டாக்டர் மூனிஸ் அஹ்மர்
அக்டோபர் 1 இல், சியால்கோட் நகரத்தின் ஒரு (ஷியா பிரிவினர்) மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது வெடித்த தற்கொலைத் தாக்குதலில் 30 பேர்கள் இறந்தார்கள், 50 பேர் படுகாயமுற்றார்கள். மசூதியில் நடந்த இப்படிப்பட்ட தாக்குதலால் கோபமுற்ற ஆயிரக்கணக்காணவர்கள் தெருவுக்கு வந்து போலீஸ் நிலையங்களையும், நகரத்து மேயர் அலுவலகத்தையும் தாக்கினார்கள். இதனால், நகர நிர்வாகம், ராணுவத்தை அழைத்து அங்கு சட்டம் ஒழுங்கு நிலையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.
ஷியா பிரிவினரோ அல்லது சூனி பிரிவினரோ, அவர்களது மசூதியிலும் மதரசாக்களிலும் படுகொலைகள் நடப்பது பாகிஸ்தானுக்குப் புதியதல்ல. கடந்த 10 வருடங்களில், ஆயிரக்கணக்கானவர்கள் கராச்சி, குவெட்டா, ஜாங் போன்ற சிந்து மாநில நகரங்களிலும் பஞ்சாப் மாநில நகரங்களிலும் இது போன்ற வகுப்பு வாதபடுகொலைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது வெளி உலகத்துக்கு வகுப்புவாத பிரிவையும், அதன் வன்முறையையும், அதன் தீவிரத்தையும் காட்டிக்கொண்டிருக்கிறது. அதி தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருந்தும், இப்படிப்பட்ட தீவிரவாதக்குழுக்கள் இப்படிப்பட்ட தாக்குதல்களை எளிதில் செய்து தங்களது வலிமையையும் வெற்றியையும் காட்டுவதே இதில் துயரமானது. மசூதிகளும் இதர மதவழிபாட்டுத் தலங்களும், வன்முறையிலிருந்து விலகி பாதுகாப்புடன் இருக்க முடியாது என்றால், ஒரு சாதாரண பாகிஸ்தானிய குடிமகன் தொடர்ந்து வன்முறை சூழ்நிலையிலேயே வாழவேண்டிய நிலையில் இருக்கிறான் என்றே பொருள்.
துரதிர்ஷ்டவசமாக , இப்படிப்பட்ட வகுப்புவாதக் கொலைகள் பாகிஸ்தானின் 57 வருட வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கின்றன. பாகிஸ்தானின் ஆரம்பக்காலங்களில் இப்படிப்பட்ட தீவிரவாத கட்சிகளும் சக்திகளும் நாட்டில் இருந்தாலும், மைய நீரோட்ட மதவாதக் கட்சிகளில் இப்படிப்பட்ட சகிப்புத்தன்மையற்ற நிலை காணப்படவில்லை. அவை தேசிய அரசியலில் கலந்து கொண்டு, வகுப்புவாத அரசியல் ஆர்வங்களில் அதிகம் ஆர்வம் காட்டாமலும் இருந்தன. பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 20 சதவீதம் ஷியா பிரிவினராக இருக்கிறார்கள். சுனி பிரிவினரில் இரு பெரும் பிரிவுகளாக தேவபந்தி பிரிவும் பரலெவி பிரிவும் இருக்கிறார்கள். இவ்வாறாக 1947இலிருந்து 1979 வரை இந்த ஷியா சுனி போராட்டம் பாகிஸ்தானில் கட்டுக்குள் இருந்தது.
