வேத வனம் விருட்சம் – 33

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

எஸ்ஸார்சி


வைகறைச்செல்வி
அவள் உஷை
மயிர் வழிக்கும் நாவிதன்
கத்தி போல்
இருள் வழிக்கும் உஷை
ஈன்ற கன்றுக்கு அவள்
முலை காட்டும் தாய்ப்பசு
தொழுவம் மீளும்
மேய்ந்த பசுபோலே
எத்தனை வேகமாய்
ஒடோடோடி வந்து
உற்சாக ஒளிமழையை
வர்ஷிக்கும் அவளே உஷை..

கோபாலன் பசுக்களை
மேய்ப்பவன்
உஷை ஒளிக்கிரணங்களைப்
பரத்துபவள்
கதிரொளிப் பூவுலகில்
வெள்ளமெனப் பாய்கிறது
உஷை எங்களுக்குக்
குழந்தைகள்
அவர்கட்குப்புதல்வர்களென
அற்புதம் அருள்க.

பகையொழிக்கும்அசுனிகளே
எங்கள்
இல்லம் மனங்குளிர்ந்து வருக
பசுக்களும் பொன்னும் அருள்க
தங்கச் சாலையில்
உதித்த நீவிர்
சோமபானம் அருந்துக
விண்ணிலிருந்து ஒளி
கொணர்ந்து
மானிடற்கு தந்தவர்
அன்றோ நீவிர் ( ரிக் 1-92)


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி