வேத வனம் விருட்சம் 20

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

எஸ்ஸார்சி



கவிதை

அனைத்தும் யான்
உன்னதம் யான்
இறை யான்
சிவன் யான்
மொழி கடந்து
வெளியொடு நிறை
அகத்துள்ளாய் உறை அகம்.

எத்தன்மைத்து
யார் புகல வல்வார்
காலமிலி
எல்கையிலி
அமல விமல நிர்மலம்
சிந்தையுடன்
செயலுக்கெட்டா
யானே நான்

ஒலியிலா
உருவமிலா
மணமிலா
அசைவுமிலா
சொல்லொடு சிந்தைக்கும்
கற்பனைக்கும் எட்டா
பற்றற்ற மாசலி.

கோதிலா
கரவுமிலா
எதிர் என ஏதுமிலா

மனம் புத்திக்கெட்டா
திரை இடை
மறைத்து நில்லா
அதி சூக்குமம்

அறிவுரு
அதி துணை
மாறிலா மலமி;லா
புலனுக்கெட்டா
ஞானக் குகை

ஆதார அதியுச்சம்
சிவன் யான்
மனவெளியின் சாட்சி
காண்போன்
எந்நேரக்கண்காணி
எவையும் அறிந்தோன்
அடுத்ததென்று ஏதுமிலான்.

அமைதி யான்
மரணமிலா யான்
அமிர்தம் யான்
அச்சம் அறிந்திடா
புனிதன் உருவிலி
மனம் கடந்த
என்றுமுள விடுதலை
பூரணமாய்க்கொண்ட
மாறா ஒன்று

மலர் மாலை ஊடாய் பாயும் நார்
எங்கும் வதியும் கதி
கால வெளி கடந்து
ஆகாசம் நிறைத்து
நிற்கும் சுத்த
சுயம்புவே அப்பிரம்மம். — பிரம்மனுபவ உபநிசத்.

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி