சபீர்
கதை பெரிது. சுருங்கச் சொல்ல முயல்கிறேன்.
ஷார்ஜா:
எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம்.
சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும் சாலைகளையும், அவை தானாக வற்றி அல்லது வடிந்து போகும்வரை நிவாரணம் என்ற பெயரில் ஒரு துரும்பைகூட எடுத்துப்போடாத ஷேக்குகளையும் கொண்ட ஒரு பிஸியான நகரம்.
கண்டநேர காட்பரீஸும், எப்பப்பார்த்தாலும் எக்லேர்ஸும், வேண்டி விரும்பி கேன்டியும் என நான் என் சொந்த பற்களுக்கு செய்த இனிப்பான சித்ரவதைக்கெல்லாம் பலி வாங்கும் விதமாக ஒரு இரவு 12 மணிக்கு மேல் வாய்க்குள்ளே ட்ரில்லிங்க் மெஷினை 3000 ரொட்டேஷன் பெர் மினிட்ல சுத்துற மாதிரி என் பல்லே எனக்கு வலித்தது.
பல்வலி என்பது யாதெனில், அது ஒரு பக்கா வலி; எத்தனை இருக்க்க்கிப்பிடித்தாலும் சற்றேனும் இறங்கா வலி; உடனே நிருத்தாவிடில் உலகயே வெருக்க வைக்கும் உச்சகட்ட வலி.
எனவே, அந்நேரம் திறந்திருந்த மருந்தகத்தை அனுகியபோது அவன், “வலி இருந்தால் பல் மருத்துவமனையில் எந்த அங்க்கிளிடம் போனாலும் ஆன்ட்டி பையாட்டிக்தான் தருவான். அதனால நான் தரும் ஆன்ட்டி பையாட்டிக்கும் வலி நிவாரணியும் 5 நாட்கள் சாப்பிட்டுட்டுப் போனால் உடனே வலிக்கிற பல்லைப் பிடிங்கிடலாம்” என்றான்.
ஆள் பார்க்க வறுமை காரணமாக BDS பாதில விட்டமாதிரி தெரிந்ததாலும், வேறு b, c, d என்று எந்த ஆப்ஷனும் தராததாலும் என் கடைவாய்ப்பல் அவசர அவசரமாக “a” “சரி” என்ற பொத்தானையே அழுத்தியது. அடுத்த 10 நிமிடத்தில் தூங்கிப்போனேன்.
5 நாட்களில் 3 snikkers, ரெண்டு kitkat தவிர வேறு சாக்லேட்டா…மூச்.
6வது நாள் பல் மருத்துவமனையில்,
“அவன் கொடுத்த ஆன்ட்டி பையாட்டிக்கெல்லாம் செல்லாது. நாங்க கொடுத்தாதான் நாங்க புடுங்குவோம் (ஹிந்தில இவ்வளவு கலீஜா ஒலிக்காது)” அப்டினு சொல்லி, ஃபார்மஸி காரன் சொன்னதையே காப்பி பேஸ்ட் செய்தான்.
மேற்கொண்டு 5 நாட்களும் குறைந்த ஸுகர் கன்ஸம்ஷனில் கழிய ப்ராஜெக்ட்டின் (பல்லு புடுங்கிறதெல்லாம் ஒரு ப்ராஜெக்ட்டாய்யா) 11வது நாள்:
பாதிக்கப்பட்ட பல்லின் இப்புறமும் அப்புறமுமான முரசினுள்ளே ஆஆஆசி…ஸாரி ஊசி குத்தி (வலில உளறிட்டேன்) கொஞ்ச நேரம் குந்த வச்சாங்க.
டி வியில் ஏதோ மலையாளச் சேனலில் விளம்பரத்தில், “இந்த பேரீச்சம்பழ சிரப் குடித்தால் உங்கள் இர்ரெகுலர் பீரியட் பிரச்னைகளையெல்லாம் சீராக்கும்” என்று பினாத்தினார்காள். இவர்களை விட்டால் நமக்கும் சேர்த்து ரெகுலேட் செய்வதாகக்கூடச் சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருந்தது.
பிறகு என்னை அழைத்து ஆயுதங்களோடு கொஞ்சங்கூட அன்பில்லாமல் முதலில் பிக்பாக்கெட்காரன் பர்ஸை உருவுகிறமாதிரி இதமா முயன்றான். பல் வரல. வராததற்குக் காரணம் அந்தப்பல்லுக்கும் எனக்குமான பால்ய காலந்தொட்ட ஸ்நேகமானு எனக்குத் தெரியாது.
