சேவியர்.
பிரிய நிலவே,
எத்தனை நாளாகிறது
உன்னைப் பார்த்து.
ஓர்
பதினான்காம் பிறைபோல
நினைவிடுக்கில்
நகர்கின்றன நாட்கள்.
காதலின் கணங்களும்
காத்திருப்பின் கனங்களும்
கால்களை
பாறையோடு பதியனிட்டதாய்
இறுகிக் கிடக்கின்றன.
தேடலின் விழிகள் கூட
உறைந்து விட்டன.
ஆனாலும்
விடாமல் என் உள்ளத்தை மட்டும்
உழுது கொண்டே இருக்கிறேன்.
உன்
ஒவ்வோர் புன்னகைக்கும்
உயிரின் ஒருபாதையை
உயிலெழுதிய பழக்கத்தால்
இன்று
மிச்சமிருப்பதெல்லாம்
பட்டா இல்லாத பகுதிகளே.
என்
பொருளாதாரப் பல்பறித்து
காதலுக்கு
காலணி நெய்ததில்
என் முதுகெலும்பு முறித்தே
கைத்தடி செய்ய வேண்டிய
கட்டாயம் எனக்கு.
ஆனாலும்,
உன் வயல்க்காட்டுத் தூறல்
வற்றி விடவில்லை என்றே,
என் நாற்றுக்கள்
நாக்கு நீட்டிக் கிடக்கின்றன.
ஒத்திகைக் காலக்
குத்தகை முடிந்ததால்,
அரங்கேற்ற மேடை
தூண்களில்
தவறாமல் தவமிருக்கிறேன்.
நீ
வந்தபின் விரிப்பதற்காய்
தோகைகளைக் கூட
துடைத்து வைத்திருக்கிறேன்.
நீ,
வரும் வடிவத்தை மறவாமல்
கடிதத்தில் அனுப்பு.
நீ
பல்லக்கில் வருவாயானால்
நான்
கடிவாளத்தோடு
காத்திருக்கக் கூடாதில்லையா ?
- தெரு
- நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்
- நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் -3
- எனக்குப் பிடித்த கதைகள் – 6 – ஜெயகாந்தனின் ‘குருபீடம் ‘ – ஞானம் என்னும் ஒளித்திரி
- ஒரு பேராசானின் மறைவு
- இட்லி ஆராய்ச்சி
- பட்டாணி பாத்
- பரிணாமத் தத்துவம் சொல்லிக்கொடுக்காத இங்கிலாந்து பள்ளிக்கூடத்துக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எதிர்ப்பு
- அகில விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
- மீண்டும் உயிர்தல்
- தூங்கும் மழைத்துளி
- கிருஷ்ணன் வைத்த வீடு
- சொன்னால் விரோதம் ?
- சொன்னால் விரோதம் அம்மே!
- தொடரும் பிரிவுகள்
- லாடம் அடித்த கனவுகள்
- பூஜ்யமாய் ஒரு கனவு.
- என் பிரச்சனை.
- கமலஹாசன், குடும்பம், நீதிமன்றம், அரசாங்கம்
- இந்தியாவின் இறந்த காலமே ஆயுதம் ஆகிறது
- கலாச்சாரம் பற்றி கடைசியாக….
- இரு பேரப்பிள்ளைகள்