புதிய மாதவி
பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்
நிரம்பி வழியும்
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்
ஆடை அணி உறவுகள் களைந்து
நிர்வாணமாய் பேசியது
நம் மவுனம்.
தொட்டுப்பார்த்தக்
காற்று களைத்துப்போனது
கருவறைக் கதவுகள்
மூடிக்கொண்டன.
யுகம் யுகமாய்
சிற்பியின் உளிகளுக்காய்
காத்திருக்கிறது
கடலடியில் கரும்பாறை
*
உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்த கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
பூக்கள் வாடலாம்
பூமி வாடுவதில்லை.
*
செத்தப்பின்
உயிர்த்தெழுந்த
பரமப்பிதாவின்
கல்லறைச் சத்தியமாய்
வாசிக்கிறேன்.
‘புதைந்து போன
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை”
ஆமென்.’
*
காத்திருந்ததாய்
கனவுக்கண்டதாய்
கவலைக் கொண்டதாய்
கண்ணீர்விட்டதாய்
கவிதை எழுதியதாய்
காணத்துடித்ததாய்
அன்று போலவே
இன்றும்
சொற்குப்பைகளுக்கு நடுவில்
தொலைந்து போன
வாழ்க்கையைத் தேடுகிறாய்
வார்த்தைகள் எட்டாத
பிரபஞ்சவீதியில்
காலத்தைத் தின்று செரித்த
நெருப்பாய்
எரிந்து கொண்டிருக்கிறது
நீ தூக்கிவீசிய
மவுனவெளி.
————-
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2
- குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009
- பத்மநாபபுரம்
- ஹைக்கூக்கள்
- மவுனவெளி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 54 << சின்ன ராணி >>
- தீப ஒளியில் சிராங்கூன்
- ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…(1)
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும்
- அலிகளுக் கின்ப முண்டோ?
- நீங்கள் கேட்டவை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1
- என்னை ஆளும் விலங்குகள்
- பெயரிலென்ன இருக்கிறது?
- மனப்பதிவுகள்
- தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்
- குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!
- முரண்:
- ’ரிஷி’யின் இரு கவிதைகள்
- சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி
- கள்ளத்தனமான மௌனங்கள்
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- ஏமாற்று ஏமாற்று