பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ



செப்டம்பர் 22 ஆம் நாள் பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 -ஆம் ஆண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தித் தருவதற்காகவே பாரிஸ் வந்திருந்தார் புகழ்பெற்ற எழுத்தாளரும் சாகித்திய அகாதமி பரிசு பெற்றவருமான பிரபஞ்சன். பாரிசில் உள்ள பல்கலைக்கழக நகரின் இந்திய மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவை முத்தமிழ்ச் சங்கம், தமிழ்வாணி என்ற தாளிகை முதலியவற்றை நடத்தி வரும் திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்) முன்னின்று முயற்சி செய்து சிறப்பாக நடத்தினார். இவருக்குத் துணையாக, பிரான்சுக் கம்பன் இதழ், மோ நகர் பூக்கள் கழகம், திரான்சி நகர் தமிழர் இல்லம், திராப்பு நகரைச் சாhந்த தமிழ்ச் சங்கம், லியோன் நகரைச் சேர்ந்த திரு சம்பத் எதுவார், தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற நாவலாசிரியர் திரு நாகரத்தின கிருஷ்ணா, ஷெவி லா ரூய் நகரப் பிரஞ்சு இந்தியக் கலாச்சாரக் கழகம், லா கூர்நெவ் நகரச் சிவன் கோயில், பாரீசுத் தமிழ்ச் சங்கம், ஓர்லி நகர் தமிழியக்கன் திரு தேவகுமாரன், மகேசு ஆர்ட்ஸ் ஓவியர் அண்ணாதுரை, செர்ழி போந்துவாஸ் நகரின் பிரஞ்சு இந்தியத் தமிழ்ச் சங்கம், செர்ழி கலைவல்லுநர் திரு சீனு கணேஷ், திரு சிவா, பேராசிரியர் பெஞ்சமின் லெபோ… முதலியோர் இவருக்குத் துணை நின்றனர்.

குத்து விளக்குகளுக்குத் தாய்க்குலங்கள் ஒளி ஊட்டத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது, பரதக் கலை ஆசிரியை திருமதி சேஷா கற்பகம் அவர்களுடைய அருமையான பரத நாட்டியம் நிறைவு பெற்றபின் முத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்) அனைவரையும் வரவேற்றார். நகையும் சுவையுமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோஅழைப்பு விடுக்க புதுவைக்குப் புகழ் சேர்த்து வரும் நாவலாசிரியர் பிரபஞ்சன் தலைமை ஏற்று விழாவைத் தொடங்கி வைத்தார். புதுச்சேரி லிசேவில் பல்லாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற செவாலியே சச்சிதானந்தன், தமிழியக்கன் திரு தேவகுமரன் இருவரும் வாழத்துரை வழங்கினர். கவிஞர் கி; பாரதிதாசன, ‘பாரதி; இன்று வந்தால்’ என்ற தலைப்ப்pல் தம் உள்ளத்திலிருந்து சில செய்திகளைக் கவிதையாக்கிப் படைத்தார். இமய மலையைப் பாரதியின் தலைப்பாகையாக உருவகப்படுத்திக் கவிதை படை(டி)த்ததை அனைவரும் நன்கு ரசித்தனர். புதுச்சேரிப் புலவர் வாணிதாசனாரின் மருமகனும் பல்லாண்டுகள் ஆசிரியப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவருமான திரு வ.கலியபெருமாள் பாரதியார், பாரதிதாசனார், வாணிதாசனார் என்ற முப்பெருங்கவிஞர்களை ஒப்பிட்டுத் தம் கருத்துகளை வெளியிட்டுப் பேசினார். திரு நாகரத்தின கிருஷ்ணா, ‘பாரதியின் பெண்ணியல்’ பற்றி உரையாற்றினார். பிரபஞ்சன் தம் தலைமை உரையில் பாரதியின் ஆளுமையை உணாத்திப் பல கோணங்கள்pல் அருமையாகப் பேசியதை மக்கள் ஆடாமல் அசையாமல் ரசித்தனர்.

பகலுணவுக்குப் பின் சபை மீண்டும் கூடியது. இந்த விழாவுக்கென அச்சிடப்பட்ட விழா மலரை பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமக்கே உரித்தான அடுக்கு மொழியில் மிடுக்காக அறிமுகப் படுத்திப் பேச, மலரைத் திரு பிரபஞ்சன் வெளியிட்டார். சிறப்பாக அழைக்கப் பட்டவர்கள் மேடையில் மலரைத் திரு பிரபஞ்சன் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டனர். மற்றவர்களுக்கு மலர்கள் சபையில் வழங்கப்பட்டது. மலரின் அட்டைப் படத்தை அழகான முறையில் வடிவமைத்த திரு சிவாவுக்குக் பாராட்டுகள் வழங்கப் பட்டன. பின்னர் பாரதியாரின் கவிதைகள் அடங்கிய கையடக்க ஏடுகளை இலவசமாகவே முத்தமிழ்ச் சங்கம் வழங்கியது. பின்னர், ஈழக் கவிதாயினி திருமதி லினோதினி ஷண்முகநாதன் பாரதி பற்றிய தம் கண்ணோட்டத்தைக் கவிதையில் தந்தார். தொடர்ந்து காரை. இளையபெருமாள் என்ற இசைக்கலைஞர் – இவரும் பாரதி விழாவுக்காகவே கடலூரிலிருந்து பாரீஸ் வந்தவர் – இனிய குரலெடுத்துப் பாரதியார், பாரதிதாசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் … பாடல்களை உணர்ச்சியோடு பாட மக்கள் பெரிதும் சுவைத்து மகிழ்ந்தனர். திரு பிரபஞ்சன், முத்தமிழ்ச்; சங்கம் வழங்கிய பாராட்டுப் பட்டயங்களைக் கவிஞர் கி. பாரதிதாசனுக்கும் இசைக் கலைஞர் காரை. இளையபெருமாளுக்கும் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பதக்கம் அணிவித்துப் பொருமை படுத்தினார். ஏனைய பேச்சாளர்கள், கவிதாயினி … முதலியோர்க்கும் அவர் பொன்னாடை போர்த்திப் பதக்கம் அணிவிக்க அனைவரும கைதட்டி மகிழ்ந்தார்கள். பாரிசில் உள்ள இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் சார்பாகச் செவாலியே சிமோன் யூபர்ட் திரு பிரபஞ்சன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார். முத்தமிழ்ச் சங்கம், பாரதி விழாக்குழு சார்பாகத் திரு பிரபஞ்சன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டுப் பதக்கம் வழங்கப் பட்டது. பின் திரு பிரபஞ்சன் அவர்கள் தம் இறுதி உரையை நிகழ்த்தினார். சிறுகதை, கதை, இக்கால இலக்கியம் மேல நாட்டு இலக்கியம் எனப் பலவற்றை;க குறித்து விரிவாக, சிறப்பாகப் பேசிய அவர் விழுமியங்களை (வேல்யூஸ் – எயடரநள) வலியுறுததிப் பேசினார்.

இறுதி நிகழ்ச்சியாக, மகாகவி பாரதியின் கனவுகள் : மெய்யாகி ஒளிர்கின்றன? பொய்யாகி மறைகின்றன? என்ற தலைப்பில் பட்டிமன்றம் தொடங்கியது. மெய்யாகி ஒளிர்கின்றன என்ற அணியில் திரு நாகரத்தின கிருஷ்ணா, திருமதி ராசி சிமோன் சிறப்பாக வாதிட்டனர். பொய்யாகி மறைகின்றன என்று மிகச் சிறப்பாக வாதிட்டவர்கள் திரு யோகானந்த அடிகள், திரு மோரோ நடராசன். சுதந்திரம் பெறுதல் என்ற கனவைத் தவிர, பாரதியின் ஏனைய கனவுகள் – சாதி, மத பேதமில்லா சமூகம், பெண்ணடிமை, இந்திய ஒற்றமை…- பொய்யாகி மறைகின்றன என்று சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார் நடுவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. தம் கருத்துக்கு பாரதியாரின் பேத்தி விஜய பாரதி அவர்களின் கூற்றை எடுத்துக் காட்டி மகாகவியின் கனவுகள் பொய்யாகி மறைகின்றன எனத் தீர்ப்பு சொல்லி மகாகவியின் கனவுகளை மெய்யாக்க நாம் முயலவேண்டும் என்ற வேண்டுகொளுடன் பட்டி மன்றத்தை முடித்துவைத்தார். முத்தமிழ்சங்கத்தின் நன்றி உரையுடன் விழா இனிதே நடந்து முடிந்தது.

இந்த விழாவுக்காகத் தம் உடல் நலத்தையும் பாராமல் தன்னலம் இல்லாமல, திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்), திரு சிவா, திரு கௌதமன் (பிரபஞ்சன் அவர்களின் மகனார்)… உட்படப்; பலரும் உழைத்தனர். அவர்கள் அத்தனை பேரும் மகாகவிக்கு உண்மையான அஞ்சலி செய்கிறவர்கள் ஆகிறார்கள். அவர்களைப் பாராட்டுவோம்.

– தகவல் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ


benjaminlebeau@gmail.com

Series Navigation

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