பெண் பனி

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


(புனைவு.)

“நாடா கொன்றோ
காடா கொன்றோ
அவலா கொன்றோ
மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர்-ஆடவர்
அவ்வழி நல்லை
வாழிய நலனே.”

அகதிக் காண்டம்:

எங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ அங்கேதாம் “எங்களது நாடு” இருக்கின்றதென்று ஜீல்ஸ் நொடாஸ்க்கி கூறிக்கொண்டான்.அவன் புறநானூறை நிச்சியம் படித்திருக்கமாட்டான்.ஆனால் நான் அக நானூறில் புரண்டு அமுங்கிப் போவதாகக் காலம் பின்னிச் செல்கிறது.பாரீஸ் கம்ய+ன் போராளிக்கும் ஈழவிடுதலைப் போராளிக்கும் எதோவொரு விதத்தில் தொடர்பாடத்தக்க ஒரு பொறி கிடைத்தால் அது பெரும்பேறான வாழ்வமைதிப் பேரவா எனக்கு.

இடப்பட்ட பெயர்:இராஜன் கந்தசாமி.

பிறப்பு:1960

“யார் அப்பாவென்ற உறுதிப்பாடு-ஒழுங்கான உறுதிப்பாடு உனக்குத் தெரியாது.என்மூலமாவது சில தகவல்களை நீ பெற்றுவிடுதல் உன் தவறான பிறப்புக்கு என் உத்தியோடுகூடிய தெரியப்படுத்தல்”.-அத்தான்

கொஞ்சக் காலத்துக்கு முந்திய பொழுதொன்றில் நான் தெருவோரப் பொந்துக்குள் காலத்தைக் கழித்தபோது,யாருமே உறவுகொண்டாட-முறைகள் சொல்ல முனைந்ததாக எனக்கெட்டியவரை ஞாபகமில்லை.இப்போதுள்ள நிலைமையில் கடைந்தேற்றச் செயல்கள் வரம்பின்றி என் தலையில் கொட்டப்படும்போது நான் அந்த எல்லையிலிருந்து எங்கோவொரு தொலைவில்-ஏதோவொரு தொடைச்சதையில் உறவைப் பலப்படுத்தியபடி.

இராஜன் கந்தசாமி என்ற இயற்பெயரிலும் ராகவன் என்ற மாணவர் பேரவைப் பெயரிலும் தோழர் சன்னதிக்குச் சவாரிசொல்லிக் கொடுத்தவன் நான்.என்னுடைய பராமரிப்பில் ஒரு பகுதியிருந்தபோது நானே நடுத்தெருவில் சில தலைகளை உருட்டியவன்.சம்பேதுருவார் கோவிலிலும் அந்தக்கூடுதூக்கும் சம்பவத்திலும் ஞானப்பிரகாசரின் தோட்டாவுக்கு டாட்டா காட்டியவனின் தோளில் ஏறி நிற்க ஆசைப்பட்ட என் அக்காளின் அருமைப் புருஷனுக்கு என் ஆதாரா சுருதி அறியக்காலமுமில்லை,நேரமுமில்லை.கோவில் திருவிழாவில் யாரோ பற்றியெறிந்த சிகரட்டை ஊதியிழுத்த இராஜனாகவே அவரது மதிப்பீடு.ஓரிரவில் மடைதிறக்கும் நீரோட்டமாக நானும் சமைந்தபோது எங்கோவொரு தெருமுனையில் ஊர் சுற்றும் பொடிசுவென்ற என் வீட்டார் மதிப்போடு நான் கோலாச்சிய வரலாறுதாம் கதை சொல்வதற்கான தளமாகும்.

கருக்கட்டிய வரலாறு:

