அம்ாிதா ஏயெம்
(ஆங்கிலவழி தமிழ்)
அவன் பிசாசுக்கெல்லாம் பொிய பிசாசாக இருந்தான். எல்லாப் பிசாசுகளுக்கும் இருப்பதுபோல அவனுக்கு ஒரு வாலும் இருந்தது. அம்புக்கூர் நுனியுள்ள பிசாசுடைய அந்த நீண்ட வால் தரையில் இழுபட்டுக் கொண்டேயிருக்கும். சுருக்கமாகச் சொல்லப்போனால் வாலுள்ள பிசாசுகளிலெல்லாம் அவன் பொிய பிசாசு.
வீதியால் போகும்போது அவனைக் கண்;ட பெண்கள் எல்லாம் பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒட்டமெடுத்தனர். அவர்கள் வீட்டுக்குச் சென்று “நான் பிசாசக் கண்டுட்டன். அங்கே பிசாசு போகுது. நான் அந்த பிசாசக் கண்டுட்டன். சத்தியமா, கடவுளறிய நான் பிசாசக் கண்டது உண்மை.” என்று வீட்டை அடைந்தவுடன் அழுதழுது சொன்னார்கள்.
என்றாலும் பிசாசு தனது பாதையில் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து போனான். தன்னைக் கண்டு விலகி ஓடுபவர்களைப் பார்த்து புன்முறுவலும் செய்தான்.
அவன் ஒரு மதுக்கடைக்குப் போனான். “குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வா” என்று கத்தினான். ஏதோவொன்று அவனுக்கு குடிப்பதற்கு கொடுக்கப்பட்டது. மதுக்கடைக்காரன் பயத்தால் கலவரமடைந்தவனாகக் காணப்பட்டான்.
“நீ பிசாசப் பார்த்து பயப்படுறாயா ?@ என்று பிசாசு கேட்டான். கோழையாக “ஓம்” என்றான் மதுக்கடைக்காரன். பின்னர் பிசாசு ஹோவென்று சிாித்தான்.
“மதுக்கடைக்காரனே உன்ர வைன் நன்றா இருக்கிது. நான் மீண்டும் ஒருக்கா பிறகு வாறன்” என்றான்.
“மதுக்கடைக்காரன் தனது தலையைத் தாழ்த்தி, மதுக்கடைக்காரன் அழுக்காகாமல் முன்னால் கட்டும் துணியில் பிசாசு தனது கைகளைத் துடைத்தபோது, அந்த வெள்ளை நிறமான துணி மேலும் அழுக்காக மாறியது. அந்தத் துணியில் இறைக்சிக் கறிகளினதும், மரக்கறிகளினதும் கறைபடிந்த தடங்கள் காணப்பட்டன. அதில் நிலக்காியின் கறுப்புத் தழும்புகளும் இருந்தன. ஓவ்வொரு காலைப் பொழுதிலும் பற்றவைக்கும்போது அடுப்பு இட்ட தழும்புகள் அவை.
“இதுதான் அது. நான் கொஞ்சம் நல்ல வைனை குடிக்க யோசிச்சிருக்க வேணும்.” என்று மதுக்கடைக்காரன் யோசித்தான். ஆனால், பிசாசோ, எல்லாப் பிசாசுகளும் மற்றவர்கள் யோசிப்பதை அனமானித்துக் கண்டுபிடிப்பதுபோல, மதுக்கடைக்காரன் யோசித்ததையும் கண்டுபிடித்து சத்தம்போட்டுச் சிாித்தான். சில நேரம் தனது தொடைகளில் அடித்துக் கொண்டும் சிாித்தான்.
சிலர் மதுக்கடைக்குள் புதிதாக நுழைந்தபோது பிசாசு அமைதியில் மூழ்கினான். அங்கே அழகிய சுந்தரவதன இளைஞன் இருந்தான். முகத்திலே தண்ணொளி போன்ற எழில் பொழிகிற பையன் அவன்.
“நான் கேட்கிற முரசுச் சத்தம், எங்கேயிருந்து வருகுது” என்று கேட்டான் பிசாசு.
“எனக்குத் தொியாது. நான் பிறந்ததிலிருந்து இந்த முரசுச் சத்தம் நான் எங்கு போனாலும் அதுவம் என்னோடயே வருகுது. ஆனா அது எங்கேயிருந்து வருகுது எண்டு எனக்குத் தொியாது. அது எப்பயும் ஒரே மாதிாியாத்தா;ன இருக்குது. அது என்கூடவேதான் வந்துகொண்டு இருக்குது” என்றான் பையன்.
பிசாசு எழுந்து போய் பையனுக்கருகில் அமர்ந்தான். “நீ போர் வீரனா ?” என்று பிசாசு கேட்டான். அந்த நேரத்தில் முரசு முழங்கும் சத்தம் நின்று போனது.
“போர் வீரனா.. ?, அப்படியென்றால் என்ன.. ? “ என்று மீண்டும் பையன் கேட்டான்.
“என்ன..! அப்ப.. உனக்கு போர் வீரனெண்டால் என்னெண்டு உண்மையிலேயே தொியலையா ? “ என்று பிசாசு கோபத்துடன் கத்தினான்.
குசினிப் பக்கம் போய்க்கொண்டிருந்த மதுக்கடைக்காரன் திரும்பி வந்து “போர்வீரனெண்டா எனக்கும் ஒண்டும் தொியாது என்று சொன்னான்.
“ம்ஸம்ஸ நல்லம், எல்லோரும் வாங்கடா. போர் வீரனெண்டா போரை உருவாக்குபவன்..” என்று பிசாசு கத்தினான.
“போர்..! போர்..! அப்படியென்டா என்ன ? என்று சுந்தரவதன பையன் கேட்டான்.
“ஏய்ஸ, உனக்கும் போரெண்டா என்னவெண்டு தொியலையா, அடப் பாவமே..” என்று பிசாசு நக்கலாகக் கொக்காித்தான்.
“இல்ல.. இல்ல.. அந்தச் சொல்லே எனக்குத் தொியாது” என்று அப்பாவித்தனமாக பையன் சொன்னான்.
அப்போது, மிகுந்த கோபத்துடன் தனது தலையை தனது கைகளால் பிடித்தவாறு “நான் போரக் கண்டுபிடிக்க மறந்திட்டனா ? போர உருவாக்கிற வழிகள கண்டுபிடிக்க மறந்திட்டனா ?.” என்று கூவலுடன் கத்தினான்.
மதுக்கடைக்கு வெளியே வீதியோரத்தில் ஒரு சின்னப் பெண் பாடிக்கொண்டிருந்தாள்.
மாது ஒருத்தி படலையைத் திறந்தாள்.
மரணம் என்று பிசாசு கத்தினான்.
அந்த மாதொருத்தியோ மரணமாகிப் போனாள்.
அவளது ஆன்மா நரகத்திற்கு பறந்தது.
“எனக்கு ஒரு நிலக்காித் துண்டு தா” என்று பிசாசு கத்தினான. அவனுக்கு ஒரு துண்டை மதுக்கடைக்காரன் கொடுத்தான். “இது பொிசில்ல. எனக்கு அதவிடப் பொிய துண்டு வேணும்” என்றான் பிசாசு. அப்போது மதுக்கடைக்காரன் தன்னிடமிருந்த மிகப் பொிய துண்டைக் கொண்டு கொடுத்தான்.
“இதவிடப் பொிசா வேணும்”
“இதவிடப் பொிசு, எனக்கிட்ட இனி இல்ல. இதுதான் இருந்திச்சி. எனக்கிட்ட இருந்த பொிய துண்டுகளிலெல்லாம் பொியது இதுதான்.”
“இதுதான் உன்னிடமிருந்த பொிய துண்டென்றா பரவாயில்ல. .. பாப்பம்..” என்று பிசாசு கூப்பாடு போட்டான். புின் மேசையில் ஏறி பின்வருவமாறு உரையாற்றத் தொடங்கினான்.
“உங்களில யாருக்கு போரெண்டா என்னெண்டு தொியாதோ, அவங்கெல்லாம் காத கூர்மையாக்கிக் கொள்ளுங்க”
மதுக்கடைக்குள் முணுமுணுப்புக்களும் ஆரவாரங்களும் கேட்கத் தொடங்கின. குழப்பம் உருவாகும்போல் இருந்தது. மதுக்கடைக்காரன் கொஞ்சம் கஸ்டப்பட்டு ஆரவாரம் செய்தவர்களை இருக்கையில் இருக்கச் செய்தான்.
“இந்த சுவரப் பாருங்க..” என்று தொடர்ந்தான் பிசாசு. “இந்த ஒண்டுக்குமே உதவாத நிலக்காித் துண்டால போரெண்டா நான் என்னெண்டு காட்டப் போறன். பின்னர் சுவரை நோக்கி சுழன்று மிகுந்த கோபம் கொண்டவனாக பிசாசு சுவாில் வரையத் தொடங்கினான். அவன் ஒரு இராட்சத குடைக்காளானை வரைந்தான். மதுக்கடையின் சுவர் பூராக அந்த இராட்சத குடைக்காளான் முளைத்திருந்தது. வுரைந்து முடித்து, முளைக்கச் செய்த பின்னர், பிசாசு நின்ற மேசையிலிருந்து இன்னொரு மேசைக்கு பாய்ந்து பின்வருமாறு பிரகடனப்படுத்தினான்.
“இப்ப.. நீங்க எல்லாம் இருக்கீங்க. நான் உங்க எல்லோருக்கும் உங்கட போரெண்டா என்னெண்டு வரைஞ்சு காட்டிட்டன். இது சின்னப் போர். எனக்கு அவன் தந்த நிலக்காித்துண்டு, உண்மையான பொிய போர வரைஞ்சி காட்ட முடியாதளவிற்கு சின்னது எண்டபடியால, நான் உங்களுக்கு வரைஞ்சு காட்டினது சின்னப்போர்தான்” என்றான் பிசாசு.
எல்லோரும், கைதட்டி ஆரவாரம் செய்து பிசாசைப் புகழ்ந்து விட்டுச் சென்றார்கள். அங்கே பிசாசையும், மதுக்கடைக்காரனையும், எழில்பொழிகிற சுந்தரவதனப் பாலப் பையனையும் தவிர வேறு எவரும் இல்லை.
“என்னெண்டாலும் இது சின்னக் குடைக்காளான்தான். இது சும்மா சாதாரண அளவுதானே இருக்கும்” என்றான் அப்பாவித்தனமாக பையன்.
“போர்வீரனென்டா, இந்தமாதிாி குடைக்காளான்கள வளர்க்கிற ஆக்கள் எண்டு உனக்கு இப்பவாவது விளங்குதா ?.. உனக்கு இப்பஸ எதயுமே விளங்கிக் கொள்ள ஏலாது.” என்று பிசாசு தனது வாலைச் சுருட்டியவாறு கூறினான்.
“அதெல்லாத்தையும் விடு.. அந்த குடைக்காளான் சாதாரண காளான்மாதிாி இல்ல எண்டாவது உனக்குத் தொியுமா ?… ம்..ம்.. அதெல்லாம் கிடக்கட்டும்ஸ ஆகக் குறைஞ்சது துப்பாக்கியெண்டாலாவது உனக்கு என்னெண்டு தொியுமா ?”
“ஓம்”
“ம்.., அதுவும் ஒரு சாமான்தான். ஆகக் குறைஞ்சது அந்த ஒரு சாமானையாவது நான் கண்டுபிடிக்க மறந்துபோடல. உனக்கிட்ட துப்பாக்கி இருக்கிதா ?..
“ஓம்@
“ஓடுரா..!, ஓடு.!… உடனே போய் அதனை எடுத்துவாடா. போர் உனக்காக காத்துக்கிருக்க ஏலாதுரா. இவ்வளவு நேரம் அது காத்திருந்தது போதும்டா ? ஓடுராஸ ஓடு..”
வாலிபன் போய் தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்தான். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் மொடாக் குடிகாரனாகிய பிசாசு இன்னுமொரு போத்தல் வைனை குடித்தது முடித்துவிட்டிருந்தான்.
மதுக்கடைக்காரன் சுவாிலிருந்த குடைக்காளானைப் பார்த்தான். தலையைச் சொறிந்தவாறே “என்ர அம்மாடியோவ்.. என்ன பொிய குடைக்காளான்!. என்ன மாதிாி, இந்தக் காித்துண்டால எப்பிடிக் கீறியிருக்கான்” என்று கூறிவிட்டு குசினிப் பக்கம் சென்றுவிட்டான்.
பிசாசு மகிழ்ச்சி இழந்தவனாக காணப்பட்டான். “என்ன மொக்கன். மடையன், தல கழண்டவன் நான். என்ர மண்டக்குள்ள என்ன இருக்குதோ. நான் செய்ய வேண்டிய வேல எவ்வளவோ கெடக்குது. தேவையில்லாம வேற வேலயெல்லாம் செய்யறன். நூன் போர, சண்டைய எப்ப உருவாக்கப் போறனோ ? எனக்கே தொியாது. ம்.. பரவாயில்ல ம்.. அதுக்கு கொஞ்சம் காத்திருந்தா ஒண்டும் கொறஞ்சு பொயிடப்பொறதில்ல. நெசமான போர் எண்ட தேனை, அந்தத் தேனின்ர சுவைய அறிய, இந்த தேனை கூட்டிலிருந்து வடிச்சிச அவங்களுக்கு கொடுக்க வேணும். நான் முதன் முதலா செய்ய வேண்டிய வேல அதுதான். அவங்களுக்கு போர் எண்டா என்னெண்டு தொியாதாம். பிசாசு மதிக்கும், பிசாசின் கெளரவப் பிரஜைகளே, போரெண்டா என்னெண்டு தொிய அவங்களுக்கு ரொம்ப காலம் பிடிக்காது. அவங்கட எல்லோாின் முகங்களிலயும் நான் ரொம்ப நேசிக்கிற என்ர அன்பான போர் ஆரவாரப்படத் தொடங்குது”
பையன் தனது துப்பாக்கியுடன் ஏற்கனவே வந்திருந்தா;ன. பையனின் துப்பாக்கியை பிசாசு கண்டவுடன், பிசாசின் கோபம் இரட்டிப்பாக மாறியது. அதைத்தான் அவர்கள் துப்பாக்கி என்கிறார்களா ? அவர்கள் அறிவீனத்துக்காகவன்றி வேறு எதற்காக பயன்படுத்த வெளியே எடுக்கிறார்கள். எல்லோரும் கறைபடிந்தவர்கள். களங்கமானவர்கள். வெறுக்கத்ததக்கவர்கள். அவர்கள் ஊனமான ஈனப் பிறவிகள். பிசாசு துப்பாக்கியைப் பிடித்திழுத்து அதனை முறுக்கினான். பையன் ஆச்சாியத்தால் கண்களைத் திறந்து சத்தம் போட்டான்.
பிசாசு நெருப்புக்கு அருகில் போனான். குழலெடுத்து ஊதினான். உடனே அருமந்தமான ஒருவருமே கண்டிருக்காத துப்பாக்கியாக அதனை மாற்றினான்.
“நான் அத தொட்டுப் பார்க்கட்டா ?.” என்று பிசாசு கேட்டான்.
“ம்.. நல்லம்.. இது உன்ரதான்ஸ நான் உனக்கு இதனைதத தாறன்” என்று பிசாசு பதிலிறுத்தான். இதற்கு பையன் நன்றி கூறினான்.
“எனக்கிட்ட நன்றி மட்டும் சொல்லாத.. அதெல்லாம் என்ன எப்போதும் ஏமாத்தற வேல மாதிாி”.
அந்தச் சுந்தரவதன எழில் பொங்கும் வாலிபப் பையன் துப்பாக்கியை கட்டியணைத்து முத்தமிட்டான். அதனை ஒரு பெண்ணாக நினைத்து கட்டிப் பிடித்து நடனமாடத் தொடங்கினான்.
