அ.முத்துலிங்கம்
அவன் வாழ்க்கையின் மிகவும் அடிப் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு சமயம் தன்னுடைய பெயரை வேலை ஏஜன்ஸ’ ஒன்றில் பதிந்து வைத்திருந்தான். இந்த நிறுவனத்துக்கு ரொறொன்ரோ மருத்துவமனைகளுடன் ஒரு தொடர்பு இருந்தது. அவர்கள் தங்களுக்கு, நாளுக்கு எத்தனைபேர் வேண்டும், அவர்களை எங்கே அனுப்பவேண்டும் என்று தகவல் சொல்வார்கள். இந்த நிறுவனம் உழியர்களுடன் தொடர்புகொண்டு ‘நீ இங்கே போ ‘ ‘நீ இங்கே போ ‘ என்று கட்டளையிடும். இவை இரவு வேலைகள். அவன் அந்த இடத்துக்கு அன்று இரவுபோய் வேலை செய்யவேண்டும். அடுத்த நாள் பழையபடி புதுக் கட்டளைக்கு காத்திருப்பான். சில வேளைகளில் வேலை கிடைக்கும். சில வேளைகளில் கிடைக்காது. மத்தியாலத்துக்கு இவ்வளவு என்று
அடிமட்டமான சம்பளம். அதுகூட நிரந்திரமல்லாமல் ஒரு மாதத்தில் 10 நாட்கள், கூடியது 12 நாட்கள் என்று வேலை கிடைக்கும். மீதி நாள் காத்திருப்பதோடு முடிந்துவிடும்.
அவன் அந்த வேலையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருந்தது. இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பகளிலும் அந்த ஒரு வேலையே அவனுக்கு தரப்பட்டது. அதுகூட சுலபமாக அகப்படவில்லை. ஆறு மாதம் பயிற்சி எடுத்தபின்பு, அவன் தகுதியானவன் என்பதை உறுதிசெய்த பிறகே சேர்த்துக்கொண்டார்கள். வேலை என்று பார்த்தால் சுலபம்தான். ஆனால் அவனுக்கு தூக்கம் முக்கியம்.
மருத்துவமனையில் கறுப்பு உடை அந்த காவலர்கள் வெளியே காவல் புரிய உள்ளே இரவு நேரங்களில் ஒரேயொரு டொக்ரர் ப புரிவார். சில வேளைகளில் அவர் தன் வீட்டில் ‘அவசர அழைப்பில் ‘ இருப்பார். ஆஸ்பத்திரி நிர்வாகம் முழுவதும் தலமை தாதியின் கீழ் இயங்கும். ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தாதி என்ற கணக்கு.
அவனுடைய கடமையானது தாதிக்கும், காவலாளனுக்கும் இடைப்பட்டது. அவனுக்கு தாதி பயிற்சி இல்லை. காவலனுக்கான பயிற்சியும் இல்லை. தாதி நேரம் கிடைக்கும்போது சிறிது த்திரை கொள்வாள். அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் அவனும் சற்று தூங்க அனுமதிக்கப்படுவான். மற்றும்படிக்கு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து குறைந்த வெளிச்சத்தில் புத்தகம் படிக்கலாம். உருண்டு திரும்பும் நோயாளிகளைப் பார்க்கலாம். முனகல்களைக் கேட்கலாம். தூங்கமட்டும் முடியாது. ஒரு வகையில் கண்காப்பதுதான் அவன் வேலை. நோயாளியின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் ஏதாவது ஏற்பட்டால் அதை தாதிக்கோ, காவலர்களுக்கோ உடனேயே அறிவிக்கவேண்டும். இப்படி அவனுக்கே தன் கடமை என்னவென்று சரியாகத் தெரியாத ஒரு வேலை.
அன்று அவனை தொலைபேசியில் அழைத்து ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு போகச் சொன்னார்கள். இது ரொறொன்ரோவின் பழக்கமில்லாத ஒரு பகுதியில் உள்ள சிறிய ஆஸ்பத்திரி. அதைச் சுற்றியுள்ள பிராந்தியம் மோசமானது. இவ்வளவு சிறப்பான இடத்தில் யாரும் ஒரு ஆஸ்பத்திரியை கட்டியிருக்க முடியாது. பாதாள ரயில் ஸ்டேசனில் இருந்து நாலு மைல் தூரத்திலும், 401 பிரதான நெடுஞ்சாலையில் இருந்து 11 மைல் தூரத்திலும் அது இருந்தது. தகவல் கிடைத்தபோது துள்ளிக் குதிக்கும் ஆனந்தம் அவனுக்கு ஏற்படவில்லை. இருந்தாலும் போனான்.
