பாக்கி

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

எஸ்ஸார்சி


இந்தப்பெண்மணியை எங்கேயோ பார்த்திருக்கிறோம் நாம். ஆமாம். எப்போது பார்த்தோம். அது .மண்டைக்குள்ளாக குடைந்துகொண்டிருந்தது. பார்த்தமாதிரி தானே தோன்றுகிறது. . பிரமன் படைப்பில் ஒருவர்போல் எழுவர் உண்டு என்பார்கள். அந்தக்கதையாக இருக்குமோ. இது.

என் பையனுக்குத்தான் பெண் பார்த்துக்கொண்டிருந்தேன். வீட்டில் சாமி படத்துக்குக்கீழாய், டா வீ மேசைக்கு மேலாய் மஞ்சள் தூளை மூலைக்கு மூலை தடவிக்கொண்டு என்னைப்பார் உன்னைப்பார் என்று பெண்வீட்டார் எனக்கு எழுதிய கடிதங்கள் கிடந்தன ‘ாதகங்கள்,சின்ன அளவில். பெரிய தினுசில், இப்போதெல்லாம் கணினி நுழையாத இடம் இல்லை. சர்வம் வி ‘ணு மயம் ‘கது என்பார்களே அப்படி.த்தான் கணினியும் ஆகியிருக்கிறது. கணினி வந்தபின் ‘ாதகங்கள் எத்தனை விதவிதமாய் உருக்கொள்கின்றன. ஆனாலும் ஒன்பது கிரகங்களோடும் பன்னிரெண்டு கட்டங்ளோடும் அவை என்பதில் எந்த மாற்றமுமில்லை நோகியா செல் போனும், ஐ பி எம் லாப் டாபும் இல்லாத ே ‘ாசியக்காரர்கள் ஏது. பச்சைக் கிளி ச்சிறை யைக் கைத்தாங்கலாய்ச் சுமந்து .,நெற்றியில் சந்தனப்பொட்டு கக்கத்தில் பிள்ளைப்பாய் சகிதம் தெருத்தெருவாய் அலைந்து சோசியம் < SPAN style= 'mso-spacerun: yes '> பார்ப்பது நி ன்றுவிடவும் இல்லை.

நானும் என் மனைவியுமே வீட் டில் இருந்தோம். இன்று மாப்பிள்ளை வீடு பார்க்க பெண் வீட்டாரின் வருகை. சாதகம் சரியாக இருந்து பெண்ணும் பிடித்திருந்துதான் இந்தக்கட்டத்திற்கு வந்திருக்கிறது மண வி ‘யம். மஞ்சள் பையில் பழம் பூ மட்டுமே வாங்கிக்கொண்டு யார் வீட்டுக்கு வந்தாலும் உறவு நெருக்கம் இன்னும் கெட்டிபபடவில்லை என்பதாகவே பொருள்படும். அதே மஞ்சள் பையோடுதான் இவர்களின் வருகையும்.

‘வணக்கம் வணக்கம் வரணும் உள்ள வாங்க ‘

நான்தான் சந்தனம் கரைத்துப் பாதியாய் ரொப்பிய வெள்ளி கிண்ணத்தை க்காண்பித்தேன்.

என் மனைவி குங்குமச்சிமிழைக்காண்பித்துக்கொண்டிருந்தாள்.

வாங்கம்மா வரணும்

இருவரும் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டனர்

மஞ்சள் பை காலியாகி உள்ளிருந்தவை டா பாயில் ஆசனம் கண்டன.

சம்பந்தி ஆகப்போகும் அந்தப்பெண்மணி என்னைப்பார்ப்பதும் பின் யோசிப்பதும் எனத்தொடர்ந்து கொன்டிருந்தாள். ஏன் அப்படி.. எனக்கும் அந்தப்பெண்மணியைப்பார்த்தல் தேவலை என்றுதான் தோன்கிறது. இது ஏது விபரீதம்.. வம்பாகிவி டப்போகிறது. நான் ஒரு முறை அந்த சம்பந்தி அய்யாவை கூர்ந்து நோக்கினேன். ஒன்றும் புது வி ‘யமாய்ப் புலப்படவில்லை. எனக்கு.

என் பையனும் பார்த்து நிச்சயித்து இருக்கிற பெண்ணும் மும்பையில் ஒரே நிறுவனத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். படிப்பும் சம்பள இத்யாதி எல்லாமும் சமம்.. ஒருவருக்கு ஒருவரைப்பிடித்தும் விட்டது. சம்பிரதாயத்திற்குத்தான் மற்ற எல்லாமும். எதிரே அமர்ந்திருக்கிற தம்பதிகளின் வி ‘யத்தையும் சேர்த்துத்தான்

என் மனைவி சம்பந்தி அம்மாளோடு வீட்டைஎல்லாம் சுற்றிக்காண்பித்தாள். அவர்கள் இதுகளை எல்லாம்பார்த்து இனி ஒன்றும் செய்து விடப்போவதில்லை. .பரண் மீதேறி அவளால் சிலதுகளைக்காட்டமுடியாமல் போயிற்று. அந்தக்கவலை அவளுக்கு இருக்கலாம்.

அதற்குள்ளாய் நானும் சிலப்பேசிப்பார்த்தேன். அவரும் சிலதுகளைப்பேசினார். தவறுக்கு வழி அ.த்தனை எளி தாக கிட்டிவிடுமா. சர்வ ‘ாக்கிரதையாகப்பேசினோம். பொக்கையால் போச்சாம் பொரிமாவு என்று வந்து விடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலை.

வந்த பெண்மணி வீட்டை எதோ முன்னமேயேபார்த்த்மாதிரி பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கிற அறையைக்கூட விட்டுவைக்கவில்லை. அதையும் நோட்டம் விட்டபடியேதான் கவனமாய்ப் பார்த்து வந்தாள்.

நீங்க வீடு பாக்கலிங்களா அய்யா

நானு பாத்து என்னா பண்னப்போறன்

பெண்கள் இதில் எந்த க்குறையையும் வைப்பதில்ல

அது உண்மைதான் சம்பந்தி

வீட்டை ஒரு முறை சுத்தி வந்தாங்கன்னா பொம்பளைங்கமனசுல எல்லாத்தையும் எழுதி முடிச்சுடுவாங்கல்ல

நால்வரும் அமர்ந்து சிற்றுண்டி முடித்தோம். நான் சாப்பிடுவதயே அந்த பெண்மணி கண்கொட்டமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மனம் குறு குறுத்துக்கொண்டே இருந்தது. மனத்துக்குள் ஏதோ முளைத்து வளர ஆரம்பிப்பதை உணர முடிந்தது. இது அசிங்கமப்பா என்று எச்சரித்தது அறிவு.

ஆனால் அறிவு எப்போதும் நொண்டிதான்.

சாருக்கு சுவீட்டுன்னா பிரியம் போல

கொஞ்சம் கூட சாப்பிடுவேன் அசடு வழிந்தேன்

ஒண்ணும் தப்பில்ல சாரு நம்ம வயித்துக்கு நாம சாப்பிட றம்

என் மனைவி என்னையும் அவளையுமே கண்காணித்துக்கொண்டிருந்தாள்.

எங்க சாரு கொழந்த மாதிரிதான். என்றாள்

பார்த்தாலே தெரியுதுல்ல

உங்க பொண்ணுக்கு ஒரு கவலையும் இல்ல. என் மனவி இவ்வளவு வழிவது தேவை இல்லைதான்.

அவள் முகத்தில் அரை டிக்கட் கூட வாங்காமல் பேருந்துக் கண்டக்டரை ஏமாற்றிக் குழந்தயை இடுப்பில் தூக்கி வைத்து க்கொள்ளும் தாயின் அசட்டுத்தனம் அப்படியே தெரிந்தது.

நானும் என் மனைவியும் திருமண நாளன்று எடுத்துக்கொண்ட நிழற்படம் இன்றும் நடுக்கூடத்தில் தொங்கிகொண்டுதானிருந்தது.