“நீ உன்ர துப்பாக்கியத்தான் காதலிக்க வேணும். ம்.. என்ன நான் சொல்றது விளங்குதா ?..” என்;றான் பிசாசு. “ஒம்.. உண்மைதான்..” என்றான் பையன் நடனமாடிக்கொண்டே. சைகை மூலம் பிசாசு அவன் நடனமாடுவதை நிறுத்தி, மேசைக்குப் பின்னாவல் போகச் செய்தான்.
“அயல் நாட்டை, ஆக்கள் எப்பிடிக் கூப்பிடுறாங்க எண்டு தொியுமா ?. அந்த அயல் நாடும் உன்ரதான் தொியமா ?” என்று பையனிடம் பிசாசு கேட்டான். பையன் அதிர்ச்சியடைந்தவனாகக் காணப்பட்டான்.
“என்ன!.. பக்கத்துநாடா ?.. பக்கத்து நாடெண்டு ஒண்டு இல்லையே இஞ்ச. இஞ்சயிருக்கதெல்லாம் ஒரே ஒரு நாடு. அதுதானெ உலகம் என்ற ஒரே நாடு. உலகம் என்கிறது ஒரே ஒரு நாடுதானே!” என்றான் பையன். பையனின் எழில் பொழிகிற சுந்தரவதன முகத்தில் ஓங்கி பலமாக ஒருஅறைவிட்டான். ஆந்த ஒரு அறை அவனை இரு முறை கிறுக வைத்தது.
“யாராவது, எப்போதாவது இதமாதிாி அப்பாவித்தனமான மக்கள பார்த்திருக்கீங்களா ?..” என்று பிசாசு உறுமினான்.
“உலகம் என்பது ஒரு நாடாம்,.. மடையன்கள்.., மொக்கன்கள்.., பைத்தியக்காரன்கள். இவனுகள்ள தலைக்குள்ள என்ன களிமண்ணா இருக்கிது. எல்லோரும் கேளுங்க. நான் சொல்றன். போர் மூழுறதுக்கு குறைஞ்சது ரெண்டு நாடுகளாவது தேவை தொியுமா ? மூடச்சனங்களே. ஆற்றுக்கு அக்கரையிலுள்ள அடுத்த ஊரை எல்லோரும் பக்கத்து நாடு எண்டு எடுத்துக்குங்க. அதுதான் எங்கட எதிாியின் நாடு. பைத்தியக்கார மொக்கன்களே! ஏங்களுக்கு எதிாி எண்டா என்னெண்டு தொியாதெண்டு யாராவது சொல்லுங்கடா பார்ப்பம். ஒருத்தனும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னா பளார், பளார் எண்டு ரெண்டு தருவன். கவனம். நீங்க எல்லோரும் இப்போதிருந்தே அடுத்த ஊர் மக்கள வெறுக்கவேணும்;. அவங்க எல்லோரயும் மனப்பூர்வமா வெறுக்கோணும். ஏன்ன நான் சொல்றதெல்லாம் விளங்கிச்சா ?”
“ஆனா நான் கட்டப்போற பெண்ணைஸ” என்று பையன் இழுத்தான்.
“நீ கட்டப்போற பெண்ணைக்கூட.. அவள நீ மற்ற ஆக்கள விட கடுமையா வெறுக்கோணும். நீ அவங்க எல்லோரையும் வெறுத்தொதுக்கி, எல்லோரையும் சாகவை”.
பையன் குதித்துக் கொண்டே “என்ர இந்தத் துவக்காலயா ?” என்று கத்தினான்.
“அதுக்கு எனக்கு ஏலாது. நாங்க துப்பாக்கி வச்சிருக்கிறது பறவைகள, மிருகங்கள கொல்றதுக்குத்தான்..”
“நீ உன்ர துவக்காலதான் அவங்கள கொல்ல வேணும். ஏனென்டா முதலாவது போர் அப்படித்தான் துவங்க வேண்டியிருக்குது. நீதான் முதலாவது போர் வீரனாகவும் இருக்கப் போகிறாய்”.
“அப்ப நீ என்ன சொல்லுறாயெண்டா, போரை உருவாக்கோணும் எண்டா மக்கள கொல்லோணும் எண்டு ?.” என்று இராட்சதக் குடைக்காளானைப் பார்த்தவாறு பையன் கேட்டான்.