நீளமான ஓவர்கோட்டை அந்து, ஆள் உயரத்துக்கு இரு பக்கமும் பனி குவிந்திருக்கும் சாலையில் அவன் நடந்தான். மரங்களில் தொங்கும் பனிக்கொத்துக்கள் திடார் திடார் என்று முறை வைத்துக்கொண்டு அவன் மேலே விழுந்து நொறுங்கின. அவன் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தான். ரோட்டிலே குவிந்திருந்த அவ்வளவு பனியும் அங்கே இருந்து கொட்டியதற்கான அடையாளம் எதுவுமில்லை.
முதல் ஷ’ப்ட் முடிந்து தாதி போகும்போது அவனிடம் நாலாம் நம்பர் பேஷண்டை கொஞ்சம் கவனமாகப் பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போனாள். புதிதாக வந்திருந்தவள் ஒரு பிலிப்பைன் நாட்டு நர்ஸ். அவளுடைய தாடை எலும்புகள் சதையை தள்ளிக்கொண்டு வெளியே நின்றன. அவளுடைய முகம் கண்ணுக்கு புலப்படமுன் கன்னத்து எலும்புகளே தெரிந்தன. ஒரு கையில் உருவிவைத்த கறுப்பு கையுறையை மேல் துடையில் மெள்ள தட்டியபடி, புளோரன்ஸ் என்று தன்னை அறிமுகப்படுத்தினாள். அடுத்த எட்டு மணி நேரம் அவள்தான் அவன் எசமானி. அவனும், உச்சரிக்கமுடியாத தன் பெயரை அவள் வசதி கருதி சுருக்கி சொன்னான். அந்தப் பெயரை சிரித்து ஏற்றுக்கொண்டாள். மற்றவர்களைப்போல அதை திருப்பி உச்சரிக்க முயலவில்லை.
அவன் கடமை ஆரம்பமானது. நாலாம் நம்பர் கட்டிலைப் பார்த்தான். பதின்மூன்று வயதுப் பையன். பால்போல வெள்ளை முகம். யேசுமாதாவின் முகம் போல வெகு அமைதியாக இருந்தது. உள்ளுக்கிருப்பதைக் காட்டும் கண்ணாடி போன்ற ஒரு ரெயின் கோட்டை அந்திருந்தான். எது காரணம் கொண்டும் அவன் அதைக் கழற்றமாட்டான் என்று சொன்னார்கள். படுத்திருந்தபடியே தன் இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்து தனக்கு தானே தன்
விரல்களினால் ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனிடம் அவன் பேர் என்ன என்று கேட்டான். ஜோன்ஸன் வில்பர்ஃபோர்ஸ் சாமுவெல் என்று முழுப்பெயரையும், ஒரு பள்ளிக்கூடத்தில் ஒப்புவிப்பதுபோல சொன்னான். அவன் மிகவும் வேகமாகப் பேசினான் என்றாலும் சொற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் தனித்தனியாக ன்றன. ஆனால் குரல் சிறு குழந்தையின் குரல். அவன் திரும்பவும் வந்து தனக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில்
அமர்ந்துகொண்டு வாசிப்பதற்காக வீட்டில் இருந்து எடுத்து வந்த ‘கோவேறு கழுதைகள் ‘ புத்தகத்தை விரித்து படிக்கத்தொடங்கினான்.
இப்படியான ஆஸ்பத்திரி வேலையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படிப்பதற்காகவே எழுதப்பட்ட நாவல் அது. அதன் முதல் பக்கத்திலேயே 30 பேர் அறிமுகமானார்கள். எல்லாம் கிறித்துவப் பாத்திரங்கள். குரிசு, இரிசு என்று பேர்கள். ஆண் பெயர்களா, பெண் பெயர்களா என்றுகூடத் தெரியவில்லை. யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதும் மர்மம். அடுத்த வரியில், அல்லது அதற்கு அடுத்த வரியில் வரும் ‘அவன் ‘ அல்லது ‘அவள் ‘ என்ற வார்த்தையை வைத்து பாத்திரம் ஆணா, பெண்ணை என்பதை நுட்பமாகக் கண்டுபிடிக்கவேண்டும். நாலு பக்கம் படித்தான். என்றால் முதல் பக்கத்தை நாலுதரம் படித்தான். அப்படியும் தோற்றுவிட்டபடியால் தலைமயிரை பிய்க்கத் தொடங்கினான். நாவலை மூடி வைத்துவிட்டு இன்னும் சிறப்பான ஒரு காரியம் செய்ய முடிவெடுத்தான். சும்மா இருப்பது.
