மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் முதுமைக்கும் இனவிருத்திக்குமான மரபணுவைக் கண்டறிந்துள்ளார்கள்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

திண்ணை


மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் வயதாவதற்கும், வயதினால் வரும் வியாதிகள் ( infertility, reproductive problems and cataracts இன்னபிற) ஆகியவைக்கும் காரணமான மரபணுவைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். மரபணு மாற்றப்பட்ட பரிசோதனை எலிகளில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில் இதே போன்ற வியாதிகளை மனிதர்களில் மருத்துவர்கள் அறிந்துகொள்ளவும் வியாதிகளைத் தீர்ப்பதற்கும் உதவும் எனக் கருதப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் சூலை மாதத்து நேச்சர் ஜெனடிக்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

‘BubR1 புரோட்டானை சாதாரண அளவை விட ஐந்து மடங்கு குறைவாக உற்பத்தி செய்யுமாறு ஒரு மாற்றப்பட்ட எலியை திரு.டாரேன் பேக்கர் கண்டறிந்தார். இந்த எலிகள் வெகு இளமையிலேயே மிக முதிர்ந்தவர்கள் அடையும் அத்தனை வியாதிகளையும் அடைந்தன ‘ என்று மாயோ கிளினிக் சிறுகுழந்தைகள் மருத்துவம் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் ஜான் வான் ட்வெர்ஸன் பிஹெச்டி அவர்கள் தெரிவித்தார்.

டாக்டர் வான் ட்வெர்ஸன் அவர்கள், ‘ இந்த கண்டுபிடிப்பு, உண்மையிலேயே BubR1 புரோட்டான் அளவு ஒரு சாதாரண எலி வயதாக வயதாக குறைந்து கொண்டே போகிறதா என்று கண்டறிய எங்களைத் தூண்டியது. அதைத்தான் நாங்கள் கண்டறிந்தோம். இந்த கண்டுபிடிப்பு, இந்த புரோட்டான் உடலில் குறைவதால் சில வயதாவதால் வரும் வியாதிகள் வருகின்றன என்பதைக் காட்டுகிறது ‘ என்று கூறினார்.

இன்னொரு மாயோ ஆராய்ச்சியாளரான கார்த்திக் ஜகந்நாதன் அவர்கள், இந்த BubR1 புரோட்டான் மிகவும் குறைவாக ஆகும்போது எலிகள் சந்ததி உற்பத்தி செய்யும் திறமையை இழந்துவிடுவதைக் கண்டறிந்தார். அதே போல, அவற்றின் germ செல்கள் இரண்டாகப் பிரியும்போது, அந்த செல்களின் குரோமசோம்கள் சரியாக வினியோகம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார். germ செல்களின் உள்ளே தவறான அளவு குரோமசோம்கள் இருப்பது மனிதர்களின் சந்ததி உற்பத்தி செய்யும் திறமையில் வயதாவது எனக் கருதப்படுகிறது. பிறப்பு குறைபாடுகள், டவுண் வியாதி, 35 வயதுக்கு மேலான பெண்கள் பெறும் குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்னைகளுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. வயது காரணமாக BubR1 புரோட்டான் எலிகளில் குறைவதானால் வரும் வியாதிகளும் இதே புரோட்டான் தான் மனிதர்களிலும் பிறப்புக்குறைபாடுகளுக்குக் காரணம் என்றும் நாம் கருதலாம் ‘ என்று டாக்டர் வான் ட்வெர்ஸென் கூறுகிறார்.

மாயோ கண் மருத்துவரான டாக்டர் டோக்ளஸ் காமெரோன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில், BubR1 புரோட்டான் மிகக்குறைவாக இருக்கும் நபர்களுக்கு வயது காரணமாக வரும் காட்டராக்ட் வருகிறது என்றும் கண்டறிந்துள்ளார்கள். 65 வயதுக்கு மேலானவர்களில் 20 -25 சதவீத மக்களுக்கு இந்த வியாதி வருகிறது என்றும் சுமார் 1 மில்லியன் அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த வயது காரணமாக வரும் காட்டராக்டை சரி செய்துகொள்ள டாக்டர்களை அணுகுகிறார்கள்.

டாக்டர் வான் ட்வேர்ஸன் அவர்களுடன் இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய குழுவினர்: டாரென் ஜே பேக்கர், கார்த்திக் பி ஜகந்நாதன், ஜே டாக்ளஸ் காமரோன், மைக்கல் ஏ தாம்ஸன், சுபாஷ் ஜ்உனேஜா, அலேனா கோபெக்கா, ராஜீவ் குமார் எம் டி, ராபர்ட் ஜெங்கின்ஸ், பியெட் டி க்ரோன், பார்ட்டிரிக் ரோஷ், இந்த ஆராய்ச்சி தேசிய ஆரோக்கிய நிறுவனத்தால் உதவி கொடுக்கப்பட்டது.

http://www.eurekalert.org/pub_releases/2004-07/mc-mcr070604.php

Series Navigation