ஈரானில் 1979இல் இஸ்லாமியப் புரட்சி நடந்ததும் பாகிஸ்தானில் சூழ்நிலை மாற ஆரம்பித்தது. அராபிய வளைகுடா நாடுகள் (சவூதி அரேபியா, ஈராக் மற்றும் இதர சுனி நாடுகள்) இணைந்து ஈரானின் இஸ்லாமிய அரசு தன்னுடைய ஷியா பிரிவை விரிவு படுத்துவதற்கு எதிராக அணி திரண்டன. அமெரிக்காவும் ஈரானும் பிணைக்கைதி விவகாரத்தில் முரண்பட்டது, ஆப்கானிஸ்தானில் நடந்த ஜிஹாத், பாகிஸ்தானின் ராணுவ நிர்வாகி ஜெனரல் ஜியா உல் ஹக் ஆரம்பித்து தொடர்ந்த ‘இஸ்லாமியமயமாக்கல் ‘ ஆகியவை பாகிஸ்தானுக்குள் இருக்கும் இஸ்லாமியரிடையே ஷியா சுனி பிரிவு பிரச்னையை தீவிரமாக்கி ஒருவருக்கு எதிராக மற்றவர் வன்முறைகொண்டு போராடுவதை ஆரம்பித்து வைத்தன. 1979இல் ஈரானில் ஷியா பிரிவின் வெற்றியாக கருதப்பட்ட இஸ்லாமியப் புரட்சி தோன்றியதும், அதே வருடத்தில் (Tehrek-i-Nifaz-e-Firqai Jafria – TNFJ)டெஹ்ரெக்- நிஃபாஸ்-ஈ-ஃபிர்க்கி ஜாஃப்ரியா (ஷியா பிரிவை பரப்புவதற்கான இயக்கம்) மூலம் ஷியா பிரிவினரை ஷியா தலைவர்கள் ஒருங்கிணைத்ததும் யதேச்சையானது அல்ல.
ஷியா சுனி போராட்டத்தின் முக்கியமான திருப்பம் 1980இல், ஆயிரக்கணக்கான ஷியா பிரிவினர் இஸ்லாமாபாத் (பாகிஸ்தானின் தலைநகரம்) நகரத்தில் பாகிஸ்தான் மத்திய அமைச்சகத்தை முற்றுகையிட்டு ஷியா பிரிவினர் ‘ஜகத் ‘ என்னும் வரி கொடுக்க வேண்டியதில்லை என்று அறிவிக்க வேண்டும் என்றும், ஷியா மாணவர்கள் தங்களது பாடத்திட்டத்தை தாங்களே உருவாக்கிக்கொள்ள உரிமை வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியதுதான் எனலாம். வஹாபி பிரிவை முன்னிறுத்தி அதனை பரப்புவதே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்ததாக அறியப்பட்டிருந்த ஜெனரல் ஜியா அவர்களின் அரசாங்கம் பின்வாங்கி, ஷியா பிரிவினரின் கோரிக்கைகளை ஏற்றது. இதன் தொடர்பாக, இதற்கு எதிர்வினையாக, TNFJக்கு எதிர்ப்பாக, சில சுனி முஸ்லீம் தலைவர்கள் இணைந்து சிபா-ஈ-சிஹாபா-ஈ-பாகிஸ்தான் (Sipha-e-Sihaba-i-Pakistan or SSP or Army for following the companions of Prophet Muhammad PBUH) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதனால், கராச்சி நகரமும், ஜங் நகரமும், ஷியா சுனி பிரிவினரின் வன்முறைக் கொலைகள் அடிக்கடி வெடிக்கும் நகரங்களாக உருவாகின. கராச்சி இந்த தீவிரவாதக்குழுக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் நகரமாகவும் அரசியல் ஆதரவு தரும் நகரமாகவும் ஆனது. ஜங் நகரம், இந்த தீவிரவாத மதத்தலைவர்களின் கட்டளைக்கு ஏற்ப தங்களை உயிர்த்தியாகம் செய்யும் ஆட்கள் கிடைக்கும் நகரமாக ஆனது. இந்த மேற்கண்ட இரண்டு குழுக்களிலிருந்து பிரிந்தவர்கள் இது போன்ற இன்னும் பல தீவிரவாதக்குழுக்களை உருவாக்கினார்கள். சிபாஹி-முகம்மது-ஈ-பாகிஸ்தான் Siphae-Muhammad-i-Pakistan (followers of Muhammad) என்பது இன்னும் தீவிரவாத ஷியா பிரிவு அமைப்பாக உருவாயிற்று. இதே போல் லஷ்கார்-ஈ-ஜங்வி Laskhar-i-Jhangvi என்ற அமைப்பு சுனி பிரிவின் அதி தீவிரவாத அமைப்பாக வெளிவந்தது. இந்த இரண்டு குழுக்களும் குறி வைத்து முக்கிய எதிர் அணித் தலைவர்களை கொல்வது மட்டுமன்றி, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களையும் கொன்று தள்ளியது. அக்டோபர் 1ஆம் தேதி சியோல்கோட்டில் நடந்த படுகொலை பலவருடங்களாக அரசாங்கம் இந்தப் பிரச்னையை சரியாக தீர்க்காமல் வளர்த்துவிட்டதன் விளைவே. 2003 கோடைக்காலத்தில் குவெட்டாவில் நடந்த படுகொலை கராச்சியில் இதே போல நடந்த படுகொலையும், நூற்றுக்கணக்கான அப்பாவி வழிபாட்டாளர்களைக் கொல்வதன் தொடர்ச்சியே.