அடுத்து, கயிறு இழுக்கும் போட்டியில் ஜெயிக்க முயன்றான், ம்ஹூம். பனங்கெழங்கு பிடிங்கினான், ம்ஹூம், குடக்கல்லாய் ஆட்டி அசைத்தான்,ம்ஹூம், கொத்துத்தலைமுடியாய் இழுத்தான், ம்ஹூம், பட்டம் விடும் நூலென வெட்டி வெட்டி இழுத்தான், ம்ஹூம், கடைசி முயற்ச்சியாய் சங்கிலியால் கட்டி 50 டன் க்ரேன் கொண்டு இழுத்தான், ம்ஹூம் பல் வரவே இல்லை. மேலே ஒவ்வொரு கமாவுக்கும் இடையில் “ஆ, ம்மா, அல்லா, வலி உயிர் போகுதே” நு சேர்த்து வாசிக்கவும்.
பிறகு, கையில் ஒரு டெஸ்ட் இஞ்ஜெக்க்ஷன் போட்டு மீண்டும் டி வி முன்னால் உட்கார வச்சாங்க. டெஸ்ட்ல 10 நிமிஷத்தில பாஸாயிட்டேன் (ஹய்யா). பாஸானதும் இப்ப ஹெவி டோஸ் வலி நிவாரணி கொடுத்து கோட்டை கிழட்டி வச்சிட்டு சட்டையின் கையை மடிச்சு விட்டுட்டு பயமுருத்தறமாதிரி மீண்டும் புடுங்க முயன்றான். அந்தப்பல்லுக்கு உள்ளங்கால்வரை வளர்ச்சியோ என்னவோ, அசைந்து கொடுத்ததே தவிர வராம டாக்டருக்கு பெப்பே காட்டியது.
இப்ப டாக்டர் என்னை ஒரு ஜந்துவைப்போல பார்த்துவிட்டு, “புடுங்கும் முயற்சியில் முரசு புண்ணாகிவிட்டது. இன்னொரு கோர்ஸ் amoxillin எடுத்துட்டு 5 நாள் கழிச்சி வா” வென ஹிந்தினான்.
“நாளன்னிக்கு ஊருக்கு போறேனே”ன்னு நானும் ஹிந்தினேன். அப்ப ஊர்லேயே புடுங்கிக்கோன்ட்டான்.
ஊர்:
மிக பரிச்சயமான பல் டாக்டர், என் நண்பரும்கூட, அவரிடம் மொத்த கதையும் சொல்லி முடிக்க அவரும் sharjah வசனங்களை வழிமொழிந்துவிட்டு, மீண்டும் ஆன்ட்டி பயாட்டிக் கொடுத்துவிட்டு கூடுதலாக ஒரு எக்ஸ்ரேயும் எடுத்து பார்ட்துவிட்டு “பல் நல்லாருக்கு…(கவனிக்கவும்..எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) எடுக்க வேணாம். மருந்து சாப்பிட்டா போதும்” என்றார்.
சாப்பிட்டும் வலி போகல.
இப்ப தஞ்சாவூர்ல உள்ள எம் டி எஸ்ஸிடம் காட்ட நண்பர் சொன்னதால்…
தஞ்சவூர்:
கதையெல்லாம் கேட்டுட்டு எற்கனவே எடுத்த (கவனி… அதே எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) என்னிடமும் காட்டி பல் உடைந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு பேச்சு பேச்சாகவே இருக்கும்போதே பூ கொய்வதுபோல பல்லை கொய்து கையில் தந்துவிட்டார்.
எனவே, நான் கற்ற நீதி: வியாதிக்கு ஏற்ற சரியான மருத்துவரை தேடிப் போவது சரி.
ஆதாரம்: என் கையில் போட்ட டெஸ்ட் ஊசி வெடிவிட்ட இடம்போல இப்பவும் தழும்பா இருப்பதை அடுத்த விடுமுறை நாளில் நீங்கள் நண்பர்களோடு வந்து கண்டு களிக்கலாம்.
– எஞ்சிய பற்களுடன் சபீர்.
Sabeer.abuShahruk@gmail.com
- ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு
- கோநா கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4
- அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21
- வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்
- இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்
- பல்வலி என்பது யாதெனில்…!
- திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்
- மக்கள் கலை இலக்கிய விழா
- பந்தயங்கள்
- சிலை பேசினால்
- மௌனம்
- முதிர் இளைஞா…
- ரசிப்பு
- தொலைவின் தூரம்
- ஆங் சான் சூ கீ
- அருவி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)
- பணம் காய்க்கும் இளஞ்செடிகள்
- மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!
- சத்யானந்தன் கவிதைகள்
- இன்னுமொரு முறை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- மீண்டுமொரு மழைக்காலம்
- தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..
- பேச மறந்த குறிப்புகள்
- ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.
- இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்
- பரிமளவல்லி 25. திருத்தங்கள்
- முள்பாதை 60
- பூவா…தலையா…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9
- எஸ்தரும் கருப்பண்ணசாமியும்