“தவம் செய்த தவம்” – கவிதை நூல் பற்றிய சில எண்ணங்கள்:-

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

பா சத்தியமோகன்



ஒரு புத்தகம் என்பது எத்தனையோ காரணங்களை உள்ளடக்கி உண்டாகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதே போல் ஒரு ஒரு புத்தகமும் ஒரு ஒரு மனிதன் கையில், எந்த காரணத்தை முன்னிட்டு சேர்கிறது என்பதற்கும் ஒரே ஒரு காரணம் மட்டுமே இருப்பதில்லை.

“தாகமுள்ளவன் நீரைத் தேடுகிறான்

நீரும் தேடிக் கொண்டிருக்கிறது –

தாகமுள்ளவர்களை!” என்று ஒரு புகழ் மிக்க வாசகம் சொல்வார்கள். ஒரு கவிதை எவ்வளவு நிஜமோ அதே அளவு நிஜம் ஒரு புத்தகம் ஒருவர் கையில் கிடைக்கும் காரணமும்.

“தவம் செய்த தவம்” என்ற புத்தகம் நெய்வேலியில் சைவ சித்தாந்த வகுப்பினால் பழக்கமான ஒருவரால் கிட்டியது.

நேர்த்தியான முயற்சி. அழகிய அட்டை.

“நீலவானம்” (பக்:18) ஒரு கவிதை, மகாகவி பாரதியின் ருசியை நினைவு படுத்துகிறது .வாழை இலையில் வைத்த ஏழு வகையான கதம்ப உணவுகள்போல, ஏழு வகைத் தலைப்புகளில் கவிதைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

கடவுள் நாட்டம் உள்ளவர்கள், வாழ்வின் கசப்புகள் அறிய விரும்புவோர், வாழ்தலில் காணும் உறவுகள் அறிவோர்; தமிழகம் அறிய விரும்புவோர் என்று வாசகர்கள் எது வேண்டுமோ படித்துக் கொள்ளலாம்.

கவிஞர் சின்மய சுந்தரன் வாழ்வியலும் ஆன்மீகமும் அலசி எழுதும் முயற்சிக்கு மரபு வடிவம் மட்டுமே உகந்தது என நம்புகிறவர்.

“சுள்” என்று சுடவேண்டிய கருத்துகள் கொண்ட தலைப்புகள் வழியே ஆசையாகப் பயணமாகிறோம். மரபுக்கவிதையோ நம் ரசனைப் பயணத்திற்கு அதிக நிதானத்தை விலையாகக் கேட்கிறது. பாய்ந்து ரசிக்கும் ரசிகனுக்கும் கவிதைக்கும் நடுவே மெல்லிய சுவர் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

“தவம் செய்த தவம்” என்பது கம்பனின் கவிநயம் குறித்த நெடுங்கவிதை. இராமாயணத் தேடல்.

பல வித கவிதைகள் நடுவே பட்டுப்புடவை ஜரிகை போல “அப்பாவின் படிக்காசு” “நடுத்தர வயதுக்காரன்” போன்ற புதுக்கவிதை ருசியுள்ள (மரபு வடிவம் கொண்ட) கவிதைகளும் உள்ளதென்பது கவிஞரின் பலம்.

ஒரே தலைப்பின் கீழ், நிறைய கவிதைகளை எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. ஏன்? எந்த ஒரு குறிப்பிட்ட கவி உணர்வும் அழுத்தமாக ஏற்படும் வாய்ப்பு குறைவினால். கவிஞரை வாழ்த்துகிறோம்.

தவம் செய்த தவம்

மணிவாசகர் பதிப்பகம்

31 , சிங்கர் தெரு,

பாரி முனை,

சென்னை – 8

விலை- 40/

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்