ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

மலர்மன்னன்


ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு

விதியை அறிதல் என்னும் கட்டுரையைப் படித்துவிட்டுத் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளமைக்கு நன்றி.

செய்ல், எண்ணம் இரண்டுமே சுதந்திரமான சுய சங்கற்பத்திற்கு உடபட்டவைதாமே! செயல் என்பது சக்தி எனில் எண்ணம் என்பது உறைநிலையில் இருக்கும் சக்தி, அவ்வளவுதானே! அவ்வளவில் அதற்கும் விளைவு இருக்கவே செய்யும்.

எடுக்கும் பிறவிகள் யாவும் படிப்படியான பாரிணாம வளர்ச்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எத்தனம்தான் என்று சூசகமாகச் சொல்வது நமது தொன்மையான தத்துவ ஞானம்.

ஸ்ரீ ம. ந. ராமசாமி ஒரு சிறந்த எழுத்தாளர். கணையாழி வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். அவர் ஒரு பரம நாஸ்திகர். ஆன்மிகம் என்பதாக ஒன்றை ஏற்காதவர். அப்படியொன்று இல்லை என உளமார நம்புபவர். ஒருமுறை அவரும் நானும் சந்தித்துக்கொண்டபோது ஆன்மிகம் என்பதாக ஒன்று இருப்பதாகச் சொல்கிறீர்களே எனக்கு அப்படியொன்று இருப்பதாகவே தோன்றவில்லையே இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். ஆன்மிக உணர்வைப் பெறுவது ஒரு பரிணாம வளர்ச்சிதான். எப்படியும் ஒரு கட்டத்தில் அது நிகழ்ந்தே தீரும், உங்கள் விஷயத்தில் அது தோன்றுவதற்கு மேலும் சில பிறவிகள் தேவைப்படலாம் என்று சொன்னேன். இதை இப்போது குறிப்பிடக் காரணம், ஒரு பிறவிக்குப் பிறகும் பின் தொடரும் சுயேற்சை சங்கற்பங்களே விதியெனத் தொடர்ந்து பரிணாம வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன என்று சொல்வதற்குத்தான். உங்கள் கேள்விக்கான பதில் இதில் இருப்பதாக நினைக்கிறேன். சுயேற்சை சங்கற்பத்தின் தன்மையைப் பொருத்து, பரிணாம வளர்ச்சி என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ அமையும். ஆங்கிலத்தில் retrograde என்று சொல்கிறோம் அல்லவா, அதுதான்.

மற்றபடி உங்களது கண்ணகி பற்றிய குறிப்புக்கான எனது கருத்தை இது தொடர்பான தனிக் கட்டுரையில் தெரிவித்துள்ளேன்.

அன்புடன்,
மலர்மன்னன்

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்