பாட்டி

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


பழையக காதலிகள், பழைய அப்பா (மன்னிக்கவும் ! வெறும் அப்பா!), என்று உறவுமுறைகளை வைத்து ஞாபகங்களைத் தூசித் தட்டினால் நிறையக் கதைகள் கிடைக்கும் போல ! டைரக்டர் சேரன் சொல்லிக் கொடுத்த உத்திகளை அடியேன் கையாள ஆரம்பித்தேன் . . . பாட்டியைப் பற்றிச் சொல்லலாம். “அவ்வையார் பாட்டி” பற்றி ஜெமினி வாசன் சொல்லி விட்டார். என் பாட்டியைப் பற்றி நான் தான் சொல்ல வேண்டும். ஆரம்பிக்கலாமா . . . ?.

அவளை நாங்கள் சுமார் 40 பேரக் குழந்தைகள் (அனைவருக்கும் இப்போது வயது 40 + இருக்கும்), மொட்டைப் பாட்டி என்று கூப்பிடுவோம். கணவன் பெரும் நிலச்சுவான் தாரர். பணக்காரி. கணவனை இழந்தாள். சொத்து தன் கையிலும் பெரும்பால் சொத்துக்கள் தமயனிடம் போக அவனிடம் தஞ்சம் புகுந்தாள். தமயன் சொத்துக்களை திண்ணையில் (நம்ம திண்ணையில் இல்லை சார்!) உட்கார்ந்தே சாப்பிட்டு அழித்தான். அவள் சளைக்கவில்லை. தனியே மகங்அள் படிக்கும் மட்டும் காத்திருந்தாள். பிறகு அவர்களை வைத்து ஒரு மாளிகையே எழுப்பினாள். மற்றவர்கள் அவளுக்கு மொட்டை அடித்தாலும் அனைவரையும் அன்பால், கண்டிப்பால் அரவணைத்துச் சென்று மாளிகையின் வாழ்க்கைத் தரத்தைச் சிறப்பாக்கினாள்.

கட் !

பாட்டு 1: இங்கு ஒரு சோகப் பாட்டு . . . பின்னாலே ஒலிக்கின்றது.

எப்போதும் காவிப் புடவை ஒன்றை தோய்துக் காயவைத்து, “மடிக்” கொம்பு ஒன்று வைத்து எடுத்து போட்டுக் கொள்வாள். புடவையச் சுற்றிக் கொள்வாள். நன்றாக. போட்டு அவிழ்க்கவே மிக நேரமாகும். குளிக்க அரை மணி நேரம் ஆகும். மிகவும் கடுமையாக எங்களை வைவாள். சிரிக்க எப்போவாவது புன்சிரிப்பாள். மற்றபயடி இகழ்ச்சி உதட்டோர இதழ்களில் மண்டிக் கிடக்கும். இப்போதிருக்கும் போட்டோவிலும் (இன்றைக்குச் செத்தால் நாளைக்கு போட்டோ என்பது அவளுடைய ஒரு பழமொழி !) அதிகம் சிரிக்காமல் “உம்” மென்றிருப்பாள். பின்ன என்ன ? இப்படி தலைமுடியை வழித்தால் ?.

பழனி மொட்டை போட்டு ஒரு வாரத்திற்கு முடி மழித்து வளரும் வரை நாமெல்லாம் இருக்கமாக இருப்போம். அவளுக்கு வாரந்தோறும் ஒரு “நாவிதன்” பெயர் “சொக்கன்” என்று நினைக்கின்றேன். வந்து பண்ணிவிட்டு போவான். பரிதாபமாக பார்ப்போம். ஆனால் தன்னைச் சமூகம் எப்படி ஆக்கினாலும், பொருட்படுத்தாது “பெண் ஜென்மம்டி . . . “ என்பாள். முடியிருந்தால் நன்கு களையுடனிருந்திருப்பாள். நம்ம வீட்டு ஆண்கள் கள்வர்கள். முதல் மனைவி இறந்த வுடன் 13 வது மாத்தத்தில் நாள் பார்த்து இரண்டாம் மனைவியைக் கொண்டு வந்தார் ஒரு மாமா ! என் பாட்டியை வாழவிட்டார்களா ? கொடியவர்கள். வஞ்சகர்கள் !

கட் !

பாட்டு 2:

இங்கு தமிழ் சமுதாயத்தைத் திருத்தும் ஒரு வைரமுத்து பாட்டு 1930, 1960, 1990, 2020, 2050 இல் கூட இந்தப் பாட்டைத் திரும்பப் பயன்படுத்தலாம்!

தன்னை மறந்து, கண்டிப்போடு தன் 8 குழந்தைகளையும் வளர்த்தாள். கணவனில்லாமல் எட்டு குழந்தைகளை வளர்க்க என்ன பாடு பாருங்கள் !. என் அம்மா 7 வது. “வழித்து வார்த்த மாவு” என்று என் பாட்டி 7வது, 8வது குழந்தை (என் சித்தி தான் !) களைக் கூறுவாள். ஒரு குழந்தை வைத்துக் கொண்டு மல்லாடும் தற்காலத்துப் பெண்களைப் பார்க்கும் போது பாட்டியின் ஞாபகம் தான் வரும்.

பாட்டி தான் கிட்ட தட்ட 40 ஆண்டுகள் தன் மகன்களின் மூலமாகக் கட்டிய மாளிகையை ஆண்டு வந்தாள். (இப்போது அரிசி கோடவுனுங்க !) கோடவுன் மாதிரி வீடைக் கட்டியதால் சுமார் 40 ஆண்களும் பெண்களும் அங்கு வாழ்ந்து வந்தோம். அடிக்கடி வீட்டில் சீமந்தம், வளைகாப்பு, பிறந்த நாள் வரும். பள்ளிக் கூட நோட்புக்குகள், சிறு குச்சிகள், பென்சில்கள் வீட்டிற்கு மொத்தமா அரிசி, புளி போன்று வாங்கப் பட்டு போடப் பட்டிருக்கும்.

வீட்டில் ஆண்கள், பெண்கள் வர்க்கம் தெளிவாகப் பிரிக்கப் பட்டிருக்கும். காபி கலக்கும் போது முதல் டிகாக்ஷன் வீட்டு ஆண்களுக்கு ! பிறகு பாட்டிக்கு. அப்புறம் குழந்தைகளுக்கு. வீட்டு மாட்டுப் பெண்களுக்கு 3 வது டிகாக்ஷன். வீட்டு மாடுகளுக்கு கடைசி தான். காபிக்கு பால் எங்கு வாங்குவது ? 4 பசுக்களை வைத்து தான் அனைவருக்கும் பால், தயிர், மோர், நெய் என்று அடித்து விடுவாள். பசுக்களுக்குப் புண்ணாக்கு வைத்து வைக்கோல் போடுவது வீட்டு “மாட்டு (மாற்றான் வீட்டு)ப் பெண்கள் தான்”. அவர்கள் புலம்பிக்கொண்டே தங்கள் பிள்ளைகளிடம் வேலைகளைத் தள்ளிவிடுவது சுவாரஸியமாக இருக்கும். வைக்கோல் போடு! புல்லுக் கட்டு போடு ! நான் உனக்குப் பிடித்த முட்டைகோஸ் பண்றேன் என்பது கேட்டால் நாமும், மாடும் ஒன்றாகச் சாப்பிடுகிறோமோ என்று சந்தேகம் வந்து விடும். பெண்கள் கடைசியில் தான் சாப்பிடணும். முதலில் வீட்டுப் பெரிய ஆண்கள். சூடாகச் சாப்பிட்டு விட்டு “பெடஸ்டல்” ஃபேன் போட்டு விட்டு காலை நீட்டு உட்கார்வார்கள். இந்திரா காந்தி, நேரு என்று பேசுவார்கள். பின் குழந்தைகள் சாப்பிடும்.

பாட்டு 3:

குடும்பம் சாம்பார், ரசம், தயிர் ஊற்றிக் கொண்டு சாப்பிடுவதை நகைச்சுவையாக காண்பிக்க ஒரு கோரஸ் பாட்டு !

கடைசியாகச் சாப்பிட எங்கள் அம்மாக்கள் உட்கார்ந்தால் அவ்வளவு தான் தட்டு காயும் வரை சாப்பிட்டு கைகள் காயும் வரை உட்கார்ந்து வீட்டு, நாட்டு நடப்பை விளாசித் தள்ளுவார்கள். நடுவே பாட்டி “அடியே ! இங்க வாயேன் . . .” என்றால் “இடோ வருகிறேன் . . .” என்று அவசரமாக மெதுவாகச் செல்வார்கள். சாப்பிடுவது ஆறிப் போன அவலாயிருந்தாலும், வீட்டுப் பெண்கள் ஒய்யாரமாகச் சாப்பிடுவதும் என் மனதில் பதிந்து போயிருக்கிறது. அப்போது தான் அனைத்து நண்டு சிண்டுகள் அம்மாக்களிடம் அருகே விளையாடி அலைமோதிக் கொண்டிருக்கும். வீட்டு ஆண்கள் சாப்பிட்டு விட்டு வேலை போகும் போது சைக்கிள்களை அள்ளிக் கொண்டு போவார்கள். பஞ்சர் போடாத பழைய டயர்களின் குப்பையே வீட்டு முற்றத்தில் புண்ணாக்கும் கொட்டியிருக்கும் இடத்தில் இருக்கும். பாட்டி அதன் பக்கத்தில் தான் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பாள். கணவனை இழந்தால், பஞ்சணை கூடாதாம். எப்படியெல்லாம் நம் தாத்தாக்கள் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள் பாருங்கள் !

“டா ! காப்பி, டா போடும் நேரம் வந்தாச்சு “ என்பாள் பாட்டி. அப்போது தான் மதியம் சற்று அயந்திருக்கும் வீட்டுப்பெண்களில் ஒருவர் “அக்கா! எழுந்து போடுங்களேன் . . .” என்று ஆரம்பித்து இருப்பதிலேயே இளையவளுக்குத் தான் அந்தப் பெரும்பணி வரும். வலியவன் மெலியவனை (ளை) எப்போதும் காய விடிவார்கள். காப்பிப் பொடியில்லையேல் கொட்டை வைத்து வாணலியில் வறுக்க ஆரம்பித்து விடுவார்கள். வாசனையாக இருக்கும். வீட்டு வேலைக்காரிகூட அம்மாக்களைக் கூட்டு வைத்துக் கொண்டு அக்கம் பக்கம் கதைகளை அள்ளி விடுவர். அப்போது தான் மணமுடன் தயாரிக்கப்படும் காப்பி அவர்களுக்கும் கிடைக்கும்.

பாட்டு 4:

இங்கு ஆண்கள் சைக்கிளில் போவதையும், வீட்டில் காபி போடுவதையும் மாறி மாறி காண்பித்து டயர்களை “குளோசப்” வைத்துக் காண்பித்து ஒரு சின்னப் பாடலைப் பதிவு செய்தால் மீண்டும் மீண்டும் அதையே படத்தில் போடலாம்.

மாடுகள் பக்கத்தில் தான் உட்கார்ந்து படித்திருக்கின்றேன். அமைதியாக இருக்கும் சூழலில் மெதுவாக “அம்மா” என்று பசுக்கள் முனகும். அசை போடும். வாலைத் தோக்கி “அவசரக் கழிப்பு” ஒன்றை நடத்தும். செய்யுள் மனப்பாடம் செய்து செய்யுள் மனதுள்ளே உட்காரும் போது “பொத்” தென்று சாணம் வந்து விழும். வீட்டில் கணக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் எங்கள் மாமா ! அவர் வந்தால் எழுந்து வழி விடுமளவிற்கு அவர் பெருந்தொந்திக் காரார். பக்கத்தில் ஜெர்ஸி பசுவும் அவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். பாட்டி திண்ணையில் தான் காலை நீட்டிக் கொண்டிருப்பாள். அங்கிருந்து வீட்டு வெளியே, உள்ளே நடக்கும் அனைத்து “தில்லு முல்லுக்களும்” தெரியும்.

“டேய் யாருக்கு ஆப்பிள் கொண்டு போறே ?”

“கங்காவுக்குத் தான் அம்மா !”

“என்ன உடம்புக்கு ?”

“மாட்டுக்குத் தீவனம் வைக்கும் போது மாடு காலைப் பதம் பார்த்து விட்டதாம் . . .”

மாமிக்கு கால் மாட்டைவிடப் பெரியதாக இருக்கும். கற்பனைப் பண்ணினேன். புரியவில்லை ! எப்படி மாடு மிதித்து மாமிக்கு கால் வலிக்கும் ?

பாட்டு 5:

தனக்கில்லாமல் தன் மருமகளுக்கு ஆப்பிள் கொடுக்கும் பிள்ளையை நினைத்து பாட்டி பாடும் ஒரு சென்டிமெண்ட் பாட்டு இங்கு காட்டவேண்டும் !

வீட்டு “மாட்டு”ப் பெண்கள் (எங்கள் அம்மாக்கள் தான்!) கொடுத்த புண்ணாக்கை கை விட்டு அரைத்து கொண்டு வந்து வைப்போம். அந்தக் கையோடு போய் பருப்பு பொடி சாதம் சாப்பிட்டால் இரண்டும் ஒன்றாக இருக்கும் ! வேற்றுமை தெரியாது. பாட்டி ஆனால் எல்லாருக்கும் தயிர் சாதம் பிசைந்து ஆளுக்கு இரண்டு உருண்டை போடுவாள். அத்துடன் நேற்றைய இட்லியைப் பிசைந்து மிளகாய்ப் பொடியுடன் கலந்து உருண்டை செய்து விடுவாள். ரேடியோ, டிரான்ஸீஸ்டர் வந்த் புதிது. அந்தக் கண்டுபிடிப்பைவிட பாட்டி செய்யும் இந்த உருண்டைகள் என்னை வியக்க வைத்தன. சாப்பிட்டால் “கும்”மென்றிருக்கும். பட்டி செய்யும் வடாம், கூழ் வடாம் போன்றவை என்னை அசரவைத்தன. ஒரே அரிசி மாவை விதம் விதமாக வளைத்து நெளித்து தன் பழையக் காவிப் புடவையில் காயவைத்து அனைத்துப் பேரக் குழந்தைகளுக்கும் எண்ணையில் பொறித்துக் கொடுப்பாள். அன்போடு அதை வாங்கி உண்ணும் போது நம் தினமும் பண்னும் தப்புக்களைச் “சுருக் சுருக்”கென்று தைப்பது போன்று கூறுவாள். வடாமுடன் நமக்கு நல்ல மிளகு போன்று “சுடு சொல்” கிடைக்கும்.

எங்கள் அம்மாவே அவளைக் கண்டு பயப்படுவாள். என் மனைவியே என் அம்மாவைக் கண்டு பயப்படுவாள். என் மருமகளே என் மனைவியைப் பார்த்து பயப்படுவாள். என் அம்மா மாட்டிற்கு புண்ணாக்கு வைத்தால், என் மனைவி வீட்டு நாய்க்கு (நானில்லைங்க !) பிரட் துண்டு போடுகிறாள்.

கிளைமாக்ஸ்:

பாட்டி உடம்பு முடியாமல் கயிற்றுக் கட்டிலில் படுத்தி கிடக்க, அவள் கால்களை வருடியபடி அனைத்து மகன்களும் காத்துக் கிடக்க, பாட்டி முனகலுடன் “ரொம்ப வருடாதீங்க ! அரிப்பு தாங்க முடியலை ! அப்புறம் சீக்கிரம் போ . . . யி . . . டு . . . என்று சொல்லி முடிப்பதற்குள் போய் சேர்ந்தாள்.

“பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று சிலைடு போட படம் முடிவடைந்தது.

சினிமா விட்டு வெளியே வருபவர்கள்:

என் பாட்டியைப் பார்த்த ஃபீலிங்க் ! வாடி நம்ம பாட்டியைப் போய் பார்த்து வரலாம் !

பாட்டி சூப்பர் ! என் கண்களே குளமாயிடுசுன்னா பாருங்க !

இப்படத்தை எடுத்த பாண்டியன் “பாட்டி” என்ற சொல்லிற்கு எவ்வளவு நம்ம சமூகத்தில் மரியாதை இருக்கு என்பதை எவ்வளவு தத்ரூபமாக எடுத்திருக்காங்க பாருங்க !

நல்லா போகும் சார் ! சைக்கிள், பழைய டையர், காபி சேர்ந்த மணத்துடன் வரும் பாட்டு நம்ம மண் மணத்தை அள்ளித் தெளிக்குது ! சில்வர் ஜூப்ளி தான் சார் !

பாட்டி ! பாட்டி ! ஒரு பெண் விசும்பிக் கொண்டே வெளியே வருகின்றாள்.

