நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

கவியோகி வேதம்


தந்திக் கம்பியில், நீர்த்துளி நகர்த்திச்
.. சாரல் ‘மெல்லிசை ‘அமைக்கிறதே!
யிந்த யிசையினில் உலகே மயங்கிட
.. என்னுள் ஒருபூ மணக்கிறதே!-அது
.. எதுவோ எதுவோ தெரியலையே ?

சன்னல் திறந்தேன்! முதிர்ந்த கன்னியின்
.. தாபமே கோலத்தில் தெரிகிறதே!
என்னுள் எழுந்த பரவசக் கோபம்
.. யாரைச் சுடுமோ தெரியலையே!-அதில்
..ஏதும் விளையுமோ புரியலையே ?

சீர்கேட்டுப் பெண்ணை மறுக்கும் பயல்களைச்
..சிதைத்திடக் கவித் ‘தீ ‘ துடிக்கிறதே!
வேரில் புழுப்போல் நாடு துளைப்போரை
.. வெட்டிட மற்றொன்று வெடிக்கிறதே!-யிந்த
..விந்தைகள் எனக்குள்ளா ? புரியலையே ?

பாதையில் தகரக் குவளைகள் உருண்டிடப்
..பஞ்சைகள் ‘பின்னணி ‘ கேட்கிறதே!
வாதையும் சோகமும் கவிஞற்குத் தானோ ?
..மனத் ‘தீ ‘ மொட்டு-போல் எரிகிறதே!- ‘சக்தி ‘
..மறைந்து-ஏன் உசுப்புறாள் ? புரியலையே ?

^^^^^^
(வேதம்)8-09-01

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்