கீதாஷங்கர்
துபாயிலிருந்து வள்ளி அன்று காலை தான் வந்திருந்தாள். வள்ளியின் அம்மா தங்கதிற்கு புதிதாக சிறகு முளைத்திருக்குமோ என வியக்கும்படி பம்பரமாய் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் கவனித்தாள். காபி, டிபன் ஆன கையோடு, வள்ளி அம்மாவிடம்,” வாம்மா இங்க வந்து பாரு. உனக்கு என்னெல்லாம் வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்னு.” என சின்னப்பிள்ளையாக் கையை இழுத்துக் கொண்டு ஓடினாள்.
” என்ன அவசரம் வள்ளி? குளிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு மூட்டையைப் பிரியேன்.! ராத்திரியெல்லாம் தூங்காம விமானத்துல வந்தது,” என்றாள்.
” வாம்மா! நான் துபாய் போனதுல இருந்து குருவி மாதிரி இதயெல்லாம் வாங்கி சேர்த்து வச்சிரிக்கேன். ரெண்டு வருஷமா இந்த நாள் எப்ப வரும்னு காத்துக் கிடந்தது உனக்கு என்ன தெரியும்? வாம்மா”, இழுத்துச் சென்றாள்.
பெட்டியைத் திறந்து ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துப் போட்டாள். அதை வாங்கப் போன தினம் நடந்த கதை, எந்த மாலில் வாங்கினாள், எத்தனை தினார் மாப்பிள்ளை கொடுத்தார் என அதிக ஆவலுடன் தொடர்ந்து பேசினாள். பேரப்பிள்ளைகளும் அம்மாவின் அதிகப்ப்டியான் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தவண்ணம் பாட்டியின் மடியில் உட்கார்ந்தார்கள்.
“அங்க நீங்க கட்டற மாதிரி பொடவை கிடைக்கலை. இதெல்லாம் கொஞ்சம் வ்ழு வழுன்னுதான் இருக்கும்.ஆனா உங்களுக்கு நல்லா இருக்கும். இத கட்டிக்கறப்பவெல்லாம் என்னை நினைச்சுப்பீங்களாம்மா?”
“என் கண்ணே, இதைக் கட்டிகிட்டா தான் நினைக்கணுமா?
எனக்கு எப்பவுமே உன் நினைப்புத் தான்டி. உன்னை விட்டா எனக்கு நினைக்க யாரிருக்கா? உனக்கு ரெண்டு வயசாகும் போது உங்க அப்பாரு போய் சேர்ந்திட்டார். உனக்காக தான்டி உசிரைக் கையில பிடிச்சு வச்சிருக்கேன்.”, அம்மாவின் குரல் தழுதழுத்தது.
வள்ளிக்குத்தான் மறக்குமா என்ன?
சின்னவயசுல் பாட்டி மாமாவின் அரவணைப்பில் வளர்ந்ததும், எததனையோ விஷ்யங்களுக்காக் ஏங்கியதும்…! ந்ல்ல ச்ட்டைக் கூட போட்டதாக ஞாபகம் இல்லை.
வக்கில்லாமல் அம்மா வீட்டிற்க்குப் போனால், எல்லாம் வகைதப்பிப் போகும் என்பது சரிதான்..
அம்மாவின் அக்கா மகளும், தங்கை மகளும் போட்டு சாயம் போன பாவாடை இவளுக்கு வந்து சேரும். அவர்கள் பாட்டி வீட்டுக்கு வரும் போது எல்லாம், “இது என்னோட பாவாடை இல்ல?”, என நாலு பேர் முன்னால் சொல்லி சிரிப்பார்கள். அவர்கள் அப்போது போட்டிருக்கும் பாவாடையை வள்ளி நைஸாகப் பார்ப்பாள்.
” இப்போ நல்லக் கலராத் தான் இருக்கு. எங்கிட்ட வரும் போது தான் பழசாகிடுது. இவங்க பணக்காரங்க தானே? ஒரு வருஷத்துலயே இதை தூக்கிக் குடுத்துட்டு வேற வாங்கிக்க வேண்டியது தானே?” என நினைப்பாள்.
“வானவில் பாவாடை இப்போ பாஷன் ஆச்சே? வாங்கிக்கிட்டியா?”, அவளுக்கே அல்பமாகத் தெரிந்தாலும் ஆர்வத்தில் கேட்டு விடுவாள்.
“பெரிம்மா நல்ல சோப் பவுடர் போட்டு தோய்ச்சு, நிழலில் காய வையுங்க. துணி சாயமே போகாது”, என்பாள்.
” , சாயம் போகலைன்னா உனக்கு ஏன் தரப் போறோம்? அப்புறம் உனக்குப் போட்டுக்கத் துணியே இருக்காதே.
மாமான் ஷர்ட் பழசானாலோ போட்டு அலுத்தாலோ, அது வள்ளிக்கு வந்து விடும்.வள்ளி அதை அல்ட்ர் ப்ண்ணி தைத்து போட்டுக் கொள்வாள்.
அது பார்க்க க்ண்றாவியாகத்தான் இருக்கும். பெரிய கால்ரும் பாக்கெட்டுமாக பள்ளியில் எல்லாம் கேலி பண்ணுவார்கள்.
“ஏய் வள்ளீ உங்க மாமாவை இளைக்கச் சொல்லுடி. அப்பத்தான் உன் ச்ட்டை உன்க்கு தைச்சது மாதிரி இருக்கும்.” என்பார்கள்.
தீபாவ்ளியின் போது மட்டும் தான் புது டிரெஸ். இருபபதிலேயே சீப்பாய் ஒரு சட்டை எடுத்துத் தருவான் மாமன்.
அவன் ஷர்ட் எடுக்கும் போது வள்ளி மிகவும் ஆர்வமாய் போய்த் தேடுவாள். அந்த ஆர்வம் அவள் ச்ட்டையை எடுக்கும் போது கூட்க் காட்டமாட்டாள். விஷயம் அதிலே இல்லாமல் இல்லை.
ஆணகள் போடுகிற மாதிரி கட்டம், கோடு எனத் தான எடுத்துக் கொள்வான். ஒவ்வொரு முறையும் வள்ளி பூ போட்ட டிஸைனைக் காட்டி ” மாமா இது உங்களுக்கு நல்லா இருக்கும்”, என்பாள். சரியென சொல்ல மாட்டானா என்ற் நப்பாசையுடன்.
திரும்பி பார்த்து அவன் முறைக்கிற் முறையில் வாய் அட்ங்கிவிடும். ஆனாலும் ம்னம் ” எனக்குப் பிடிச்ச பூ போட்ட அந்த நீலச் சட்டையை மாமா எடுக்கணுமே” என வேண்டியபடி நிற்பாள். “ஆஞ்ச்நேயா, தோட்டதுல் இருந்து வெற்றிலை பறிச்சு மாலை போடறேன். மாமாவுக்கும் அந்த ச்ட்டை பிடிக்கணுமே”.
அவள் வெற்றிலையை திருடித்தான் மாலைப் போட வேண்டும் என்பது தெரிந்தோ என்னவோ ஆஞ்சநேயர் அவள் கோரிக்கையை என்றுமே செவி மடுத்ததில்லை.
கொஞ்சம் வள்ர்ந்து, பத்தாவது படிக்கும் போது, மாமாவின் பேண்ட் கூட ஒஸிக் கிடைத்தது. ஆம்பிளை பேண்ட் என பார்தாலே தெரியும். ஆனாலும் அவளுக்கு சைக்கிள் ஓட்ட வசதியாக இருந்ததால், அவ்ள் அதைப் பொருட்படுத்தவில்லை. எபபடியோ காலேஜ் படித்து, பாங்க் வேலைக்கும் போனாள். கூட வேலைப் பார்தத நடராஜன் அவள் அடக்கத்தையும் பொறுமையையும் பார்த்து பெண் கேட்டு வந்தான். ஒரே ஜாதி, தன் கையை விட்டு செலவு பண்ண வேண்டியதில்லை என்பதாலேயே மாமன் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டான்.
கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, நடராஜ்ன் துபாயில் வேலைக் கிடைத்து வள்ளியையும் கூட்க் கூட்டிப் போனான். பாட்டி செத்ததும் அம்மாவுக்குக் கிடைத்த கொஞ்சம் மஞசக்காணியோடு, தான் கொஞ்சம் போட்டு சென்னையில் பிளாட் வாங்கி அம்மாவைக் குடி வைத்தாள்.
“ம்..ம்..” பழைய கதையை நினைத்துப் பார்தத வள்ளி பெருமூச்சு விட்டாள்.
“வள்ளி இந்த பூ போட்ட ஷர்ட் யாருக்குடி? ஆம்பிளை போடறது மாதிரி இருக்கு”, என்றாள் தங்கம்.
“உந்தம்பிக்குத்தான். இப்போ ஆம்பிளைகளுக்கு அது தான் பேஷன். மாமா பேஷனாத் தான்ல உடுத்தும்?”, என்ற் வள்ளீக்கு இந்த பேஷன் அந்தக்காலத்துலயே வராம் போயிடிச்சேன்னு ஆதங்கமாக் இருந்தது.
geethashanker67@hotmail.com
- லா ச ரா நினைவாக
- புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மகாகவி பாரதி விழா
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மயவீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள் (கட்டுரை: 8)
- விளக்கு பரிசு பெற்ற தேவதேவனுக்கு பாராட்டு விழா
- சாந்தாராம்- ஒரு எழுத்தாளனின் மாஃபியா அனுபவங்கள்
- அக்கினிப் பூக்கள் – 5
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 3
- மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம்
- மாத்தா ஹரி – அத்தியாயம் 41
- கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’
- ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு
- பா.த.ச -வின் அதிகாரபூர்வ விளக்கமும் – என் தகவல்கள் விளக்கமும்
- இறக்கை வெளியீடு - களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா
- பீடம்
- கடிதம்
- முக்கியமான வேலை
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள் 4 -லா.ச.ராமாமிர்தம்
- எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது- முத்துலிங்கத்தின் வெளி
- “உனையே மயல் கொண்டு” – உண்மைகளைச் சொல்ல வந்திருக்கும் ஒரு துணிந்த படைப்பு
- பூப்போட்ட ஷர்ட்!
- கல்லூரி : உலக சினிமா நோக்கி தமிழ்த்திரை….
- ஜிகினா
- மாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது
- தாகூரின் கீதங்கள் – 8 உன்னோடு ஐக்கியம் !
- காலை ஆட்டுடி பெண்ணே!
- ஐடி’யாளர்களின் பார்வை சரியா,தவறா?
- குறிப்பேட்டுப் பதிவுகள்- 5!-
- இளைஞர் ஸ்டாலினின் கையில்?
- இது போன்ற தருணங்களை மார்க்கம் தவறவிடக் கூடாது
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 12 கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்
- தைவான் நாடோடிக் கதைகள் – 5. புராண நாயகன்
- நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்