உங்க கல்யாணப் படம்களா

ஆமாம்

எனக்குத்தலை சுற்றக்கூட ஆரம்பித்தது. இந்த அம்மாளுக்கு இது எல்லாம் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தானே என்றது மனம். அதுவும் ஒரு வரப்போகின்ற மருமகளின் தாயார்.

மிக மிக மரியாதை காட்ட ப்படவேண்டிய உறவின் உச்சங்கள். எப்படி இது.

என் மனவி சும்மா இருந்திருக்கலாம். சாத்தியமில்லையே. என் கல்யாண ஆல்பத்தை தூக்கிகொண்டு வந்து பாருங்களேன்.

என்றாள். சம்பந்தி அம்மாவுக்கு வாயெல்லாம் பல்.

அப்டிப்போடுங்க சம்பந்தியம்மா

அவரும் கூட தான் ஆல்பத்தை சிரத்தையாய்ப் பார் ப்பதுபோல் பாவனை செய்தார். என்னப்பார்த்து,

உங்க புள்ள உங்க அய்யாவை அப்பிடியே உறிச்சி வச்சிருக்காரு ‘ என்றார்

‘அவன் தாத்தா வளப்புத்தான் ‘

சொல்லி வைத்தேன். எப்படி சும்மாவா இருப்பது.

சம்பந்தி அம்மா ஆல்பத்தை ஒன்று விடாமல் பார்த்து விட்டு.

சாரு அப்பிடேத்தான் இருக்குறாரு. நீங்கத்தான் வயசானமாதிரி தெரிய்யிறிங்க

‘ில் லென்று தலையில் வைப்பது உணர்ந்தேன் இத்தனை மகிழ்ச்சியாய் நான் என்று இருந்தேன். எண்ணிப்பார்க்கி றேன்.

ஆல்பத்தை மூடி வைத்து விட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

நானும் குழம்பிப்போய் அவளையே பார்த்துகொண்டிருந்தேன்.

பாத் ரூம் தேடி அவர் சென்றுகொண்டிருக்க என் மனைவியோ காபி தயாரிப்புக்கு அடுப்படி சென்றாள்

நானும் சம்பந்தி அம் மாளும் மட்டுமே தனித்து ஆளுக்கு ஒரு சோபாவி அமர்ந்து இருந்தோம்.

என்ன தெரியுதுங்களா

யாரு

தருமங்குடி கோபால்பிள்ளை யாபகம் வருதா

ஆமாம் நீங்க; ‘ பிரகதா ‘ தானே பட்டென்று ஞானோதயம் வந்தது.

.ஆமாம்

சாரிங்க

என்ன சாரி.. அன்னைக்கி என் தலயில முடி கம்மின்னு சொல்லி என்ன வுட் டுட்ட்டு வேணாம்னு போனீங்க.ளே. தெரியாமலா பூடும். உங்க குடி சாமி சகுனம் கொடுக்கலே அது இதுன்னு உங்க அப்பா புளுகி கடுதாசி எழு துல. எந்த ஊரு நியாமுங்க. இண்ணக்கு முப்பது வரு ‘ம் ஆச்சின்னாலும் எனக்கு சங்கடம் அடி மனசுல இல்லாமலா .சாரு

நான் அதிர்ந்து போனேன். இந்த சம்பந்திஅம்மா குமரியாய் இருந்த போது பெண்பார்க்க நானும் அம்மாவும் சென்றதும் இந்த இவர்கள்வீட்டு ஆரிப்போன ப ‘ ‘ி தின்றதும் கூட நினைவுக்கு வந்தது.

சாரி ‘ என்றேன் கண்களை ஏனோ மூடித்திறந்தேன்.

‘நான் உனக்கு புள்ள பெத்து தரமாட்டென்னு நெனச்சிட்டய்யா நீ. ‘ ஒருமையில் பேசி முடித்தாள்

அவ்வளவுதா ன். அவ்வளவேதான். திருடனைத் தேள் கொட்டியது மாதிரி உணர்ந் தேன். நான் திருடன் தானோ. என்னவோ.

