பாிமாணங்களை மீறுவதெப்போ ? (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம்)

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

வ.ந.கிாிதரன்


இருப்பிற்குண்டா அர்த்தங்கள் ?
இருப்பென்பதோர் உடலா ? கனவா ?உள்
உணர்வா ?
இந்த நிலவும், மழையும், இடியும்,
சிட்டும், கழுகும்,…இவை யாவுமே
இருப்பற்ற வெறும் கானல் நீர்க்
காட்சிகளா ?
மின்துடிப்பில் தோன்றும் வெறும்
மாயங்களா ?
எல்லாமுணர்வென்றால், அப்பால்
எதுவுமேயில்லையென்றால்,
உணர்வு மட்டுமுண்மையா ? அல்லது
அதுவும் பொய்யா ? பொய்யென்றால்
இந்தக் கவிதை,
இதனைப் படிக்கும் நீ,
இந்த வான்,மண், போர்,
துயரம், மகிழ்ச்சி எல்லாமே
காலத்திரைப்படங்களென்றால்
பொய்மைக்குள்
பல பொய்மைகளைப்
படைத்ததுமொரு பொய்யா ?
பொய்யென்றால் எதற்கிவர்
பொய்மைக்குள்
உண்மையைத் தேடுகின்றார் ?
உண்மையென்றால் இப்பொய்மையும்
ஓருண்மையன்(றோ)றா ?
புாிகின்றது…அ(நு)ணுகிப் பார்த்தால்
அடிப்படையில் அனைத்துமே
மின்காந்த அலைகளென்பது.
அலைகளே சடமாயும் சுடராயும்
நர்த்தனமிடுமிந்த
அண்டமென்ன, அடியேனென்ன
அனைத்துமேயொன்றுதான்,இல்லை
வேறுபாடென்பது. அதேசமயம்
பாிமாணங்களிற்குள் உழன்றிடுமிருப்பில்
புாிதல் கூட
புாிவதில்லையென்பதும் கூடவே
புாிகிறது.
பாிமாணங்களை மீறுவதெக்காலம் ?
புாிவதெக்காலம் ?

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்