வேத வனம் விருட்சம் 76

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

எஸ்ஸார்சி



ஆயிரந் தலைகள்
ஆயிரங் கண்கள்
ஆயிரங்கால்கள்
பத்துப் புலன்களொடு
புவியெங்கும் பரவியவன்
சிருட்டிப்புருடன்
பெருவேள்வி நிகழ்கிறது
வளர்வனம் மிருகம் மக்கள்
ருக்கு யசுர் சாமம்
குதிரை ஆடு மாடு
தேவர் முனிவர் சாத்தியர்
வேள்வி தரு விளைச்சலிவை
புருடனின் முகம் பிராமணன்
புருடனின் கைகள் க்ஷத்ரியன்
புருடனின் தொடைகள் வைசியன்
புருடனின் கால்கள் சூத்திரன்
மனம் நிலா
கண்கள் கதிரோன்
செவி வாயு
முகம் அக்கினி
நாபி காற்று
சிரம் வான்
பாதம் புவி
செவி திசை
எனப்படிப் படியாய்
இதனின்று இது
எனத்தானே வந்தது ( சுக்ல யஜுர் 31)
அறிஞர்கள் ஒரே
மறை பொருளாம்
அவனை அனைத்திலும்
காண்கிறார்கள்
எல்லாம் அவன் வசம்
அவனிடமிருந்தே எவையும் எழும்
மக்களின் பாவும் நெசவுமாய்ப்
பரவியபெரியபெரியவனவன்
அவன் எல்லாமாகிறான்
எங்கும் நிறைகிறான்
அவனே வான் மண்
ஒழுங்கிசைவை விசாலமாக்கி
அவனே அது காண்கிறான்
அவனே அது வாகி
அதுவே அவனாகி
அது அவன் அவன் அது
எனவாகிறது அனைத்தும்
அக்கினியே யான் அறிந்தலை
விளங்க வைக்கட்டும் எனக்கு
தலைவ என் அறிவு பெருகட்டும்
காற்றுத்தெய்வமே அறிவு வழங்குக
படைப்புக்குரியோன் வருக
எனக்கு வழங்கிடுக அறிவு
அறிவும் வலிமையும்
என் கைத்தலம் அமைக ( சுக்ல யஜுர் 32)
சூரியன் சகலமும் காண்போன்
விரைவோன் வானஞ்சமைப்போன்
புவி ஒளிர்கிறது
சூரியன் ஆதி காரணன்
தன் ரதக்குதிரைப் பூட்டவழித்து
அவன் இரவு தருபவன்
மகான் மா பெரியோன்
சத்தியச் சொரூபி
தேவர்களின் புனிதப்புரோகிதன் ( சு.ய 33)
விழித்திருக்கும்போதுப்புறமிருந்து
உறங்கு போது அருகிருக்கும் மனத்தே
சிவம் உறைக
பிரக்ஞையெனும்
அறிவு எங்கே நிலைக்கிறதோ
செயலுக்கு எது மூலமோ
அங்கே சிவமுறைக
முக்காலமும் அறிய
எது அமுதாகிவருமோ
அம்மனத்து சிவமுறைக
ருக்கு யஜுர் சாம அதர்வண
நிலையமாகி
மக்களின் சித்தம் அமர்
மனத்தகத்து சிவமுறைக
மானுடச்சாரதியாகி
இருதயவாசனாய
மனத்தகத்து சிவமுறைக ( சு.ய.34)
காற்றும் கதிரோனும்
இனிமை தருக எமக்கு
புவி அனல் இனிமைதருக
திசையும் நீரும் நன்மைதருக
சிந்து நன்மை தருக
பூமி நன்மை தருக ( சு.ய.35)
ரிக்கே வாக்கு
யஜுரே மனம்
சாமமே மூச்சு ( சு.ய.36)
ஆத்மாவை அழிக்கும் சனம்
அடையும் இருளுலகம்
ஆன்மாவே அனைத்தும்
அனைத்திலுமே ஆன்மா
அறிபவன் ஆன்மாவோடு
நிகழ்வு வேறு அவன் வேறு
பெரியோர் தெரிவர்
குறித்தது ஒர் நிகழ்வுக்கும்
அப்பாலாய் அவன்
பெரியபெரியோர் தெரிவர்
வித்தை அறிந்தோன்
அவித்தை எதுவெனத்தெரிந்தோன்
அவித்தை தெரிவதால்
அழிவைத்தொலைத்து
வித்தை அறிந்ததால்
அமிர்தம் அடைகிறான்
பொன் மூடி ஜொலித்து மறைக்கிறது
சத்தியத்தின் முகத்தை
சத்தியமும் தருமமும்
சாட்சியாகிட £ விலக்கு திரையை
அழகும் ஒளியும்
கொண்ட அவனா தெரிகிறான்
அது நீயே தான்
அக்கினியே எங்களை
நல் வழியால் செல்வத்துக்கு
கொண்டு போ
அறம் அறிந்த இறை
பழி வாராது காக்க எம்மை
வணக்கமொழி பலப்பல
நினக்கு அக்கினித்தேவனே ( சு.ய.40)
——————————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி