மின்னல் விழுதுகள்!

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

ரசிகன்


ஒரு மஞ்சள் பூசிய
மாலை வேளை சந்திப்பில்…

வெள்ளுடை விலாவரியாய்…
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்ததவையும்!

பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடி சாய விழைந்தபடி நான்!

இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம்…
சலித்துப்போயிருந்தன
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்…

ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்

விரசங்கள்
வீரியம் காட்டிடவும்

சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்…

நிஜத்தை மறந்துவிட்ட நினைப்பில்
வந்தவள் என் பக்கம் வந்து

இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்!!!

– ரசிகன்
பாண்டிச்சேரி

Series Navigation

ரசிகன்

ரசிகன்