பாத்ரூம் போன சம்பந்தி திரும்பி க்கொண்டிருந்தார். என் மனைவி காபி குவளைகள் நிறைத்த தட்டினை தூக்கி க்கொண்டு கூடம் நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

.ரொம்ப சிரமம் உங்களுக்கு

அதெல்லாம் ஒண்னுமில்ல சம்பந்தி

அந்தப்பெண்மணி காபியை வாங்கிக்கொண்டாள்.

‘அய்யா காபி சாப்பிடட்டும் மொதல்ல ‘ எனக்கு காபியை எடுத்து வைத்து

நான் மொகம் கழுவிட்டு வந்துபுடறேன் அதுதான் கொஞ்சம் பாக்கி ‘ < /SPAN> ‘ தோ தோ ‘வந்துபுடுறேன் ‘ என்றாள்

‘ சம்பந்தியம்மா நானும் கூட வர்றேன். இடம் புதுசுல்லங்க ‘

ஒண்ணும் புதுசுல்ல சம்பந்தியம்மா நான் பாத்துக்கறேன் ‘ சொல்லிக்கிளம்பினாள்.

அவ இல்லன்னா எனக்கு ஒரு காரியமும் ஆவாது. தெய்வமா பாத்து அவள எனக்கு அனுப்பி இருக்காரு. ‘ அவர் சொல்ல

‘ ஒவ்வொருத்தர் கொடுப்பனைங்க அதெல்லாம்; என்றாள் என் மனைவி

காபியைக்காலி செய்து விட்ட நான் ரொம்பவே சாமர்த்தியமாக நடந்து கொள்வதாய் நினைத்துஅமைதி காத்தேன்.

‘சாரு; எப்பவும் இப்பிடிதான் ‘ என் மனவிதான் சம்பந்தியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்..

—-

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

பாக்கி

This entry is part [part not set] of 8 in the series 20000709_Issue

– அசோகமித்ரன்


போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி.

நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், ‘என்னாங்க என்னாஙக ‘ ‘ என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன்.

சுந்தரி அருகில் வந்து, ‘ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க ‘, என்றாள். நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.

சந்தினுள் சந்தாக மூன்று முறை திரும்பி அவள் வீட்டை அடைந்தோம். அங்கிருந்த வீடுகள் சுவர்கள் கொண்டிருந்தன என்பதைத்தவிர சேரிப் பகுதியிலிருந்து அதிகம் மாறுபட்டவை அல்ல. சுந்தரி இருந்த வாசல் கதவைத் திறந்தவுடனேயே இருந்த ஆளோடியின் நடுவில் பெரிய சாக்கடை. இருபுறங்களிலும் இருந்த அறைகளில் ஏராளமான குடும்பங்கள் அந்த வீட்டிலும் மாடி இருந்தது. அங்கு ஒரே ஒரு தனி அறை. அது சுந்தரியுடையது.

பகல் நேரத்தில் அங்கு வெளிச்சத்துக்குக் குறைவில்லை. ‘எங்கே சுவர்க் கடியாரம் ? ‘ என்று கேட்டேன். அது நான் வாங்கியது.

‘மார்வாடிக் கடைக்குப் போயிருக்கு, ‘ என்றாள்.

‘இருபது ரூபா கூடக் கிடைக்காதே ? ‘

‘அதுகூடக் கையிலே இல்லாத போது என்ன செய்யறது ? ‘

‘ஏன், பிரபாகர் இல்லையா ? ‘

‘அவரைப் பத்தி விசாரிக்கத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ‘

‘ஏன், என்னாச்சு ? ‘

‘தெரியலைங்க. அவரு இங்கே வந்து மூணு மாசம் ஆறது. ‘

என் மனத்தில் எங்கோ ஓர் மூலையில் ‘நல்லா வேணும் உனக்கு, ‘ என்று சொல்லத் தோன்றியது.

‘ஓகோ, ‘ என்றேன்.

திடாரென்று சுந்தரி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.

நான் சுந்தரி அழுது பார்த்தது கிடையாது. உண்மையில் பிறரைக் கதறக் கதற அடிப்பதில்தான் அவள் பெயர் பெற்றவள். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டு முன்னால் ஊரைக் கூட்டி எப்படியெல்லாம் மானத்தை வாங்கினாள் ? யாரோ ஒருவர் ஒரு போலீஸ்காரனையும் அழைத்து வந்துவிட அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை. தற்கால நாகரீகத்தில் ஆண் ஒருவனுக்குக் கெளரவம் என்று ஒன்று இருப்பதை துளிப் பாக்கி இல்லாமல் சுந்தரி அங்கு குதறிப் போட்டு எடுத்தாள். இவ்வளவு ஆன பிறகு ஒருவன் உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். அல்லது தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை விடுவான். நானும் அதெல்லாம் யோசித்தேன். ஆனால் அதெல்லாவற்றையும் விட இன்னும் தீவிரமான முடிவு எடுத்தேன். சுந்தரி கழுத்தில் தாலி கட்டுகிறேன் என்று சொன்னேன். அப்படிச் செய்வதற்கு வசதிப்படவில்லை. மூண்று வருடங்கள் அவளுடன் இருந்தேன். எனக்கு வந்த சம்பாத்தியம் அனைத்தையும் அவளிடம் கொடுத்து அவள் பொங்கி போடும் சாதத்தை விழுங்கினேன். காதலுக்காகவும் ஒரு பெண்ணுக்காகவும் எல்லாவற்றையும் தியாகம் புரிபவன் அல்லது நல்லது கெட்டது சுரணையற்ற அறிவு மதித்தவன் என்றெல்லாம் நான் என்னைப் பற்றி நினைத்துச் சொல்லவில்லை. நடுநடுவில் சந்தோஷமாகக் கூட இருந்தேன். அப்போது பிரபாகர் நுழைந்தான். பெரிய கூச்சல் குழப்பம் இல்லாமல் ஆறு மாத காலத்தில் அவன் சுந்தரியின் அறையில் குடியேற மீண்டும் நான் என் உறவுகாரர்கள் மத்தியில் என்னைப் பொருத்திக் கொண்டேன். எனக்கு இப்போது இரண்டாவது பெண் பிறந்து நான்கு வாரங்கள் ஆகின்றன.

சுந்தரியின் அழுகை தானாக ஓய்ந்தது. நான் எழுந்தேன். அவள் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு சற்றுத் திகிலுடன், ‘எங்கே போறீங்க ? ‘ என்று கேட்டாள்.

‘ஏன், என்ன ? ‘

‘ஒண்ணுமே சொல்லாமலேயே போறீங்களே ? ‘

நான் அறையைச் சுற்றிப் பார்த்தேன். முன்பிருந்த பாத்திரங்களில் பாதிதான் பாக்கியிருந்தது. பக்கெட் மாறியிருந்தது. சுருணைத் துணியாகத் தொங்கியது என்னுடைய ஒரு ஜிப்பா. மிகவும் உறுதியான துணியாக இருக்க வேண்டும்.

‘டா கொண்டு வரச் சொல்லட்டுமா ? ‘ என்று கேட்டாள்.

‘ஏன், இங்கே கொதிக்க வைக்க முடியாதா ? ‘

‘டாத் தூள், பாலு, சர்க்கரை எல்லாமே கடன் வாங்கணும். அதுக்கு ஒரேயடியா டாயையே கடனா வாங்கிடலாம். ‘

‘இவ்வளவு சாமர்த்தியக்காரியாக இருந்து கோட்டை விட்டுட்டியே ? எனக்கு பிரபாகர் பத்தி ரொம்ப தெரியாது. கிரவுன் டாக்கீஸ் பக்கத்து சந்துன்னு எப்பவோ சொன்னான். நீ போய்ப் பாத்தியா ? ‘

‘போனேன். அங்கே அவன் அம்மாதான் இருக்கா. அவ பெரிய பஜாரி. அவ பையன் பணமெல்லாம் பிடுங்கிட்டேன்னு கத்தி அவர்களம் செய்து போலீசெல்லாம் வரவழைச்சிட்டா. ஆனா அந்தப் படுபாவி எங்கே போனான்னே தெரியலே. ‘

