புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue


நாஸா என்ற அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் துணைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில் புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்களைப் பார்க்கிறீர்கள்.

வட இந்தியாவில் ஏரோஸோல் என்னும் புகை இமாலயத்தின் தெற்கு முனையிலிருந்து அடர்ந்து உத்தரபிரதேசம், பங்களாதேஷ் சென்று வங்காள் விரிகுடாவில் படர்ந்து இருப்பதைக் காணலாம்.

இமாயலத்துக்கு வடக்கே திபேத்திய பீடபூமியில் காற்று தெளிவாக இருப்பதையும் காணலாம். மலைத்தொடருக்கு தெற்கே கீழே இருக்கும் நிலம், மேலே இருக்கும் பழுப்பு நிறப்புகையால் மறைந்து கிடப்பதைக் காணலாம்.

இந்த காற்று அசுத்தத்தின் பெரும்பான்மை மனிதச் செயல்களால் வருகிறது. இந்த ஏரோஸோல் புகையில் ஸல்ஃபேட்டுகளும், நைட்ரேட்டுகளும், கரியும், சாம்பல் தூளும் இருக்கிறது. இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு இது சுகாதாரக் கேடு மட்டுமல்ல, இந்த பகுதியில் இருக்கும் புகை இந்த பகுதியின் ஹட்ரோலாஜிகல் சுழற்சி என்னும் நீர் சுழற்சியையும், தட்பவெப்பத்தையும் மோசமான முறையில் பாதிக்கிறது.

இந்த உண்மை வண்ண ஒளிப்படம், டிஸம்பர் 4, 2001 ஆம் தேதியன்று மோடிஸ் (MODIS – Moderate Resolution Imaging Spectroradiometer ) என்ற புகைப்படக்கருவி மூலம், நாஸாவின் டெர்ரா என்ற துணைக்கோளிலிருந்து எடுக்கப்பட்டது. இது அக்டோபர் 23, 2001 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை விட அசுத்தமான காற்று இந்த பிரதேசங்களின் மேல் இருப்பதைக் காட்டுகிறது. அந்த ஒளிப்படத்தில் பிரம்மபுத்ரா, கங்கை நதிகள் தெளிவாகத் தெரிந்தன.

கங்கையின் பல டெல்டா பகுதி துணையாறுகள் வங்காள விரிகுடாவின் வடக்கை அழுக்குப் பழுப்பு நிறமாக அடித்திருப்பதை காணலாம். இது வண்டலை கொண்டு வரும் கங்கை வளைகுடாவில் கொட்டுவதை குறிக்கிறது. இமாயலத்தின் தெற்கே புதிய பனி கொட்டிக்கிடப்பதை படத்தின் மேல் இடது புறம் காணலாம்.

http://visibleearth.nasa.gov/cgi-bin/viewrecord ?10980

Series Navigation

செய்தி

செய்தி