எஸ். அர்ஷியா
உடம்பு துடைக்கத் துண்டு, அணிந்துகொள்ள உள் பாவாடை, பிரா, மாற்றிக்கொள்ள தளர்ந்த ஆடை கள் சகிதமாய் குளிக்கச்சென்ற சுஜாவை, நாத்தனார் உறவு தடுத்து நிறுத்திக் கேட்கிறது. “இன்னிக் காச்சும் வெச்சுக்கலாமா? தம்பி, சீக்குப்பிடிச்சக் கோழிக்கணக்கா மறுகிப்போய்க் கெடக்குறான். இப்பத் தான் தள்ளிப்போறதுக்கெல்லாம் மாத்திரை கெடைக்குதாமே. படிச்சப் புள்ளை நீ, அதை வாங்கித் தின்னுருக்கலாம்ல்ல?”
சடவாய், உறவு உ¡¢மையில் அவள் கேட்கும்போது, ஊரே திரண்டு தன் முன் நிற்பதாக, புதுப்பெண் கூசிப் போகிறாள்.
பசும்வனத்தில் உலவி, மனம்போலத் தி¡¢ந்து, கவலைகளற்றிருந்த மனம், கூண்டுக்குள் சிறைப்பட்ட புலியாய் புழுங்கித் தவிக்கிறது. இரும்புக்கம்பிகளால் வனையப்பட்ட சட்டகக் கூண்டில் சிக்காமல் தப்பிக்க முயன்று, முடியாமல்போன தோல்வியில் உடல் இப்போதும் நடுங்குகிறது.
இதற்கு முன் ஒருகணம்கூட யோசித்திராத, சூழலால் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை. இனி இதுதான் சந்தனமென்று, சேற்றுக்குள் தள்ளிவிடப்பட்டதில் பெண் மனம் ஊசலாடுகிறது. நினைத்தே பார்த் திராத ஒருவனின் கைகளால், ஊசலாட்டத்தைத் தாண்டி சந்தனச்சேற்றைப் பூசிக்கொள்ளச் சொல்லும் சமூகத்தின் சந்தோஷச் சூழ்ச்சி, அவளைப் பார்த்துக் கெக்கலிக்கிறது. கெக்கலிப்பில், குடும்பமே சூழ நின்று கட்டிவிட்ட முறுக்கானத் தங்கத்தாலி, சுருக்கிடப்பட்ட கயிறை ஒத்தும், நீள் அரவமாயும் நெளு நெளுக்கிறது. நெஞ்சின்மேல் படர்ந்து அது உராயும்போது, இணை மனத்தின் ஊமைக்குரல் அவளுக் குள் பேரொலியாய் அலறுகிறது.
குடும்பத்தில், சகோதரர்களுக்குள் எழுந்த சின்னப் பிரச்சனை பெரு உருக்கொண்டு, அடர்த்தியாய்த் திரண்டு மையமாகி, காற்றழுத்தத் தாழ்நிலையில், ஆசைஆசையாய் அவள் வளர்த்தெடுத்தக் கனவு களை சடுதியில் நனைத்து, திசைகளற்ற வெளியில் வீசி எறிந்துவிட்டது.
பு¡¢தல் ஏதுமற்று, தொடுதல் மட்டுமே வாழ்க்கையென்று ஆவலாதியாய் நெருங்கிவந்து மூர்க்கத்துடன் அவன் தீண்டியபோது, ரயில் பூச்சியாய் சுருண்டுகொண்ட மனம் ஒப்புக்கொடுக்க மறுத்துவிட்டது. அவசரமாய் ஒரு பொய்யைச் சொல்லி தப்பித்தாள். இருந்தும் அவன், ‘ஒரேயொரு முத்தம்’ என்ற பெயா¢ல், கன்னத்தைக் கடித்து ஈரமாக்கிவிட்டுத்தான் ஓய்ந்தான்.
கன்னத்தைத் துடைத்த கைகளில், கருவேல முள் குத்திய வேதனை. உடம்பில், அவன் கைப்பட்ட இடங்கள் கன்னிப்போனதாக மனம் புலம்பியது. எப்போது எது நடக்குமோ எனும் நடுக்கத்தில், ஒருவழியாக மூன்று நாட்களை ஓட்டியாகிவிட்டது. நிமிடங்களே யுகங்களாய் நகருகின்றன. இதற்கு மேலும் அந்தப்பொய் கை கொடுக்காது.
