யாரிந்த Dick Cheney ?

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

நரேந்திரன்


Well, உங்களின் பொது அறிவைச் சோதித்துப் பார்க்கக் கேட்கப் பட்ட கேள்வியில்லை இது. டிக் செனி என்பது ஒருவகையான ‘மரங்கொத்திப் பறவை ‘ என்று பொட்டிலடித்தாற் போல நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் சரியாகச் சொல்லி விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்… ?!!!…

:-)…just kidding…

எழுதத் துவங்கும் போது எப்படி ஆரம்பிப்பது என்ற சிக்கல் சமயங்களில் விக்கலாகி விடுகிறது. ‘ஆதொள கீர்த்தனாரம்பத்திலே…டிக் செனி…டிக் செனின்னு ஒர்த்தர் அமெரிக்காவுல இருந்தார்… ‘ என்று பாலகிருஷ்ண சாஸ்திரிகள் பாணியில் ஆரம்பிக்கலாம்தான். அதற்கப்புறம் நமது மஹா ஜனங்கள், ‘அடேய் தூர்த்தா!…துன்மார்க்கா!…துஷ்டா!… ‘ என்று நாலுவரி நாராசமாக எழுதிப்போட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு நிறுத்தினால் பரவாயில்லை. காது நிறைய பூணூலை வேறேயல்லவா மாட்டி விட்டு விடுவார்கள் ? எனவே, ஆரம்பம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.

வால்க டமில்! வலர்க டமில் பன்பாடு! (கூடவே, வாய்க செம்மொயி!).

இனி, டிக் செனி.

‘You ‘ve got to go where the oil is. I don ‘t think about it [political volatility] very much. ‘

‘The problem is that the good Lord didn ‘t see fit to always put oil and gas resources where there are democratic governments ‘

-Dick Cheney, Vice President

தற்போதைய அமெரிக்க உதவி ஜனாதிபதியான டிக் செனியின் அரசாங்கத் தொடர்பு மிக நெடியது. முன்னாள் ஜனாதிபதிகள் நிக்ஸன் மற்றும் ஜெரால்ட் ஃபோர்டின் தலைமை அதிகாரியாக (Chief of staff) இருந்ததில் ஆரம்பித்து, ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் சீனியர் வரை பல அரசாங்க உயர்பதவிகளை வகித்திருக்கிறார் (பில் கிளிண்டன் அவரை வெளியேற்றும் வரை). ஜார்ஜ் புஷ் Sr. மந்திரி சபையில் secretary of defense-ஆக இருந்த டிக் செனியின் தலைமையில் முதலாம் வளைகுடாப் போர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

உலக வர்த்தக மையத் தகர்ப்பிற்குப் பின் டிக் செனி அதிகம் வெளியே தென்படுவதில்லை. அவருக்கும், உதவி ஜனாதிபதியாவதற்கு முன் அவர் தலைவராக இருந்த ஹாலிபர்ட்டன் எனர்ஜி கம்பெனி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அவ்வப்போது CNN போன்ற தொலைக்காட்சி நிலையங்களுக்குப் பேட்டியளிப்பதுடன் சரி. மற்றபடி அவர் வாழ்வது யாருமறியா ஒரு மறைவிடத்தில். ஜனாதிபதி புஷ்ஷின் மீது தாக்குதல் ஏதேனும் நடந்தால் செனி உடனடியாக அமெரிக்காவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்பது ஏற்பாடு.

உலகின் மற்ற அரசியல்வாதிகளைப் போலல்லாது, செனி தன்னை முன்னிருத்தி வேலைகளைச் செய்வதை விரும்புவதில்லை. பொதுவாக ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் அனைத்து முடிவுகளுக்கும் பின்னனியாக செனி இருப்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஏறக்குறைய ஒரு ‘Shadow President ‘ என்று சொல்லலாம். ஆளுக்குத் தகுந்தாற் போல ஒரு பெயர் வைத்து அழைக்கும் அமெரிக்கக் கலாச்சாரத்தின்படி, ஜெரால்ட் ஃபோர்ட் காலத்தில் சத்தமில்லாமல் பல வேலைகளைத் திறம்பட செய்து முடித்த செனிக்கு ‘Backseat ‘ என்று பெயர் வைத்திருந்தார்கள். இன்றைக்கு இந்தப் பெயர் ஜார்ஜ் புஷ்ஷுக்குத்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். செனியின் தற்போதைய செல்லப் பெயர் ‘Big Time ‘ என்பதறிக.

டிக் செனியின் மற்றொரு முகம் அவரொரு திறமையான பிஸினஸ் மேன் என்பதாகும். அதிலும் எண்ணெய், எரிவாயு போன்ற சமாச்சாரங்களில் அவருக்கிருந்த பின்னனியே அவரை உதவி ஜனாதிபதிக்கு ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்தது. இப்போது சிக்கலில் இருக்கும் ஈராக் ஆக்கிரமிப்பின் பின்னனியிலும் டிக் செனியின் பங்கு கணிசமானது. பதவியேற்ற நாளிலிருந்து இதுவரை உலகின் அத்தனை எண்ணெய் வள நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதை தனது முக்கிய வேலையாக வைத்திருக்கிறார் செனி.

ஹாலிபர்ட்டன் உலகின் மிகப் பரந்து பட்ட எரி சக்தி நிறுவனம். உலகெங்கும் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் ஹாலிபர்ட்டனில் வேலை செய்கிறார்கள். 120க்கும் மேலான நாடுகளில் அதற்கென 7,000 கஸ்டமர்கள் இருக்கிறார்கள். ஹாலிபர்ட்டனின் மொத்த வருட வருமானம் சுமார் $15 பில்லியன் டாலர்கள். வருமானத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாடுகளில் நடக்கும் பணிகளின் மூலம் கிடைக்கிறது. டிக் செனி அதன் CEO-ஆக இருந்த சமயம், ஹாலிபர்ட்டனின் வெளிநாட்டு வருமானம் 51 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரின் பனிக்காலத்தில் அமெரிக்க ராணுவத்தின் பணிகளை முடித்துத் தரும் 17வது மிகப்பெரும் காண்ட்ராக்டிங் கம்பெனியாக மாறியது ஹாலிபர்ட்டன்.

டிக் செனியின் தலைமையில் இயங்கிய ஹாலிபர்ட்டனின் செயல்பாடுகள் மிகவும் கேள்விக்குரியவை. அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இரான், ஈராக், லிபியா போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்ததை பின்னாட்களில் கண்டுபிடித்தார்கள். மேற்படி நாடுகளின் மீதான வியாபாரத்தடைகளை நீக்குவதற்கு கடினமாக போராடியவர்களில் மிக முக்கியமானவர் செனி. ஜனநாயகத்தை உலகில் பரப்புவதை தனது முக்கிய கடமையாகக் கருதும் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, கடாஃபி போன்ற சர்வாதிகாரிகளுடன் உறவாடி வந்தது செனியின் தலைமையில் இயங்கிய ஹாலிபர்ட்டன். செனி உதவி ஜனாதிபதியான பிறகு, அந்தப் பின்னனி குறித்து அவரைத் துளைத்தெடுத்தார்கள் பத்திரிகையாளர்கள். இதுவரை அதற்கான சரியான பதிலை அவர் சொன்னதில்லை.

எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற ஹாலிபர்ட்டன் அத்தனை தகிடுதத்தங்களையும் செய்தது. பின் தங்கிய நாடுகளின் எண்ணெய் வளங்களைச் சுரண்டிய போது ஏற்பட்ட சுற்றுச் சூழல் சீர்கேடுகளையும், வலுக்கட்டாயமாக இடம் பெயர வைக்கப்பட்ட மக்களையும், அத்துமீறல்களையும், அடக்குமுறைகளையும் கண்டும் காணாமல் இருந்தது மட்டுமல்லாமல் அதனை ஊக்குவிக்கும் விதமாகவும் நடந்து கொண்டது ஹாலிபர்ட்டன்.