ஜெனரல் ஜியா பாகிஸ்தானுக்குள் ஆரம்பித்த ‘இஸ்லாமியமயமாக்கல் ‘, அதன் எதிர்வினையாக உருவான ஷியா பிரிவினரின் போராட்டம், அதற்கு வெளிநாட்டு (ஈரான்) ஆதரவு ஆகியவையே பாகிஸ்தானில் தொடரும் வகுப்புவாத வன்முறைக்குக் காரணம். சூனி பெரும்பான்மை கண்டு பயந்த ஷியா தலைவர்கள் தங்களது அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள ஆரம்பித்த TNFJ இயக்கம், அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க தொடங்கப்பட்டதே. இதற்கு ஈரான் அளித்த மறைமுக ஆதரவு தீவினையாக பார்க்கப்பட்டது. சூனி பிரிவினரின் தலைவர்கள் ஷியா வன்முறை இயக்கத்தைப் பார்த்து இதற்கு எதிர்ப்பாக சவூதி அரேபியாவிடமிருந்து ஈராக்கிடமிருந்தும் ஆதரவு பெற்று தங்களது இயக்கங்களைத் தொடங்கினார்கள். ஆஃப்கானிஸ்தானில் நடந்த ஜிஹாத்தும், ஈரானிய எதிர்ப்பு உணர்வும் சூனி தீவிரவாதத்துக்கு தீனி போட்டது.
வகுப்புவாத வன்முறையின் விளைநிலமாக இருந்த ஜங் மாவட்டத்தை ஆராய்வது முக்கியமானது. இந்த மாவட்டத்தில் சூனி விவசாயிகளும், மற்ற பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் இருந்த சூனி பிரிவினர், நிலப்பிரபுக்களாக இருக்கும் ஷியா பிரிவினரைப் பற்றியும் அவர்களது வளமை பற்றியும் பொருளாதார மற்றும் அரசியல் வலிமை கண்டும் கடுப்பில் இருந்தார்கள். ஆகவே ஜங் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை அரசியல் வன்முறையை விடவும் பொருளாதாரம் சார்ந்த வன்முறை என்று கூறலாம். இரண்டாவது, பாகிஸ்தானின் அரசாங்கங்கள் தொடர்ந்து வகுப்புவாத வன்முறையை தடுக்க எந்தவித தீவிரமும் காட்டாதது மட்டுமல்ல, பெரும்பாலான நேரங்களில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினருக்கு எதிராகத் தூண்டி கலவரத்தையும் உருவாக்கி வந்திருக்கின்றன. இதனாலேயே ஷியா சூனி தீவிரவாதக்குழுக்களான சிபாஹி-முகம்மது-ஈ-பாகிஸ்தான், லாஷ்கார்-ஈ-ஜங்வி ஆகியவை தங்கள் ஆதரவாளர்களை அரசாங்கத்துக்குள்ளாகவே கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தில் உள்ளவர்கள் இந்த தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பது இவர்களை வேண்டுமென்ற போது உபயோகப்படுத்திக்கொண்டு வேண்டாமென்றபோது இவர்களைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று கருதினார்கள். இந்த தீவிரவாதக்குழுக்கள் செய்யும் கொலைகள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பரவுவது, அப்படிப்பட்ட அரசாங்க எண்ணம் தவறு என்பதைத்தான் நிரூபிக்கிறது. ஜெனரல் முஷாரஃப் இந்த குழுக்களை 2001இலும் 2002இலும் தடை செய்ததாக அறிவித்தாலும், இந்த குழுக்கள் செய்யும் வன்முறை சுழல் தொடர்ந்து சுழன்று பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை பலி வாங்கி வருவது தொடர்கிறது.