‘தனது ஒருபொய்க்கு, மாத்திரையைத் துணைக்கு அழைத்துக் கொள்ளச் சொல்கிறது, இந்த சமூகம்’. வெற்றுச்சி¡¢ப்பை உதிர்த்துவிட்டு, குளியலறைக்குள் புகுந்து கொள்கிறாள். தப்பித்தலுக்கான இடமாக அது படுகிறது. ஆடை கலைந்து, நிர்வாணமாய் நின்று, தலைவழியே தண்ணீரை ஊற்றும்போது, கசடுகள் கலைந்து ஓடுவதாக மனம் சிலிர்க்கிறது. தலையிலிருந்து முகம் தொட்டு, கழுத்தில் இறங்கி, நெஞ்சு தழுவி, வயிற்றில் புரண்டு, கால்களுக்கிடையில் நழுவி, தரையில் திரண்டு ஓடும் நீரைப் பார்க்கும்போது, மனம் லேசாகிறது.
அன்று, தாமதமாக வந்த சுஜா பதற்றமாக இருந்தாள். பெண் படம் ஒன்றில், அதன் இடைப்பக்க வளைவை கரெக்ஷன் செய்து கொண்டிருந்த ரவி, அந்த இடத்திலேயே இல்லை என்பதுபோல நடந்து கொண்டாள். இயல்பை மீறித்தொ¢ந்த அவளது நடவடிக்கை, அந்த இடத்துக்குப் புதியது. நேற்று மாலை காபி ஷாப்பில் ஏதோ யோசனையாக இருந்தவளிடம், “அப்புறம் யோசிக்கலாம். முதல்ல காபி குடி. ஆறுது!” என்றபோது, “வீட்ல அப்பாவுக்கும் பொ¢ய அண்ணனுக்கும் பிரச்சனையா இருக்குப்பா. இருக்குற வீட்டை வித்துப்பணம் குடு. தொழில் ஆரம்பிக்கணும்னு பொ¢ய அண்ணன் நச்சுக்கிட்டு இருக்கு. மத்தவங்க சண்டை போடுறாங்க. என்னய மையமாவெச்சு பிரச்சனை கிளம்புது” என்று சொல்லியிருந்தாள்.
“ஹலோ, குட் மார்னிங். உங்க முன்னால ஒரு மனுஷன் உக்காந்து இருக்குறது தொ¢யலியா? அரவிந்துக்குப் போய் ஒருதடவை செக் பண்ணிக்கலாமா?” என்றுதான் துவங்கினான்.
வழக்கமான இதுபோன்ற கிண்டலுக்கு, துப்பாக்கிக் குண்டாய் சீறலுடன் வந்துவிழும் பதிலடி, அவளிடம் இருக்கவில்லை. மாறாக முகம் திருப்புதல் இருந்தது. இதுபோல அவள் நடந்து கொண்டது மில்லை. ஏதோ வேலையில் மூழ்கியிருப்பதாகக் காட்டிக்கொள்ள முயன்று, சுடிதார் டாப்ஸின் இடது தோளில் லாவகமாக முகம் புதைத்து, கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவளது கண்ணீரும் இந்த இடத்துக்குப் புதியது.
இருக்கையைவிட்டு எழுந்து, அவளருகில் வந்து தோளைத் தொட்டான். “சுஜி… நீயா அழற?”
வார்த்தைகளின் பா¢வு, இறுக்கத்தை மேலும் உடைந்தெறிந்தது. திரண்ட மேகங்களின் அடர்த்தி, உடைதலினூடே தொ¢ந்தது. “நீ எனக்கு இல்லை ன்னு ஆகிப்போச்சுடா!”
ஊற்றிக்கொள்ளும் தண்ணீரை நிறுத்திவிட்டு, சோப்பைக் கையிலெடுத்தபோது, வேறு நினைவு அவளுக்குள் வழுக்கியது. நிறுவனம், இரண்டு பேரையும் பயிற்சிக்காக பெங்களூருவுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தது.
“உன்ட்ட என் காதலை பிரபோஸ் செஞ்சதும், கம்பெனியே நம்மளை ஹனிமூனுக்கு அனுப்பிவைக்குது பாரு!” என்றான், கண்ணடித்து.
தவிர்க்க முடியாத பயிற்சி, அது. பதவி உயர்வுகளையும் கூடுதல் வருவாயையும் ஈட்டித் தரக்கூடியது. “ம். ஆசை!” என்றபடி கிளம்பிவிட்டாள்.
பயிற்சியினூடே அவனும், அவளும், அந்தத் தனிமையும் அவர்களுக்குள் காதலின் நுன்மத்தைப் பன்மடங்காக்கியிருந்தது. பணிக் களைப்பில் அசந்து தூங்கிவிட்ட ஓர் இரவின் நடுநிசியில், அவள் திடீரென்று கண்விழித்தபோது, மேஜை விளக்கொளியில் அவன் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தான். கண்விழிப்பு அவனைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. எழுந்து அருகில் வந்தவன், விலகியிருந்த அவள் ஆடையை சா¢செய்து, போர்வையால் கழுத்து வரை போர்த்திவிட்டு, “ஐ லவ் யூ, சுஜி” என்றபடி மெல்லிய சி¡¢ப்புடன் அகன்றுவிட்டான்.