‘நான் மட்டும் என்ன பண்ண முடியும் ? எனக்கு அந்த ஆளை அதிகம் தெரியாது. ‘

‘உங்க சீஃப் மேக்கப்மேனுக்கு உறவுன்னு முன்னே சொன்னீங்களே ? ‘

‘என்ன, என்ன ? ‘

‘நரசிம்மராவ் சாருக்கு உறவுன்னு நீங்கதான் சொன்னீங்க. ‘

‘நானா சொன்னேன் ? ‘

‘ஆமாங்க. ‘

எனக்கும் அது நிழல் போல நினைவில் தோன்றியது. நரசிம்மராவ் ஒரு முறை அவன் ஊருக்கு போய் ஒரு பெண்ணை அழைத்து வந்தான். சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கேனவே இன்னொருத்தருடைய மனைவி என்று. இருவர் போக்கிலும் உள்ள ஒற்றுமைக்காகத்தான் நரசிம்மராவுடைய தம்பி பிரபாகர் என்று நான் கூறியிருக்க வேண்டும்.

‘நாலு வருஷம் அவன்கூட வாழ்ந்திருக்கே, அவன் மனுஷாளுங்க யாரு என்னன்னு தெரிஞ்சு வச்சுக்க கூடாதா ? ‘

நான் முற்றிலும் தளர்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து அவள்தான் என்னைப் பற்றி எவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்திருந்தாள் ‘ இதெல்லாம் அவள் என் வீட்டு முன்னால் அமர்க்களம் செய்த போதும் பின்னர் போலீஸ் ஸ்டேஷனிலும் விசேஷமாக பயன்பட்டன. நான் எப்படி நாக்கைப் பிடுங்கிச் சாகவில்லை என்று எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பிரபாகர் அவளை வைத்து காப்பாற்றவில்லை என்பதோடு விஷயம் முடியவில்லை. அவளிடமிருந்த ஓரிரண்டு தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரம், பட்டுப் புடவை எல்லாவற்றையும் காசாக்கிக் கொண்டு செலவழித்திருக்கிறான். அவன் குடிக்க மாட்டான். சுந்தரி என்னை அவளுடைய வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட்டு அவனைத் தேர்ந்தெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்கச் சுயநினைவுடனேயே அவளைச் சுரண்டியிருக்கிறான்.

நான் மறுபடியும் எழுந்து நின்றேன். சாட்டை போன்ற நாக்கு ஒன்றை நம்பியே இவ்வளவு நாட்கள் இவ்வளவு பெரிய நகரில் காலம் தள்ளியவள் இப்போது வழுவிழந்து துவண்டு போய் நிற்கிறாள். நான் அவளோடு வாழ்க்கை நடத்திய போதும் அவளுடைய குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என்று யாரும் வந்தது கிடையாது. அவளுடைய ஊர்க்காரர்கள் யாராவது அவளை எப்படி எப்படியோ விசாரித்துக் கொண்டு வந்து சேருவார்கள். ஒருவேளை அல்லது இருவேளைச் சாப்பாட்டோடு சரி, சுந்தரி அவர்களைக் கிளப்பி விடுவாள். பிரபாகரோடு இருந்த போது, ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புவதற்கில்லை. நான் என்னிடம் இருந்ததெல்லாம் கப்பம் போல் அவள் காலடியில் சேர்த்திருக்க, அவன் மட்டும் அவளிடமே சூறையாடியிருக்கிறான். கில்லாடி தான். அவனை அதிகம் பழக்கம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை.

‘சுந்தரி, இப்போ முன்னைப் போல எதுவுமே இல்லை. நானே முன்னைப் போல இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. நான் கட்டியிருக்கிறவள் கிட்டே உன் ஆர்ப்பாட்டம், அட்டகாசம் ஒண்ணும் பலிக்காது. ‘

‘அப்படியெல்லாம் நினைக்கலேங்க. உங்க வீட்டுப் பக்கமே நான் வரவே இல்லியே. அதுலேயிருந்து தெரியலீங்களா என் மனசு ? ‘

‘அவனுக்கு வந்த கடுதாசு ஏதாவது இருக்கா ? அவன் வேலை பார்த்த இடத்திலேர்ந்து கொடுத்த சம்பளக் கவர் பட்டியல் ஏதாவது இருக்குமே ? ‘

‘ஒரு தகரப் பெட்டியிலே மூணு நாலு கிழிஞ்ச துணிதாங்க இருக்கு. ஒரு போட்டோவும், சாமிபடமும் இருக்கு. ‘

‘அது இரண்டையும் கொண்டா. ‘

அந்தப் புகைப்படத்தைக் கொண்டு எதுவும் ஊகிக்க முடியவில்லை. படத்திலிருப்பது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியாதபடி வெளுத்துப் போயிருந்தது. சாமி படம் நரசிம்மருடையது. அளவுக்கு மீறி வாயைத் திறந்தபடி பிரகலாத ரட்சகன் காட்சியளித்தார். பானக நரசிம்மன் என்று பெயர். குண்டூர் அருகே மங்களகிரி என்ற ஆந்திரப் பிரதேச மலை மீதிருக்கும் அந்த நரசிம்ம விக்கிரகத்தின் வாயில் எந்த அளவுப் பாத்திரத்திலிருந்தும் பானகம் தயாரித்து வாயில் ஊற்றினாலும் பாதிப் பாத்திரம் முடியும் போது வாய் நிரம்பிவிடும். பிரபாகர் விஜயவாடா – குண்டூர் பக்கத்து ஆளாக இருக்க வேண்டும்.

‘சரி, விசாரிச்சுப் பார்க்கிறேன், ‘ என்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.

‘ஒரு நிமிஷங்க, ‘ என்றாள்.

‘நீ ரொம்ப ‘ங்க ‘ போடறது எனக்கு என்னவோ போல் இருக்கு. ‘

‘அது இல்லீங்க… ‘

‘சரி, சீக்கிரம் சொல்லு. ‘

‘நிலைமை ரொம்ப மோசம். சீக்கிரமா அந்த மனுஷனைப் பார்த்து என்ன ஏதுன்னு கேட்க முடியலேன்னா, நான் மறுபடியும் ஸ்டூடியோ பக்கம்தான் போக வேண்டியிருக்கும். ‘

நான் கொடூரமாக ஏதாவது பேசி விடுவேனோ என்று அவள் கண்களில் தெரிந்த பயம் எனக்கு அளவிட முடியாத வேதனை அளித்தது. திரும்பத் திரும்ப அந்த போலீஸ் ஸ்டேஷன் தோற்றம் கண் முன் வந்தது.

என் சட்டைப் பையிலிருந்து ஒரு பழைய கவரை எடுத்தேன். நான் பணத்தைக் காகிதக் கவர்களில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். சுந்தரி அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.

முப்பது ரூபாய் இருந்தது. அவளிடம் நீட்டினேன். வாங்கிக் கொண்டாள்.

‘இதை இப்போ வச்சுக்க. நான் அப்பப்போ வந்து போறேன். ‘

நான் இதை எந்தப் பொருளில் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை என்று அவள் முகம் காட்டியது.

அன்று மாலை நான் மீண்டும் அவள் அறைக்குப் போனபோது அங்கு பேச்சுக் குரல் கேட்டது. பிரபாகர் திரும்பி வந்துவிட்டான். நான் பாதி மாடிப்படியிலிருந்து இறங்கி வந்து விட்டேன். எனக்கும் சுந்தரிக்கும் உறவு பாக்கி இருந்ததோ இல்லையோ, பிரபாகருக்கு நான் எந்த ஜென்மத்திலோ கடன் பட்டிருக்க வேண்டும். சுந்தரி அறையிலிருந்து சமையல் வாசனை தடபுடலாக வந்து கொண்டிருந்தது.

 

 

  Thinnai 2000 July 09

திண்ணை

Series Navigation

தமிழில் அசோகமித்ரன்

தமிழில் அசோகமித்ரன்