போன ஜென்மத்தில் முக்காலத்தின் முதுமையானவொரு இடைவேளையில் சில நல்ல காற்றுக் கருப்புகளில் வேள்வி செய்யப்பட்ட பொழுதொன்றில் சூரியனையிழந்துபோன புவிப்பரப்பில் பினாட்டுக்கூடையை இழைத்துக்கொண்டிருந்தவளின் தொடைக்களுக்கு நடவே கூரிய ஆயுதம் செங்குத்தாகப் பாய்ந்தபோது அஞ்சல் செய்யப்பட்ட நீர்த்துளியின் பிணைவுடன் கொண்ட பங்கீட்டுப் பிணைவு,உருப்பெற்றதும்-வெளிப்பட்டதும் காலத்தில் வாழும் ஒரு நிலையென அன்று எதிர்வு கூறிய பாதிரியார் சிங்கராஜருக்கே வெளிச்சம்.நாரந்தனையைச் சுற்றிக் கோழிகளை வளர்த்துக்கொண்ட ஒரு கோமான் பாதிரியாகி,பிசப்பான கைங்காரியம் லேசுப்பட்டதல்ல.சின்ன வயதில ஆத்தையின் சேலைத் தலைப்பில் தொங்கியபடி அவரின்ர பிரசங்கத்தால் தமிழில் ஒரு படி நிறைகூடிய மண்டைக்கனத்தை எனக்குள் திணித்த என் தாய்க்கும் வித்தியாசம், வெள்ளை அங்கியில் மட்டுமென்றே நான் கருதுவதும் ஒரு வம்பு நிலைதாம்.

நேற்றைய அல்லது அதற்குமுன்னைய இதையும் மீறிய”எப்பவோ”என்ற நிலைமைக்குள் அறுபட்டுப்போனவொரு அநாதையுணர்வுக்குள் நாவடிய நனைந்து, நுழைவதென்பது ஒரு யுகத்தின் பல மில்லியன் பிளவுக்குள் புகுவது போன்ற சங்கடமான சமாச்சாரம்.ஆனால் என்னைச் சுற்றியவொரு மிதப்பான உறவுக் குழுமத்துக்கு இஃது அவல் தின்னக் கூலியாவென்ற கதைதாம்.அம்மாவுக்குத் தீச்சட்டி தலையில் வைத்தபோது, எனது அப்பாவினது பெயருக்கும்,அடுத்வொரு பெயருக்கும் இடைப்பட்ட வெளிகளுக்குள் என் சுயம் கருக்கொண்டிருக்க நான் வெளிக் கிளம்பியது காலத்தின் கோலமானதாகவே பட்டது.

அப்பனுக்கு ஆடடிச்சுக் குத்தரிசியில் சோறுகாச்சி,மேற்சோறை அள்ளிப் போட்டவளை அம்மணமாய்ப் பார்த்ததாய் அத்தார் அதட்டியபோது,அடங்கிப்போவது நான் என்பதாக அவன் உணராதிருப்பினும்,நோக்கத்திலொரு நீண்ட கனவிருந்தது.எனது கூட்டைப் பிய்த்தெறிவதும்,பேருக்கு முன்னாள் அவலத்தைக்காவுவது என்பதாகவும் அவன் போட்ட முடிச்சுகளை அவிழ்த்துப் பார்ப்பதில் அம்மாவைக் கருவிலிருந்தே கருவறுப்பதாகப் பட்டது!

அகதிக் காண்டம் தொடர்வது…

தேசத்தின் குறிப்பை எழுதுவதில் பலரின்று பிரபலமானார்கள்.பாதியோ மீதியோ, படைப்பாக்குவதில் “பன்னைக்காரன் பொண்டில் பணியக்கிடந்து செத்தாள்”என்றமாதிரி, செவிட்டு இராஜனுக்குமொரு சிங்காரக் கனவு குடைந்தபோது,கை கொடுத்த காலம்தாம் கடைதெடுத்த வம்புத் தனங்களாகிக் கிடந்தது.முற்றிலுமொரு மொன்னைத்தனமான முயற்சியில் கால் வைப்பது “தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம்”என்றடிக்கடிக் குறித்துரைத்த சபாரெட்னம் வாத்தியை நான் கிழங்கர் சபாரெத்தினமென்று கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலைக்குள் வைத்துத் திட்டியதும்,அவரென்ர “இயக்க ஸ்தானத்தில்” கண்டும் காணாததாய் இருந்தபோது நடுத்தெருவில் தலை தெறிக்க நான் “உசக்கப் போய்” ஓவராய் கண்டவர் நிண்டவரெல்லாரையும் கடிச்சுக் குதறியவொரு பொழுதில் “கால்முறியுமொரு காலத்தை” அருளாநந்தசிவம் மாஸ்டரின் கடைப்பொடி”இது எங்கட இயக்கத்தால் கட்டாயம் நடக்கும் மச்சான்.கெதியாய் மாறு”எண்டபோது சன்னதிக்கு ஆப்பு வைத்தால் எனக்கென்ன!தலை தப்பினது தம்பிரான் புண்ணியமென சித்தப்பாவின் முகத்துக்கு முன்னால் நீட்டிய கரம் “பலதைப்பார்த்த அநுபவத்தை” அவருக்குக் கற்றுக் கொடுத்தபோது நானும் ஜேர்மனியை வந்தடைந்தபோது, எனக்கு அவமானமாக இருந்தது,”தோழமைக்கு இதுவா இலக்கணமென்பது”எப்படியோ சன்னதியைக் குத்திய கத்தி குடலை வெளியில் இழுத்தெறிந்த போது, நாரந்தனை மொட்டை வேளாளரின் மகிழ்ச்சியாய் இருந்ததும்- எனக்கு உயிராபத்திலிருந்து விடுதலைக்கு வித்திட்டதாகப்பட்டது.

தொடைகளுக்கு நடுவில் கோவணம் கட்ட மறுத்தபோது ஜேர்மனியின் “அழகு” நடுச் சாமத்திலும் அந்தமாதிரியாய் இருந்திருந்து அநுபவமாகியது.அப்போதெல்லாம் அக்கம் பக்கதைப் பார்த்து, அப்பனின்ர தங்கச்சி மோளை”தந்தனத் தந்தனத் தளம் வரும் சந்தன…”எண்ட பாட்டோடு பிழிந்தெடுத்த சில பொழுதுகளின் அவஸ்த்தை வந்தே தொலைந்தது.ஆப்பு வைத்த மாதிரி “அகதி”நாமம் சூடிக் கொண்ட பொழுதுகளுக்குள் என்னென்ன ஆறுதலை மாற்றாக்க முடியுமோ அதையெல்லாம் தேடியபோது,இடையில் வந்தவொரு பீடையைக் இன்றுவரை மறப்பதற்கில்லை.

வைத்தியனிடம் போய் “எய்ட்ஸ்”பரிசோதனையில் “நெக்கடீவ்”என்ற அத்தாட்சிப் படிப்பில் நிம்மதி வந்தாலும்,சில நேரத்தில் மனதில் நிம்மதி குலைகிற பொழுதுகளாகவும் சில “குறிப்புகள்”உடலிலும் உள்ளத்திலும் தோன்றி மறையும்போதுதாம் அத்தானைப் பரிகாசிப்பது வெறும் தேவையில்லாதவொரு சமாச்சாரம்.கிராமத்தின் எல்லைகள் பற்பல மறைப்புகளில் கிழிபட்டே கிடக்கிறதென்பதையும்,அதன் மறைப்புக்குள் வேறொரு உலகம் முருகன் கோவில் இரவு உடுக்கை அடியில் அமிழ்ந்து போனதையும் நான் பல பொழுதுகளில் அறிந்திருந்தேன்.இந்தச் சூழலில் சாமி ஆடுபவனின் தொடைகளின் நடுவில் ஆடிய பாம்பு எத்தனை குமரிகளுக்குப் பேய் ஓட்டினதை சீதணத்தில் உரைத்துப் பார்த்தையும் நினைத்தபோதுதாம் என் பிணக்கைத் தீர்க்காத மனதின் “துரத்தல்களை”சிக்மன் ப்பொரைட்டின் ஒளியில் கழுவிவிடுவதில் நான் கஞ்சல்தனம் காட்டவில்லை!

கருச்சுமந்தவளின் கனவு.

அன்று,”தம்பி பசிக்குக் காரணம் கேட்காமல் காசை அனுப்பிவை”எண்டவளை “பெத்தகையோடு பேதியைக்கண்டபோதும் பெருஞ் சுமையாய் எண்ணாத தாயென்று”நான் உணர்ந்தவொரு பொழுது அரிதாகவே பட்டது!காசென்ற குரலிலும்,எழுத்திலும் கடுப்பெடுத்து உடைபடும் என் “புடைப்புகள்”கழண்டலையும் கோவணத்தில் சுழன்றுகொண்டபோது,ஆத்தையின் அடுப்பில் ப+னைக்குச் சுகமாய் தூக்கம் வந்தது.

இப்போதெல்லாம் காடாத்திக் கருமாரி செய்த அநுபவத்தோடு அம்மாவுக்கு உணர்வு மரத்துவிட்டிருக்கு!”ஆத்தைக்கு ஒரு பேத்தை” போட்டியாகி “எங்களை நடுத்தெருவில் நிப்பாட்டிப்போட்டுப் போமன்”என்ற ஓலத்தை நான் காதுகொடுத்துக் கேட்டதால் நடுரோட்டில் மருந்தோடு அலைய, ஒருவுயிர் அவாவுற்றழிந்தே போனது.ஒரே கருப்பையில் வௌ;வேறு பொழுதுகளில் கிடந்த கருவ+லம் குலைந்த பொழுதுகளை அம்மா நொந்தெழுதியும்,அம்மாவின் கனவுகளைக் கரடியின்ர சொறியாகவே கடுப்பாக்கிக் கடிதத்தொடர்பே ஆகாதென்பதாகக் காரணம் கண்டு,”கனவோடு காலத்தைக் காண்”அம்மாவுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்ததாக நானும் எண்ணுவதில் என்ன சூத்திரமிருக்கு என்ற ஆதங்கம் வந்து துலைந்தபோதெல்லாம் நான் அப்பனுக்கேற்ற பிள்ளையாக இருக்கிறேன்.

அப்பச் சும்மாவா?

“எங்களுக்கு மூன்று நேரம் உண்ணப் போடத் தன்னைத் தறித்தெறிந்தவனை” அம்மா “ஏச்சுப் போட்டாள்”என்றொரு அடிமன ஊழ்,அகத்திலிருப்பதை மெல்லப் புரிவதில் சிக்கல் வருவதுமாதிரியானவொரு எண்ணத்தை இதுவரை தந்திராதபோது “அம்மாவுக்கு வைத்தேன் வேட்டு” என்று மனம் கத்திக் கொண்டாலும்”மகனே நானுனைக் காவி,நாலுகட்டை தொலைவிலுள்ள வைத்திய சாலைக்கு நாயாய் அலைந்தவள்”என்றொரு குறிப்பை அம்மா எழுதாதவரை அவள் மேன்மையானவொரு ஜீவன் என்பதை எந்தத் தரங்கெட்ட அத்தான்களும் அக்காமாரின்ர கத கதப்புக்காக “அம்மாக்களை அற்ரேக் பண்ணவதும்” அதையே நேரம் பார்த்து வீரம் பேசுவதுமாக கோவணம் கட்டி நின்றாலும்… நான் கண்ட கதைதாம்!

ஏழு பிள்ளைகள் நல்லதங்காள் கதையில எங்களைக் கட்டிப்போட்டவொரு அம்மா, இப்போதெல்லாம் எந்தக் குறிப்புகளையும் அம்மா என் மனதில் விட்டுவிடுவதில்லை.

“இந்தியாவை அடிச்சுத்தான் இலங்கையைப் பிடிக்க முடியுமென்று”கிராமத்தில் அடிக்கடி “பெரிசுகள்” பேசிக்கொள்வார்கள்.அப்போததெல்லாம் நான் “குஞ்சாமணி பிடித்துப் பெய்த்தெரியாத”(பெரிசுகளின் பார்வையில்)பால்குடி. முளைத்து முன்றிலையெறியாதுபோனாலும் அந்த “இந்தியாவை அடிச்சு… “என்றதின் அர்த்தத்தை இவர்கள் ஏன் கதைக்கிறர்கள் என்று,எனக்குள் ஒரே ஏக்கமிருந்தது.

