மதச்சாயம் மாற்றத்திற்கு வழிவகுக்குமா ?

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

மு.பாலசுப்பிரமணியன்


அண்மையில் சிவகாசியில் நடைபெற்ற முழுஅடைப்பு சமூக அக்கறை உள்ளவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குழந்தைத் தொழிலாள˜ என்ற சிக்கலை முன்வைத்து இந்த அடைப்பு நடைபெற்றுள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை முன்நிறுத்தியும், பல தொண்டு நிறுவனங்களை கண்டித்தும் இது நடந்துள்ளது. இவற்றை எல்லாம்விட இதற்கு மதச் சாயம் பூசப்பட்டுள்ளதுதான் அதிர்ச்சியான செய்தி. இந்து முன்னணி அமைப்பாள˜ இராமகோபாலன் வெளிப்படையாக இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

உண்மையான சிக்கல் என்ன என்று நாம் பார்த்தோமானால் இதில் பல ஆழமான செய்திகள் வெளிப்படும். பொதுவாகவே, குழந்தைத் தொழிலாள˜ சிக்கல், சூழலியல் சிக்கல், மனித உரிமைச் சிக்கல் போன்றவற்றை தொண்டு நிறுவனங்களின் வேலைத் திட்டமாக சுருக்கிப் பார்க்கும் அவலம் நம்மிடம் உள்ளது. அதேசமயம் இது குறித்து கூடுதலாகக் குரல் எழுப்புகின்றவர்கள் தொண்டு நிறுவனத்தினரே என்பதும் உண்மைதான். ஆனால் தொண்டு நிறுவனத்தினர் கூறுகின்றார்கள் என்பதற்காக அது பொய்யானதாக ஆகிவிடுமா என்பது முதன் கேள்வி. பல தொண்டு நிறுவனங்கள் நிதிக்காகக் குரல் கொடுக்கின்றன என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அந்த சிக்கல் சமூகத்தில் நிலவுகின்றது என்பதும்தான். குழந்தைத் தொழிலாள˜ குறித்து குரல் எழுப்புபவர்கள் சிவகாசியை மட்டும் முன்னிறுத்துவதில்லை. உணவகத் தொழில் முதல் பீடித் தொழில்வரை அனைத்து வகையான குழந்தை உழைப்பையும் எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர்.

குழந்தைத் தொழிலாள˜ முறை குறித்து தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது பல செய்தித்தாள்கள், காட்சியூடகங்கள் போன்றவை எடுத்துக் கூறிவருகின்றன. சிவகாசியைப் பொறுத்தவரை குழந்தைகள் வேலைக்குச் செல்லும் அவலம் மிகவும் சிக்கல்மயப்பட்டது. அது ஒரு பண்பாட்டுச் சூழலாக வள˜ந்துள்ளது. இன்று பல பெரிய தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாள˜கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிக இயல்பாக சிவகாசியின் சுற்று வட்டாரப் பகுதி ஊர்களில் ஒப்பந்த அடிப்படையில் உரிமம் பெறாத கூரையின் கீழ் குழந்தைகள் பணியாற்றுவதைக் காணமுடியும். இது வெறும் பொருளியல் சிக்கல் மட்டுமன்று சமூக, பண்பாட்டுச் சிக்கலாகவும் உள்ளது. இதற்கான தீர்வு தொழிலதிபர்கள் கைகளில் மட்டும் இல்லை. அதேபோல் சட்டங்களை இயற்றி இதைத் தடை செய்துவிடவும் முடியாது. நமது கல்வியமைப்பில் இருந்தே இச்சிக்கல் விரிவடைந்து காணப்படுகிறது. இன்றைய வணிகமயமாகி வரும் கல்வியமைப்பு; படித்த பின்பு எந்த வேலையும் கிடைக்காது என்ற அவநம்பிக்கை; அதிகம் படித்துவிட்டால் இந்த உடல் உழைப்பைச் செய்ய பிள்ளைகள் மறுத்துவிடும் என்ற அச்சத்தில் உழலும் பெற்றோர்கள்; தொடர்ந்து பெரியவர்களுக்குக் குறைந்து வரும் வேலை வாய்ப்பு போன்றவை குழந்தைத் தொழிலாள˜ சந்தையை நாளும் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. அரசின் கொள்கைப் போக்கு மாறி அடிப்படை மாற்றம் வந்தால் இது முழுமையான வெற்றியை எட்டும். இப்படித்தான் பல நாடுகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

குழந்தைத் தொழிலாள˜ கொடுமையை உலகில் எங்கிருந்தாலும் அகற்ற வேண்டும் என்று குரல் பொடுத்து வருபவர் கைலாஷ் சத்தியார்த்தி என்பவர். இவர் பிறப்பால் பார்ப்பனர். அதேபோல் சுவாமி அக்னிவேஷ் என்பவர் இந்து நம்பிக்கையாள˜. ஆக இதை ஒரு மதச் சிக்கலாக மாற்ற முயல்வது மிகவும் ஆபத்தானது. இப்படிப்பட்ட நிகழ்வுகளைˆ தேடிப் பிடிப்பதில் சிலர் கவனமாக இருப்பது வேதனையானது. முன்பு இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலைச் சிக்கல் ஒன்றிலும், தோல் தொழிற்சாலை மாசுபாட்டுச் சிக்கலிலும் முகமதியர்களுக்கு எதிராக இந்துக்கள் என்று ஒரு கதை கட்டப்பட்டது. பெரிதும் முகமதியர்கள் தோல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்களும் இத்தொழிலில் உள்ளனர். ஆனால் சில தன்னல விரும்பிகள் இதை மதச் சாயம் பூச முனைந்தனர். ஆனால் அந்த மாசுபாட்டு எதிர்ப்பில் பல முகமதியர்களும் ஈடுபட்டதை எடுத்துக்காட்டிய பின்பு அந்த பரப்புரை கைவிடப்பட்டது. இன்றும் சூழலியல் பாதுகாப்பில் பல முன்னோடிகளாக முகமதியர் இருக்கின்றனர்.

