சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
வெண்ணிலவின் தென் துருவத்தில்
தண்ணீர் கண்டுபிடித்தார்
நாசா நிபுணர்
ஏவு க¨ணையால்
நிரந்தர
நிழற் குழியைத் தாக்கி !
பனிக்கட்டிப் பாறையாய்
பல யுகங்கள்
பதுங்கிக் கிடக்கும்
புதுமை ! பழமை ! மகிமை !
எரிசக்தி உண்டாக்கும்
அரிய வாயு
ஹைடிரஜன்
வெடிப்பில் வெளியேறும் !
செவ்வாய்க் கோளுக்குச் செல்லும்
பயணிகட்குத்
தங்குமிடம் அமைக்க
வெண்ணிலவில் குளிர்ந்த
தண்ணீர் வசதி !
பிராண வாயு சுவாசிக்க !
எரிசக்தி வாயு !
வரண்டு போன
பாலைவனச் சுடு நிலவில்
பசுஞ் சோலைப் பள்ளத்தில்
நீர்க்கட்டி
நிரந்தரமான தெப்படி ?
இருண்டு போன
ஆழ்குழியில்
பனிநீரைத் திரவ மாக்கி
மேற்தளத்தில்
ஏற்றுவது எப்படி ?
Fig. 1
Icy Water Discovered in Shadow
Crater by NASA
“நிலாவில் நீர் இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அது விண்வெளித் தேடலுக்குப் பின்னால் வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”
மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)
“வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ? நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது. ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன. அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C). அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”
டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.
Fig. 1A
Significant Amount Water Found
on the Moon
“நிலவில் கண்ட (LCROSS) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”
கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)
“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”
ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)
“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)
Fig. 1B
NASA Impact Splashes Water
On the Moon
வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது
2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது. லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது. உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலைகளின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.
அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது. லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது.
Fig. 1C
Water on the Moon
How to Pump ?
நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A). 25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்..
காபியஸ் குழியில் புதிராகப் பேரளவு அளவு ஹைடிரஜன் வாயு இருப்பது எதிர்பார்க்கப் பட்டது. அதுவே நீர் உற்பத்தியாக உதவி இருக்கக் கூடும் என்று யூகிப்பானது. லகிராஸ் ஏவுகணை நிலவுத் தளத்தைத் தாக்கி வெளியேறிய சிதறல்கள் 30 -100 வினாடிகள்தான் நீடித்தன ! நிலாவில் நீர் இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அது விண்வெளித் தேடலுக்குப் பின்னால் வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது. நிலவில் கண்ட (LCROSS) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.
Fig. 1D
LCROSS Rocket Hitting the Moon
First, Followed By Spaceship
நிலவை நோக்கி லகிராஸ் ஏவுகணை மோதல்
லகிராஸ் நிலவைத் தாக்கி நீரிருப்பதை நிரூபித்த திட்டத்துக்குச் செலவு 79 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு). எரிசக்தியுடன் லகிராஸ் விண்ணுளவியின் எடை : 1665 பவுண்டு. ஏவும் போது 675 பவுண்டு எரிபொருளைத் தாங்கிச் சென்றது. அந்தத் திட்டத்தில் வீணாக ஒதுக்கி மறையும் சென்டௌர் மேற்தட்டு அட்லாஸ் -5 ராக்கெட் (Upper Stage Centaur Atlas -5 Rocket) முதலில் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள காபியஸ்-ஏ இருட்குழியைத் தாக்கியது ! மோதலில் வெளியேறிய தூசி முகிலில் நீர் இருப்பதின் சமிக்கைகள் சோதிக்கப்பட்டன. இதற்கு முன்பு 1990 இல் அனுப்பியனிரண்டு இராணுவ விண்ணுளவிகள் நிலவின் தென் துருவத்தில் ஏராளமான கொள்ளளவு ஹைடிரஜன் வாயு இருப்பதைக் கண்டுபிடித்தன. ஆனால் அதன் இருப்பால் துருவப் பகுதிகளில் நீர் இருக்குமா என்னும் ஐயப்பாடு அப்போது எழவில்லை. லகிராஸ் திட்டம் முதல் விண்ணுளவிகள் செய்யாமல் விட்ட நீர்ச் சோதனையைப் பூர்த்தி செய்யவே தயாரிக்கப்பட்டது.
Fig. 1E
Impact Crater Location
On the Moon
வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ? நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது. ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன. அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C). அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.
ராக்கெட் ஏவி நான்கு மணிநேரம் கழித்து மேற்தட்டு சென்டௌர் ஏவுகணை இயக்கம் நின்று லகிராஸ் விண்ணுளவியோடு சேர்ந்து நான்கு மாதங்கள் பூமியை நீள்வட்ட வீதியில் சுற்றி வந்தது. அப்போது சென்டௌர் ஏவுகணையில் ஒட்டியுள்ள ஹைடிரஜன் வாயு வெல்லாம் நீங்கின. ஏவுகணையுடன் இணைந்துள்ள துணைக்கோளில் வண்ணப் படமெடுக்கும் ஐந்து காமிராக்கள், வினாடிக்கு ஆயிரம் முறை அளவெடுத்து மோதல் சிதறல்களைப் படமெடுக்கும் “·போட்டோ மானி” (Photometer) இரண்டும் அமைக்கப் பட்டுள்ளன.
