மழையில் காலை

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

வே பிச்சுமணி


கார்மேக போர்வையை இழுத்து போர்த்திய
அதிகாலை பொழுது அந்திமாலையாக மரூவ
கன்றை நினைதத காராம்பசுவாய்
வானம் பொழிய ஆரம்பித்தது
ஒற்றை இரட்டை கண் ஊர்திகள்
விளிதது பார்கக தொடங்கின
தேனுண்டு மயங்கிய பூச்சிகளாய்
மழைதுளிகள் தார்சாலையில்
எழுந்து பறக்க எத்தனிக்கின்றன
சிந்திய எண்ணெய் துளிகள்
சாலையில் வண்ண சித்திரமாய் விரிகின்றது
இறங்கும் பயணிகள் மரக்குடைகளில்
ஓடி சென்று ஒதுங்கின்றனர்
மழையை கண்ட ஆட்டோகாரர்கள்
மூகமுடி அணிந்து கொள்ளைக்கு தயார்கின்றனர்
காலையில் வந்த மழையை வையாதீர்கள்
தூக்கி கொஞ்சுபவர் முகத்தில்
உச்சா போககூடாதென குழந்தைகளுக்கு தெரியாது

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி