பெண்களை நம்பாதே

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

மீ.வசந்த், சாத்தூர்.


பெண்கள் மசோதா
தோற்கடிக்க(ப்) பட்டதற்க்கு
சமாதானம் சொல்லும்,
தமிழக அரசின்
அராஜக செயல்கள்.
அதற்காய் நான்
ஆணாதிக்க வர்க்கத்தின்
அடையாளம் அல்ல.

பெண்ணுரிமை என்பது,
ஆணிணத்தை மிதித்து
அதன் மேல் நடத்தும்
வெற்றிப்பேரணியென்று
சில
பெண்ணினப் பேனாக்கள்
அர்த்தம் சொல்லும்.

ஆண்களை
அரக்கர்களாய் சித்தரித்து
இளைப்பாறும்
வக்கிர மனசு,
பல
அமில வார்த்தைகளை
அள்ளித் தெளிக்கும்.

செத்துப் போகும்
பெண் சிசுக்கள்
குறையாத பட்சத்தில்,
எத்தனை
மாதர் சங்கம்
இருந்தென்ன பயன் ?
உத்தமிகள் எவரும்
உறுப்பினர்களாய் இல்லாமல்.

வெறும் சதைக்கும்
தசைக்கும்
ஆசைப்படாத சித்தர்கள்
ஹார்மோன்கள் அறுத்து
அறிவுரை சொன்னதெல்லாம்
பெண்ணினம் வெறுத்தென்பது
உலகறிந்த உண்மை.

அரைகுறை ஆடைகளில்
அங்கங்கள் தெரிய
உலாவரும் மகளிர்
சொல்லிக் கொள்வதுண்டு,
தாம்
நாகரிக உலகின்
புதுமைப் பெண்களென்று!! ?
கற்கால ஏவாள்
எப்படி இருந்தாளோ ? ? ?

தொப்புள்கொடி அறுக்காத
குப்பைத்தொட்டி குழந்தைகள்,
சத்தியம் செய்து
சாட்சியம் சொல்லும்,
தன்னைப் பெற்றவள்
ஓர் அரக்கியென்று.

வயிற்றுக் கஞ்சிக்கு
வக்காளத்து வாங்கும்..,
வெட்கம் கெட்ட
விபச்சார சதைகள்- நம்
கற்புக் கலாச்சாரத்தை
முரசடித்து
பறை சாற்றும்.

திரை கடலோடி
திரவியம் தேடும்
நல்ல மனிதனை
கோமாளியாக்கும் – அவன்
கட்டிய மனைவியின்
பத்தினி நடிப்பு.

தினந்தோறும் நடக்கும்
குழாயடிச்சண்டைகளில்
சிக்கித் திணறும்
பெண்களின்
தேசிய ஒருமைப்பாடு.

ஒருவன்
செய்த தவறுக்கு
ஊரைப் பொசுக்கி,
மக்களை கொழுத்தி,
மண்ணை சுடுகாடாக்கிய
கண்ணகியின் செயல்,
என் பார்வையில்
முட்டாள்தனம்,
முன்கோபம்,
பழிவெறி.

இத்தனை இருந்தும்,
உன்னைப் போல்
எனக்கும் பிடிக்கும்
அன்னை தெரசா.

meenatchivasanth@rediffmail.com

Series Navigation

மீ.வசந்த்,சாத்தூர்.

மீ.வசந்த்,சாத்தூர்.