புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

ப்ரவாஹன்.


புறநானூற்றில் மனித நேய கொள்கைகள் By முனைவர் துரை. மணிகண்டன் கட்டுரை கண்டேன்..

இதில் முதல் எடுத்துக்காட்டாக.. பெருஞ்சோறு கொடுத்தது குறித்து… ஏதோ பாரதப் போரில் இரு தரப்பாருக்கும் சேரமான் உதியன் சோறு போட்டது போல இம்முனைவர் எழுதியிருக்கிறார்..

முற்றிலும் அரைகுறைப் புரிதலுடன்..சொல்லின் நேர்ப்பொருளில் இதை எடுத்துக்கொண்டுள்ளார் க. ஆ. (கட்டுரை ஆசிரியர்)

உண்மையி.. இப் பெருஞ்சோறு என்பது மூதாதையர்களுக்கு அவர்களின் நினைவு நாளில் கொடுக்கப்படும் பிண்டமாகும்…

இதைத்தான் தொல்காப்பியம் (புறத்திணையியல் 7 ஆம் நூறபா)

“பிண்டம் மேயப் பெருஞ்சோற்று நிலையும்” என்கிறது..

“பிண்டத்திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்” என்று பெரியாழ்வார் சொல்வதும் இதுதான்… இந்தப் பிண்டத்தைப் பெருஞ்சோறு என்று புறநானூறு குறிப்பிட்டுள்ளதேயன்றி.. ஏதோ.. சேரமான் உதியன் கேட்டரிங் காண்டிராக் எடுத்ததைப் போல முனைவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனில்… அவரது மாணவர் நிலையை எண்ணி பரிதாபம் கொள்வதைத் தவிர வேறென் செய?

ப்ரவாஹன்.

Series Navigation

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

முனைவர் துரை. மணிகண்டன்


உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத்தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் “நானும் உலக இலக்கியங்களில் பல வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன். இருந்தாலும் புறநானூற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் போல வேறு எந்த நாட்டு இலக்கியங்களிலும் காண முடியவில்லை” என்று கூறுகிறார். அத்தகைய சிறப்பப் பொருந்திய இப் புறநானூற்றில் பல்வகை இலக்கிய வரலாற்று கூறுகள் இடம் பெற்றிருந்தாலும் மனித நேய கொள்கைகளும் இவற்றில் பொதிந்துள்ளதை இக்கட்டுரையில் காணலாம்.

மனித நேயம் ஜர்ரஅயnளைஅஸ
மனித நேயம் என்பது பிறர் துயர் கொண்ட போது உதவுதலும் பிறருக்காக வாழ்தலுமாகும். நாடு, இனம், மொழி வேறுபாடு கருதாது அனைவருக்கும் பொதுவாக வாழும் வாழ்வே மனித நேய வாழ்வாகும்.
“ ‘மனித நேயம’ என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும். ‘நேயம’; என்ற சொல் ‘நேசம’; என்றும் வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு ‘அன்பு’ என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது”.
‘அன்பு’ என்பதற்கு “ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு” என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
இரா. சக்குபாய் “உலகம் போரின்றி வாழவும், உலக மக்களிடையே அன்பு தழைக்கவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாதது ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனித நேயம்” என விளக்கம் தருகிறார்.

மனித நேயக் கொள்கைகள் ஜவுhநழசல ழக ர்ரஅயnளைஅஸ
உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்கம் ஜசுநன ஊசழளள ளுழஉநைவலஸ என்ற ஓர் அமைப்பு உண்டு. இதனை நிறுவியர் ஹென்றி டூணாண்ட் என்ற சுவிஸ் நாட்டு அறிஞர். மனித குலத்திற்கு எவ்வகையில் துன்பம் நேர்ந்தாலும் உடனே அங்கு சென்று முதலுதவி செய்து அம்மக்களின் மறுவாழ்வு வரையிலும் உதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான்.
இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போராக இருந்தாலும், பூகம்பமாக இருந்தாலும் ஆழிப்பேரலையாக இருப்பினும் எரிமலை வெடிப்பாக இருப்பினும் தீவிரவாதத் தாக்குதலாக இருப்பினும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது உடனே சென்று உணவு, உடை, தங்குவதற்குத் தேவையான குழல்கள் போன்றவைகளை மனிதாபிமான முறையில் உதவி புரிகிறது. இதற்கு நாடு, இனம், மொழி பாராமல் இப்பணித் தொடர்கிறது. இச்செயலை சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைவிடப் பெரிய அளவில் உதவி புரியும் நோக்கில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் செயல் புரிந்துள்ளான். இவன் ஆட்சி புரிந்ததோ தென்னிந்தியாவைச் சேர்ந்த அக்காலத் தமிழகம் பாரத போர் நடைபெற்றதோ வட இந்தியாவில் குருஷேத்திரம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் படை வீரர்களுக்கும், போரில் காயம்பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்துள்ளான் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.
“அலங்குனைப் புரவி ஐவரோடு சினைவி
நிலந்தலைக் கொண்ட பொலம் ப+ந்தும்பை
ஈரைம் பதின்மரும் பொழுது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” புறம் – 2
உணவு அளிப்பது என்பது ஒரு கொடை செயல்தான் என்றாலும், மனித நேய அடிப்படையிலான இச்செயலாகப் பார்க்க முடிகின்றது. போர்க்களத்தில் இம்மன்னன் உணவு அளித்தது வேறு எந்த உள்நோக்கம் கருதியதாக பாடலில் சான்றாதாரம் இல்லை. எனவே இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத மாண்புரும் மனித நேயமே என்று கொள்ளலாம்.

ஒற்றுமைக் கொள்கைகள் ஜீசinஉipடநள ழக ருnவைலஸ
உலக இனம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழத்தான் விரும்புகிறது. ஆனால் இடையில் மதம், இனம், நாடு, மொழி என்ற பிரிவினைவாத நோய் மக்களை ஆட்கொண்டுவிட்டது. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் சமூகம் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ பழந்தமிழ்ப் புலவன் உலக ஒற்றுமைக்கு முதன் முதலில் வித்திட்ட உலகப் புலவன் கணியன் ப+ங்குன்றனனின்,
“யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா” (புறம் – 192)
என்ற பொன்னெழுத்துக்களால் இன்று உலக மனிதநேய ஒற்றுமைக்கு வித்திட்ட ஒப்பற்றவன் என்பது புலனாகிறது. அனைவரும் நம் உறவினர். நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர் என்று மக்களிடத்தே எடுத்தியம்பியுள்ள கொள்கைகள் ஆகும். இதனை அடியொற்றியே வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ‘ஓர் உலகம்’ எனும் நூலில் வருங்காலத்தில் நம் சிந்தனை உலகளாவிய முறையில் பரந்திருத்தல் வேண்டும் ஜஐn கரவரசந ழரச வாiமெiபெ டிந றழசடன றளைந) என்ற கருத்தை யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரியிலிருந்து எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சோழ மன்னர்களாகிய நலகிள்ளி, நெடுகிள்ளி இருவரும் பகைவர்கள். நலங்கிள்ளியின் நாட்டிலிருந்து நெடுங்கிள்ளி ஆட்சி செய்யும் உறைய+ருக்கு இளந்தத்தன் என்னும் புலவர் வருகிறார். பகை நாட்டிலிருந்து வந்ததால் இளந்தத்தனை ஒற்றன் எனக் கருதி நெடுங்கிள்ளி அவனை கொல்ல முற்பட்டான். இதனைக் கேள்வியுற்ற கோவ+ர்க் கிழார் அவ்விடம் சென்று,
“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
…………. …………… …………….. ………………
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ (புறம் 47 – 1 – 7)
எனப் பாடினார். இளந்தத்தனை விடுவிப்பது நல்லது. இல்லையேல் உங்களுக்குள் போர் தொடங்குவதை யாரும் தடுக்க முடியாது என்று கூறி அவனை விடுதலை செய்ய வைத்து இருவரையும் சேர்த்து வைத்து ஒற்றுமைக் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அறக்கொள்கைகள் ஜனுழஉவசiசௌ ழக ஆழசயடவைல)
ஒருவன் சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த பொருள்களையோ, செல்வத்தையோ மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் பாங்கே அறக்கொள்கைகள் ஆகும். இன்று உலகில் 55 பேர் ஒருவேளை உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று ஐ.நா. கணக்கெடுப்புக் கூறுகிறது. (பார்க்க. தமிழ்விக்கிபீடியா) இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புறநானூற்றுப் புலவர்களும், மன்னர்களும் பாடல்களாக உலகமக்களுக்குக் கருத்தை வழங்கியுள்ளனரோ என்ற வினா எழும்புகிறது.
வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறான். அவன் குடும்பச்சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார்.
நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கினைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாடி நின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும்
இன்னேர்க் கென்னது என்னேடுஞ் சூடியது
வல்லாங்கு வாழ்து மென்னது நீயும்
கொடுமதி மனைகிழ வோயே…” (புறம்.173)
என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார் உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும,; கொடுமையான கொடும் பசிதீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருளை வைத்துக் கொண்டு வளமாக வாழ்வோம் என்று எண்ணாமல் மன்னர் கொடுத்த பிரிசிலை எல்லோருக்கும் கொடு என்று தன் மனைவியிடம் கூறும் பெருஞ்சித்திரனாரின் கருத்து உலக மக்களுக்குச் சொல்லபட்டவையாக அமைந்துள்ளன.
மன்னர்களும் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். உலகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய இறைவனே வந்து கொடுத்த சிறப்பு பொருந்திய உணவாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்ணாமல் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுத்து உண்ணுவேன் என்று கூறிய அறக் கொள்கையைக் கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி,
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே (புறம்.182-1-3)
என்ற பாடல் அடிகளின் மூலம் அமிழ்தமாக இருந்தாலும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன் என்ற செய்தியைப் புறநானூறு பதிவு செய்துள்ளது.

பிறர் உயிர்களைப் பேணும் கொள்கைகள் ஜீயலiபெ சநளிநஉவ in வாந வாநழசலஸ
மனிதன் மனிதனுக்கு உதவுதல் உலகில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அது மனிதநேயம் என்றாலும், ஆறரிவு மக்கள் இன்றி ஓர் அறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை உள்ள பிற உயிர்களுக்கு மனித நேயத்தோடு தொண்டுகள் செய்யும் உயரிய நோக்கத்தைக் கொண்டவர்கள் நம் தமிழர்கள்.
கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்படுகின்ற பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி போன்றவர்களில் ஒருசிலர் பிற உயிர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்துள்ளனர்.
முல்லைக் கொடிக்குத் தேர்க்கொடுத்த பாரி மன்னன் பற்றி படர்வதற்கு ஒரு கொழுக்கொம்பு இல்லையென்பதை பார்த்த பாரியின் மனம் துனுக்குற்று உடனே தான் ஏறிவந்த தேரைக் கொடிப்படர்வதற்கு வி;;ட்டு விட்டு வந்துள்ளான். மன்னன் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. முல்லைக்கொடியின் பரிதவிப்பு மன்னனை எந்த அளவிற்கு மனம் மாற்றியுள்ளது! இதைவிட மனிதநேயத்திற்கு உலகில் எங்கும் எடுத்துக்காட்டு இல்லை.
மயில் குளிரில் நடுங்குவதாக எண்ணி அதற்குப் போர்வைத் தந்த மன்னன் பேகன். என்ன ஒரு நிகழ்ச்சி. பிற உயிர்களிடத்தும் மனிதன் எப்படி மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையைப் புறநானூறு படம் பிடித்துக் காட்டியுள்ளது.
உலக இனம் தழைக்க, மனித நேயம் வளர்ந்து அனைவரும் மனிதநேயத்தோடு வாழவேண்டும். இல்லையென்றால் உலகம் போரிலும், இனச் சண்டையாலும் மாய்ந்துவிடும் இல்லை அழிந்து போகும். இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உலக மக்களுக்கு மனிதநேயக் கொள்கைகளாகவும், ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் வாழவேண்டும் என்றும், பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பாங்கைப் பெற்று வளர அறக்கொள்கைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். இவை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களையும் பேணுதல், பாதுகாத்தல் மனித இனத்தின் தலையாய கடமைகளாக இருக்கின்றன. இவையாவும் புராதான நூலான, திராவிட இலக்கியமானப் புறநானூற்றில் காணப்படும் கருத்துச் செய்திகளாகும். இவ்வழியைப் பின்பற்றி கருத்தை மனத்தில் இருத்தி பிறருக்கு உதவிகள் புரிந்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டியது நமது கடமையாகும்.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் மற்றும் இணையதளங்கள்
1. புறநானூறு மூலமும் உரையும், டாக்டர். உ. வே.சா.
2. தமிழ் இலக்கியங்களில் காணலாகும் மனிதநேயமும் மத நல்லிணக்கமும், தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
3. மார்ச்சு மாதம் காலச்சுவடு, 2007.
4. றறற.வய.றமைipனையை.ழசப
5. றறற.pயவாiஎரமயட.உழஅ
றறற.அரவாரமரஅயடயஅ.உழஅ

முனைவர் துரை. மணிகண்டன்
விரிவுரையாளர், தமிழ்த்துறை,
டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி,
(பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரி)
இலால்குடி, திருச்சி.

Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்