Fig. 1F
SARA Measurements of
Hydrogen on the Moon
நிலவை லகிராஸ் ஏவுகணை மோதிய போது நேர்ந்த விளைவுகள்
முடிவாக லகிராஸ் விண்ணுளவி நிலவின் ஈர்ப்பு விசைக்குள் இழுக்கப் பட்டு மோதலுக்குச் சுமார் 10 மணி நேரத்துக்கு முன்பு சென்டௌர் ஏவுகணை துணைக்கோளை விட்டுப் பிரிக்கப் பட்டது. துணைக் கோளைப் பிரிந்த ஏவுகணை சந்திர ஈர்ப்பு விசையில் கவரப் பட்டு நிலவின் தளக்குழியை நோக்கி 5600 mph (Miles per Hour) வேகத்தில் மோதியது. அதன் பின்னால் தொடரும் துணைக்கோள் மோதலில் சிதறி வெளியேறும் துகள்களின் படத்தை எடுத்துப் பூமிக்கு அனுப்பியது. புதுப்பிக்கப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி மோதல் காட்சியைப் படமெடுக்கத் திருப்பப் பட்டது. ஏவுகணை மோதல் இடியோசையை நிலவில் உண்டாக்கியது. சிதறல் வெளியேற்றங்களைச் சூரியன் ஒளியூட்டி ஒரு சில வினாடிகள் வான வேடிக்கையாய்க் காட்டியது. சந்திரனில் விண்கற்கள் புரியும் இத்தகைய மோதல்கள் மாதத்துக்கு 3 அல்லது 4 தரம் நடக்கின்றன ! 80 டிகிரி கோணத்தில் ஏவுகணை சாய்ந்து தாக்கிய பள்ளம் சுமார் 66 அடி (20 மீடர்) விட்டம் இருக்கும் என்றும், உடைந்து சிதறிய பாறைத் தூள்கள் 350 மெட்ரிக் டன் எடை இருக்கலாம் என்றும், தரைக்கு மேல் 10 கி.மீடர் உயரம் தாவிடும் என்றும் கணிக்கப் பட்டன.
Fig. 2
Hydrogen (Protons) from the Sun
To the Moon
லாகிரஸ் விண்ணுளவியின் ஒளிப்பட்டை மானிகள் முதலில் மேலாக வெளியேறிய ஹைடிரஜன் வாயுவைக் காட்டின. குழியின் கீழ்த்தளத்தில் இன்னும் பேரளவு ஹைடிரஜன் இருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதாவது ஹைடிரஜன் செழித்த பகுதிகளும் ஹைடிரஜன் சிறுத்த பகுதிகளும் குழி உயரங்களில் காணப்படலாம். விளைவுகளைப் பதிவு செய்து வரும் லகிராஸ் துணைக் கோள் இப்போது ஏவுகணைக்குப் பின்னால் 600 கி.மீடர் (370 மைல்) இடைவெளியில் வந்து கொண்டி ருந்தது. துணைக்கோளும் அடுத்து அதே ஆழ்குழியில் மோதும்படி விடப்பட்டது. அது 14 மீடர் (46 அடி) விட்டமுள்ள பள்ளத்தை உண்டாக்கும் என்று கணிக்கப்பட்டது. உச்சச் சிறதல்கள் 30 முதல் 100 வினாடி வரை நீடித்தது. தூசிகள் ஆழ்குழியில் முடிவாகப் படியும் போது பள்ளத்தின் விட்டம் சுமார் 50 கி.மீடர் (30 மைல்) ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.
Fig. 3
Deep Impact of Rocket & Satellite
On the Moon
இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை
2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன. அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !
முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது ! அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.
Fig. 4
Moon Water Recording Chart
அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment). நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன. இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் ! மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும். இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !
Fig. 5
Impact Scenario & Monitoring
நிலவில் பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்
நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே ! அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களை அமைக்க வேண்டும். இப்போது எழும் வினாக்கள் இவை : பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று எழுவது முதல் கேள்வி ! அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி ! அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி ! அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரிய சக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் நாசா செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகள் ! இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது உடனே போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !
Fig. 6
India & NASA Find Icy Water
On the Moon
*********************
தகவல்:
Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites
1. Indian Space Program By: Wikipedia
2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)
3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)
4. Times Now India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
6 Cosmos Magazine The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
7. http://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]
8. http://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]
9. Space Expolaration Chembers Encyclopedic Guides (1992
10. National Geographic -50 Years Exploring Space [November, 2008]
11. Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]
12. Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]
13 Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]
14. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]
15 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)
16 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)
17 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)
18 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)
19 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)
20. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)
21 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)
22 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)
23. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)
24. Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)
25. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)
26 Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)
27. Scientific American : LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)
28 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)
29. National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)
30. International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)
31 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)
32 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)
33 http://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (November 19, 2009)
- முள்பாதை 6
- ‘மூன்று விரல்’ மோகம்! – இரா.முருகனின் நாவல்பற்றி.
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19
- வேத வனம் விருட்சம் -60
- இரவின் நுழைதலம்
- விண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 6)
- புது இதழ் : சூரிய கதிர்
- நினைவுகளின் தடத்தில் – (38)
- குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)
- தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை
- அவகாசம்
- மன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)
- மெல்லத் தமிழினிச் சாகும்
- பேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு
- தெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு
- காங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்?
- அவளுக்கும் ஒன்று
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>
- பூனைக் காய்ச்சல்
- சொற்கள் நிரம்பிய உலகம்
- சம்பவம்
- தேவதைகள் தந்ததொரு பூங்கொத்து
- கண்டதைச் சொல்லுகிறேன்
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A
- காந்தி: வேறொரு அடையாளம்
- போராட்ட ஆயுதங்கள்
- “மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”
- கால்கள்
- விதியின் பிழை
- மழை!
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8