இந்த வகுப்புவாத வன்முறைக்கு பொருளாதார ரீதியான பரிமாணமும் இருக்கிறது. இந்த குழுக்களில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் அடித்தட்டு மக்களே. வேலையற்றவர்கள், பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் ஆகியோர்கள் இந்த குழுக்களில் இணைந்து நாட்டை நிலையற்றுப் போகச்செய்யும் வேலைகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். பொருளாதார சமூக நிலைகள் நன்றாக பாகிஸ்தானில் இருக்குமாயின், வகுப்புவாத பிரச்னை இப்படிப்பட்ட தீவிரமான திருப்பத்தை அடைந்திருக்காது. இப்படிப்பட்ட வகுப்புவாத குழுக்களில் தலைவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதும், இந்த குழுக்களில் தலைவர்களாக இருப்பதால், பெரும் அளவு அரசியல் அதிகாரத்தையும் பணபலத்தையும் கொண்டவர்களாக இருப்பதும் ஆச்சரியமான விஷயம் இல்லையா ? இறுதியாக, ஷியா மற்றும் சூனி பிரிவினரில் முக்கியமான படித்த வர்க்கத்தை டாக்டர்கள், என்ஜினியர்கள், பேராசிரியர்கள் ஆகியோரை குறி வைத்து கொல்வதன் மூலம், எந்த அளவு தீவிரமான வன்முறை அளவை பாகிஸ்தான் அடைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 1994முதல் எவ்வாறு ஷியா மற்றும் சுனி பிரிவினரின் முக்கியமான படித்தவர்களை சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களை திட்டமிட்டு குறிவைத்து கொல்வது நடந்து வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம். கராச்சியில் மட்டுமே 1994இலிருந்து, 2002 வரைக்கும், 91 சுனி பிரிவினரும், 293 ஷியா பிரிவினரும் இப்படிப்பட்ட படித்த முக்கிய சமூகத்தில் மதிப்பு மிக்க தொழில் முனைவோர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது வகுப்புவாத பயங்கரவாதத்தின் மூலம், மனித மேன்மையை இழிவு படுத்தும் தொடர் முயற்சி நடந்து வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. வகுப்புவாத பிரச்னை தீவிரமாக இருக்கும் ஈராக்கின் அரசியலில் கூட, மசூதிகளிலும், மதரஸாக்களிலும் இப்படிப்பட்ட கொலைகள் நடப்பது அபூர்வமானதாகவே இருக்கிறது. பாகிஸ்தானில் மட்டுமே, தீய மதி படைத்தவர்கள் சக முஸ்லீம்களை எந்த வித பயமும் இன்றி கொல்வது சாதாரணமான விஷயமாக இருக்கிறது.
பாகிஸ்தான் சந்திக்கும் சவால்களிலேயே மிகவும் முக்கியமான சவால் இந்த வகுப்புவாத பயங்கரவாதமே. சூனி பிரிவினரோ, ஷியா பிரிவினரோ, எந்த முஸ்லீம் கொல்லப்பட்டாலும், வெளி உலகம் பாகிஸ்தானைப்பற்றிக் கொண்டிருக்கும் கருத்துதான் மோசமடைகிறது. உள்நாட்டில் சூனி ஷியாக்கள் நடத்தும் இந்தக் கொலைகளைக் கட்டுப் படுத்துவதில் அரசாங்கம் தோல்வி பெற்றுள்ளது. அரசாங்கம் இந்த வன்முறையையும், கொலைகளையும் மேற்கொள்வோரைக் கடுமையாய்த் தண்டிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு மனிதத்தன்மையற்ற இந்த வகுப்புவாதக் கொலைகளால் பெரும் பாதிப்பு ஏற்படுள்ளது.
—-
The writer is visiting fellow, Asia Research Centre, London School of Economic and Political Science, UK
amoonis@hotmail.com
- பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)
- ஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்
- எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? – பகுதி 1
- அ.முத்துலிங்கம் பரம்பரை-3
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை
- மெய்மையின் மயக்கம்-20
- உரத்த சிந்தனைகள்- 2
- நான் பாடகன் ஆனது
- ‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.
- சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)
- கடிதம் அக்டோபர்,7 2004
- கடிதம் அக்டோபர் 7,2004
- கடிதம்- அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!
- புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்
- கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்
- கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?
- கடிதம் அக்டோபர் 7,2004
- சொன்னார்கள்
- ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”
- அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்
- உன்னைச் சுற்றி உலகம்
- விவாகரத்து
- வாலிபத்தின் வாசலில்
- சாகா வரம்
- காட்டு வழிக் காற்று
- உறவெனும் விலங்கு
- கவிதைகள்
- தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- அவள்
- பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- பழைய வேட்டி
- வேலிகள் உயரும்
- காற்றுப் பை…
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40
- சாமிக்குத்தம்
- ‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்
- தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)
- மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
- ‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- பாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு
- அல்லி-மல்லி அலசல்- பாகம் 5
- யாரிந்த Dick Cheney ?