மத்யமர்(சுஜாதா மன்னிப்பாராக….)

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

வசீகர் நாகராஜன்


காலை உற்சாக விழிப்பு
காலாற கடற்கரை உலா
அன்னபூர்ணா இரவு உணவு
அழகே கழியும் ஓர் ஞாயிறு

விடிந்திடும் காலை திங்கள்
விரட்டித்துரத்தும் ஆறு நாட்கள்
மீளமுடியா சாலை நெரிசல்
மீட்சியில்லா வாழ்க்கைப் பரிசல்

சன்னல் மூடிய அறை
சத்தம் வீசும் மின்விசிறி
அனல் கான்க்ரீட் கூரை
அதிலும் அதிசயத் தூக்கம்

நீரிலும் மூழ்காமல்
நீண்டும் வளராமல்
தாகத்தில் தவமிருக்கும்
தாமரை வாழ்க்கை

அரசியல் நிலை மாறிடும்
அரிசிவிலை கூடிடும்
எங்கள் தலையில் விடிந்திடும்
என்றாலும் உதயம் தாங்கிடும்

இப்பிறப்பில் இன்பமின்றி
இறந்தாலும் கவலையில்லை
திறந்திருக்கும் என்றென்றும்
திரிசங்கு சொர்க்கம் எமக்காக…

***
VNagarajan@us.imshealth.com

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)