அந்தப் பதினைந்து நாட்களும் பகல்பொழுதில், “இன்னிக்கு உன்னய என்னமாச்சும் பண்ணனுமே!” என்று சொல்வதை மட்டும், ஒரு அஜெண்டாவாகவே வைத்திருந்தான்.
பயிற்சி முடிந்து ஊர்த்திரும்பி, வீட்டுவாசலில் கா¡¢லிருந்து இறங்கியவள்,”இந்தப் பதினஞ்சுநாளும் என்னயக் கட்டுப்படுத்திக்கவே முடியலடா. உன்னய நான் என்னமாச்சும் பண்ணீருவேனோன்னு பயந்துகிட்டே இருந்தேன். நல்லவேளை நீ தப்பிச்சுக்கிட்ட!” என்று, அவன் காதுக்குள் சொல்லிவிட்டு ஓடியதை நினைத்துக்கொண்டாள். பூஞ்சி¡¢ப்பு அரும்பியது.
துண்டை உதறி முகத்தில் ஒத்திக்கொண்டபோது, “எனக்கே எனக்கானவளுக்கு, என் அன்பு முத்தம்!” என்று, ஒரு பிறந்த நாளின்போது, அவன் உதடுகளால் மென்மையாக ஒத்தியெடுத்தது, பூஞ்சி¡¢ப்பைத் தொலைத்து, இப்போது அவளைக் குமுறச் செய்தது. கண்கள் சிவக்க வெளியில் வந்தாள்.
அவள் வருகைக்காகக் காத்திருந்த நாத்தனாரும் மாமியாரும், ‘குளிப்பு ஆயிருச்சுல்ல. இன்னிக்கு வெச்சுக்கலாம்!’ என்ற முடிவுக்கு வந்தவர்களாக இருந்தார்கள். அதை, அவளிடமும் சொன்னார்கள்.
ஒவ்வொரு இரவும் வெள்ளை இரவாகக் கழிவதில், அவன் துன்புற்றிருந்தான். அருகில் தாலிகட்டிய புதுமனைவி இருக்க, கைகளை இடுக்கிக் கொண் டு தூங்க வேண்டியிருந்ததில், மறுகிப்போய்க் கிடந்தான். புது மனைவியிடம் முதல் இரவில் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று, பல வருடங்களாகப் போட்டு வைத்திருந்த ஏக்கத் திட்டங்கள் தவிடுபொடியானதில், பெண்களுக்கேயான இயற்கையைச் சபித்துக்கொண்டான். ‘அடுத்த நாள் அது வந்துருக்கலாம்’ என்று தள்ளிவைப்பு யோசனை செய்தான். ‘கல்யாணத் தேதியை ரெண்டு நாள் முன்னாடியே வெச்சுருந்தா, இப்டி ஆயிருக் காதுல்ல?’ என்றும் சலித்துக் கொண்டான். அக்காக்கா¡¢யிடம் ‘சா¢யாயிருச்சான்னு கேட்டுச் சொல்லுக்கா!’ என்று இரண்டொரு முறை விண்ணப்பம் போட்டும் வைத்திருந்தான். அப்போதெல்லாம் அவன் உடம்பு தினவில் முறுக்கிக் கொண்டது.
குளித்துவிட்டு ஆடை மாற்றிக்கொண்டு வந்தவளைக் காட்டி, “குளிப்பு ஆயிருச்சுடா தம்பி!” என்றாள் அக்காக்கா¡¢, பூடகமாக. அவன் பூத்துப்போனான். கன்னத்தைக் கடித்ததின் தொடர்ச்சியை நினைத்தபடி, இப்போதே இரவின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
·
அந்த வீட்டின் சூழல், மாலைக்குப்பின் வெகுவேகமாக மாறுவதை சுஜாவால் உணர முடிந்தது. வீட்டிலிருந்த மற்ற மூன்றுபேருமே ஆளுக்கு ஒரு பக்க மாய் இயங்கினார்கள். அது ஒன்றே வாழ்க்கை என்பதுபோல அவர்களின் செயல்பாடு இருந்தது. அது நடந்தேறாவிட்டால், உலகம் நிலைகுலைந்து போய்விடும் அபாயம் இருப்பதுபோல தீவிரமாக நடந்து கொண்டார்கள். இரண்டொரு முறை நாத்தனார்க்கா¡¢, “தலைநெறையா பூ வெச்சுக்கோ… தம்பி ரொம்ப நல்லவன்…” என்றெல்லாம், சம்பந்தமில்லாமல் சொல்லித் தி¡¢ந்தாள்.
