மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

பசுபதி


கைஃபி ஆஸ்மி அவர்களது கவிதை ஷராரா (பொறி) -யின் மொழிபெயர்ப்பு
**
பொறி
பசுபதி

விழியோடு விழிகலந்தால் விளைவென்ன ? கேட்காதே!
எழுந்ததுஓர் காதற்பொறி இருவர்விழி மோதலினால்.

பறக்குமுன் ஓர்தயக்கம்; பார்வையிலே சிறுநாணம்;
சிறப்பு,மென்மை கபடமின்மை; கிறங்கும்ஓர் சைகைஉரு.

விரைந்ததுகண் பார்வைவிட்டு வியர்த்திடும் நெற்றிக்கு
உருஇதழாய், எழில்மலராய், உயர்கெம்பாய், விண்மீனாய்.

குதித்ததுநெற் றிக்குப்பின் கோலமலர்க் கன்னம்மேல்
அதிருசித்தேன் போலல்ல, அதைவிடவும் விலைஅதிகம்!

கன்னமலர் விட்டுதடின் வன்னத்தில் சுருங்கியது
பண்ணலைபோல் மட்டுமல்ல பளிச்சிடும்மின் கொடிபோல.

செவ்விதழின் வர்ணம்விட்டுச் சென்றதுமென் கரம்நோக்கி
அவ்விடத்தில் இளைப்பாறி அடைந்ததுபின் இதயத்தை.

அருளிரக்கம் மாியாதை அன்புகாதல் உருவினிலே
இருதயத்தில் இறங்கினபின் நாளம்வழி சிந்தியது.

கண்பார்வைச் சாரமாகிக் கண்காட்சிச் சாரமாகி
இன்னிதயச் சாரமாகி எழிலுடலை விட்டேஎன்
இளங்காமம் தணித்திடவே எனைநோக்கிப் பறந்ததுகாண்.

புலன்வேட்டை ஆடாமல் பொறிஉணர்வு தந்தெனக்குப்
புலன்கட்டுப் பாட்டினையே புாியவைத்த பொறிஅதுவே.

துயர்எனவே தோன்றிடினும் மகிழ்வமைதிக் காரணம்காண்.
பயிர்அதனைக் காய்ச்சினும் உயிரைவிட உயர்ந்ததுகாண்.

வந்தமறு கணமேஎன் வாழ்வதனைக் கவ்வியது
தொலைந்தஎன் உள்ளுயிர்க்கோர் துணைதரும்ஆ தாரமது.

கன்னத்தில், அவளிதழில் காதல்பொறி தவழ்கிறது
கைஃபி! என் கனல்கக்கும் கண்ணிகளில் மறைந்துளது!

(மூலம்: Kaifi Azmi ‘s Urdu Poem)

2. SHARARA

DO NIGAHOn KA ACHANAK WO TASADUM MAT POOCHH
THESLAGTEY HI UDA ISHQ SHARARA BAN KAR
UD KE PAHLEY INHI JHEnPI HUI NAZROn MEIn RUKA
NARM, MAASOOM, HASEEn, MAST ISHARA BAN KAR
PHIR NIGAH SE ARAQ AALOOD JABEEn PAR JHALKA
PAnKHDI, PHOOL, GUHAR, LAAL SITARA BAN KAR
DHAL KE MAATHEY PE UTAR AAYAA GUL-E-AARIZ MEIn
RAnG RAS SHAHD NAHIEn UN SE BHI PYARA BAN KAR
GUL-E-AARIZ SE SIMAT AAYAA LAB-E-RAnGEEn MEIn
RAAG HAI LAHR NAHIEn BARQ KA DHARA BAN KAR
LAB GUL RAnG SE PHIR RENG GAYAA BAAHOn MEIn
BAS KE BAAHOn KI GUDAZI SE CHALA DIL KI TARAF
CHAH, ALTAF, KARAM, PYAR, MADAARA BAN KAR
DIL MEIn DOOBA THA KE BAS PHOOT PADA RAG RAG SE
JAAN-E-DIL, JAAN-E-NAZAR, JAAN-E-NAZAARA BAN KAR
PAIKAR-E-HUSN SE PHIR UD KE CHALA MERI TARAF
EK BAD-MAST JAWANI KA UTAARA BAN KAR
RAHZAN-E-HOSH MAGAR HOSH KA PAIGHAM LIYE
DUSHMAN-E-ZABT MAGAR ZABT KA YAARA LE KAR
DARD HI DARD MAGAR WAJAHE SUKOOn, WAJHE TARAB
SOZ HI SOZ MAGAR JAAN SE PYARA BAN KAR
AATEY HI CHAA GAYAA KHOI HUI HASTI PE MIRI
MERI KHOI HUI HASTI KA SAHARA BAN KAR
AB SHARARA WOHI USKEY LAB-O-RUKHSAR MEIn HAI
AUR KAIFI MEREY TAPTEY HUYE ASH ‘AAR MEIn HAI

