யானை வந்துச்சு..!

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

எஸ். அர்ஷியா



ஞாயிற்றுக்கிழமை. சாவகாசமாய் நெட்டுக்குள் மூழ்கிக் கிடந்தேன். பரபரப்பு… அவசரம்… வேகம்… எதுவும் வேண்டாத நிதானம். தெரு வாசலில் நின்றிருந்த என் இரண்டாவது மகள், ‘தடா…புடா…’வென்று ஓடிவந்தாள். “அப்பா… யானைப்பா..!” என்றாள், மூச்சுவாங்க. என்னவோ யானை அவளைத் துரத்துவது போல!

யானை, ரயில், விமானம், கடல், கப்பல் இன்னபிற சமாச்சாரங்கள் எப்பேர்ப்பட்ட மனிதனையும் ரசிக்கச் செய்துவிடும் என்பது என் அனுமானம். வாசலுக்கு வந்தேன்.

வயதான யானை தான்! முகத்தில் வெண்புள்ளிகளுடன் அழகாகவே இருந்தது. ஒரு பாகன், அதன் மேலேயும், மற்றொருவன் அதன் முன்னங்கால் பக்கத்திலும்… யானையின் பின்னால் ஏழெட்டுச் சிறுவர்கள். ஒரேயொரு சிறுமி!

சமீப காலமாய் யானைகள் குறித்து வரும் செய்திகள், அத்தனை சந்தோஷமானவைகளாக இல்லை. வழிநடத்திச்சென்ற பாகனை தும்பிக்கையால் தூக்கிப் போட்டு மிதித்துக் கொல்வதும், அதை, மயக்க ஊசி அம்புகளை வீசி, வளைத்துப் பிடிக்கும் பயங்கரங்களும் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கின்றன. கோவில் திருவிழாவின்போது கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஓடி, விசேஷத்தின் போக்கைத் திசைதிருப்பிவிடும் யானைகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக… விசேஷ முகாம்களுக்குப் போக முரண்டு பிடித்து, லா¡¢யில் ஏற மறுத்து அட்டகாசம் செய்த யானைகள், அப்புறம் அங்கேயிருந்து திரும்பும் போது, ‘அன்பே… நீ, அங்கே… நான் இங்கே…!’ என்று தவித்த சங்கதிகளும் பத்தி¡¢கைகளில் வரவே செய்தன. எந்த நேரத்திலும் எதையும் செய்யக் கூடியவைகளாக மாறிப் போய்விட்டன, யானைகள்!

யானையின் மேல், ஒரு கைக்குழந்தையை ஏற்றினார்கள். மேலிருந்த பாகன், கைக்குழந்தையின் ஒரு கையை மேலிருந்தவாறே வாங்கிப் பிடித்துத் தூக்கி இழுத்தான். குழந்தை ‘சொய்ய்ய்ங்!’கேன்று மேலே போய்விட்டது. பாகன் முரட்டுத்தனமாக இழுத்ததில் ஏற்பட்ட வலியா?..அல்லது யானையின் மீது ஏறிய பயமா…தொ¢யவில்லை. குழந்தை வீறிட்டு அழுதது. அதைக்கண்டு கொள்ளாத யானை, சொல்லி வைத்தாற்போல தன் கால்களால் பத்து காலடி தூரம் பின்னோக்கி நகர்ந்தது. அப்புறம் முன்னோக்கி வந்தது. நடக்கும்போது வாலை சுழற்றிக்கொண்டது. அதன் உடம்பின்மேல் சென்ற கயிறு வழியாகத் தொங்கிய வெங்கல மணிகள் தான், ‘டொண்டாய்ய்ய்ங்’ சத்தம் எழுப்பின, யானையின் நடைக்கேற்ப!

குழந்தை கீழே இறக்கப்பட்டதும், யானைமேல் ஏறிய சேவைக்காகக் கொடுக்கப்படும் காசு, யானையின் துதிக்கைக் கவுண்டா¢ல் வைக்கப்பட்டது. அதைச் சுருட்டிக்கொண்ட யானை, தனது எச்சில் வழியும் துதிக்கையை குழந்தையின் தலையில் வைத்து ஆசிர்வதித்தது. யானைப்பாகன் குழந்தையின் பெற்றோ¡¢டமிருந்து தண்ணீர் வாங்கி, துதிக்கையின் ஓட்டைகளில் ஊற்றினான். யானை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி போல,’புர்ர்ர்¡’ரென்று துப்பியது. யானையால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அதன் உறவினர்கள், யானையின் பின்னால் ஓடிவந்த சிறுவர்கள் அனைவருமே நனைந்தனர்.

எதிர்பாராத நொடிகளில் தன் மேல் பீய்ச்சப்பட்ட தண்ணீரால் பயந்த குழந்தைக்கு, அன்றிரவே காய்ச்சல் வந்து… அடுத்த நாள்டாக்டருக்கு அழுததும்,மருந்து மாத்திரை வாங்கியதுமாக ஆன செலவு, ரூபாய் நானூற்று முப்பதும்… நேரமும்… பதற்றமும்… மனக்கஷ்டமும்!


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா