Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்
நம்மைப் பொறுத்தவரை, மிமிக்ரி எனப்படுவது ஒரு பலகுரல் நிகழ்ச்சி. ஆனால் மிமிக்ரி எனப்படுவது, பொதுவாக ஒன்று மற்றொன்றை பிரதிபலிப்பதே ஆகும். அது குரலாகவோ, நிறமாகவோ, உருவமாகவோ, அவ்வளவு ஏன்…. மற்றொன்றின் குணநலனாகவோ கூட இருக்கலாம். பொதுவாக பூச்சிகளைப் பொறுத்தவரை, மிமிக்ரி எனப்படுவது ஒன்றின் நிறத்தையோ உருவத்தையோ மற்றொன்று பிரதிபலிப்பதே ஆகும். நிறைய உதாரணங்கள் இருந்தாலும், இரண்டை மட்டும் இங்கே பார்ப்போம்.
பட்டுப்பூச்சிகளுள் மோனார்க் பட்டுப்பூச்சி (Monarch Butterfly) என்று ஒன்று உண்டு. நல்ல பளபள நிறத்தில் இருக்கும். இதன் வாழ்க்கையில் பல சுவாரசிய சமாச்சாரங்கள் உள்ளன. குறிப்பாக நன்கு வளர்ந்த பட்டுப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பல்லாயிரம் மைல்கள் பறந்து செல்லும் (அதைப்பற்றி இன்னொரு வாரம் விரிவாக சொல்கிறேன்). இந்த பட்டுப்பூச்சியின் புழுக்கள் நம்மூரில் இருக்கும் ஆடுதின்னாபாளையிலும் அதையொத்த இன்னபிற செடிகளிலும் உண்டு உயிாி வாழும். அப்போது இந்த செடிகளிலிருந்து பலவிித விஷப்பொருள்களையும் சேர்த்தேதான் உண்ணும். இந்த விஷப்பொருள்கள் மற்ற உயிாிகளுக்குதான் விஷமே தவிிர, இந்த மோனார்க் பட்டுப்பூச்சியின் புழுக்களை ஒன்றுமே செய்யாது. ஆக, இந்த விஷப்பொருள்களை உண்டு, செரித்து, அவற்றைத் தங்கள் உடலில் குறிப்பிட்ட செல்களில் சேமித்து வைத்துவிடும். இந்த புழுக்கள்
கூட்டுப்புழுவானாலும் பட்டுப்பூச்சியனாலும் இந்த விஷப்பொருள்கள் நிறைந்த செல்கள் சிதையாமல் அப்படியே இருக்கும். இந்த விஷயம் தொியாமல், முதன்முதலில் மோனார்க் பட்டுப்பூச்சியின் புழுக்களையோ, கூட்டுப்புழுக்களையோ, பட்டுப்பூச்சியையோ பிடித்துத்தின்ன முயற்சிக்கும் பறவைகள், விஷத்தின் கசப்பைத் தாளாமல் துப்பிவிடும். அதுமட்டுமல்ல…. வாந்தி கூட எடுக்கும்.
என்ன நம்பமுடியவில்லையா ? கீழே உள்ள படத்தைப் பாருங்கள் !!!
அதற்குப் பிறகு, இந்த மோனார்க் பட்டுப்பூச்சியைக் கண்டாலே காததூரம் ஓடிவிடும்.
இங்குதான் மிமிக்ரியின் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. மோனார்க் பட்டுப்பூச்சியின் குணாதிசயத்தைக் கண்ட ஒரு சில மற்ற பட்டுப்பூச்சிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கின. இது ஏதோ ஒரே நாளில் நடக்கும் மாற்றம் அல்ல. பரிணாம வளர்ச்சியில் இதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கும். இப்படி வளர்ந்த பட்டுப்பூச்சிகளுள் ஒன்று வைசிராய் பட்டுப்பூச்சி (Viceroy Butterfly). இந்த வைசிராய் பட்டுப்பூச்சிகள் நிறத்திலும் உருவத்திலும் மோனார்க் பட்டுப்பூச்சியைப் போலவே இருக்கும்.
மோனார்க் பட்டுப்பூச்சி
வைசிராய் பட்டுப்பூச்சி
ஆனால் வைசிராய் பட்டுப்பூச்சியின் புழுக்களுக்கோ, கூட்டுப்புழுக்களுக்கோ, வளர்ந்த பட்டுப்பூச்சிக்கோ எவ்வித விஷப்பொருளும் உடலில் இருக்காது. ஆனாலும் இவற்றைப் பறவைகள் பிடித்துத் தின்னாது. மோனார்க் பட்டுப்பூச்சிக்கும், வைசிராய் பட்டுப்பூச்சிக்கும் உள்ள உருவ ஒற்றுமையைக் கண்டு, குழம்பி, இரண்டும் ஒன்றுதானா இல்லை வெவ்வேறா எனத் தொியாமல், எதற்கு வீண்வம்பு என பேசாமல் போய்விடும். இதுதான் பூச்சிகளின் மிமிக்ரி !!!
இங்கு வைசிராய் பட்டுப்பூச்சி மிமிக் (Mimic). மோனார்க் பட்டுப்பூச்சி மாடல் (Model). அதாவது நடிகர் தாமு நடிகர் இரகுவரனைப் போல மிமிக்ரி செய்தால், நடிகர் தாமு மிமிக் ; நடிகர் இரகுவரன் மாடல்.
அடுத்து வரும் பூச்சிகள் சிவப்பு எறும்புகள் (Red ants). இவை அகலமான இலை உடைய மரங்களில், இலைகளை இணைத்து, ஒரு பொிய கால்பந்து அளவிற்குக் கூடுகட்டி, அதில் கூட்டம் கூட்டமாக வாழும். இவை கூடுகட்டும் முறையே மிக மிக அழகாக இருக்கும். முதலில் ஒரு கொத்திலுள்ள அருகருகே இருக்கும் இரண்டு இலைகளின் விளிம்புகளில் வேலைக்கார எறும்புகள் வரிசையாக நின்றுகொள்ளும். பிறகு, தங்கள் வாயிலுள்ள கொடுக்குகளின் மூலம் இரண்டு இலைகளின் விளிம்புகளையும் அருகருகே இழுத்துவந்து பிடித்துக்கொள்ளும். அப்போது ஒரு வேலைக்கார எறும்பு தங்களின் சொந்தப்புழுவையே (ant larvae) வாயிலுள்ள கொடுக்கில் வைத்து அழுத்தும். அந்தப்புழு அப்போது பட்டு இழைகளை உமிழும். அந்த வேலைக்கார எறும்பு பட்டு இழைகளைக் கொண்டு, இடவலமாக தலையை ஓட்டி, இலைகளை இணைத்து ஒட்டிவிடும். எனவே, சிவப்பு எறும்புகள் நெசவு எறும்புகள் (Weaver ants) என்றும் கூறப்படும். பொதுவாக இந்த சிவப்பு எறும்புகள் மிக மிக மூர்க்கமானவை. மனிதர்களாலேயே
இவற்றின் கோரத்தாக்குதலை சமாளிக்க இயலாது. பிறகு மற்ற பூச்சிகள் எம்மாத்திரம் ? எனவே, இந்த சிவப்பு எறும்புகளின் சகவாசமே வேண்டாம் என ஒதுங்கியே இருக்கும்.
ஆனால் இந்த சிவப்பு எறும்புகளின் குணாதிசயம் எதுவுமே இல்லாத சிலந்தி ஒன்று, ‘ ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாய் ‘ ‘ பரிணாம வளர்ச்சியில் தன்னையும் சிவப்பு எறும்பு போல உருமாற்றி, மிமிக்ரி செய்யத் தொடங்கிவிிட்டது. விளைவு…. சிலந்தி தனிக்காட்டு இராசாவாக, எந்த ஆபத்துமின்றி வலம்வந்து கொண்டிருக்கிறது.
சிலந்தி
சிவப்பு எறும்பு
ஆக, பூச்சிகளைப் பொறுத்தவரை, மிமிக்ரி என்பது தங்களைத் தற்காத்துக் கொள்ள ஓர் ஆயுதம் !!!
அது சரி, ஒரு பூச்சி திருமணம் செய்து, முதலிரவும் நடத்தி, பிறகு கணவனைக் கொலை செய்யும்!!!
அதைப்பற்றி…. அடுத்த வாரம்!!
—-
- கடிதம் – ஜூலை 8, 2004
- அறிவியலில் ஒரு வாழ்க்கை – நூறுவயதாகும் எர்னஸ்ட் மேய்ர்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- சனிக்கோளையும் அதன் துணைக் கோளையும் உளவு செய்யும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Probing Saturn
- வெள்ளைப் புலாவ்
- மெய்மையின் மயக்கம்-7
- குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
- ஓரம் போ – பாராட்டு வருது
- நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்
- Spellbound (2003)
- ஆட்டோகிராஃப் ‘ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும் ‘
- பூச்சிகளின் மிமிக்ரி
- கடிதம் ஜூலை 8 , 2004
- கடிதம் ஜூலை 8,2004
- கடிதங்கள் ஜூலை 8, 2004
- நேரடி ஜனநாயகம்
- சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள்
- தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று
- கருக்கலைப்பு
- வேடத்தைக் கிழிப்போம் -1 (தொடர் கவிதை)
- மயிற்பீலிகள்
- என் காதல் இராட்சதா …!!!!
- அக்கினிகாரியம்
- மஸ்னவி கதை — 12 : சூஃபியும் கழுதையும் ( தமிழில் )
- விழிப்பு
- ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்
- நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்
- கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2
- சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?
- திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!
- நீலக்கடல் – (தொடர்) – 27
- கறியாடுகள்
- மரபணு மாறிய.
- கற்பின் கசிவு
- மனம்
- கோடிமணி நிலை
- கவிக்கட்டு 14 – மண்ணுக்கும் விண்ணுக்கும்
- உழைப்பாளர் சிலையோரம்….
- என்னைப்போலவே
- மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் முதுமைக்கும் இனவிருத்திக்குமான மரபணுவைக் கண்டறிந்துள்ளார்கள்