TOP

2. SPARK

Don ‘t ask [what happened] when the two eyesights
instantly confronted each other
The moment [they ‘re] knocked off, the spark of love
flew
Having taken the flight first it paused in the bashful
visions
In the form of a tender, innocent, exquisite [and]
tipsy gesture
Then, from vision it trekked to the perspiring
forehead
Having taken the forms of petal, flower, ruby [and]
star
From the forehead it landed on the flower of the cheek
Not just like luscious honey but more precious than
that
From the flower of the cheek it got compressed in the
colour of lips
Not merely as a surge of tune but as a chain of
lightening
From the colour of lips it crawled towards the arms
It rested in the softness of the arms [for awhile and
then] moved towards the heart
In the guise of longing, kindness, favour, love [and]
courtesy
The moment it sank in the heart it spilled out from
the veins
In the form of essence of the heart, essence of the
sight [and] essence of the spectacle
From the body of the beauty it flew towards me
To exorcise the lust of the youth
[Though] it appeared like the raider of the sense, it
brought [me] to senses
[Though] it came like the adversary of restraint, it
helped [me] control myself
[Though] it surfaced like pain, it ended up as the
cause of calmness and bliss
[Though] it cropped up like scorch, it became dearer
than life
The moment it arrived it took control my being
Like the sustenance of my lost being
Now, the same spark is apparent in her lips and cheeks
And O Kaifi! It is also concealed in my fiery couplets

**
கைஃபி ஆஸ்மி பற்றிய திண்ணைக்குழு குறிப்புகள்

உலகப்புகழ் பெற்ற கவிஞரான கைஃபி ஆஸ்மி அவர்கள் லக்னவி உருதுவை பிரபலப்படுத்தியவர். ஏராளமான சினிமாப்பாடல்களில் கவிநயத்தை தோய்த்தவர். ‘அர்த் ‘, ‘காகஜ் கி ஃபூல் ‘, பகிசா, கோரா, ஹக்கீக்கத் ஆகிய படங்களின் கவிதைகளை எழுதியவர்.

கைஃபி ஆஸ்மி அசாம்கார் மாவட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் நிஸ்வான் ஊரில் பிறந்தவர். ஹ்யூசேன் ரிஸ்வி என்ற பெரும் ஜமீன்தாரின் மகனாகப்பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர்.

தெரு ஓரங்களில் உட்கார்ந்து கொண்டு தொழிலாளர்களுடனும் தினக்கூலிகளுடனும் உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை பழங்கால லக்னவ் ஆட்கள் அறிவார்கள்.

இவரது உறவினர்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்கு சென்றபோது இவர் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற காரணத்தினால் ஒளிந்து கொண்டிருந்ததால் இவர் மட்டும் செல்லமுடியாமல் போனது இறுதி வரை செல்லமுடியாமல் போயிற்று. பிறகு அவர் அவர்களை சென்று சந்தித்தாலும் இந்தியக்குடியுரிமையை விடவில்லை.

இளம் வயதில் சுல்தான்-இ-மதாரி என்ற ஷியா பள்ளிக்கூடத்தில் மதக்கல்வி பெற்றாலும், மத விஷயங்களில் நாட்டம் இல்லாமலும், அதன் மீது எதிர்ப்பு உணர்வுடனும் வளர்ந்தவர் இவர். தன் நண்பர்களுடன் இணைந்து இஸ்லாமிய மதகுருக்களை பகிரங்கமாக எதிர்த்ததால், பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தப்பட்டவர். அவர் லக்னவ் நகரில் இருந்தாலும் மும்பாய் நகரில் இருந்தாலும், குருட்டுத்தனமான மதக்கருத்துக்களை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துவந்தவர்.

மத அடிப்படை வாதத்தையும், தீவிரவாதத்தையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கைஃபி ஆஸ்மி, எந்த மதத்தின் தீவிரவாதத்தையும் எதிர்க்கத் தயங்கியதில்லை. பாபரி மசூதி உடைக்கப்பட்டதும், அவர் எழுதிய ‘ராம்ஜி கி வன்வாஸ் ‘ ராமரின் வனவாசம் என்ற கவிதை பலராலும் பாராட்டப்பட்டது.

ஹிந்தி-உருது சாகித்ய பரிசு கமிட்டியின் சேர்மனாக 1968இல் நியமிக்கப்பட்டார் கைஃபி ஆஸ்மி. ஹீரா பஞ்சா என்ற கவித்துவமான கவிதைப்படத்தையும் இவரே எழுதினார்.

உருது மொழி உத்தரபிரதேசத்தில் அழிகிறது என்று கவலைப்பட்டார். மற்ற பிரதேசங்களிலிருந்து லக்னவுக்கு வருபவர்களால் சுத்தமான லக்னவ் உருது அசுத்தமாகிறது என்றும் இவர் கவலைப்பட்டார்.

இவரது மகள் புகழ்பெற்ற நடிகை ஷபனா ஆஸ்மி.

***

Series Navigation

பசுபதி

பசுபதி