வேதவனம் விருட்சம் 7

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

எஸ்ஸார்சி



ஜீவன்கள் எங்கிருந்து
வந்தன ? கபந்தியின் வினா

படைப்புக்கடவுள்
விருப்பம் அது
அவ்விருப்பம் கொணர்ந்தே
உணவும் உண்பவனும்
ஆகத்தான் உயிரினங்கள். பிப்லாதரின் விடை பிரச்னோ உபநிசத் 1/4

கதிரவனே உயிர்
உணவு தருவோன் சந்திரன்
உணவோ
உருவு கொண்டும்
உருவமின்றியும் 1/5

சூரியத்தந்தைக்கு
ஐந்து கால்கள் ஐந்து பருவங்கள்
பன்னிரு தோற்றம் பன்னிரு மாதங்கள்
ஆறு ஆரங்கள்
கொண்ட ஏழுச்சக்கரத்தேரில்
ஏழு குதிரைப்பூட்டி
ஆரோகணித்துவரும் அவன்
மழை தருவான்
பிரபஞ்சம் அவனுடையது. 1/11

பகல் உயிர்
அல் உணவு
.இரவுக்கலவி
பிரம்மச்சரியம்
பகல் புணர்வோ
ஜீவன் பறிப்பு 1/13

பார்க்கவனின் வினா
உயிரனங்கட்கு த்துணையாகி நிற்பது யார்
அறிவளிப்பது யார்
இதனில் எவரே பெரியவர் ?

பிராணச்சக்தியே மூலம் பிப்லாதரின் விடை
அவனே உண்போன்
கேட்பதும் பார்ப்பதும் சிந்திப்பதும்
அவனே
வளமும் அறிவும்
தரும் தாயான தயாபரனும்
அவனே 2/13

உயிர்ச்சக்தி எங்கே பிறந்தது
எப்படி வந்தது
ஆள்வதெப்படி
அருகுவதெப்படி ? அசுவலாவின் வினா

ஐம்புலனாட்சியே பிராணன்
கழிப்பது அபானன்
பகிர்வது சமானன்
சுழலுவது வியானன்
உள்ளே அனுமதிப்பதும்
உயிரை க்கொண்டுபோவதுமே உதானன் பிப்லாதரின் விடை 3/5

வியானன் உறை
இதயத்து
ஒரு நூற்று ஒரு
நரம்புகள்
ஒரு நூறு கிளையாகும்
ஒவ்வொரு நரம்பும்
கிளையொன்று
எழுபத்திரெண்டாயிரமாய்ப்பின்னும் பிரியப்
பிரதான ஒன்றோடுகூட்டி
727210201 நரம்புகள். 3/6

உறக்கமும் ஒரு உயிருக்கு
கனவுக்காட்சியும்
பின்வரும் விழிப்பும் என்ன ? கர்க்கரின் வினா

கதிரவன் மறைவ தொக்கும் உறக்கம்
உதிப்பதொக்கும் விழிப்பு. பிப்லாதரின் விடை

ஒம் என்னும் சொல்லின்
உறை பொருள் என்ன ? சத்ய காமனின் வினா

பாம்பு த்தன்சட்டையைத்
தொலைப்பதுபோல்
பாவம் தொலைத்து
விடுதலை காண்போன்
ஒம் அது தெளிந்தவன்

கதிரவன் ஒளியோடு
தானும் ஒன்றாவான்
ஒம் அது தெளிந்தவன் பிப்லாதரின் விடை 5/5

ஆன்மா தன்னை
தெளியும் முன்
இடைகாணும் பதினொரு கலைகள் யாவை ? சுகேசனின் வினா

பூதங்கள் ஐந்து
புலன்கள் ஐந்து
கர்மேந்திரியங்களைந்து
மனம் ஒன்றொடு
ஆகக்கலைகளோ பதினாறு
பசிக்கு உணவு
பரனைத்தெரியவே தியானம் பிப்லாதரின் விடை 5/4

ஆறுகள் கடல்
தொட்டுப்
பெயர் உரு இழந்துபோம்
இடை நிற்கும்
பதினாறு கலைகளோ
பரம் அறிய
இழக்கும் உரு. 6/15


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி