நேரடி ஜனநாயகம்

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

குண்டலகேசி


1999 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் நேரடி ஜனநாயகம்(Direct Democracy) முறை பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலும் வன்முறை குற்றங்கள் குறைவு. மக்கள் அமைதியாகவும், சுபிட்சமாகவும் இருக்கிறார்கள். அமெரிக்கா, யு.கே போன்ற நாடுகளிலும் இம்முறை கொண்டு வர வேண்டும் என்று சில இயக்கங்கள் வலியுறுத்துகிறது. நேரடி ஜனநாயகம் என்பது என்ன ?

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் மக்கள் எம்.பி.க்களுக்கு ஓட்டு போட்டு அவர்கள் பின்னர் தங்கள் விருப்பப்படியோ அல்லது கட்சியின்

கட்டளைப்படியோ ஒவ்வொரு விவகாரத்திலும் ஓட்டளிக்கிறார்கள். நாடு எப்படி நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்று மக்கள்

அல்லவா முடிவு செய்ய வேண்டும் ? சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஒட்டுமொத்தமாக தான் கொண்டு வந்த சட்டங்களையெல்லாம்

ஒரேயடியாக தலைகீழாக மாற்றி விட்டார். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் என்ன காரணத்திற்காக இப்படி வாக்களித்தார் என்று

யாருக்கும் தெரியாது.

நேரடி ஜனநாயகத்தில் பொதுப்படையான பிரச்சினைகளில் மக்கள் நேரடியாக வாக்களித்து முடிவு செய்யலாம். இதற்கு

இணையதள தொழில்நுட்பம் பயன்படுத்தினால் குறைந்த செலவில் இதை செய்யலாம். கருத்து கணிப்பு வாக்கெடுப்புகள்

அரசாங்கம் மட்டுமே நடத்த வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு கையெழுத்துகள் இருந்தால், மக்களே கருத்து கணிப்பு வாக்கெடுப்பு கொண்டு வரலாம். வருடம் முழுவதும் ஓட்டு போட வேண்டுமா ? இல்லை. சுவிட்சர்லாந்தில் வருடத்திற்கு நான்கு முறை

இது போண்று ஓட்டளிக்கிறார்கள். மற்றும் அரசாங்க பள்ளி கூடங்களும் மக்களே ஒரு குழு அமைத்து நடத்துகிறார்கள். இதனால்,

தரமான அரசு பள்ளிகளும் கிடைக்கும். கல்வியின் பேரில் நடக்கும் பகல் கொள்ளைகள் ஒழிக்கப்படலாம். எல்லாவித பொது

நிர்வாகத்திலும் இந்த முறை கொண்டு வரலாம்.

இந்த முறையில் மக்கள் பிரதிநிதி அவர் விருப்பப்படி முடிவு எடுக்க முடியாது. மக்கள் எடுக்கும் முடிவை ஏற்று அதை

செயல்படுத்தி நிர்வாகம் செய்வது மட்டுமே அவர்களுடைய வேலை ஆகும். இந்த முறையை அரசியல்வாதிகள்

வெறுக்கிறார்கள். ஏன் ? அவர்களுடைய சக்தி அவர்கள் கையிலிருந்து பிடுங்கப்படுவதால் இந்த முறை அரசியல்வாதிகளுக்கு

எட்டிக் காயாக இருக்கும். அவர்களின் பின்னால் நின்று அவர்களை இயக்கும் நில, தொழில் அதிபர்களுக்கும், பெரிய

கார்பரேஷன்களுக்கும் கண்டிப்பாக உண்மையான மக்களாட்சி அறவே பிடிக்காது. இந்தியாவில் இப்படி ஒரு முறை

கொண்டு வந்தால் அரசியல் பிரதிநிதி (எம்.பி) வேலைக்கு ஆட்கள் தேடி பிடிக்க வேண்டியிருக்கும். சுவிட்சர்லாந்தில்

உள்ள திண்ணை வாசகர்கள் இதைப் பற்றி மேலும் தகவல்கள் அளித்தால் நன்றாக இருக்கும்.

Series Navigation

குண்டலகேசி

குண்டலகேசி