எங்கட ஊரிலொரு பெரும் பணக்காரியை ஸ்ரீமா என்றொரு “சுட்டல்” பெயரோடு ஊரார் மரியாதை வைத்தழைப்பதுண்டு.அவாவும் ஸ்ரீமா மாதிரியே நல்ல தோற்றமும்,பொன்னிறமும்கூடிய-“தன்னழகையே தான் இரசிக்கும்”சிங்காரி.அவர் கணவர் பாதியில் போய்சேரும்போது வருஷம்1970.அப்போதைய அவர்களது சொத்துமதிப்பு இரண்டு கோடியைத் தொட்டதென்பது என் அத்தாரின் வாயிலிருந்து நான்கேட்டுத் தெரிந்தவுண்மை.கொழும்பில் வியாபார நிறுவனக் கட்டடம் சொந்தமாகவும் அவர்களுக்கிருந்தது.லொறியும்,முப்பத்தியாறு ஸ்ரீயும்கொண்ட இலக்கத்தில் புத்தம் புதிய ரக்ரறும் அவர்களின் பெயரில் ஓடியது.”நான் சுண்டுவிரலை அசைச்சால் இப்பவும் பையன்கள் என்ர பின்னால தவழுவான்கள்”என்பார் ஸ்ரீமா.அந்தளவுக்கு அவர் அழகாக இருந்தபோதுதாம் ஸ்ரீமாவின் மோளை லொறிரைவர் ஒரு அதிகாலையில் லொறியோடு கூட்டிக் கொண்டோடியதாகத் தகவல்.அப்போதிருந்து இந்த”இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்”பெரும் பிரபல்யமாகப் பேசப்பட்டது.இது நடந்த வருஷம் 1974.அன்றிலிருந்து கிராமத்தில் பலமுறைகள் இந்த”இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்கள்”நடந்தேறின.எனது வீட்டிலொரு இந்தியாவை அடித்தே இலங்கையைப் பிடித்தாகப் பலர் பறையக்கேட்டிருக்கிறேன்.அந்தநேரத்தில் எனக்கு இந்தச் சமாச்சாரத்தில் அவ்வளவு நாட்டமிருக்கவில்லை.பின்னாளில்தாம் அதுள் பொதிந்திருந்த அர்த்தம் பிடிபட்டது!அந்த நாள்முதல் நான் பல இந்தியாவைத் தேடியலைந்தபோது எனக்கு எந்த இந்தியாவும் வசப்படவில்லை.என்னவொரு பிறப்பு என்ற ஆதங்கம் தலையைக்குடைந்தபோது அப்பரின் தங்கை மகளே “பழம் நழுவிப் பாலில் விழுந்த” கதையாய் என் பக்கம் விழுந்தாள்.பாடத்துக்குக் கட்டுரை எழுதித் தரும்படி வந்தவளைப் பிழிந்தெடுக்கும் காலமொன்றில் நான் பெரியவனானபோது வருஷம் 1977.இந்தக்காலத்தில்தாம்”குடியரசு கொடிய அரசு”எண்ட சுலோகங்களை நானும் சிலரும் பாடசாலைச் சுவர்களில் தாரினால் எழுதித்திருந்தோம்.அப்போதெல்லாம் திருவாளர் க.பொ:இரத்தினம் என் ஆசான்!அவரது தமிழின் வீச்சிலும் அமிழ்ந்தபோன நான் “மதிமுக இராசாவே மதியிழந்து போகாதே”என்ற வண்ணையாரின் வீர வசனத்தைப் பற்றிப் பெருமிதம் கண்டு க.பொ.விடம் விளக்கம் கேட்டபோது”வாடா டேய் வந்து இந்த மட்டையைப் பிடி”என்று பனைமட்டையைக் கையிற் தந்தபோது அவரது வீட்டுவேலி ஒருநாளில் பல அடி முன்னேறியதுதாம் மிச்சம்.அதற்குப் பின்பு அவரைக்காணும்போதெல்லாம் சயிக்கள் ஐம்பது மையில் வேகத்தில் கடந்துவிடும்.

“சித்திரைக்குத் தம்பி வருஷம் வருமடி,அம்மாவுக்குப் புதுச்சீலையும் கழுத்துக்குச் சங்கிலியும்,கைக்குக் காப்பும் வேண்டித் தாடி!”என்ற அம்மாவின் கனவுக்கு நான் போட்டேன் ஆப்பு”.நீ கெட்டகேட்டுக்கு இதுவொன்றும் குறைச்சலில்லை” என்றும்,ஊரில சனங்கள் படும்பாட்டில் நீ எல்லாம் எங்கே நிற்கிறாய் எண்ட போடலில் அப்பருக்கு நான் தப்பாத பிள்ளையாக இருக்கவேண்டுமென்ற கனவும்,அவரைப் பேய்க்காட்டிய உனக்கு நான் ஏன் உதவ?என்ற கோரமும் எனக்குள் ஓடித்திரிந்தது.இப்பவும் அந்தக் கோரம் போடும் கோலம் கொஞ்ச நஞ்சமில்லை!இதைத்தான் அத்தான் எதிர்பார்த்தானென்றால் இல்லையென்பதே என்பதில்.அவன் போட்ட முடிச்சு வேறானது.அதை நான் உடைப்பதில் எப்பவும் பெரியாரைத் துணைக்கழைத்து என்ர கூட்டைக் காப்பத்திப் போடுவேன்.”பெரியாரின் கூற்றுப்படி எனது கூலிக்காறி காரியமாற்றினால் கதை கந்திரிதாம்”எண்ட எண்ணத்தில் மிதந்தபோது நான் “ஐந்தொகையை முடிக்கும் காலம் நெருங்கியது”இந்தவொரு காலத்தை இவ்வளவு விரைவில் நெருங்கியதில் தெம்பின்றிப்போன “ஆத்தையின்மீதான அகோர வாசிப்பு” அர்த்மற்றதாய் மனதில் பிராண்டியபோது, நான் ஏதோவொரு வைத்தியரின் முன் நிணநீர் முடிச்சின் வீக்கத்தில் மூட்டுகளின் வலியையும்,கால்களால் நடக்க முடியாததையும் விளக்கியபடி மௌனமானேன்.

