மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue


OAK RIDGE, Tenn., March 4, 2002

ஓக் ரிட்ஜ் தேசிய பரிசோதனைச்சாைலை ஆராய்ச்சியாளர்களும், ரென்ஸெலார் பாலிடெக்னிக் பள்ளியும், ருஷ்ய அறிவியல் அகாடமியும் இணைந்து தெரிவித்த பரிசோதனை அறிவிப்பில், அவர்கள் திரவத்துக்குள் இருக்கும் குமிழிகளில் அணு இணைப்பு நடப்பதை தெரிவித்துள்ளார்கள்.

இந்த குமிழிகள், ஒலி அலைகள் மோதும்போது பெரிதாகி மிகவும் அதிக அழுத்தமும், உயர் வெப்பமும் அடைகின்றன. இந்த அழுத்தமும், வெப்பமும் பளிச்சென ஒளி தெறிப்பதற்கு ஏதுவாகிறது. இதனை சோனோலூமனஸன்ஸ் (ஒலியால் உண்டாகும் ஒளி) என்று அழைக்கிறார்கள்.

ரூசி தலயர்கான் என்ற ஓக்ரிட்ஜ் பரிசோதனைச்சாலையின் மூத்த அறிவியலாளரும், ரிச்சர்ட் லாஹீ என்ற ரென்ஸெலார் பாலிடெக்னிக்கின் பேராசிரியரும் இணைந்து பரிசோதனையை நடத்தினார்கள். இந்த குழு 14 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் (MeV) சக்தி கொண்ட நியூட்ராஙளை இந்த திரவத்துக்குள் அனுப்பி, இந்த குமிழிகளை நியூக்ளியேட் செய்தார்கள்.

இந்த சூழ்நிலைகள் உடையும் குமிழிகளின் அழுத்தத்தை அதிகரிக்க உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. அதிக அழுத்தமும், அதிக வெப்பமும் இருக்கும்போது அணு இணைப்பு நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

பரிசோதனைகளின் முடிவில், சிறிய அளவில், ஆனால், புள்ளிவிவர ரீதியில் அதிகமான அளவு டிரிடியம் தனிம ஐசோடோப், இந்த டியூட்டிரியம் அசெட்டோனில் இருப்பது தெரிய வருகிறது. டிரிடியம் என்பது மூன்று எண் உள்ள ஹைட்ரஜன் தனிமம். டியூடிரியம் இரண்டு எண் உள்ள ஹைட்ரஜன் ஐசோடோப் தனிமம். இரண்டு டியூட்டிரியம் கருப்பொருள்கள் இணைந்து ஒரு டிரிடியம் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. சாதாரண அசெட்டோனில் இந்த குமிழி பரிசோதனை செய்தபோது, டிரிடியம் விளைவு பொருளாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூட்டிரான் கையெழுத்தை டியூட்டிரியம் இணைப்பில் தேடும்போது, கலவையான விளைவுகளையே கண்டுபிடிக்க முடிகிறது. நியூட்டிரான் கதிரியக்கம் இருந்தாலும், புதிதாக வேறொரு நியூட்டிரான் கண்டுபிடிப்பான் கொண்டு அதே பரிசோதனையை செய்தபோது, நியூட்டிரான் கண்டுபிடிக்கப்படவில்லை.

சில திரவ இயங்கியல் (hydrodynamics) அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு, உடையும் குமிழிகளின் உள்ளே இருக்கும் அழுத்தத்தையும் சூழலையும் கணக்கிட்டால், அணுஇணைப்பு நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகள் இருப்பதை கணித ரீதியில் பார்க்க முடிகிறது. பரிசோதனை ரீதியில் அதனை செய்து பார்ப்பதே இந்த முயற்சி.

இந்த விளைவுகள், இன்னும் பல பரிசோதனைகளை நடத்த வேண்டிய கட்டாயத்தை தெளிவாக்குகின்றன என்று ஓக்ரிட்ஜ் பரிசோதனைச்சாலையின் உதவி இயக்குனர் கூறுகிறார். முக்கியமாக, இரண்டு தனித்தனி நியூட்டிரான் அளவைகள் விளக்கப்படவேண்டும்.

இது ஸயன்ஸ் இதழின் மார்ச் 8 ஆம் வெளியீட்டில் வெளிவந்துள்ளது.

(இதன் முக்கிய ஆராய்ச்சியாளரான ருசி தலயர்கான், சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பு படித்தவர்)

Series Navigation

செய்தி

செய்தி