வீடு வேண்டி

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

மு.புகழேந்தி


வழி வழியே
வெளியேறி
புரள பழகி
தவள பழகி
நால்கால் பழகி
அடி பழகி
நடை பழகி
ஓட பழகி

மழலை குரல்
அழு குரல்
அவலக குரல்
ஆனந்த குரல்
களிக் குரல்
காமக் குரல்
கேளிக் குரல்
கோபக் குரல்
சஞ்சல குரல்
சலிப்புக் குரல்
சாபக் குரல்

கேட்க கேட்க
வீடு வாங்க
ஓடி கொண்டே இருந்தேன்

வீடு வாங்க
வித்தியாச அழைப்பிதல் கிடைக்க
ஓடி கொண்டே வாங்க முனைந்தேன்

கட்டினோன் கால்பிடிக்க
ஓடி கொண்டே வீடு சென்றோம்

வீடு வரை வந்தவன்
அருமை பெருமை
அள்ளி சொல்லி
வீட்டுக்கு
வழி காட்டி மறைந்தான்

புத்தம் புது வீடு
ஓடிய ஓட்டத்தின்
இலட்சியம் இதுவோ ?
என்று எண்ணி
ஒரு வழி பாதை வழியே
வீட்டுக்கு ஒடினேன்

வீட்டிற்குள்
விளக்கு நெருப்பு இல்லை
ஓளி இல்லை
கதவு சன்னல் இல்லை
ஒலி இல்லை
துளை கிணறு இல்லை
நீர் இல்லை
நாள்காட்டி கடிகாரம் இல்லை
காலம் இல்லை

வீட்டிற்குள் ஓடினேன், ஓடினேன்
எங்கும் இருள் – சக்தி குறைய

வீட்டிற்குள் நடந்தேன், நடந்தேன்
எங்கும் இருள் – சக்தி குறைய

வீட்டிற்குள் அடி வைத்தேன், அடி வைத்தேன
எங்கும் இருள் – சக்தி குறைய

வீட்டிற்குள் நால்கால் நடை போட்டேன், போட்டேன்
எங்கும் இருள் – சக்தி குறைய

வீட்டிற்குள் தவழ்ந்தேன், தவழ்ந்தேன்
எங்கும் இருள் – சக்தி குறைய

வீட்டிற்குள் புரண்டேன், புரண்டேன்
எங்கும் இருள் – உணர்வு இருக்க
வெளியேற
வழி வழி என்கின்றேன்
கேட்கிறதா. ?

—————————————–
pugazhendi@hotmail.com

Series Navigation

மு.புகழேந்தி

மு.புகழேந்தி