அண்மையில் டெல்லியில் மாசுபாடு தொடர்பான தீர்ப்பு ஒன்றில் சில நாட்கள் வாகனங்கள் ஏதும் ஓடவில்லை. இது கடுமையான நெருக்கடியை உருவாக்கியது. அது தொடர்பாக பெரிதும் போராடியவர் அண்மையில் மறைந்த அனில் அகர்வால் என்ற சூழலியல் அறிஞர். இவர் ஒரு தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர். பீடித் தொழிலாள˜கள் பொது இடங்களில் புகைக்கத் தடைவந்தபோது எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இதுவும் உடல்நலம், மாசுபாடு தொடர்புடைய சிக்கலே. இவற்றை எல்லாம் பேசக்கூடாடு என்று தடை செய்வோமானால் நாளை எந்தச் சமூக அவலம் குறித்தும் பேச முடியாமல் போக நேரிடும். மாந்தர் குலம் வரலாற்று வள˜ச்சிப் போக்கில் பல முன்னேற்றமான கூறுகளை வலியுறுத்துகிறது. அதை ஏற்றுக் கொள்ளும்போதுதான் அடுத்த கட்டமாக நாம் முன்னேற முடியும். எட்டு மணி நேர வேலை என்பதே போராடிப் பெற்றதுதான்.

மேம்பட்ட மதிப்பீடுகளை முன்வைத்து வலியுறுத்துவதை யாரும் தடைசெய்ய முடியாது. முன்பு பிளே‚ என்ற கொள்ளை நோய் பரவியபோது அதற்குக் காரணமான எலிகளை ஒழிக்க முயற்சி எடுத்தபோது எலி என்பது விநாயகர் வாகனம் அதைக் கொல்லக் கூடாது என்ற ஒரு கருத்து முன்வைக்கப்ட்டது. அது அப்போது மிகப் பிற்போக்கானது என்று கடும் கேள்விக்குள்ளானது என்பது வரலாறு. இப்போது பட்டாசு தொடர்பான, குழந்தைத் தொழிலாள˜ தொடர்பான சூழலியல், சமூகக் சிக்கல்களுக்கு மதச் சாயம் பூசுவதும் அப்படியாகும். விநாயகர் ஊர்வலத்தின் போது பல உருவச் சிலைகள் எண்ணற்ற சாயம்பூசப்பட்டு தண்ணீர் ஆதாரங்களில் கரைக்கப்படுகிறது. அதைத் தவறு என்று பல அமைப்பினர் விள‚கி வந்தனர். அதையும் மதச் சாயம் பூசித் தடை செய்ய முயன்றனர் சிலர். அந்த அமைப்பில் பலர் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள். இதேபோல் கிறித்தவ மதப் பரப்புரையாள˜கள் சிலர் ஒலி எழுப்பி அருகிலுள்ள மக்களை துன்பப்படுத்துவதை மதக் கண்ணோட்டத்தோடு அணுகுவது நடக்கின்றது. இவை எல்லாம் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக் கூடியவை. உடனடி பயன் பெறுவதற்காக சிலர் கிளŠபிவிடும் காரியங்கள்.

தொழில் அதிபர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாசு கொளுத்துபவர்கள் இந்துக்கள் மட்டும் அல்லர். முகமதியர்களும், கிறித்தவர்களும்தான். எத்தளையோ இந்துமதம் சாராத நாடுகள் பட்டாசுகளை இறக்குமதி செய்கின்றன. சிவகாசிக்கு கணிசமான அயல்நாட்டு செலாவணி இதன் மூலம் கிடைக்கின்றது. மேலும் மத நம்பிக்கைக்கும் பட்டாசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஏனெனில் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகள் வருவதற்கு முன்பே தீபாவளிகளும், கிறிஸ்துமஸ்களும், பக்ரீத்களும் இருந்தன. பொருள் செய்வோருக்கு அனைவருமே வாடிக்கையாள˜தான்.

இன்று வள˜ந்துள்ள சிந்தனைப் போக்குகளை மனதில் கொண்டு நாமும் மக்களில் ஒருவர்தான் என்ற கண்ணோட்டத்தோடு சிக்கல்களை அணுகவேண்டும். எடுத்துக்காட்டாக திருப்பூரில் சாயப் பட்டறை மாசுபாடு குறித்த தீர்வுக்கு, திறந்த மனத்துடன் தொழில் அதிபர்கள் முன்வந்து, தொண்டு நிறுவனங்களோடும், தொழிற் சங்க உறுப்பினர்களோடும் அமர்ந்து பேசினர். இதேபோல் தொண்டு நிறுவனங்களும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் சிக்கல்களை அணுகாமல், தொழில் முனைவோர் முதலீடு செய்துள்ள பணம், எதிர்காலம் இவற்றை மனதில் கொண்டு அணுகவேண்டும். இவற்றை எல்லாம்விட அரசு தனது கொள்கைகளில் ஆழமான மாற்றங்களை கொண்டு வந்து சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் செயல்பாடுகளை‚ களைய முனைய வேண்டும். இப்படிப்பட்ட நெருக்கடிகளை சிலர் அறுவடை செய்வதைத் தடுக்கவும் வேண்டும்.

Series Navigation

புலவர் மு. பாலசுப்பிரமணியன். பி.லிட்., எம்.ஏ., பி.எட்.,

புலவர் மு. பாலசுப்பிரமணியன். பி.லிட்., எம்.ஏ., பி.எட்.,