பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள் –

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue


சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இந்த வியாழக்கிழமையன்று ஒரு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்கள். உலக வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, உலகத்தின் இரண்டு மூலைகளிலும் இருக்கும் பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையையும் பல தீவுகள் வீடுகளற்ற நிலையையும் எதிர்கொள்வார்கள் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

‘உலகம் வெப்பமயமாதலை உலக நாடுகளின் அரசாங்கங்கள் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீவிரமான தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிப்பார்கள் என்று டபிள்யூ டபிள்யூ எஃப் சுற்றுச்சூழல் குழு தெரிவித்துள்ளது.

ஆண்டாஸ் மலைகளிலிருந்து ஹிமாலயா மலைத்தொடர்களிலிருந்து அனைத்து மலைத்தொடர்களிலின் உச்சியிலிருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் நீண்டகாலப் பாதிப்பாக கடல் மட்டம் உயர்ந்து ஏராளமான தீவுகள் கடலில் மூழ்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வரும் டிஸம்பர் 1-12 காலத்தில் 180 நாட்டு அரசாங்க அதிகாரிகள் இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் அதிகரித்து வரும் உலகத்தின் வெப்பத்தைக் குறித்தும் அதனை தடுத்து நிறுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஆராய கூடுகிறார்கள். இந்த உலக வெப்பம் அதிகரித்தல் பெரும் தொழிற்சாலைகளிலிருந்தும் கார்களிலிருந்தும் வெளிவரும் வாயுக்கள் இந்த உலகத்தை மூடிக்கொண்டு உள்ளே வரும் சூரிய வெப்பம் வெளியே செல்லாதவாறு தடுத்துக்கொண்டு இந்த உலகத்தின் வெப்பத்தினை அதிகரிக்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

கணினியில் செய்த மாதிரி வரைபடங்கள் மூலம் கணித்தல், இந்த உலகத்தின் வெப்பம் சுமார் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பனிப்பாறைகளும் உருகிவிடுவதை வெகு திண்ணமாக உரைக்கின்றன. இதே வேகத்தில் தொழிற்சாலைகளிலிருந்தும் கார்களிலிருந்தும் கரியமில வாயு மற்றும் இதர வாயுக்கள் வெளிவந்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் (2099) நாம் அந்த நிலையை எட்டிவிடுவோம் (அதாவது 4 டிகிரி செல்ஸியஸ் அதிகரித்துவிடும் பனிப்பாறைகள் உருகிவிடும்) ‘ என்று இந்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

இமாலய பனி ஆறுகள் ( glaciers ) ஆஸியாவில் ஓடும் ஏழு பெரும் ஆறுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இந்த ஆறுகள் சீனாவிலும் இந்தியாவிலும் ஓடுகின்றன. இவை உலகத்தின் மிகவும் அதிகமான மக்கள் தொகை உடைய நாடுகள். இந்த ஆறுகளில் நீர் ஓடுவது 2 பில்லியன் மக்களுக்கு முக்கியத்துவம் கொண்டது.

ஈகுவெடார், பெரு, பொலிவியா ஆகிய நாடுகள் ஆண்டியன் மலைத்தொடர் பனி ஆறுகளை நம்பி உள்ளன.

இவ்வாறு பனி ஆறுகள் உருகி கடல் மட்டம் உயர்வதால், பசிபிக் கடலில் இருக்கும் டுவாலு ஆகிய தீவுகள் முழுக்க முழுக்க கடலுக்குள் மூழ்கி விடும்.

அண்டார்டிகா மற்றும் க்ரீன்லாந்து ஆகிய பிரதேசங்களில் இருக்கும் பனிப்பாறைகள் உருகினால், இன்னும் அதிகமான அளவுக்கு கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும்.

Series Navigation

செய்தி

செய்தி