ருத்ரா
துயரத்தின் சிகரம் ஏறி நின்று
இதோ ஒரு கவிதை…
இரவுகளின் துன்பரசம் பருகிக்கொண்டே
இதோ ஒரு கவிதை…
நட்சத்திரங்களை
மேய வந்து விட்ட இரவு..
இதோ நானும்
மென்று தின்னப்படுகிறேன்.
துன்பம் இறுகிய
அந்த ராட்சத தாடைகளின்
கடைவாய்ப்பற்களில்
அரை பட்டு
நானும் தின்னப்படுகிறேன்.
தூரத்தில்..
நீலக்கண்களாய்
வெள்ளிமீன்களாய்
அதோ அவள் சிமிட்டுகிறாள்.
அந்த மெல்லிய இமைகள்
எப்படி ரத்தம் சொட்டும்
கில்லட்டின் ஆனது ?
துண்டு துண்டாய் நான்..
காகிதமும் பேனாவுமாய்..
கவிதைச்சடலங்களாய்
வாரி இறைந்து கிடக்கும்
இந்த வார்த்தைக்குப்பைகளை
அள்ளிக்கொண்டு போங்கள்.
சுழற்றி சுழற்றி அடிக்கும் அது
இரவு நேரம்
எனும்பேய் விரித்த புயல் அல்ல.
அவள்
மெல்லிய கூந்தல் தான் அது.
மரணம் தூவும்
மெல்லருவி அது.
ஆனால் முரட்டுத்தனமாய்
என் முகத்தில் அறைந்தது.
என் காதல் எல்லாம் எங்கே போனது ?
விம்மித்தணியும் மார்பு போல்
அந்த வானம்
குமிழிவிட்டு குமிழிவிட்டு
கீதம் முழக்கியது.
எல்லைகள் எல்லாம்
தொலைந்து போன
இதே வானத்தின் கீழ் நின்று
அவளை
பூச்செண்டாய்
என் கைகளில் ஏந்தி நின்றேன்.
எத்தனை முத்தங்கள் இட்டேன்.
அத்தனையும்
அமுத தடங்களாய்…அதோ
அந்த நட்சத்திரங்கள்.
நான் காதலித்தேன் அவளை.
நான் காதலிக்கப்பட்டேன் அவளால்.
அவள் என்னைக் காதலித்தாள்.
அவள் என்னால் காதலிக்கப்பட்டாள்.
இந்த வாக்கியங்களின்
வைக்கோல் போரை
நாங்கள் சுற்றி சுற்றி வந்தோம்.
ஆனாலும்
புறப்பட்ட இடத்திலேயே
நிற்கிறோம்.
எங்கள் காதல் என்ன ஆயிற்று ?
எங்கோ அது காத தூரம்
தூக்கியெறியப்பட்டுவிட்டதே!
நிலை குத்தி நின்றதுபோல
அவளது
அகன்ற பெரிய விழிகள்
உறைந்து நின்ற
அண்டார்டிகா கடலாய்
என்மீது
ஒரு சமாதியை
போர்த்திவிட்டது.
அந்த கரியவிழிகளில்
இருள் பாளங்கள் மண்டிய சுரங்கம்.
வெட்டி வெட்டி எடுத்துக்கொண்டே
இறங்குகிறேன்.
சூரியப்பிழம்பின்
ரத்தம் கசியும் வரை
வெளிச்சத்தின்
வெள்ளி இழைகள்
உமிழப்படும் வரை
என் காதலைத் தேடி
தோண்டிக்கொண்டிருக்கிறேன்.
என் கவிதையைக் கேளுங்கள்.
கம்பரசம் நொதிக்கும்
கிண்ணம் அல்ல இது.
துன்பரசம் கொப்புளிக்கும்
என் செய்யுளுக்கு
கொஞ்சம் செவிசாயுங்கள்.
அவள் இல்லாமல்
என்னை நான்
உருவம் செய்து கொள்ளவா ?
அது எப்படி முடியும் ?
அவளை நான்
இழந்து போய் விட்டேனா ?
என் பிணத்தை நானே
ஒரு ‘பிரேஸில் ‘ மைதானத்தில்
‘கால் பந்தாட்டம் ‘ ஆடுகிறேனா ?