இதைப் படித்தவர்கள்:

இதைக் கதைத்தவன், சேரனை மானசீகமாய் குருவாய் நினைத்து தன் பாட்டியைப் பற்றி எழுதியிருக்கிறான். சேரனைப் போன்றே பிழைத்துப் போகட்டும். அரை குறை ஆடைகளைப் பற்றி, காமத்தைப் பற்றி, அடி தடிகளைப் பற்றியா எழுதினார் ?. நல்லா நம்ம பாட்டியைப் பற்றி தானே எழுதியிருக்கிறார். நம்ம பாட்டி போன்றே இவருக்கும் பாட்டி இருந்திருக்கிறாரே ?. “பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று வேறு மெசேஜ் கொடுத்திருக்கிறார். அப்ப இது “கமர்சியல்” வெற்றி தான். சமூகத்திற்கும் நல்லது.

எழுதிய நான்:

“கிராண்ட் மா” என்றழைக்கும் பெண்களுக்கு “பாட்டி” என்றத் தமிழ் பெயர் இருப்பதாக பிற்காலச் சந்ததியனருக்கு சொல்லியிருக்கின்றோமே ! சங்க காலப் பாடல்கள் நிலைக்கும் வரை பாட்டிகள் புகழ் நிலவட்டும். அப்போது தான் பாட்டி என்றவுடன் என் பாட்டி ஞாபகம் வந்து “அவ்வையார் பாட்டி” என்ற பாட்டியையும் அனைவரும் நினைத்துக் கொள்வர் ! நம்மாலானத் தமிழ் தொண்டு !

kkvshyam@yahoo.com

Series Navigation

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

பாட்டி

This entry is part [part not set] of 15 in the series 20010311_Issue

சேவியர்.


இப்போதெல்லாம் எனக்கு
பாட்டியின் ஞாபகம்
அடிக்கடி வருகிறது…

கொஞ்சம் அன்புக்காக
எனது சிறு புன்னகைக்காக
ஜ ‘வனுக்குள்
பாசத்தின் ஜென்மத்தைப்
பதுக்கி வைத்திருந்த பாட்டி…

எனக்குத் தொிந்து
பாட்டியின் நெடும் பயண நேரமே
சந்தைக்கும்
சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான்.

கொல்லைப்புறத்தின்
பதனீர்ப்பானைகளுக்கிடையில்
பதியனிடப்பட்டு
பயிரானது தான் அவள் முதுமை!!

சருகுகள் பொறுக்குவதிலும்
சுள்ளிகள் சேகாிப்பதிலும்
ஓலை முடைவதிலுமாய்
அவள் வருடங்கள் முழுவதுமே
விறகுக்காய் விறகாகிப் போனது…

கிழக்குப் பக்கத்தில்
கட்டிவைத்திருந்த
கோழிக் கூட்டுக்குள்
முட்டைதேடி முட்டைதேடி
முடிந்துபோகும் காலைகள்…

சமையல் கட்டில்
சருகுக் கூட்டில்
காிசல் காட்டில்….
இப்படியே மங்கிப் போகும்
மாலைப் பொழுதுகள்…

மண்ணெண்ணெய் விளக்கு
வெளிச்சத்தில்
விட்டில்களை விரட்டி விரட்டி
பாக்கு இடிப்பதிலேயே
முடிந்து போகும் இரவுகள்….

நினைவிருக்கிறது…
சின்னவயதில்
ஆசையாய் நெய் முறுக்கு தந்து
என்னைத் தழுவும் போதெல்லாம்
வழியும்
வெற்றிலைக்கறை கண்டு
விருப்பமின்றி ஒதுங்கியிருக்கிறேன்…

இப்போதெல்லாம்
சாப்பிட்டாயா ?
என்று கேட்கும் பாட்டியின் குரல்
அவ்வப்போது எதிரொலிக்கும்
ஆழ்மனதின் ஏதோ ஒரு எல்லையிலிருந்து…

பாட்டியிடம்
சாப்பிட்டாயா என்று
பாசத்தோடு ஒரே ஒருமுறை
கேட்கத் தோன்றுகிறது…

கால ஓட்டத்தில் ஏதேதோ மாற்றங்கள்
பதனீர் சட்டிகள்,
சருகு அடுப்புகள்,
மண்ணெண்ணெய் விளக்குகள்,
எல்லாம்….
எல்லாம் இறந்து விட்டன…
என் பாட்டியும்…

****

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்