மோகனா.
கால தேவனின்
காலம் தவறாமையின் பரிசு.
மற்றுமொரு புது வருடம்.
இந்த முறையாகிலும்,
உணர்வோம் வா..
பரிசளித்த காலமவன்
முக்கியம்.
கடந்த காலத்தின்
தவறுகள் பாடமாக்கி
இனியாவது
தவறுதல்களின் எண்ணிக்கை
குறைப்போம் வா.
நிலவின் கலங்கம்
துடைத்தல் வேண்டாம்,
குறைந்தபட்சம்
நம் மனதின் கலங்கம்
அழிப்போம் வா.
மூழ்காமல் முத்தெடுக்கும்
சுட்சமம் தேடுதல் விடுத்து,
சிப்பியாகிலும் சேகரிப்போம் வா.
பகைக்கு மாற்றாக
புன்னகையை பரிசளிப்போம்.
வீண் வார்த்தைகளில்
கோட்டை கட்டுதல் விடுத்து
மெளனமாய் சில செங்கலாவது
சுட்டிடுவோம் வா.
தீயையும், நீரையும்
சமமாக கானும்
முதிர்ச்சி வளர்போம் வா.
நம்
முயற்சிகள் அரும்புகளாகவும்
புன்னகை மலராகவும்
வெற்றிகள் மாலையாகவும்
அமைந்திட விழைவோம் வா
இந்த புது வருட தினத்தில்.
*******
மோகனா.
MohanaLakshmi.T@in.efunds.com
- எங்கள் கலைக்கூடம் கலைந்தது!
- நீயுமா ?
- முடிக்கு விலையென்ன – உரை வெண்பா
- மீண்டும்
- திரும்பி
- தினகப்ஸா – நாதுராம் கோட்ஸே படத்திறப்பு சிறப்பிதழ்
- கடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)
- ஆசான் விருது ஏற்புரை
- மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்
- உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) கல்வி
- முதல்முதலாய்….
- விழைவோம் வா..
- சுமை
- போரும் அமைதியும்
- தியானம்
- காலத்தில் செல்லும் வார்த்தைகள்
- நரகம்
- பெண் பிறந்தாள்
- ?
- நினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1
- தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- படைப்பாளியின் தார்மீக உரிமைகளும், சில கேள்விகளும்
- கடிதங்கள்
- Tamil Short Film Festival
- அரசூர் வம்சம் (தொடர் நாவல் -1)
- தபால்கார அப்துல் காதர்