அப்பொழுது அந்த பிலிப்பைன் நர்ஸ் வந்தாள். கரும்பச்சை žருடையில், மார்பிலே தன் பெயரை குத்தி வைத்தபோது, அவள் அழகு இன்னும் கொஞ்சம் கூடியிருந்தது. தான் சற்று அறையில் ஓய்வெடுக்கப் போவதாகவும், ஏதாவது தேவையென்றால் தன்னை தட்டி அழைக்கவும் சொல்லிவிட்டு போனாள். அவள் இப்போதுதான் வீட்டிலிருந்து வந்து அதற்கிடையில் ஓய்வுக்கு போகிறாள். žருடை மாற்றினால்தான் அவளால் ஓய்வெடுக்க முடியும் போலும். ஒரு
வேளை இவளும் அவனைப்போல பிலிப்பைன் நாட்டு நாவலாசிரியர் ஒருவர் எழுதிய நூலை கொண்டு வந்திருக்கலாம். அதிலேயும் முதல் பக்கத்தில் முப்பது பாத்திரங்கள் அறிமுகமாகியிருக்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
அவள் போன பிறகு அந்த வார்டு அவனுக்கு சொந்தம் ஆனது. நாலாம் நம்பர் பையனுடைய கோப்பு மேசைமேலே திறந்தபடி இருந்தது. நின்றபடி மெள்ள பேப்பர்களை தள்ளிப் பார்த்தான். அந்தச் சிறுவனின் சரித்திரக் குறிப்பு அச்சடித்து கோப்பில் கிடந்தது. அந்தப் பையனுக்கு அடிக்கடி மனப் பிரமை ஏற்படும். திறந்த ஜன்னல்கள் பிடிக்காது, அவை மூடியபடியே இருக்கவேண்டும். அல்லாவிடில் ஜன்னல்கள் வழியாக நீண்ட கைகள் வந்து அவனை கவர்ந்து போகின்றன. கம்புயூட்டர் திரைகளும் ஆபத்தானவை. எப்பொழுதும் அவனுக்கு மறுக்க முடியாத கட்டளைகளை அவை இடுகின்றன. அவன் செய்தே
ஆகவேண்டும்.
உணவைக் கொடுக்கும்போது அவை தலைகீழாக இருக்கவேண்டும். ரொட்டியில் வெண்ணெய் தடவிய பக்கம் கீழ் நோக்கி இருக்கவேண்டும். பொரித்த முட்டையின் மஞ்சள் பக்கம் பிளேட்டில் தொடவேண்டும். அல்லாவிடில் அவை தப்பி ஓடிவிடும். schizophrenia observation என்று இரண்டு பக்கங்களில் குறிப்புகள் ரம்பிக் கிடந்தன. யாரோ வரும் சத்தம் கேட்டதால் கோப்பை மூடிவிட்டு அவன் தன் நாற்காலிக்கு திரும்பினான்.
யேசுமாதா போன்ற முகம் உள்ளவனுடைய கட்டிலைப் பார்த்தான். அவன் சிறு குழந்தையைப்போல அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான். அவனுடைய பக்கத்துக் கட்டில் நோயாளி மூத்திரக் கோப்பையை படுக்கையிலே ஒரு குழந்தையைப்போல வைத்துக்கொண்டு தூங்கினார். அது என்ன உபயோகத்திற்காக படைக்கப்பட்டதோ அதைச் செய்ய வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. இன்னோருவர், ஐவி போத்தலை ஸ்டாண்டுடன் சேர்த்து இழுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு போனார்.
அப்படியே நாற்காலியில் சாய்ந்து த்திரை கொள்ளக்கூடாது என்ற முடிவோடு கெட்ட சிந்தனைகளை மனதிலே ஓடவிட்டான். அப்படியும் நித்திரை எப்படியோ வந்து கண்களை மூடிவிட்டது. என்னவோ வந்து நெஞ்சைத் தீண்ட கண்களைத் திறந்து பார்ந்தான். இந்தப் பையன் அவனுக்கு முன்னால் குனிந்து அவன் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டு ன்றான். அவன் திடுக்கிட்டபடி எழும்பினான்.