பர்மா நாட்டில் துவக்கப்பட்ட யாண்டா, யெட்டகன் (Yanda and Yetagun) பைப்லைன் ப்ராஜக்ட் ஒரு நல்ல உதாரணம்.

1992-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை இந்த பைப்லைன் ப்ராஜக்டினால் ஆயிரக்கணக்கான பர்மிய கிராமத்தவர்கள் தங்களின் பரம்பரை வாழ்விடங்களையும், வீடுகளையும் இழந்திருக்கிறார்கள். இந்த ப்ராஜக்ட் தொடர்பான வேலைகளில் ஈடுபடும்படி பர்மிய ராணுவத்தினரால் கட்டாயப் படுத்தப்பட்டு, பணிய மறுத்த நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவையத்தனையும் டிக் செனி , ஹாலிபர்ட்டனின் தலைவராக இருந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளே. பர்மியத் தேர்தலில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி செய்ய மறுக்கப்பட்ட ஆங்-சான்=சூகி (Aung-San-Suu-Kyi) போன்றவர்கள் பர்மிய ராணுவத்தினருக்கு உதவாமலிருக்கும்படி விடுத்த வேண்டுகோள்கள் காற்றில் பறக்க விடப்பட்டது.

இத் திட்டத்தை இந்தியா வரை நீட்டிக்க டிக் செனியும், இந்திய பெட்ரோலிய அமைச்சராக இருந்த (90களில்) கேப்டன் சதீஷ் சர்மாவும் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 1999 வரை தொங்கலில் இருந்த இந்த ப்ராஜக்ட் பின்னர் கை விடப்பட்டது.

எண்ணெயிருக்கும் இடமெல்லாம் டிக் செனி இருப்பார். ஏதோ ஒரு வகையில். அது அலாஸ்காவாகட்டும் அல்லது அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தானாகட்டும் அல்லது இந்தோனேஷியாவாகட்டும் அல்லது தற்போது சிக்கலில் இருக்கும் ஈராக் ஆகட்டும். பின்னனியில் டிக் செனி அண்ட் கம்பெனி இருந்தே தீரும். ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலைகளுக்குப் பின்னனியில் ஹாலிபர்ட்டன் (அல்லது அதன் subsidiary) இருந்ததாக வரும் ஊகச் செய்திகளை டிக் செனி இன்றுவரை கடுமையாக மறுத்திருக்கிறார். ருவாண்டாவிலோ அல்லது அதன் பக்கத்து நாடான காங்கோவிலோ எண்ணெய் வளம் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழாமலில்லை.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கவனிப்பு அதிகம் இருப்பதற்கு தலிபான், ஒசாமா-பின்-லாடன் ஒரு காரணமாக இருந்தாலும், மிக முக்கிய காரணம்அந்நாட்டின் வடக்கே இருக்கும் துர்க்மேனிஸ்தானில் நிறைந்து கிடக்கும் கணக்கற்ற எண்ணெய், எரிவாயுவே என்பது நோக்கர்களின் கருத்து. ஆப்கானிஸ்தான் வழியாக, பாகிஸ்தானின் மூல்தான் துறைமுகம் வரை 1300 கி.மீ. பைப்-லைன் இடும் பணிகள் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன. அமெரிக்க அரசாங்கம், பாகிஸ்தான் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதற்கான அடிப்படைக் காரணம் இதுதான். அதற்கான திட்டப்பணிகள் ஏற்கனவே என்ரான் போன்ற கம்பெனிகளினால் செய்து முடிக்கப்பட்டு விட்டது. மூல்தானிலிருந்து, இந்தியாவின் மும்பை வரை இத் திட்டத்தை நீடிப்பதற்கான திட்டவரைவுகளையும் என்ரான் முடிவு செய்திருந்தது. இன்று மூடப்பட்டுக் கிடக்கும் அதன் ‘தபோல் பவர் ப்ராஜக்ட் ‘க்கு உதவும் என்ற எண்ணத்தில். என்ரானுக்கும், டிக் செனிக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு இத்திட்டத்தை வெற்றிகரமாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்பாராத விதமாக என்ரான் சிக்கலில் சிக்காமல் இருந்திருந்தால்.

