. இங்ஙனம் இறைஞானம் கூடி நின்றுழி முன்னர்; இப்பிறப்பிற்கு ஏதுவாகிய வினைகள் உள்ள துணையும் இவ்வுடல் நிலைத்தலும் இவ்வுடல் ஒழிவின்கண் எய்துவது வீடேயாதலும் திண்ணம் என்பார;. இங்ஙனம் இவ்வுடல் இருக்குங் காலந்தானும் முன்னரே ஊழான் வரையறை செய்யப்பட்டதாகலின் அதுகாறும் இவ்வுடலிலேயே வீட்டின்பம் மருவப் பெற்றுப் பின்னர்; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டின் அரசுரிமையையும் பெறக்கடவாய் என்பர், ‘‘வரைந்து நீ பெற்ற நல்லூழி யையே’’ என்றார்;. இவ்வாழ்நாள் வீடுபேற்றிற்குக் காரணமாய்ச் சிறத்தலின் நல்லூழி என்றார்;. ‘‘நல்லூழி கலியல்லாத ஊழி’’ என்பர்; நச்சினார்;க்கினியர்;’’ என உரைவிளக்கம் தந்துள்ளார்; (பத்துப்பாட்டு, பக்., 189 – 190)
. மதுரைக்காஞ்சியானது, தொல்காப்பியப் திணைகளுள் காஞ்சித்திணையின் முதுகாஞ்சித் துறைக்குப் பொருத்தமுற அமைகிறது.
முதுகாஞ்சி
தொல்காப்பியம், ‘‘கழிந்தோர்; ஒழிந்தோர்;க்குக் காட்டிய முதுமையும்’’(தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப., 77) என முதுகாஞ்சி பற்றி மொழிகிறது. இதற்கு, ‘‘அறிவான் மிக்கோர்; அல்லாதார்;க்குச் சொன்ன முதுகாஞ்சியும்’’ என உரை வகுத்துள்ளார; இளம்பூரணர்;.
மேலும்,
‘‘பல்சான் றீரே பல்சான் றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர்; நிரைகவுள்
பயன்இல் மூப்பின் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்;ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர்; மாதோ
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே’’
என்ற புறப்பாடலை (195) உதாரணம் காட்டியுள்ளார்; (தொல்., பொருள்., இளம்., உரை., ப., 129). இப்பாடலை இயற்றிய நரிவெரூஉத்தலையார்; என்ற முதுபுலவர், யாக்கையின் நிலையாமை பற்றி கூறி, வாழும் காலத்து நல்லது செய்யாவிடினும் அல்லது செய்வதை விடுதல் வேண்டப் பணித்து அதுதான் எல்லோரும் விரும்புவதும் வீடுபேற்றை அடைவதற்குரிய வழியுமாம் என்கிறார்;. முதுகாஞ்சித் துறைக்கு விளக்கம் தரும் நச்சினார்;க்கினியர், ‘‘இளமைத் தன்மை கழிந்து அறிவுமிக்கோர்; இளமை கழியாத அறிவின் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்; முதுமை மூப்பாதலான் அது காட்சிப் பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம் என்கிறார்;. இதற்கு,
‘‘இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழி தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர;சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்;நணிப் படிகோ டேறிச் சீர;மிகக்
கரையவர்; மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்;க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குதித்து மணற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே’’
என்ற புறப்பாடலைச் (243) சான்று காட்டியுள்ளார்;.
மேலும், இது வீடுபெறுதற்கு வழி கூறியது (தொல்., பொருள்., புறத்., நச்சர்., உரை., ப., 239) என்றும் விளக்கம் தந்துள்ளார்;. முதுகாஞ்சி என்பது – ஆன்றவிந் தடங்கிய வயதின் முதிய அறிவுமிக்க சான்றோர்; பெருமக்களால் இளமை கழியாத இளையோர்;க்கு உலக நிலைபற்றிக் கூறி முதுமை வருமுன்னே நல்லறங்களைச் செய்து புகழ் தேடிய வழியே வீடுபேற்றை அடைதல் எனில் பொருந்தும்.
மதுரைக்காஞ்சியும் உலக நிலையாமையுணர்;த்தி வீடுபேறு அடைதற்கு வழிகாட்டுவதாகப் படைக்கப் பட்டுள்ளதை படிக்குந் தோறும் ஆயுந் தோறும் நன்கறியலாம். இந்நூல் காஞ்சித் திணையுள், முதுகாஞ்சி என்னும் துறைக்குப் பெரிதும் பொருந்துமாறு அமைந்துள்ளது. மதுரைக்காஞ்சியில்,
‘‘இருபெரு வேந்தரொடு வேளிர்;;சாயப்
பொருது, அவரைச் செரு வென்றும்
இலங்கு அருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்;ந்தோங்கிய விழுச் சிறப்பின்
நிலம் தந்த பேருதவிப்
பொலந்தார்; மார;பின் நெடியோன் உம்பல்!’’
(மதுரைக்கா : 55 – 60)
என்று நூலின் தொடக்கத்திலிருந்தே ‘முடி சார்;ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பலாவர்;’ என்ற கருத்தை முன்னிருத்திக் கூறி உலக நிலையாமை பற்றி மதுரைக்காஞ்சி முழுவதும் பரவலாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. காஞ்சித்திணை உலகத்து நிலையாமை கூறி வீடு பேற்றையடைய வழி கூறுகின்றது.
மதுரைக்காஞ்சி தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனுக்கு நிலையாமை அறிவுறுத்தற் பொருட்டு பாடப்பட்டுள்ளது. அறிவின் மிக்க வயது முதிர்;ந்த சான்றோர்; இளமையாந் தன்மையுடையார்;க்கு இளமை, செல்வம், யாக்கை ஆகியன நிலையற்றவை என்று கூறும் முதுமொழிக் காஞ்சித் துறைக்குப் பொருந்துமாறு மதுரைக்காஞ்சி யாக்கப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியானது, தமிழக மாண்பையும் ஆட்சி முறைமையையும் அறியத் துணையாகின்றது.
- சத்யானந்தன் கவிதைகள்
- வினோத மலரொன்றின் இதழ் நுனி..
- விடியாக்கனவு
- அவள் சொன்ன காதல்!
- இடம்பெயர் முகாமிலிருந்து
- குழந்தை
- சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.
- ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்
- “மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை“ (தொடர்ச்சி-3)
- இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு ! (கட்டுர
- தண்ணீரும் நாமும்
- இதமானதொரு நகைப்பு …!
- தீர்வும்.. தெளிவும்!!!
- முள்பாதை 56
- வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
- உருத்தலில் உருவாகி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்
- லிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.
- டாக்கா: பிசாசு நகரம்
- இரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி
- பெயர்வு
- கள்வர்க்கு இரவழகு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5
- பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்