என்ன இது ?
வேதனை என்னை
வேதாளமாய்
பிய்த்துத் தின்கிறதே !
இரவின் இடியோசையில்
முரசின் தோல் போல் நடுங்குகிறேன்.
அவள் இல்லாத வெறுமையின்
ஓங்காரத்தில்
அதிர்ந்து ஒடுங்கி விட்டேன்.
பச்சைப்புல் விரித்த பாயில்
ஆயாசமாய்
என் கவிதைத்துளி ஒன்று
கண்மூடிக்கிடக்கின்றது.
அது
நெருப்பு கருவுயிர்த்த
பனித்துளியா ?
இல்லை
பனிச்சதையின் சிப்பிக்குள்
சுடர் அவிழ்க்கும்
உயிர் முத்தா ?
என் உடல் எனும் சுமையை
சற்று சார்த்தியிருந்தேன்
இந்த உயிர் மீது.
ஆனால் இந்த உயிரின்
சுமைதாங்கி அல்லவா
அவள் காதல்.
அதை
யார் இங்கே பிடுங்கி எறிந்தது ?
அவளே இல்லாத போது
யாருக்கு வேண்டும்
இந்த தங்க வானமும்
நட்சத்திர வைரங்களும் ?
இந்த கூழாங்கற்களை
காய்ச்சியா கூழ் குடிப்பது ?
எங்கே அவள் ?
எட்டாத தொலைவில்
அதோ அவள்.
யாரோ பாடுவது போல்
அந்த அசையும் உதடுகள்
உலைக்களத்தின்
துருத்தியாய்
ஊதி ஊதி என்னை
எரித்துக்கொண்டிருக்கிறது.
பார்வைத்தூண்டில்
வீசி வீசி தேடுகிறேன் அவளை.
என் இதயம் படர்ந்த
நூலாம்படையை எல்லாம்
துடைத்தெறிந்து விட்டு
அவளைத் தேடுகின்றேன்.
அன்றொரு இரவு
மின்னல் வெள்ளையடித்ததில்
மரங்கள் உயிர் உதிர்த்து
நரை வெளுத்த வானமாய்
துவண்டு போனபோது
நாங்களும் வேரற்று வீழ்கின்றோம்.
அதே இருவராய்
அதே இரவில்
வெறும் நிழலாய்
பரந்து கிடக்கின்றோம்.
அவளை நான் காதலித்தது
உண்மையிலும் உண்மை.
அவளை நான்
காதலித்தேனா இல்லையா ?
என்ற கேள்வியின்
திரிமுனையை பற்றவைத்தது யார் ?
தெரியவில்லை.
இதோ கொஞ்சநேரத்தில்
வெடித்து சிதறப்போகின்றேன்.
அவள் யார் ?
யார் அவள் காதலன் ?
என் முத்தங்கள்
அந்த ரோஜாவுக்கு
வேலி போடவில்லையா ?
நீண்ட குகைவழிப்பயணம் இது.
அந்தப்பக்கம்
தெரியப்போகிற முகத்துக்காக
இந்த பக்கம்
என் முகம்
ஏன் தொலைந்து போனது ?
காற்றுக்கரைசலில்
இந்த காதறுந்த ஊசி
காணாமல் மறைந்து போகும் முன்
காதல் நூல் தேடி அலைகிறது.
இந்த கந்தல்களை வைத்து தைத்த
ஒரு கனவுலகம் தேடி
கரைந்து போனது.
என் குரல்
இந்தப்பாறையிலும்
வீரிட்டு முளைக்கிறது.
அவள் செவிபுகுந்து
செழிப்பாக
பூவிரித்து
புலன்கள் தோறும்
தீ பாய்ச்ச
தினவெடுத்து திரிகின்றது.
‘நீ உண்மையிலேயே
அவளை காதலித்தாயா ? ‘
‘என்ன கேள்வி இது ?
என்ன அடையாளங்களை
நான் காட்டுவது ? ‘
அவள் குரலில்
எனது ஒலி.
அவள் உடற்பூவில்
என் மகரந்தங்கள்.
மைல் கற்கள் நடப்படாத
பாதை அது.
என்னை எங்கோ
கட்டியிழுத்த
அவள் கண்கள் அது.
இந்த பிரபஞ்சமே
ஒரு கம்பளம் விரித்த
அந்த மைவிழிக்குள்
மையம் இழந்த புயல் ஆகினேன்.
துன்பம் நேர்கையில்
யாழெடுத்துப் பாட
காதல் தேடினேன்.
காதலே…நீயோ
வாளெடுத்து என்னை
வதைக்க வந்தாய்.
என் ஆத்மாவைக்
கூறுபோட்டுவிடு
கவலையில்லை.
அவள் இல்லாத எனக்கு
ஆத்மாவும் இல்லை.
அண்டங்களும் இல்லை.
அவளைக் கைகளில் ஏந்தி
களிப்புற்று இருந்தேன்.
அப்போது
இந்த உலகங்கள் எல்லாம்
வெறும் தூசு எனக்கு.
சுறுக்கென்று குத்திய
அந்த காதலின் வலி
இன்பம் பரப்பிய
அந்த கணங்கள் போதும்.
மற்றவையெல்லாம்
எனக்கு மரத்துப்போகட்டும்.
நீண்ட வாழ்க்கையை
இழுத்துக்கொண்டே ஓடும்
ஒரு பந்தயம் இது.
கனமான தங்கப்பதக்கங்கள்
கழுத்திலும் காலிலும்
பூட்டிய சங்கிலிகள்.
அவள் கொடுத்த
இந்த காதல் வலியே
என் கடைசி வலி.
இதோ கீழே விழுந்து
துடிக்கின்ற…
காதல் எனும்
காக்காய் வலிப்பு
வந்த இவனுக்கு
சாவிக்கொத்துகள் வேண்டாம்.
கடைசி கடைசியாய்
இவன் கையில்
ஒரு பேனாவைத்தாருங்கள்.
நுரை கக்கும்
இவன் கவிதைக்குள்
துன்பம் எனும் இன்பங்கள்
பொங்கிப்பெருகுவதை
கண்டு களிப்பெய்துங்கள்.
====ருத்ரா.
(இது ஒரு காதல் கவிதையின் மொழிபெயர்ப்பு அல்ல.
இது ஒரு காதலின் ‘வலி ‘பெயர்ப்பு)
====
epsi_van@hotmail.com
- உரத்த சிந்தனைகள்- 6
- வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?
- நுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி
- தமிழின் மறுமலர்ச்சி – 4
- தமிழின் மறுமலர்ச்சி – 5
- அஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 7
- அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்
- மெய்மையின் மயக்கம்-24
- கவிபாரதிகள்
- பெண் தெய்வ வழிபாடுகளின் பின்னணியில்…:அமெரிக்க ஆய்வாளரின் தமிழ்-நூலுக்கு ஒரு அணிந்துரை
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 8
- ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்
- வெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்
- ப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை
- ஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை
- கடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு
- தமிழம் டாட் நெட்
- பி பி ஸி செய்திக் குறிப்பு- தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் பற்றிய ஆய்வு
- அவசர உதவி வேண்டுகோள்!
- கடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்
- கடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை
- கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!
- கடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்
- மனுஸ்மிருதியை நிலைநாட்ட பட்டப்பெயர்கள்….
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்
- அவளோட ராவுகள் -1
- நீண்ட இரவு தொடர்கிறது…
- ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்
- கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…
- நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்
- கங்கவரம்
- மனித அறிவியலின் பரிணாமம்
- பாசத்தைத்தேடி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44
- சும்மா இருடா
- ஆத்திரக் கும்மி
- நெஞ்சில் மின்னிய கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- உறவென்றால்…
- மழைப் பயிர்
- குடை பிடிக்கும் நிழல்
- நித்யா
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்
- அம்மாவின் சமையல்
- அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்
- பெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- என் அழகும் மாறும்
- காத்திருப்பு
- பேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )
- 21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)
- நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்
- ஆவிகள் புசிக்குமா ?!
- பொதுச்சிவில் சட்டத்துக்கு ஆதரவாக…
- வாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த