‘எனக்கு ஏதாவது குடிக்க வேண்டும் ‘ என்றான் சிறுவன். ஒரு மூன்று வயதுக் குழந்தையின் குரல் அது. தாதியின் அறைக் கதவைத் தட்டினான். அவள் உடனேயே ஆடை கலைந்த லையில் வெளியே வந்தாள். ஒரு கடுதாசி குவளையில் பழச்சாறு கொடுத்து அந்தச் சிறுவனை அணைத்துச் சென்று படுக்கையில் விட்டாள்.
அவன் படுக்கையில் ஏறி உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தான். பழச்சாறைக் குடிக்கவில்லை. பிறகு பழச்சாறு குவளையை மேசையில் வைத்துவிட்டு, கண்ணாடி மழை உடையுடன் படுத்து, அதற்குமேல் போர்வையால் மூடினான். கொஞ்ச நேரத்தில் அவனுடைய ஒரு கால் மாத்திரம் போர்வைக்குள் இருந்து வெளியே வந்து ஆடத்தொடங்கியது. அந்த காலின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதை றுத்திவிட்டு தன் சிந்தனையை விட்ட இடத்தில் இருந்து தொடர முயன்றான். எங்கே விட்டதென்பது ஞாபகத்துக்கு வரவில்லை. தாதி பழையபடி அறைக்குள் போய் மூடிக்கொண்டாள்.
கையிலே கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். சற்று முன்பு வரை செவ்வாய்க்கிழமையாக இருந்த நாள் இப்போது உருண்டு புதன் கிழமையாக மாறிவிட்டது. ஒரு நாள் தன் பெயரை மாற்றும் சடங்கை அவன் நேருக்கு நேர் கண்டுவிட்டான். ஏதோ ஒரு கள்ளனைத் தனியாகப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.
இந்தப் பையன் திடாரென்று மறுபடியும் அவன் முன்னே தோன்றினான். அவன் போர்வையை அகற்றியதையோ, கட்டிலில் இருந்து இறங்கியதையோ, நடந்து வந்ததையோ அவதானிக்க தவறிவிட்டான். ஒரு நிழல் நுழைவதுபோல ஓசையில்லாமல், ஓர் அற்புதம் செய்து முன்னே ன்றான். அவன் கையில் தாதி கொடுத்த பழச்சாறு குவளை. ஒரு சொட்டும் குடிக்கப்படவில்லை.
அந்த முகத்தைப் பார்த்து திடுக்கிட்டான். அது படு விகாரமாக மாறியிருந்தது. புருவங்கள் மண்டை ஓட்டுக்குள் சொருகி, முன்பு இல்லாத நரம்புகள் எல்லாம் வெளியே வந்து புடைத்துக்கொண்டு ன்றன. பற்களை நெருமியபடி அம்மாவில் தொடங்கும் ஒரு வசையை சொல்லி ‘அந்தப் பெட்டை நாய் எங்கே ? ‘ என்றான். ‘எனக்கு டிவி பார்க்கவேண்டும், எனக்கு டிவி பார்க்கவேண்டும் ‘ என்று கத்தியபடி டிவி அறைக் கதவை தன் தலையினால் முட்டத்
தொடங்கினான்.
அவன் அவசரமாக தாதியை அழைத்துவந்தான். அவளைக் கண்டதும் இன்னும் உரத்துக் கத்தினான். வாந்தி எடுப்பதுபோல வார்த்தைகள் பச்சை பச்சையாக வெளியே வந்தன. தாதி சமயோசிதமோ, இங்கிதமோ, தற்காப்போ அறியாதவள். மொட்டையாக ‘டிவி இப்போ பார்க்கமுடியாது ‘ என்று சொல்லியபடி அவனை மறுபடியும் படுக்கைக்கு அழைத்துச் செல்ல முயன்றாள். சிறுவன் நட்ட மரம்போல ன்றான். உடம்பை மாத்திரம் திருப்பி பழச்சாறு
குவளையை நீட்டினான். ஒரு கணம்கூட மூளையை உபயோகிக்காமல் அவன் கைகளை நீட்டி அதை பெற்றுக்கொண்டான். அவனுடைய கைகள் கட்டுப்பட்ட அதே கணத்தில் சிறுவனின் கைகள் விடுதலை அடைந்தன.