ஹாலிபர்ட்டனில் இருந்த நான்கைந்து வருட காலத்தில் ஏறக்குறைய நாற்பது மில்லியன் டாலர்களுக்கும் மேலாக சம்பாதித்திருக்கிறார் செனி. அந்தக் கம்பெனியுடன் தனக்கிருந்த எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகச் சொன்னாலும், வருடா வருடம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேலாக ஹாலிபர்ட்டன் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் பதினெட்டு மில்லியன் டாலர்களுக்கும் மேலான ஹாலிபர்ட்டன் பங்குகள் இன்னும் டிக் செனி வசம் இருக்கின்றன.

இன்றைய நிலவரப்படி ஜார்ஜ் புஷ்-டிக் செனி கூட்டணி மீண்டும் அமெரிக்க ஆட்சியைப் பிடிப்பத்ற்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றது. அவ்வாறு நடந்தால், அடுத்து வரும் நான்கு வருடங்கள் அதிரடிகள் நிறைந்ததாகவே இருக்கும். அடுத்து யார், எங்கே என்பதுதான் இன்றைய பில்லியன் டாலர் கேள்வி.

குறிப்பு : இக்கட்டுரையில் காணப்படும் பல தகவல்கள் EarthRights International-இன் ரிப்போர்ட்களிலிருந்து திரட்டப்பட்டவை.

****

அண்ணாயிஸம், கருணாநிதியிஸம், ஜெயலலிதாயிஸம் போன்றவை கேட்ட மாத்திரத்தில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. அந்த லிஸ்டில் புதிதாகச் சேர்ந்திருப்பது ‘புஷ்ஸிஸம் ‘. அவ்வப்போது அவர் உதிர்க்கும் முத்துக்கள் கருணாநிதி, ஜெயலலிதா வகையறாக்களின் உளறல்களை விடப் பல மடங்கு வீரியமானவை. உதாரணதிற்கு ஒன்றிரண்டு இங்கே,

‘One of the most meaningful things that ‘s happened to me since I ‘ve been the governor – the president – governor – president. Oops. Ex-governor. I went to Bethesda Naval Hospital to give a fellow a Purple Heart, and at the same moment I watched him-get a Purple Heart for action in Iraq – and at that same – right after I gave him the Purple Heart, he was sworn in as a citizen of the United States – a Mexican citizen, now a United States citizen. ‘ -George W. Bush, Washington, D.C., Jan. 9, 2004

‘It ‘s the Afghan national army that went into Najaf and did the work there. ‘ -George W. Bush, referring to Iraqi troops during a joint press conference with Iraqi Prime Minister Ayad Allawi, Washington, D.C., Sept. 23, 2004

‘I ‘m not the expert on how the Iraqi people think, because I live in America, where it ‘s nice and safe and secure. ‘ -George W. Bush, Washington, D.C., Sept. 23, 2004

‘I want to thank my friend, Senator Bill Frist, for joining us today. You ‘re doing a heck of a job. You cut your teeth here, right ? That ‘s where you started practicing ? That ‘s good. He married a Texas girl, I want you to know. Karyn is with us. A West Texas girl, just like me. ‘ -George W. Bush, Nashville, Tenn., May 27, 2004

‘I hope you leave here and walk out and say, ‘What did he say ? ‘ ‘ -George W. Bush, Beaverton, Oregon, Aug. 13, 2004

****

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்