“அதெல்லாம் சாி, போரை உருவாக்கோணும் எண்டா மக்கள கொல்ல வேணும் எண்டுதானே அர்த்தம். அதுவும் ஆயிரக்கணக்கான மக்களக் கொல்ல வேணும். என்ன வேடிக்ககை இது! எண்டு பாரன நீ;!”
“அப்ப இராட்சத குடைக்காளான்” என்று வினவினான் பையன்.
“இராட்சத குடைக்காளான்தானே ?.. அது பிந்தி வந்து சேர்ந்திடும். மிகவும் பிந்தித்தான் அது வந்து சேரும். நீ அப்போ இருக்க மாட்டாய். செத்துப் போயிருப்பாய்.”
“என்ன!. என்னக் கொன்றுபோடுவாங்களா ?”
“ம்.. அப்படியும் இருக்கலாம்.”
“இந்தப் போாிலதானே..”
“ஓம்..”
“அப்படியெண்டா எனக்கு போர் வீரனாயிருக்க விருப்பமில்லை. எனக்கு போரை உருவாக்க ஏலாது.”
பிசாசு மேசை மேலல ஏறிநின்று கொண்டு பயங்கரமாக எருமைமாடுபோல உறுமினான். “நான் உனக்கு என்ன செய்யச் சொன்னேனோ, அதத்தான் நீ செய்ய வேணும்” என்று பையனைப் பார்த்து அதட்டினான்.
மதுக்கடைக்காரன் குசினிப்பக்கமிருந்து திரும்பி எண்ணெய்ச் சட்டியை இழுத்துக்கொண்டு கடைக்குள் வந்தான். “நான் இந்தச் சுவாிலுள்ள அளவுக்கு இராட்சதக் குடைக் காளானை எங்கே காணலாம் எண்டு எனக்குச் சொல்ல வேணும்” என்று காளானைக் காட்டிக் கேட்டான்.
“திரும்பிப் போடா குசினிக்கு.. மொக்கா.. அந்தக் காளானை சாப்பிடுவது நீ இல்லடா மாடா. அந்தக் காளான்தாண்டா உன்ன சாப்பிட்டுடும்” என்று பிசாசு கத்தினான்.
பிசாசு மேசையிலிருந்து இறங்கினான். பையனை தோளைப் பிடித்திழுத்து அவனை இருக்கச் செய்து அவனிடம் “போரை விரும்புகிற அந்த மனிதன் நீயாத்தான் இருக்கோணும் எண்டு நான் நினைக்கிறன். இ;ல்லையெண்டு மட்டும் சொல்லாத. உன்னப்பத்தி எனக்கு நல்லா பூியுது. நீ ஒருபோதும் யாரோடயெண்டாலும் சண்டை பிடிச்சதை நான் கண்டதில்லதான். எண்டாலும்.. சாியே ?, ஏற்கனவே நான் உனக்கு வசைமாாி பொழிஞ்சிருப்பேன், நான் சொல்றத நல்லாக்கேளு. நீ யாரை அதிகம் விரும்பல்லயோ அவங்கள மத்த ஆக்கள் உணர்த்திப் பேசுறத நீ விரும்பமாட்டாய். நீ தனிப்பட்ட ரீதியில் வெறுக்கிற ஆட்டகளும், வெளிப்படையாக நீ வெறுக்கிற ஆட்களும் நிச்சயமா அங்க இருக்கோணும். அவங்களோடதான் நீ சண்டை பிடிக்க வேணும். அவங்கள நீ வெறுக்கோணும். ஏனெண்டா அவங்களோட நீ சண்டை பிடிச்சுத்தான் ஆகவேணும். குாலம்பூரா அவங்கள வெறுத்துக்கொண்டே இருக்கோணும். சண்டை பிடிப்பதற்கான தேவை ஏதாவது இருக்கிது எண்டு நீ நினைக்கிறாயா ?.
பையன் தாழ்ந்த குரலில் பின்வருமாறு பதிலிறுத்தான். “ஓம்.. அந்த தேவைய நான் இப்ப உணர்ந்திட்டன். ஆனா நான் சண்டை பிடிக்க விரும்பினது.. விரும்பினதுஸ”
“யாரோட.. யாரோட..” என்று முகம் பிரகாசித்தவனாக பிசாசு ஆனந்தக் கூத்தாடிக் கத்தினான்.
“நான் சண்ட பிடிக்க விரும்பினது என்ர கல்யாணத்துக்கு தடையா நிற்கிற, நான் கட்டப்போற பெண்ணின்ர சகோதரனோட..”
அப்போது உடனடியாக மதுச்சாலையின் கதவினைத் திறந்துகொண்டு தனது எதிர்கால மனைவியின்; சகோதரன் தோன்றினான்.
“போ.. உடனே போஸ” என்று பையன் காதில் கிசுகிசுத்தான்.
“சந்தா;ப்பத்தை தவறவிடாமல் பாவித்துக் கொள்ளு. ஒருத்தரும் உன்னப் பார்க்கவும் மாட்டாங்க. கேட்கவும் மாட்டாங்க. முதல்ல போய் அவனைக் கோப்படுத்து. அவனுக்கு விருப்பமில்லாத எல்லாத்தையும் கதை. கோபம் வாறமாதிாியெல்லாம் கதை. உடனே சண்டை தானாகவே வந்துவிடும்.
பையன் எழுந்து தான் திருமணம் முடிக்கப்போகும் பெண்ணின் சகோதரனிடம் போய் அவனின் காதிற்குள் என்னவோ கதைத்தான். அதற்கு அவன் கேள்வி;க் கணைகள் கொண்ட துழாவும் பாார்வையை பையன்மேல் வீச ஆரம்பித்தான். அப்போது பையன் அவன் முகத்தில் காறித் துப்பினான். இருவரும் மதுக்கடையைவிட்டு வெளியேறினார்கள். அப்போது பிசாசு ஜன்னலடியிலிருந்து இளைப்பாறத் தொடங்கினான்.
நிசப்தமான இரு நிமிடங்களுக்குப் பிறகு, பையன் மதுக்கடைக்கு மீண்டும் திரும்பினான். அவனின் உடம்ப பூராக புழுதிகள் படிந்திருந்தன. அவனது உடுப்பில் இரத்தத் துளிகள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. அவனின் கண்களில் ஆழமான ஒரு ஒளி தென்பட, அவன் புன்முறுவல் செய்து கொண்டிருந்தான்.
“நான் அவனைக் கொன்றுபோட்டன். நான் அவனைக் கொன்றுபோட்டன்ஸ அவன் சாகிறதப் பார்க்கிறது எவ்வளவு ஆனந்தமாக இருந்திச்சு..” என்று ஆரவாாித்தான்.
மதுக்கடை முற்றத்திற்குள் வெண்கல வாத்தியக்குழு நழைந்தது. பிசாசின் வெண்கல வாத்தியக்குழு போர் வீரா;கள் போல மெட்டுக்களுடன் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு நுழைந்தது. அவர்கள் இசைத்தும் பாடிக் கொண்டும் இருந்தார்கள்.
“நாங்க வாத்தியக் குழுவத் தொடருவம்.. நாங்க அடுத்த கிரமத்திற்குப் போய், அந்தக் கிராமத்தாக்களிடம், நீ அவங்கட மகனைக் கொன்றுபோட்டாயென்று சொல்லுவம். அவங்க அவங்களின்ர துப்பாக்கிகள வெளியே எடுத்து உன்னத் தாக்க முயற்சிப்பாங்க. ஆனா உன்ர ஆக்கள் பார்த்துக் கொண்டிருப்பாங்களா ? இ;ல்ல.. இல்ல..இல்ல. உன்ர ஆக்கள் வந்து உன்னைப் பாதுகாப்பாங்க. வா! சுந்தரவதனமுடைய எழில் பொங்கும் போர்வீரனே! எங்கட போர் உனக்காக காத்துக்கொண்டு நிற்கிறது “ என்று பையனிடம் பிசாசு கூறினான்.
வெண்கல வாத்தியக்குழுவும், பிசாசும், போர் வீரரா;கள் எல்லோரும் அயற் கிராமம் இருந்த திசைநோக்கி போனார்கள். வூத்தியங்கள் மென்மையான மெட்டுக்களில் இசைக்க பிசாசு நடனமாடினான். பையன் சிாித்தான்.
அப்போது போர் வீரா;கள் பெருகினார்கள். இரு போர் வீரா;கள் நான்கு போர் வீரா;களாகவம், பின்னர் எட்டு, பின்னர் பதினாறு, பின்னர் முப்பத்தியிரண்டு, பின்னர் அறுபத்தி நான்கு, பின்னர் நூற்றிஇருபத்தெட்டு, பின்னர் இருநூற்றி ஐம்பத்தாறு, பின்னர் ஐநூற்றி பன்னிரண்டு, பின்னர் ஆயிரத்து இருபத்தி நாலு, பின்னர் இரண்டாயிரத்து நாற்பத்தெட்டு, பின்னர் நாலாயிரத்து தொண்ணூற்றாறுஸ..
அங்கே வசைகளும், அவமதிப்புகளும், பின்னர் அடித்தல்களும், பின்னர் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் இருந்தன. மக்கள் ஓடினார்கள். மறைந்தார்கள். தாக்கினார்கள். சுயபாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டார்கள். கொன்றார்கள். கீழே விழுந்தார்கள். எழும்பினார்கள். மீண்டும் விழுந்தார்கள்ஸ
துப்பாக்கிகள் வந்து சேர்ந்தன. எல்லா வகையான துப்பாக்கிகளும், சிறியவைகள், நடுத்தர அளவுடையவைகள், பொியவைகள், மிகவும் சிறியவைகள், மிகப் பொியவைகள், பின்னர் பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் பொருத்தப்பட்டட விமானங்கள், ஆயுதங்கள் பொருத்தப்பட்டட கப்பல்கள், கார்கள், புகையிரத வண்டிகள், சைக்களிகள், மோட்டடார் சைக்கிள்கள், குழந்தைகளைச் சுமக்கும் ஆயுதம் பொருத்தப்பட்ட வண்டிகள்ஸ
என்றம் நிறுத்த முடியாதவாறு வெறித்தனமாகவும், வேகமாகவும் போராட்டம் வளர்ந்தது. போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்ததுஸருந்தது…ந்ததுஸததுஸது.
அப்போது ஒரு நாள், வானம் தெளிவாக இருந்தபோது பிசாசு தனது கையினால் சிறிய ஒரு அடையாளத்தை ஆக்கினாான். அப்போது இராட்சத குடைக்காளான் தோன்றியது.
amrithaam@yahoo.com
- காயமே மெய்
- இசையரங்கம் – அக்டோபர் 9
- தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கம் – துவக்கவிழா
- அரிமா விருதுகள் 2005
- எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – விமரிசன அரங்கு – ஆகஸ்டு, 20
- பாவண்ணனின் வணக்கம் தமிழகம்
- வரட்டு அறிவுக்கு அப்பால்!
- மதியிறுக்கம் (Autism) : ஒரு எளிய அறிமுகம்
- பாதுகாப்பாய் புவிக்கு மீண்ட டிஸ்கவரி விண்வெளிக் கப்பல் (Safe Landing of The Space Shuttle Discovery)
- இல்லற ஆறு
- நிலாக்காலக் கனவுகள்
- கீதாஞ்சலி (35) இதயத்தில் உனக்கோர் இடம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சுப்ரபாரதிமணியன் கவிதைகள்
- ச மு த் தி ர ஆ ண் ட வ ர் ( பிரஞ்சுக் கதை – ஆங்கிலத்தில் அனடோல் பிரான்ஸ் )
- பெரியபுராணம்-51 – திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி
- முதலாளித்துவச் சூழலியல் – 01 – முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
- வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா
- மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!
- துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும்
- திண்ணை அட்டவணை : 1984 சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்
- அம்ச்சி மும்பை.
- பிசாசும் இராட்சதக் குடைக்காளானும் ( பிரெஞ்சு மூலம்: Michel Tremblay : ஆங்கில மூலம்: Michae Bullock )
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி: பாகம்-3)
- காதல் என்பது காத்திருப்பது
- இரண்டு குறுங்கதைகள்