தாதியின் மேல் பாய்ந்து அவளை முரட்டுத்தனமாக தாக்கத் தொடங்கினான். அவன் குவளையை போட்டுவிட்டு சிறுவன்மீது தாவினான். இப்பொழுது அவன் பதின்மூன்று வயதுப் பையன் அல்ல. தூண்போல ன்ற அவன் தேகம் பத்துப்பேர் பலம் கொண்டதாக பெருகியிருந்தது. ஒரு புலி திரும்புவதுபோல கழுத்தை மட்டும் திருப்பி அவனுடைய புஜத்தை பற்களால் கவ்விக் கடிக்கத் தொடங்கினான். மேற்பற்களும், கீழ்ப் பற்களும் சதைகளின் கீழ் சந்திப்பது அவனுக்கு நறநறவென்று கேட்டது. அவனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. மயக்கமடைவதை மாத்திரம் செய்யத் தோன்றியது.
நர்ஸ் ‘ஆ ஆ ‘ என்று பிலிப்பைன் மொழியில் எதையோ சொல்லி அலறினாள். எப்படியோ பறித்துக்கொண்டு ஓடிப்போய் காவலர்களை கூட்டி வந்தாள். இரண்டு தடியான காவலர்கள் உருண்டையான கைத்தடிகளுடன் உள்ளே நுழைந்தார்கள். கால்களை அகலமாக வைத்து தானமாக அவர்கள் வந்த தோரணையே பயத்தை கிளப்பியது.
அடுத்த கணமே இந்தப் பையன் பல்லுப் பிடியை விட்டுவிட்டு தன் இரண்டு கைகளையும் அவர்களை நோக்கி நீட்டினான். அவர்களிடம் விலங்கு இல்லை. ஆனால் இரண்டுபேரும் அவன் தோள்மூட்டை இறுக்கி பிடித்தபடி அவனை படுக்கைக்கு அழைத்துப் போனார்கள். அதற்கு அவசியமே இல்லை. அவன் ஒரு ஆட்டுக்குட்டிபோல போய் படுக்கையில் கைகளை உடம்புடன் ஒட்டிக்கொண்டு நீட்டிப் படுத்தான். நர்ஸ் இந்த செயலால் தடுமாறிப்போய் இருந்தாள். அவளுடைய தாடைகள் நடுங்குவதை நிறுத்தவில்லை. அந்த லையிலும் ஒரு இஞ்செக்ஸனை எடுத்துப்போய், பக்கவாட்டில் திருப்பிய சிறுவனின் பிருஷ்டத்தில், கண்ணாடி மழை உடையை அகற்றாமல், அதற்குமேலால் ஏற்றினாள்.
நர்ஸ் இப்பொழுதுதான் அவனை வியப்புடன் பார்த்தாள். அவனது வலது புஜத்தில், அவன் பார்க்கமுடியாத இடத்தில், சதை பிளந்துபோயிருந்தது. ரத்தம் விடாமல் கொட்டி அவன் நெஞ்சு சட்டையை நனைத்து, கால்சட்டையை நனைத்து, கார்ப்பெட்டையும் நனைத்தது. கையிலே கட்டுப்போடுவதற்காக நர்ஸ் அவனை அழைத்தபோது அவள் உடம்பு இன்னும் ஆடியது. சில நிமிடங்களுக்கு முன் தன் முழுப் பெயரையும் ஜோன்ஸன் வில்பர்ஃபோர்ஸ் சாமுவெல் என்று ஒரு பிரின்சிபாலுக்கு தரும் மரியாதையோடு தன்னிடம் சின்னக் குரலில் சொன்ன சிறுவனை அவன் திரும்பிப் பார்த்தான்.
அவன் முகம் யேசுமாதாவின் முகம்போல சாந்தமாக மாறியிருந்தது. வாயிலே வழிந்த ரத்தத்தை எப்போதோ நக்கி சுத்தம் செய்துவிட்டான்.
முற்றும்
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- மெய்மையின் மயக்கம்-15
- ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
- சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு
- கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…
- தென் இலங்கை கவிதை நூல் வெளியீடு
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!
- கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- மாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- யேசுமாதா போன்ற முகம்
- சாகர புஷ்பங்கள்
- பெரியபுராணம் – 7
- வேறுபாடு….!
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வலை
- வலை
- வீடு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- நிலாச் சோறு
- நம்பிக்கை துரோகி
- ஈரடி கவிதைகள்
- துர்நாற்றம்
- ஊரறிய மாலையிட..
- பதவி உயர்வு
- எங்க ஊரு காதல பத்தி…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- தோல்விக்குப்பின்
- ஊருப்பொண்ணு
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
- அன்புடன் இதயம் – 30
- விடியும்
- தவறாக ஒரு அடையாளம்
- வலை
- காதலன்
- வலை
- நூல் வெளீயிடு
- கவிக்கட்டு 23
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
Thinnai – Weekly Tamil Magazine - பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்