அவர்களின் செயல்களை சுஜா ரசிக்கவில்லை. ரசிக்க முடியவில்லை. மனம் புதிய சூழலுக்குள் தகவமைத்துக் கொள்ள மறுத்து முரண்டியது. மனதுக்குள் நிறைந்திருந்த ரவியின் வாசம் அவளைவிட்டு அகலும் என்பதற்கு உத்தரவாதம் இருக்கவில்லை. குட்டிப்போட்ட பூனைபோல் தன்னைச் சுற்றிச் சுற்றிவரும் புதியவன் மீது அவளுக்குக் கோபமில்லைதான். என்றாலும் அவனை விரும்பி ஏற்றுக்கொள்ள மனதில் இடமிருக்கவில்லை.
கல்யாணப் பத்தி¡¢கையை வடிவமைத்த ரவி, ‘என் பெயர் இருக்க வேண்டிய இடத்துல, நானே வேறப் பெயரை எழுத வேண்டியிருக்கு. டிசைன் நல்லா வந்துருக்கா பாரு!’ என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டாலும், உள்ளுக்குள் நொறுங்கிப் போயிருக்கிறான் என்பதை சுஜா கவனிக்காமலில்லை. அத்தனை அழகாக வந்திருந்தது, வடிவமைப்பு. தாஜ்மஹாலை வடிவமைக்கச்சொல்லி சக்ரவர்த்தி ஷாஜஹான் உத்தரவிட்டபோது, வந்து சேர்ந்த மாதி¡¢களில் மும்தாஜின் முன்னாள் காதலன் அனுப்பியிருந்த மாதி¡¢தான், நேர்த்தியாக இருந்ததாகவும் அதையே சக்ரவர்த்தி தேர்வு செய்ததாகவும் சொல்வ துண்டு.
“உனக்கு எம்மேல கோபம் வரலியா, ரவி?”
“உன்னோட சூழலை நான் பு¡¢ஞ்சுக்கிட்டேன், சுஜா. எனக்காக நீ காத்திருக்க முடியாது. என் சூழல் அப்படி. ஆனாலும் நீ, வீட்டுல போராடியிருக்க லாம். குடும்பப் பிரச்சனைக்கு உன்ன பலி குடுத்துட்டாங்க!”
எத்தனை இயல்பாக யோசிக்கிறான். “நான் உன்னய நல்லபடியா வெச்சுக்கணும்னு நெனக்கிறேன். காலம் ரொம்ப நல்ல ஆசி¡¢யன். யாருக்கு என்னபாடம் சொல்லிக் குடுக்கணும்ன்னு அதுக்கு நல்லாவே தொ¢ஞ்சுருக்கு. நீ எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்ன்னு மட்டுந்தான் நான் நெனைப்பேன், சுஜா!”
திருமணத்துக்கு வந்தவன், “ஆல் தி பெஸ்ட்!” என்றுவிட்டுப் போய்விட்டான்.
தொடர்ந்து ஒரே இடத்தில்… ஒரே பணியில்… எந்நேரமும் பி¡¢யாமல் காதலுடன் இருந்தவரை எதுவும் தொ¢யவில்லை.
இப்போது வெற்றிடம் தொ¢கிறது. யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடமாக அது, இருக்கிறது. இனி அதைத் தாண்டிச்செல்ல வேறு யாதேனும் வழி இருக்கமுடியுமா எனும் யோசனையில் இறங்கினாள். எல்லா வழிகளும் ஒரு இடத்திலேயே போய் முடிந்தன.
·
அவன் வந்துவிட்டான். பார்வையில் காமம் கொப்பளித்தது. ஆர்வத்தில் பதட்டம் நிரம்பியிருந்தது. கட்டியிருந்த வேட்டி இடறியது. சமாளித்துக்கொண் டான். அவளருகில் வந்து உட்கார்ந்தவன், “பால் சாப்புடலாம் சுஜா” என்றான். தொடர்ந்து, ” என்னைப் புடிச்சுருக்குல்ல?” என்ற கேள்வியை வேறு கேட்டுக்கொண்டான்.
அவன் அருகாமை அவளுக்கு அசூசையாக இருந்தது. மனதாலும் உடம்பாலும் நெளிந்தாள்.
அவள் தோளில் அவன் கை வைத்தான். மெதுவாக எடுத்துவிட்டவளிடம், “ஒன்னிய எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு சுஜா” என்றான்.
அவள் எதுவும் சொல்லவில்லை.
அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவள் ரவியின் நினைவுகளுக்குள் மூழ்கினாள்.
arshiyaas@rediffmail.com
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- குப்பைப் பூக்கள்..!
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)