அகதிக் காண்டம் நிறைந்தேக…

“அண்ணே அந்த ஊதுபத்தியைத் தலைமாட்டில் கொளுத்தி வையுங்கோ,இராஜன் அண்ணர் நாட்டுக்காகப் போராடினவர் இப்படி அநாதையாகக் கிடக்கிறாரே!ஐயருமில்லை,இவங்கட சுவாமிமாருமில்லை.இறுதியில் அகதிகளின் பிரேதங்களுக்கு எந்தக் கிரியையுமில்லை.அட ஆரப்பா,தேவாரத்தையாவது பாடித் துலையுங்கோவன்.” மரண இறுதி நிகழ்வில் என்னோடு அடிக்கடி ஊஞ்சலாடிய அருமையென்ற அம்மான் கத்திக் கொண்டிருந்தான்.எப்பவெல்லாம் பேசக்கூடாதோ அப்போதெல்லாம் இவன் மட்டுமே பேசுவான்.இப்படி இவன் பேசுவதால்தாம் சில கனத்த நிகழ்வுகள் தடையின்றித் தாமதமின்றி நடக்கிறதென்பதம் உண்மை.

எனக்குள் ஓடித்திரிந்த ஒரு ப+ச்சி ஓய்வெடுப்பதற்குத் தயாரானபோது நான் கடைந்தேறும் காலத்தை நெருங்காதிருப்பதை எனது பொன்னான மனத்தின் கிளர்ச்சியில் ஊகித்தறிவது பெரும் பிரச்சனையாக இருந்ததில்லை!ஒன்று சண்டையில் செத்திருக்கவேணும்.அது கைகூடாது போனதால் நான்”………”யில் சாவதற்குத் தயாரானபோது நடுத்தெருவில்”அரைகுறை பிய்த்தெறிந்த ஆடையில் பிஞ்சு உடல்களைப்பார்த்து” நாவைத் தொங்கப்போட்டு ஊற்றிய வீணியோடு கரையொதுங்க, தாய்லாந்துக்காரிக்கு”கண்ணே கலைமானே”என்ற ஜேசுராசாவின் குரல் பிடித்திருந்தது.அந்தப் பாடலை எனக்காகவும் அவள் ஒலியைக் குறைத்துப் போட்டுவிட்டு உடைகளைக் களைந்தபோது, சொர்க்கம் இதுதாம் எனவெண்ணியபோது சுகத்தின் எல்லைக்கு இன்னும் தூரமதிகமென நான் எண்ணியதும், அவள் ரகுமானின் “தையைத் தையைத்…”பாடலை ஒலிக்க வைத்தபோது”இதுவெப்படிக் கிடைத்ததென”அவளைக் கொஞ்சிக்கொண்டேன்,உன் நாட்டான் ஒருவன் தந்ததென்றாள்.”நீ என்ன பாடலைப் பரிசாய்த் தருவாய்?”என்றபோது நான் அடுத்த நாள் ஊஞ்சல ;பாட்டில் ரகுமான்போட்ட உடற்பரிசங்களை அவளின் செவிக்கு விருந்தூட்டியபடி எனது மார்ப்புக்குள் அவளைத் திணித்தபோது நான் பட்ட பரவசம் நேற்றைய எனது பிணத்தின்(கனவுதாம்) ஒரத்தில் சத்தம்போட்ட அம்மான் அருமையின் வலுக்குரலால் அழிந்தே போனது.

ப.வி.ஸ்ரீரங்க

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்