பெயர்வு

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

மணிமைந்தன்


கடைசி நேரத்தில் தான் மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். வீட்டுக்கும் புவனாவின் வீட்டுக்கும் உள்ள தூரம் அதிகமாக இருப்பது போலவே இருந்தது. சைக்கிளை அழுத்தி ஆஸ்பத்திரி ஏத்தத்தில் மிதிக்கையில் மூச்சு வாங்கியது.வெயிலுக்கு தார் ரோட் சூடு பொறுக்க முடியாமல் வளைந்து வளைந்து ஒடுகிறது. யாரிந்த ரோட்டுக்கு கறுப்பு வர்ணம் அடித்தது?பச்சை வர்ணம் அடித்திருந்தால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்திருக்கமே? என்ன இது ஏனிப்படி இன்று? வழமைக்கு மாறாகவே எல்லாம் மாறி இருப்பது போல பட்டது. இது வெறும் மனப் பிரமைதான் என்றாலும் ஏனோ மனம் அப்படி யோசிக்க வைப்பதையும் தவிர்க்க முடியாதவனாக இருந்தான்.சில வேளைகளில் இது தவறு என்று தெரிந்தும் அதையே திருப்பி திருப்;பி செய்வதைப்போல.

சமீப கால இந்த தடுமாற்றங்களுக்கும் குளப்பங்களுக்கும் இவன் பதிவுத்திருமணத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள்தான் காரணமா?. வழமையான சினிமாக் கலர் கனவுகளை சுமந்த கதாநாயகனாக ராஐ வீதியில் ஆடிப்பாடும் Nஐhடியாக, குதிரை வண்டியில் சவாரி செய்யும் நினைவுகளோடு இவன் ஊருக்கு வரவில்லை.இவனின் பழைய கால வசந்த கனவுகள் பொய்த்துப் போன மனநிலையில், ஒரு மாற்றீடாக சாதாரண கனவுகளோடு; இவை இனிமையான நிகழ்வுகளை மட்டுமே தரும் என்ற எதிர்பார்த்து வந்த வருகையாகவே இந்த வரவு இருந்தது. ஆதற்கு மாறாக ஏற்பட்ட சம்பவங்கள் இவனை மீண்டும் ஏமாற வைத்து இவற்றுக்கெல்லாம் தான் பொருத்தமில்லையோ என்று உணர வைத்து சற்று தன்னை நிலை தடுமாற வைத்தது என்பதையும் இவனால் மறுக்க முடியவில்லை.தடுமாற வைத்த சம்பவங்களில் பங்கு கொண்ட கதா பாத்திரங்களின் மனோபாவங்கள் “சீ” இவ்வளவுதானா என்று அவர்களை பற்றி எண்ண வைத்த விமர்சனங்கள்;;. நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பாக அவனை நோக்கி வீசி எய்யப்பட்ட விசக் கணைகள் காலச் சூழலில் சிக்கித் தவித்து சுழன்று தாக்கியபோது ஏற்பட்ட ரணங்களின் கொடூர வலிகள். வலிகளால் பட்ட வேதனைகள். குளம்பிய தடுமாற்றங்கள். குற்றம் செய்யாமலே குற்றவாளி என்று சுட்டிக்காட்டும் நிலைமை சாவை விட கொடியதுதான்.

இவனுக்கு அந்த நாள் ஞாபகத்தில் வந்தது. ஆவர்கள் வந்து என்ன சொல்லி இலுப்பார்கள் என்று அறியும் ஆவலில் தான் அம்மாவிடம் கேட்டான்.கொஞ்கம் அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொண்டதாக பின்பு நினைத்து கூச்சப்பபட்டான்.அம்மாவும் பாவம் என்ன செய்வாள்?

“ஏன்னம்மா வந்தவங்கள் என்ன சொன்னாங்க?”;

இவன் வெட்கத்தை விட்டு அம்மாவிடம் கேட்டான்

அம்மாவின் மௌனம்; இவனை தடுமாற வைத்தது.அம்மா இவனுக்கு பதில் சொல்வதைத் தவிர்க்க நினைத்தாள்.

“அண்ணன் இஞ்ச வா ஒருக்கா”

சின்னவள்தான் முந்திக் கொண்டு விடயத்தை உடைத்தாள்.

“சீதனப் பிரச்சினை. அக்கா இருக்கிறா.நீயும் போனா அவவுக்கு ஆரிருக்கா?”

“ஆதனால ?”

“காசு கொஞ்சம் கூட கேட்டுப்பாக்கத்தான் அவங்களை வர வேணாம் என்று

சொல்லி இருக்கு”

“அப்ப எப்ப வருவாங்க ?” அப்பாவித்தனத்துடன் இவன்

சின்னவள் பதில் சொல்ல முடியாமல் நழுவினாள்;.

அவன் திக்கித்து நின்றான்.

“காசுதான் உனக்குப் பிரச்சினை யென்றால் யோசியாத நான் தாறன்”

நிச்சயமான பாலா வெறியில் உளரவில்லை என்பது இவனுக்குத் தெரியும்
கர்ணணுக்கு தோள் கொடுத்த துரியோதனன் போல பாலா தெரிந்தான்.

இவன் சிரித்தான் ஒரு அசட்டுச் சிரிப்போடு.

“இனியும் இது தேவைதானா என்று யோசிக்கிறன்.”

“ஏன் அப்பிடிச் சொல்றா ?”

“நான் தனித்துப் போன மாதிரி பாலா.என்னை விட்டு எவ்வோரும் விலகி ஓடுகிறார்கள். என்னில் ஒரு வித பயம் அவங்களுக்கு..எல்லோருக்குமே முன் நின்று பொறுப்பெடுக்கப்பயம். சிலவேளைகளில் இந்த கல்யாணம்; பிழைத்தால் தங்கள் மேல் பழி வந்துவிடுமேர் என்ற பயம் தான் அது”

“யாரைச் சொல்கிறா ?”

“யாரை நான் சொல்ல வேண்டும் என்று நீ நினைக்கிறா?”

இவன் பதில் பாலாக்கு திருப்தியைத் தரவில்லை என்று இவனுக்கு
பட்டது..

பதிவுத் திருமணம். ஏல்லோரும் முன்பாக கூண்டில் குற்றவாளியாக நிற்கிறான் திருமணத்திற்கு வந்தவர்கள்; எல்லோரும் விரல்களை சுட்டிக்காட்டி நீ ஒரு குற்றவாளி என்று கத்துகிறார்கள். இவனுக்கு வியர்த்து கொட்டுகிறது.ஆளரவமில்லாத பாலைவனத்தில் தனியான இடத்தில் மாட்டிக்கொண்டு திரு திரு என்று முழிக்கிறான். புவனாவைப் பார்க்கிறான் பரிணாம மாற்றத்தின் பிரதிபலிப்பா அவள் முகம் ? அவள் முகத்தில் சலனமில்லை. உணர்வில்லை பழி வாங்கும் முகம் போல அவள் முகம.; சின்னவளின் கல்யாணத்தில் சந்தித்த அவளா இவள் ? அவளின் நண்பிகளோடு கதைத்த படி இருந்தபோது இருந்த அந்த சிரிப்பும் கலகலப்பும் எப்படி உடைந்து போயின?.இது என்ன ஒரு புது முகம்.கன்னங்கள் வற்றிப்போய்… ஆரம்பத்திலேயே இப்படியான குழப்பங்களுக்கு காரணமாண இவன் எதிர்காலத்தில் எப்படி என்னோடு இருக்கப்போகிறான் என்ற எச்சரிக்iகை உணர்வா? அல்லது பயமா ?

கல் ஒன்று சைக்கிளில் தடக்கியது.எதிரே வந்த பஸ் வேகமாக கோர்ன் அடித்தபடி இவனை விரைவாக கடந்து போன அதிர்வில் இவன் நிலை மீள, தான் அரசடி அம்மன் கோவில் தாண்டிப் போய்க் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.நிச்சயமாக பஸ்காரன் ஏசியிருப்பான்.

காலையில் அவன் புவனா வீட்டுக்குப் போன போது புவனா இதில் உறுதியாக இருந்தாள்.

“நீங்க வந்து வந்து போறதை விட இங்கே வந்து இருங்க.இன்னும் ஒரு மாதம் நீங்க வெளியில போய் விடுவீங்கப்பா .சட்டப்படி நாம இருவரும் புருஸன் பொஞ்சாதியாகிட்டம். சில விடயங்களை நாமதான் இப்ப தீர்மானிக்க வேண்டும்”

அவள் சார்பில் அவள் நியாயமாகவே தெரிந்தாள்.

சைக்கிளை சாமி அறைச்சுவரோடு சாத்தி விட்டு போனபோது வீட்டில் அம்மா குசினியில் இருந்தாள் அக்கா கிணற்றடியில் உடுப்பைக் கழுவியபடி இவன் வந்ததைக் கவனிக்கவில்லை. உடுப்பைக் கழுவுவதிலேயே மும்முரமாக இருந்தாள்.எது முக்கியம் என்று அவளுக்குத் தெரிந்திருக்கும்

“ஏன்ன மகன் கெதியா வந்திட்டா ? புள்ள இல்லையா”

“இருக்கா”

“அப்ப”

“உடுப்பெடுத்திட்டுப் போக வந்தன்”

அம்மா இவனை நிமிர்ந்து பார்த்தாள். இவன் அம்மாவின் பார்வையைத் வேண்டுமென்றே தவிர்த்தான்.

“எங்க போப்புறா”

“அங்க வந்து இருக்கட்டாம்”

அம்மா ஒன்றும் பேசவில்லை மௌனம் காத்தாள.; அம்மா சில வேளைகளில் இப்படித்தான்.சில பிரச்சினைகள் வரும்போத மௌனம் காப்பதே அவள் வழக்கமாகிவிட்டது.சில வேளைகளில் அம்மா மேல் கோபம் கூட வரும்.

இவன் ஒன்றும் பேசாமல் வெளியில் வந்தான். அம்மா சமையலிவேயே மும்முரமாக இருந்தாள.;சின்னவளும் பெரியவளும் பள்ளி விட்டு வந்திடுவார்கள்சமைக்கவேண்டும்.சாப்பாடும் முக்கியம்தான்.

அம்மாவை சிலவேளைகளில் புரிந்து கொள்வது கஸ்டம்தான்.சில விடயங்களில் நேரடியாகவே இறங்குவாள் சில விடயங்களில் மௌனமாக….

இப்படித்தான் இவன் அந்த நாட்களில் திலகாவோடு பழகுவதை அம்மாவிற்கு மூத்தண்ணன் சொல்லி வைத்திருந்தார்.

அம்மா ஒரு நாள் இவனிடம் கேட்டாள்.

“மகன் நீ எனக்கு ஒரு உண்மை சொல்ல வேணும்.உன்னைப்போல எத்தனை யோ பேரை நான் படிப்பிச்சிருக்கன்.;. உண்மையா அது?”

“உண்iமைதானம்மா”

அப்போதும் அம்மா இதே மௌனம் காத்தாள்

அப்போது இவன் சொன்னான்

“பாலாவோடு கொழும்புக்குப் போய் ஏதும் கொம்பனியில வேலை செய்யப் போறனம்மா.”

அம்மா அப்போதிருந்த அவள் மௌனத்தை உடைத்தாள்

“எனக்கும் அது சரியென்றே படுகிறது.உன்ன பிழையாக சொல்லல்ல இந்த வயதில் வாறதுதான். நீ இதப்பற்றி யோசியாத.அண்ணனும் எத்தன நாளைக்கு த்தான் நம்மள தாங்குவான் பாவம்.அப்பாவும் இப்படி. உன்னத்தான் நம்பி இருக்கன்”

‘போறது நல்லது என்றுதான் மகன் எனக்குப்படுகிறது”

அம்மாவின் குரலில் ஒரு தெளிவும் உறுதியும்

சில வேளைகளில் நாம் செய்யும் செயல்களின் பாதிப்பு செய்யும் போது தெரிவதில்லை அதைக் காலம் கடந்து யோசிக்கையில் அதன் தாக்கத்தையும் குரூரமும் செயல்களுக்குப் பொறுப்பான எம்மால் ஐPரணிக்க முடியாமல் போகிறது.இந்த வேதனையும் குற்ற உணர்வும் காலங்கடந்தாலும் அழியாத வடுக்களாய்.எம்மை நாமே சுயபரீட்சை செய்கையில்தான் புரிகிறது எல்லா மனிதனும் ஒரு வகையில் “ஹிப்போகிரட்டிக்தான்” ;

வடுக்களின் நினைவுகள். வலிகள் மனதில் மீண்டும் படர்கின்றன.

அம்மாவின் கத்தரிக்காய் குளம்பு வாசைனை கம கம த்தது.அம்மாவின் கத்தரிக்காய் குளம்பு விசேடமானது.சாப்பிட்டால் வாய்க்குள் உய்ந்து போகும் கத்தரிக்காயின் ருசி நினைத்தால் வாய் ஊறும்.அம்மா இவனை சாப்பிடச் சொல்லவில்லை.ஏனென்று தெரியவில்லை ஓ இன்று வியாழக்கிழமை. பின்னேரம் பஜனை கூட நடக்கும் “சங்கரா சதாசிவா…..” என்று அம்மா மெல்லிய குரலில் பாடுவாள்.மனதை வருடுவது போல இருக்கும்.அந்த பாட்டைக் கேட்கவே இவன் பஜனைகளில் கலந்து கொண்ட சந்தர்ப்பங்களும் அதிகம்.இவன் சின்னவனாய் இருக்கையில நித்திரை வர அம்மா இவன் தலையை தடவியபடி பாடுவாள்

“கண்ணே வண்ணப் பசுங்கிளியே’

மனதை தாலாட்டி வருடி இதமாக…..கண்களை மூடியபடி………

வெளியில் வந்தான்.

கொடுமிச்ச மரத்தில் இருந்து அணில் ஒன்று ஓடியது. இவனையறியாமல் இவனுக்குச் சிரிப்பு வந்தது. அம்மா இவனுக்கு வைத்த பெயர் அணில்.கிணற்றுக்குப் பக்கத்தில் வெள்ளக் கொழும்பான் மரத்தோடு சேர்ந்து வளர்ந்து இருந்த கொடுமிச்ச மரம் இவனது சரணாலயத்தில் ஒன்று.பள்ளி விட்டவுடன் இவன் மரத்தில் ஏறினால் கீழே விழும் கொடுமிச்சம் பழ கோதுகளைக் கொண்டுதான் இவன் மரத்தில் இருக்கிறான் என்பது அம்மாக்குத் தெரிய வரும்

சின்னவளும் பெரியவளும் கீழே இருந்து கொண்டு அண்ணேய் “எணக்கொண்டு” “எணக்கொண்டு” என்று கேட்கும்போது இவன் வேண்டுமென்றே ஸ்ரைலாக பாய்ந்து பாய்ந்து பழம் ஆயும்போது அம்மா கத்துவாள்

“மகன் கவனம்டா “

இவனின் வீட்டில் இருந்த பெரிய வெள்ளக் கொழும்பான் மாமரம் மாதிரி
ஓரு இடமும் இல்லை.சித்திரை வருஸத்திற்கு அப்பா பெரிய ஊஞ்சல்
போட்டுத்தருவார் பக்கத்து வீட்டு சதா, தச்சு, தவலெட்சுமி,ஞானம் இன்னும் பல பேர் வந்து ஆடிப் போவார்கள்.ஊஞ்சல உந்த தச்சுக்குத் தெரியாது.சேர்ட்டுப் போடாமத்தான் வருவான் எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும். மூக்கு பெரிசு. மூக்கன் என்றால் கோபம் பொத்துக் கொண்டு வரும் எல்லோரும் பகிடி பண்ணினால் கொண்ணி கொண்ணி ஏசுவான்.மற்றப்படி இரக்க சுபாவம் உள்ளவன்.

இவனுக்கும் தச்சுக்கும் எப்போதுமே போட்டிதான்

“அரிசி இரிக்கியோவ்”;

அரிசி கொண்டு வாற மரியம் கண்டு ஆச்சிக்கு கணீரென்ற குரல். உச்சஸ்தாயில் தொனிக்கும்.நாலு வீட்டுக்கு கேட்கும்.பக்கத்து ஊரிலிருந்து
வயலுக்குள்ளால 5மைல் நடந்து வருவாள்.வயது 60 இருக்கும்.மெல்லிய உடம்பு.;

“கொண்டாகோவ்;”

மரியம்கண்டு ஆச்சியின் குரல் கேட்டவுடன்; இடையில் நழுவும் காற்சட்டையை பிடித்தபடி இவன் ஓடுவான்.அந்த காற்சட்டையில் பின்புறம் அக்கா டாண் போட்டுத் தைத்திருப்பாள். தச்சியின் வீட்டுக்கு முன்பாக மரியம்கண்டு ஆச்சியை இவன் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

“எண்ட மகன் கெட்டிக்காரன்”

முள்ளுப்போல துருத்திக் கொண்டிருக்கும் இவன் தலை மயிரை அம்மா தடவி சொல்லும் போது உலக சம்பியன் பட்டத்தை வென்ற மாதிரி.ஆனால் இவன் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் மரியம்கண்டு ஆச்சி இவன் வீட்டுக்குத்தான் முதலில் வருவாள் என்பது இவனுக்கு வெகு நாட்கள் வரை தெரிந்திருக்கவில்லை.

அம்மாவும் மரியம் கண்டு ஆச்சியும் நல்ல பிரண்ஸ்.அவர்கள் ரெண்டு பேரும் கதைக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும். அம்மா அவவை “கா” போட்டுத்தான் அழைப்பா.மரியம்கண்டு ஆச்சி அம்மாவை நீ போ வா என்று அழைக்கும்போது இவனுக்கு கோவம் வந்தாலும் அம்மா கோவிக்காதது ஆச்சரியமாக இருக்கும்.அம்மா மரியம்கண்டு ஆச்சியின் கதை மாதிரியே இயல்பாக .அப்போது பேசுவாள்.

“தேத்தண்ணி குடிக்கிறியா கா”

“இருந்தா தாவன் கா”

மரியம் கண்டு ஆச்சியின் பக்கத்தில் போய் அவவின் மெல்லிய துருத்திப்போன கையினால் பாக்கையும் வெத்திலையையும் உள்ளங்கையில் வைத்து கசக்கும்போது சிவந்து வரும் வெற்றிலையை வாங்கி அம்மா போடும் போது இவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்.சுகாதாரம் பற்றி கண்டிப்பாக இருக்கும் அம்மா மரியம் கண்டு ஆச்சியின் விடயத்தில் பாராமுகமாக நடந்து கொள்வது ஏன்?

கங்காணியாரின் மகள் என்றால் சுகாதாரத்திற்கு கேட்கவா வேண்டும்.

இவனின் மூத்தப்பாவை கங்காணியார் என்றால்தான் ஊhருக்குத் தெரியும். அந்த நாட்களில் கங்காணியாக வேலை பார்க்கும் போது கொண்டு வந்த ஓட்டையான ஒரு பெரிய இரும்புச்சட்டி.ஆஸபத்திரியில் சோறு சமைக்கப் பயன்பட்டது. கிணற்றடியில் எப்போதும் இருக்கும். ஓட்டையை தாரினால் அடைத்து கிணற்று நீரை அதற்குள் ஊத்தி உள்ளே இருந்து குளிப்பது வழக்கம்.

அப்பாக்கு அன்றைக்கு நல்ல வெறி.

“இஞ்ச பார்”

என்றபடி அந்த இரும்புக் கிடாரத்தை தூக்கி தலையில் போட்டு சுற்றிக்காட்டினார். தான் சாண்டோ சங்கரதாசிடம் கற்ற வித்தையை நிரூபிக்க அப்பா நித்திரை கொள்ளும் போது அவரின புஐத்தைத் தொட்டு அவன் பிரமித்தது…..எல்லோருக்கும் அப்பாதானே ஒரு மானசீக கதாநாயகன்

அப்பா இவனையும் அண்ணணையும் அந்த நாட்களில் முதல் மழை பெய்யும் நாட்களில் கூட்டிக்கொண்டு குளத்திற்கு போவார்.குளத்திலிருந்து வெள்ளம் வயலுக்குப் போகும் “போக்”கில் அப்பா சால்வையால் மூடி வலை போல பிடிக்கச்சொல்லி மறுபக்கத்திலிருந்து தண்ணியை கலக்க கலக்க சால்வையில் நிரம்பி வழியும் கெழுத்தி மீன்கள் நிலா வெளிச்சத்;தில் வெள்ளி போல தக தகக்கும். அந்த நேரங்களில் அப்பா வாத்தியார் என்பதை விட ஒரு தேர்ந்த மீன் பிடிப்பவர் போல காட்சியளிப்பாh.;அதைக் கொண்டுவந்தால் அக்கா கறுத்தக் கொழும்பான் மாங்காய் போடடு வெள்ளக் கறி ஆக்கித் தருவாள்.சுப்பரா இருக்கும்.அப்பா குளத்து மீன் சாப்பிடமாட்டார்

இவனுக்குள் லேசாக புன்னகை ஒன்று தோன்றியது அப்பா வலையுடன் நிற்பதை கற்பனை செய்ய.

“அப்பா நீ ஒரு சகல கலா வல்லவன்தான். நீயும் கூட கால நீரோட்டத்தில் எப்படித்தான் அள்ளுண்டுதான் போனாயோ ?”

பெரியம்மா வீட்டில் ஆரையும் காணவில்லை.

பெரியம்மா வீட்டுக்கு இவன் போனால் பெரியம்மா இவனைக் கிட்டுவா.

“என்ன மகன் இண்டைக்கு கறி”

இவனுக்கு சுனா வராது. சொ என்றுதான் உச்சரிப்பான்

“சோறும் சொதக்காக் கறியும் சொதியும் ஆணமும்”

பெரியம்மா கொடுப்புக்குள் சிரிப்பாள்.

“இஞ்ச வாடா என்ர சொதக்கா பொடியா “ என்றபடி டின்னைத திறந்து; Nசுhகியை எடுத்துத் தருவா நல்ல மொறு மொறு என்று ருசியாக இருக்கும்.

பஞசுப் பொதியாய் மனதில் வந்து கவிகின்ற நினைவுகள் மனதுக்கு ஒத்தடம் தடவுவதைப் போல.முகவரி தந்த மண்ணும் வீடும்,சுற்றமும் எத்தனை மகத்தானது.அதன் நினைவுகளை மீட்டிப்பார்ப்பதில் ஏற்படுகின்ற சுகம்

சாமியறைக்குள் வந்து அலுமாரியைத் திறந்தான்.

“மகன் சாமிக்கு கால் நீட்டிப்படுக்கக்கூடாது.” அம்மா சொல்வாள்

அப்பாக்கு இதில் உடன்பாடில்லை.

“சாமி நம்மள சுத்தி இருக்கிரார் அப்ப காலை மடக்கிட்டா படுக்கிற”

“உங்களிட்ட என்னத்த கதைக்கிற”

அப்பா இவனுக்கும் அண்ணனுக்கும் இடையில் படுத்துக்கொள்வார்.அப்பா மேல் காலைப் போட்டுப்படுத்தால்தான் இவனுக்கு நித்திரை வரும.;அப்பா நேற்று இரவு விட்ட பாரதக்கதையையோ அல்லது இராமாயணத்தையோ தொடர்ந்து சொல்லிக் கொண்டு போவார்.அவர் சொல்ல “ம்” கொட்ட வேண்டும்.இவனும் அண்ணணும் இண்டைக்கு “நீ” நாளைக்கு “நான்” என்று பொறுப்பெடுத்துக்கொள்வார்கள்.”ம”;; என்ற சப்தம் வராட்டி அப்பா ஏசிப்போட்டு கதையை நிற்பாட்டி விடுவாh.இப்படித்தான் இராமாயணம், நளதமயந்தி .கோவலன் ;கண்ணகி போன்ற கதைகளைக் கேடடுத் தெரிந்தது இந்த சாமியறைக்குள் தான.;

ரவிவர்மா வரைந்த முருகன் அழகாக சாமியறையில் தெரிந்தார்.நாளைக் காலையில் புவனாவின் சாமியறையில் எந்த முருகன் இருப்பார்.போய்த்தான் பார்க்கவேண்டும. ;கலத்துக்குள் சோறு போடும் போது புவனாவின் முகத்தைத் தவிர எவறு எந்த முகத்தை இவன் பார்த்தான் ?ஏதோ ஒரு முருகன் கோவணத்தோடு இருந்ததாக ஞாபகம்?புவனாவிடம் சொல்லி சட்டை போட வைக்கவேண்டும் முருகனுக்கு..ஓ சாமிக் குத்தம் என்று கைகளினால் கன்னத்தில் போட்டுக் கொள்வாள.;எதுக்கும் முதல் வேலையாக பெரிதாக திருசீறு சாத்தி குங்குமப் பொட்டு வைக்கும் புவனாவின் அம்மன் வேடத்தை கொஞசமாவது குறைக்க ரை பண்ண வேண்டும்.

“நாம நினைக்கிறாப் போல வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பது என்பது லேசான காரியமில்ல தம்பி. இத்தனை வருஸமாக நானும் இவரும் குடும்பம் நடத்தி வாறம்.என்ன அவர் புரிந்ததோ இல்ல அவர நான் புரிந்ததாகவோ அர்த்தமில்லை.ஏதோ சில விடயத்தில் ஒத்துப்போறம்.இதுதான் வாழ்க்கை.நாம ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இதுதான் நிஜம்.ஏற்றுக் கொண்டதை விலக்க முடியாது. எமது கலாச்சாரம் அப்படி.இதை வெளியே சொல்ல முடியாம எல்லோரும்தான் தவித்துக் கொண்டிருக்கிறோம்.சில வேளைகளில் வகையில் எங்களின் சுயங்களை இழந்தபடி……ஒவ்வொருத்தரும் அந்த அந்த பாத்திரங்களை ஏற்கும்போதுதான் நிஜம் புலப்படும்.”

இருபது வருடமாக் குடும்பம் நடத்தி நான்கு பிள்ளைகளுக்குத் தாயான சுலோசனா ரீச்சர் ஒரு முறை இவனோடு பேசிக்கொண்டிருக்கும்போது சொன்ன அனுபவரீயான யதார்த்த விளக்கம். அவள் சொன்னதை மறந்திருப்பாள். ஆனால் இவன் மட்டும் அதை மறக்காமல் ஞாபகமாய்….

உடுப்புகளை அடுக்கிக் கொண்டிருக்கையில் அக்கா வந்தாள்.

“ஏன்ன தம்பி உடுப்பெடுத்திட்டுப் போக வந்ததாக அம்மா சொன்னா உண்மையா?

இவன் சரியெண்டு தலையாட்டினான்.

“புள்ள எப்படி இருக்காள்? நாளைக்கு வருவாயா?”

அடிக்கடி வந்து போவன் என்று அவள் சொல்வாள் என்று எதிர்பார்த்ததில் தோல்வி.ஏதோ கேட்க நினைக்கிறாள் போல… அவளுக்கும் கவலைதானே

“ஏன் கேட்கிறாய”;

“ஓண்டுமில்ல”

“இல்லக்கா சொல்லு”

“இல்ல கோவிக்காத வீட்டு மதில் குறையாக இருக்கு. பூச ஒரு பதினைந்தாயிரம் ரூபா மட்டும்தான் தான் தேவையாம் மேசன் சொன்னான். அந்த வேலையையும் முடிச்சா மதில் முடிந்திடும்.அதுதான்.

இவன் அதிர்ந்தான்.ரெஐpஸ்ரேசனுக்கு பாலாட்ட வேண்டின காச எப்படி கொடுப்பது. இன்னம் மூளையைக் குளப்பியபடி இருக்க அக்கா இப்படி….பொன்முட்டையிடும் வாத்தா இவன்?

“சரியக்கா ஆரிட்டையும் கேட்டுப்பாக்கன்.”

“மாரிக்கு முந்தி செய்தால் நல்லம் தம்பி.” சகோதர பாசம் அவள்குரலில். அவளுக்கு அவசரமாக இதைச் செய்ய வேண்டும்.பிறகு சந்தர்ப்பம் வருமா என்ற ஐயம் ஏற்படடிருக்கலாம்.நியாயம்தான்.

ஆனால் இவனின் இந்த நிலையை எண்ணிப்பார்க்காத மனநிலையில்……

ஏல்லோரும் ஏன் இப்படி ? அவன் உணர்வுகளையும் ஏக்கங்களையும், ஏன் தவிப்பையம் புரிந்து கொள்ள முடியாத ஜடங்களாகவா இருக்கிறார்கள்.பிறந்து தவழு;ந்து உருண்ட வீட்டை விட்டு விலகுவது என்பது….;

இவனின் மனநிலையை புரியாதவர்கள் போலவா தெரிந்தும் தெரியாத மாதிரியா அல்லது..பயமா ? அல்லது தப்பித்தலாஅக்கறையின்மையா ? விளங்கவில்லையே ?

இவனுக்கு ஓங்கி கத்த வேண்டும் போல இருந்தது.இவனை நினைத்து இவன் மேலேயே காரணமில்லாத ஆத்திரமும் வெறுப்பும்.செல்லாக் காசு நீ
பின்னாளில் இருந்து யாரோ எல்லாம் கத்துவதைப்போல..எப்படியோ ஓடித்தப்ப வேண்டும் போல…

“நீ உடுப்ப அடுக்கு தம்பி. நேசரியால தம்பி வந்திடுவான்.”அக்கா தம்பி என்றது சின்னவளின் மகனை.அக்கா விடை பகர்ந்தாள்

அக்கா தன் கோரிக்கையை ஒப்புவித்த திருப்தியுடன்;.இவன் போவதையோ அல்லது இவன் பிரிவோ அவளிடம் எந்த ஒரு இரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை போல சாதாரணமாக நகர்ந்தாள். தன் கோரிக்கை எப்படியும் நிறைவேற்றப்படும் என்பது அவள் நம்பிக்கை. வழமை போல உடன் பிறப்புகள் குறித்து அவளுக்கு அசையாத நம்பிக்கை.

முப்பத்தியேழு வயது வரை பிறந்து வளர்ந்து உருண்ட இந்த வீட்டையும் இதன் அழகான சூழலையும் வீட்டு போகப் போகிறேன் என்று தெரிந்தும் அம்மா ஏன் மௌனமானாள்.மௌனம் சம்மதத்துக்குத்தானே அறிகுறி.ஏல்லோருக்கும் நான் வேண்டாதவனாக ஆகிவிட்டேனா?

என் விலகல் அதன் மன உளைச்சல் ?

அம்மாவிற்கு நான் போறது விருப்பமா? இல்லையா ?

ஏன் என்னைப் புரிய மறுக்கிறார்கள்.மனம் கனத்தது.ஒன்றை ஏற்பது என்றால் இன்னொன்றை இழக்கத்தானே வேண்டும்.எனினும் இழப்புகளின்; தாக்கங்கள் ஏற்படுத்தும் வலிகள் … அனுபவிக்கும் போதுதான் அதன் வேகமும் கொடூரமும் புரிகிறது.

இந்த பிரிவு ஒரு நிரந்தரமான ஒன்றுதான் .

காலையில் எழும்பும்போது இனி சாமியறை ஜன்னலினூடாக மாமரத்திலிருந்து காகம் கரைவதை பார்க்க முடியாது.எழும்பி வந்து கைளில் சுளுக்கு ஏற்படும் மாதிரி கல் வீசி துரத்த முடியாது.அம்மாவின் னைலெக்ஸ் சாரியில் முகம் புதைத்து படுக்க முடியாது.ஒரு வேளை மாற்று நடவடிக்கையை புவனா மூலம்தான் வேறொரு சாரி தேட வேண்டும்.பள்ளிக்கு போயிற்று வாறன் மகன் னைலெக்ஸ் சாரியில முகத்தை மூடியபடி இருக்கும் இவனிடம் அம்மா சொல்ல மாட்டாள்.காலை எழும்பி வாசலில் இவன் நாட்டு வைத்திருக்கும் செவ்வரத்தம் மலர்களை மலர்களை எண்ண முடியாது.அவைகள் எக் கேடு கெட்டாவது போகட்டும்.
வாடித் தொலையட்டும்

வினோ இருந்திருந்தால் அவளின் கணீரென்ற குரலில் நக்கலாக பாடியிருப்பாள்.காக்காவின் எச்சத்தை ரொபி பேப்பரில் சுத்திக் கொடுத்து அவள் சாப்பிட்டு என்னடா கசக்குது என்று கேட்க இவன் உண்மையை சொல்ல…அவள் அதை துப்பிய சமபவத்திற்கு பழி வாங்குவதைப்போல

“தேவ மைந்தன் போகிறான்.ஜீவ நாடகம் முடிந்ததென்று”என்று பாடியிருப்பாள்

இன்னொரு நாடக பாத்திரத்தை ஏற்க இவன் புறப்பட்டபடி

உடுப்பு பேக்கை சைக்கிளில் கட்டி சைக்கிளை உருட்டியபடி வெளியே வந்தான் . வெயிலும் வழமையை விட கூட சுடத்தான் செய்தது…

“அம்மா நான் போயிற்று வாறன்”

“சரி மகன்”

அம்மா வெளியில் வராமல் பதில் மட்டும் வந்தது.வெளியில் வந்தால் கறி அவிஞசு விடலாம் என்று நினைக்கிறாளா?. அக்காவைக் காணவில்லை. வேறு கோரிக்கைகள் தற்போது இல்லையா அல்லது தன்னை வழியனுப்பி வைப்பது முக்கியமான விடயமாகப் படவில்லை போல.தம்பி நேசரியிலிருந்து வருவான்.

சைக்கிளை உருட்டியபடி ஓழுங்கையில் இறங்கினான்;

“மாமா” ஓரு பிஞ்சுக் குரல்

செல்வன் இவன் கையைப்பிடித்தபடி நின்றிருந்தான்.அவன் முகம் வாடிப்போய்…

“என்ன மாமா போப்புறீங்களா? இனி வரமாட்டீங்களா”

செல்வனின் குரலில் தாங்க முடியாத சோகம் இழையோடியிருந்தது..

“இல்ல மகன் வருவன்டா.இனியென்ன விருந்தாளியாகத்தானே மாமா இங்கு வரவேணும் “ மன ஆதங்கம் இவனையறியாமலே வெளிப்பட்டது.அந்த பிஞ்சு மனதிற்கு புரிய வாய்ப்பில்லை.

அவன் கன்னத்தில் கொஞ்சி நிமிர்கையில் இவன் கண்ணீர் வழியை மங்கலாக்க சைக்கிளில் ஏறினான்

சந்தியில் சைக்கிளை நிறுத்தி வாஞ்சையுடன் திரும்பி ஒரு தரம் வீட்டு கேற்றைப் பார்க்கையில்……

கலங்கிய கண்களுடனும் ஏக்கப் பார்வையுடன்; கேற்றடியில் அம்மா

மணிமைந்தன்
16ஃ11ஃ10 யவ 3.30 P

Series Navigation

மணிமைந்தன்

மணிமைந்தன்