வேத வனம் விருட்சம்- 75

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

எஸ்ஸார்சி


ஏற்பாடு வேள்விச்சாலையில்
அக்கினிப் படையலுக்கு
சிவப்பு மச்சக் காளை
இரு வெண்புள்ளிக்காளை
சாவித்திரிதேவிக்கு
நடுவே வெள்ளைவண்ணச்
சோடிக்காளை பூஷணனுக்கு
கொம்பில்லா மஞ்சளாடு
விசுவதேவர்க்கு
புள்ளிகளுடையது மருத்துகட்கு
பெண் ஆடு சரசுவதிக்கு
ஆண் ஆடு வருணனுக்கு
தயாராகிறது பலியிடம் நோக்கி ( சுக்ல யஜுர்29)
இது என்றறிவோம் இதனால்
அந்தண்மைக்குப்பிராமணன்
ஆளுமைக்கு அரசன்
தவத்துக்குச்சூத்திரன்
நரகத்துக்கு வீரமழிப்பவன்
தர்மத்துக்கு அவை போய்வருவோன்
பழங்கதை சொல்ல அச்சமுற்றோன்
சுற்றிச் சுற்ரி வந்திட முகசுதிக்காரன்
நுட்பத்துக்கு ரதஞ்செய்வோன்
தீரச்செயலுக்கு மரத்தச்சன்
சங்கேதம் அறியக்காதல் வயப்பட்டோன்
துன்பத்துக்கு கலியாணமாகாத் தமையன்
தீ யவை செய்திட மணமுடித்த இளையோன்
துக்கத்துக்கு இளஞ்சகோதரிக்கணவன்
ஒற்றுமைக்கு நினைவாற்றலுள்ளோன்
வலிமைக்கு இணக்கமாயிருப்போன்
இடையூறுக்குக்கூனன்
இன்பத்துக்குள்ளன்
அதர்மத்துக்குச்செவிடன்
நுண் அறிவுக்கு ஆராய்ச்சியாளன்
நியாய அநியாயத்துக்கு
விடை பகரத்தெரிந்தோன்
விரைவுக்குக்குதிரைக்காரன்
பலத்துக்குப்பசுமேய்ப்போன்
ஆண்மைக்கு இடையன்
தேஜசுக்கு ஆட்டுக்காரன்
உணவுக்கு உழவன்
நலத்துக்குச் செல்வன்
எதிர்ப்புக்குக் கள்ளமனத்தோன்
பகுத்தறியக் காவல் செய்வோன்
சினத்துக்குக்கொல்லன்
பொறாமைக்கு அமைதிகாப்போன்
கோரத்துக்கு இழிகுலத்தோன்
தராசுக்கு வியாபாரி
பச்சாதபத்துக்குச்சோம்பேரி
தோல்விக்குத்தூங்குமூஞ்சி
துன்பத்துக்கு அதிகம் பேசுவோன்
துக்கத்துக்கு வெட்கமற்றவன்
அபசுரத்துக்கு சங்கு கோ¡ஷன்
காம க்கிரீடைக்கே வேசி

உயரன் குள்ளன்
பருமனாயுள்ளோன் மெலிந்தோன்
கூடுதல் வெள்ளையன்
கூடுதலாய்க்கருப்பன்
முடியேதுயில்லான்
கூடுதல் முடியோன்
வசமாகின்றனர் அறிஞர்கட்கு

மக்கட்தலைவர் அர்ப்பணிப்புக்கு
அருகதை ஆகார்
சூத்திரனும் பிராமணனும்.

அடிமை சூதாடி வேசி இவரே
மக்கட் தலைவர்க்கு
அடைக்கலமாவோர் ( சு.ய 30)
———————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி